இதயம் 30

 


இதயம் 30



அறைக்குள்ளே அடைந்திருப்பது அவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது. நாளை நடக்கவிருக்கும் நிகழ்வை தடுக்க வழிகள் இருந்ததும் இத்தனை தூரம் இழுத்துக் கொண்டு வந்த தன் மடத்தனத்தை எண்ண, அவனது மனசாட்சி கொடுத்த காயங்களை பெருமிதமாக வாங்கிக் கொண்டான்.


'ஒரு ஆண்மகனாக  பிடித்ததை விரும்பி அடையும் ஒருவன். கல்யாண விஷயத்தில் கோட்டை விட்ட காரணம் அவனுக்கே புரிந்தும் புரியாத ஒன்றாகத் தான் இருந்தது.


விரும்பி அடைந்த பொருட்கள் எல்லாம் அவனை கேலிச் செய்வது போல இருந்தது.  அவனுக்கு பிடித்த பெண்ணிடம் காதலைச் சொல்லி, அவள் விருப்பத்திற்காகக் காத்து. அவளிடம் கெஞ்சி தன் காதலை ஏற்றுக் கொள்ள வைக்க போராடும் ரகமா நமது சைக்கோ ஸாரி சைத்து.


முன்பு ஒரு  முறை அவள்" உன்னோடும் உன் பெரியம்மாவோடும் குப்பை கொட்டுவது கடினம்"என்று சொல்ல, அதில் எழுந்த ஈகோ தான் இன்று வரை அவளிடம் காதலைச் சொல்லாமல் தடுத்தது.


காதலை சொன்னாலும் தன்னையும் தன் காதலையும் கண்டிப்பாக மறுப்பாள் என்று அவனாக யூகித்துக் கொண்டு , தன் காதலை மறுத்து கிடைக்கும் வலியை விட, அதை  சொல்லாமல் இருப்பதே மேல் என்று நினைத்தவன் அதை சொல்லாமல் விட்டு  விட,   அதை இப்போது நினைக்க நினைக்க அவனுக்கு மூச்சு முட்டியது. இனி வாழ போற வாழ்க்கையை எண்ணி பயம் வர ' கல்யாணத்தை நிறுத்திருக்கலாமோ ' என்ற எண்ணமே எழுந்தது. அவனால் அறையில் அடைந்து கிடக்க முடியவில்லை.


வெளியே கொஞ்சம் காத்து வாங்க மாடிக்கு வந்தவன் வானை வெறித்து நின்றான். வெகு நேரத்துக்கு பின் அவனுக்கு விசும்பல் சத்தம் கேட்டது. 


முதலில் அதை கண்டுக் கொள்ளாதவன் யோசனையில் ஆழ்ந்திருக்க, மீண்டும் அந்த சத்தம் அதிகமாகவே கேட்டது. அவனது மனக்கஷ்டத்தை புறம் தள்ளிவிட்டு  யாரென பார்க்கச்  சென்றான்.


அங்கே குத்து காலிட்டு கையில் தூக்க மாத்திரை வைத்துக் கொண்டு போடலாமா வேணாமா என்று பயத்தோடே மாத்திரை பார்த்து விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். அவனுடன் பக்கத்தில் கல்யாணப் பெண்ணான நின்ற ஆர்த்தி.


மாடியிலிருந்த சிறு  வெளிச்சத்தில்  அவள் என்று அறிந்துக் கொண்டவன், அவளருகே சென்று அவள் முன் மண்டியிட்டு அமர பயந்து போன்

ஆர்த்தி மாத்திரையை மறைத்தாள்.


"மறைக்காத, நான் பார்த்துட்டேன் வெளிய எடு"என்றான்.


அவளும் அவனை மிரண்ட விழிகளுடனே பார்த்தவள் மெல்ல மாத்திரை நிறைந்திருந்த கையை அவன் புறம்  நீட்டினாள். அதில் பத்திற்கும் அதிகமான தூக்க மாத்திரைகள் இருந்தன.


"தூக்க மாத்திரையா??தற்கொலை பண்ணிக்க போறீயா?"என சாதாரணமாக கேட்டான்.


அவளோ  'ஆம்'  என்றாள்.ஆனால் உள்ளுக்குள் சைத்துவைப் பார்க்க பயமாக இருந்தது' உண்மை அனைத்தும் கேட்டு விட்டு அனைவரிடம் சொல்லி தன் பெற்றோர்களிடம் சண்டை போடுவனோ' என்ற அச்சத்தில் அமைதியாக தலை குனிந்தாள்.


அவளது பயத்தை அறிந்தவன்" நான் யார்கிட்டயும்  சொல்ல மாட்டேன். சொல்லு ஏன் தற்கொலை பண்ணிக்கப் போற?"என்றான் அழுத்தமாக.


"எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல... எனக்கு ஒருத்தர் மேல லவ். நாங்க ஸ்கூல் படிக்கும் போதே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டோம். அவரும் என்னை ரொம்ப லவ் பண்றார்"என்றாள் விம்மிக் கொண்டு.

"நீ லவ் பண்ற விஷயம்  உங்க அம்மா அப்பாக்கு தெரியுமா??"


"ம்ம்.. தெரியும். ஆனா அவர் நம்ம ஜாதி இல்லேன்னு வேணாம்னு பிடிவாதம் பிடிச்சி  வீட்ல அடச்சிப்போட்டு, ரெண்டு பெரும்  தற்கொலை பண்ணிப்போம். இல்ல உன்னை கொல பண்ணிடுவோம் சொல்லி பயமுறுதி இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க..."


"இது உன் காதலுனுக்கு தெரியுமா? ஏன் உன்னை வந்து கூட்டிட்டு போக வரல..."


"அவர் சிங்கப்பூர்ல வேலை பார்க்கிறார். அவர் கிட்ட விஷயத்த சொல்லிட்டேன். அவரும் வர்றேன்னு தான் சொன்னார். ஆனா அதுக்குள்ள அவருக்கு அங்க சின்ன பிரச்சனை வந்திட்டு, அதை சால்வ் பண்ணிட்டு வரேன்  சொன்னார். ஆனா வரல எனக்கு பயம் வந்தது அதான்..."என்று தலைகுனிந்தாள்.


"என்னை மன்னிச்சிடுங்க எனக்கு இந்தக் கல்யாணத்தில எனக்கு இஷ்டமில்ல.  எ. என் வீட்ல என் விருப்பத்தை கூட கேட்கல. பொண்ணு பார்க்க வரும் போது உங்க கிட்ட உண்மைய சொல்லிடலாம் நினச்சேன். ஆனா அப்படி இரு நிகழ்வே வைக்கல. போன் மூலமா சொல்லாம்னு நினைச்சேன் போன வாங்கி வச்சுட்டாங்க... என்னை மன்னிச்சிடுங்க ப்ளீஸ் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க" கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி அழுதாள்.


அவளை பார்க்கையில் தன் கோழை தனத்தை எண்ணி தன்னை கடிந்து கொண்டான்."நாளைக்கு உன் காதலன் வந்திடுவானா???"


"தெரியல"உதட்டை பிதுக்கி சோகமாக சொன்னாள். "சரி, நாளைக்கு உன் காதலன் தாலி கட்டுறத்துக்கு முன்னாடி வந்துட்டானா, அவன் கூட போயிடு . இல்ல வரலனா எனக்கு நீ மிஸ்ட் காலோ மெசேஜ் பண்ணு யார் மூலமாவது. நான் என் பிரண்ட அனுப்பி வைக்கிறேன். அவள் கூட வெளிய வந்துடு. அவ உன்னை லேடீஸ் ஹாஸ்டல் சேர்த்து விடுவா.  உன் காதலன் வந்ததும் அவன் கூட போயிடு என்ன?" என்றான்.


"சரி" என  தலையாட்டியவள் "சரி அதை கொடு"என்று மாத்திரைகளை கேட்டான். அதை அவன்  கையில் வைத்தாள்.


"சரி, நீ போய் நிம்மதியா தூங்கு ! நாளைக்கு நாம நினைச்சது எல்லாம் நல்லப்படியா நடக்கும் போ"என்றான்.


தலையை ஆட்டியவள்,"ரொம்ப தேங்க்ஸ்"என்றாள்."ம்ம்"என்று தலையை மட்டும் அசைத்தான். அவள் எழுந்து

செல்ல, அவளை வெறித்தவனுக்கு அவள் மீது கோபம் வரவில்லை. மாறாக அவள் பெற்றோர் மீதும் பெரியம்மா மீது  தான் வந்தது.

'நாளைக்கு அவர்களுக்கு இருக்கு 'என்று கோபத்தில் பற்களை கடித்துக் கொண்டான்.


மறுநாள் விடிய, சைத்துவோ சாதாரணமாக  இருக்க முயன்றாலும் அவனுக்குள்ளே சிறு படப்படப்பு இருக்கத் தான்  செய்தது. அலைப்பேசியை வெறித்தான்.  ஆர்த்தி மிஸ்டு காலை எதிர்பார்த்து இருக்க, அங்கு நடந்ததோ வேறு . 


முகூர்த்த நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிட்டனர் வைஷுவின் குடும்பம் அதில் வைஷுவும் அடங்கும்... மண்டபத்தில் காரை நிறுத்தி விட்டு இறங்க வைஷுவின் அலைபேசி அலறியது. அதை எடுத்து தனியாகப் பேச சென்றாள். அவளை விட்டுட்டு மூவரும் உள்ளே சென்றனர்.


அவள் பேசிக் கொண்டே இருக்க , அவளை இடித்து விட்டு பதற்றத்துடன் மன்னிப்பு கூட கேட்காமல் முன்னே நடந்தான் அவன்.  அவன் இடித்ததில் அவளது அலைபேசி கீழே விழுந்தது. 


அதை எடுத்தவள், இடித்துவிட்டு முன்னே செல்பவனை  அழைத்தாள்." ஏய் நில்லு நீ பாட்டுக்கு இடிச்சிட்டு ஸாரி கூட சொல்லாம போற .வாடா இங்க"என்று அதிகாரமா அழைக்க, அவனும் பதற்றத்துடன் வந்து "ஸாரி மேடம்"என்று மன்னிப்பு கோரி விட்டு மீண்டும் செல்ல அவனை சந்தேகித்து மீண்டும் அழைத்தாள்.


"நில்லு யார் நீ? எதுக்கு இங்க வந்திருக்க? உன் முழியே சரியில்ல, என்ன திருட வந்திருக்கீயா??"என்றவள் சொன்னதை மேலும் பதறியவன் "ஐயோ மேடம்  நான் திருடன் எல்லாம்  இல்ல..."


"அப்போ நீ  ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க? எதுக்கு இங்க வந்த?"என கேட்க, சொல்லத் தயங்கினான்.


"இப்போ நீ சொல்ல , செக்யூரிட்டிய கூப்பிட்டு உன்னை போலீஸ்ல ஒப்படைக்க சொல்வேன்"என்றிட, 


"ஐயோ ! வேணாங்க நான் உண்மைய சொல்லிடுறேன்..."என்றவன் இங்கு வந்த விஷயத்தை சொன்னான்.


அதில் அதிர்ந்தவள், "எது நீ கல்யாணப் பெண்ணோட காதலனா?? இதை நாங்க நம்பணுமா? பொண்ண கடத்த தானே வந்திருக்க?"என பல்லைகடிக்க, 


"ஐயோ சத்தியமா இல்லைங்க ! நான்  அவளோட காதலன் தான்..."என்றவன் தன் கையிலிருந்த  அலைபேசியில் இருவரும் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை காட்டினான். "ப்ளீஸ்ங்க எப்படியாவது அவ கிட்ட உண்மைய சொல்லி அனுப்பி வச்சிடுங்க. நாங்க சிங்கப்பூர் போய் சந்தோஷமா வாழ்வோம் சிஸ்டர். ப்ளீஸ் இந்தக் ஹெல்ப் மட்டும் பண்ணுங்க சிஸ்டர். இந்தக் கல்யாணம் நடந்தால் அவ செத்துடுவா இல்ல.. அதுக்கு முன்னாடியே செத்துடுவா. ப்ளீஸ் சிஸ்டர் காப்பாத்துங்க அவளை..."என கையெடுத்து கும்பிட்டு கேட்டான்.


அவளுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது. "சரி நீ இங்கே இரு... அவ கிட்ட  பேசிட்டு, அனுப்பி வைக்கிறேன்"என்று வேகமாக மண்டபத்திற்குள் விரைந்தாள்.


அவளை வரவேற்ற வஸ்தி"எங்கடி போன இவ்வளவு நேரம்...?"என கேட்டுக் கொண்டே அவளருகில் வந்தாள்.

"அதெல்லாம் அப்றம் சொல்றேன் வஸ்தி. மொதல்ல  மணப்பொண்ணோட ரூம் எங்க இருக்குனு காட்டு" என்றாள் பதற்றமாக,


"அங்க தான் இருக்கு ஏன்???"எனவும்"சொல்றேன் நீ வா"என விறுவிறுவென நடக்க , அவளும் அவளுக்கு இணையாக நடந்தாள்.


கதவைப் படாரென திறக்க, அங்கே ஆர்த்தியும் அவளது தோழிகளும்  ஒப்பனை கலைஞர்கள் இரண்டு பேர் மட்டும் இருந்தனர்.


பாதி ஒப்பனைகளோடு இருந்த மணப்பெண்ணைப் பார்த்து "மகேஷ் உன் லவ்வரா??"எனவும் அவனது பெயரை கேட்டதும் அதிர்ந்தவள்" ஆம் "என்றாள்.


"உனக்காக வாசல்ல காத்துட்டு இருக்கான். இப்போவே ஓடி போயிடு"என்றாள் வைஷு. 


அறையிலிருந்து அத்தனை பெரும் அதிர்ந்தனர். "வைஷு என்ன சொல்ற? இன்னும் கொஞ்சம் நேரத்துல இவளுக்கும் சைத்துவுக்கும் கல்யாணம். இவ  ஓடி போயிட்டா கல்யாணம் நின்றும், சைத்துவோட நிலைமை நினைச்சி பார்த்தீயா??"தன் அத்தை மகனுக்காக வஸ்தி பேச, 


"இந்தக் கல்யாணம் நடந்தா இவ செத்து போயிடுவா பரவாயில்லையா?? உன் கசினோட  நிலமை சேர்த்து நினைச்சதுனால தான் அவளை போக சொல்றேன். இந்தக் கல்யாணம் அவனுக்கு வேணாம். ப்ளீஸ் அண்டர்ஸ்டென்ட் பண்ணு வஸ்தி"என்றதும் அவளும் சரி என்று தலை அசைத்தாள்.


ஆர்த்தியிடம்" முதல்ல இங்க இருந்து கிளம்பு. உன் பிரண்ட்ஸ் உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க தான?"எனக் கேட்க அவர்களைப் பார்த்தாள் ஆர்த்தி.


"பண்ணுவோம்க்கா..."என்றனர்.


"சரி, நீ இங்க இருந்து போயிடு !  நீங்க கொஞ்ச நேரத்துக்கு யாரையும் உள்ளவிடாம மேக்கப் போடுறாங்க சொல்லி தடுத்துட்டே இருங்க... கொஞ்ச நேரம் கழிச்சி நீங்களும் வெளிய  வந்து வீட்டுக்கு போயிடுங்க.. அப்றம் நடக்கறத நடக்கட்டும் "என்றாள்.


அனைவரும் தலையை ஆட்ட, ஆர்த்தியை எப்படி வெளியே அனுப்புவது என்று வைஷு யோசிக்க, சரியாக உள்ளே வந்த சைத்துவின் தோழி  கையில் பர்தாவுடன்  வந்தாள்.


"இதை போட்டு போகச் சொல்லுங்க" என்றாள். வைஷு சிறிதும் யோசிக்காமல்  அதை வாங்கி ஆர்த்தியிடம் கொடுக்க, அவளும் போட்டுக் கொண்டு  கிளம்பி விட்டாள். 


அவள் சென்றதம் வைஷு சைத்துவின் தோழியின் புறம் திரும்பி"நீங்க யார்? எப்படி சரியா வந்து பர்தாவ கொடுத்தீங்க?  உங்களுக்கு இந்த பிளான் முன்னாடியே தெரியுமா??"என சந்தேகமாக கேட்க,


அவள் வாய் திறக்கும் முன் வஸ்தி"இது முக்கியம் இல்ல... இப்போ நாம இங்க இருக்கக் கூடாது வைஷு வா போலாம்"என்று அவள் கையைப் பிடித்து இழுத்து வெளியே வந்து வந்தாள்.


அவள் சொன்னபடியே ஆர்த்தியின் தோழிகளும் கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு மண்டபத்தை விட்டு வெளியேற, சைத்துவின் தோழியோ சைத்துவிடம் வந்து அனைத்தையும் சொன்னாள். அவனோ வைஷுவை நினைத்து புன்சிரிப்பை உதிர்த்தான்.


அதன் பின் நடந்த களேபரத்தில் சைத்து வைஷுவின் கழுத்தில் தாலியைக் கட்டச் சொல்லி  வைஷு அமர,  சரஸ்வதியோ அவள் கழுத்தில்  தாலி ஏறக் கூடாது என்று  மயங்கி சரிவது போல வீழ, அதற்கு முன்னமே வைஷுவின் கழுத்தில் தாலியைக் கட்டிவிட்டான் சைத்து.


சாந்தியின் மேல் மயங்கி கிடைந்தவரை தண்ணீர்  விட்டு  எழுப்பிப் பார்த்தும் முடியாமல் போக , மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர்களுடன் சைத்துவும் சென்றான்.


இங்கே கழுத்தில் தொங்கும் தாலியுடன்  போகும் அவர்களை வெறித்தாள் வைஷு.


இங்கே நடந்த நிகழ்வை விஷ்ணு மகிழுவால் ஜீரணிக்க முடியவில்லை... எகா  கடுங்கோபத்தில்  அவளை நெருங்கி தன் புறம் திருப்பியவன்" உனக்கு  என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா வைஷு? எதுக்கு அவனை கல்யாணம் பண்ணின? எதுக்கு இந்த முட்டாள் தனத்தை செஞ்ச? அவனுக்கு வாழ்க்கை கொடுக்கிறேன்னு உன் வாழ்க்கைய ஏன் டி அழிச்ச?? என்ன அவசியம் வந்தது அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லுடி சொல்லு"என்று உலுக்கி எடுத்தான்.


தன்னை புரியாமல் பார்க்கும் தாய் தந்தையை பார்த்தவள், பின் எகாவை பார்த்து "எல்லாம் காரணமா  தான் இந்தக் கல்யாணத்தை பண்ணிருக்கேன் எகா. இது என் லைப் நான் சூஸ் பண்ண கூடாதா??  எனக்கு அவனை கல்யாணம் பண்ணிக்கிறது சரினு பட்டுச்சி பண்ணிக்கிட்டேன். இந்த முடிவால கண்டிப்பா என் லைப்ல நான் தோத்திட மாட்டேன்  எகா. ஐ வில் வின்..."என்று தீர்க்கமாகச் சொன்னாள்.


இங்கோ சரஸ்வதியோ சைத்துவிடம் அவளை'மனைவியாக' ஏற்றுக் கொள்ள கூடாது என்று தன் மகனின் மனதை அறியாது தன் மேல் சத்தியம் செய்ய வேண்டும் என்று கைகள் நீட்டி வேண்டிட, கைகள் நடுங்க அவர் கையில் தன் கையை வைத்து "சத்தியம் "என்றான்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2