இதயம் - 28

இதயம் - 28


 வைஷு அகிலாவின் வற்புறுத்தலுக்காக கோவிலுக்கு வந்திருக்காளோ இல்லை புளியோதரை பொங்கலுக்காக வந்திருக்காளோ கடவுளுக்கு தான் வெளிச்சம். கடவுளைத் தரிசித்து விட்டுப் பிரகாரத்தை இருவரும் சுத்தி வந்தனர்.


அகிலா பக்தியாக சுத்த, வைஷு ஏன் சுத்துகிறோம் கூட தெரியாமல் அவளுடன் வந்த பாவத்துக்கு சுத்திக் கொண்டிருந்தாள்.


எண்ணிக்கை நூறை தாண்டிச் சென்ற பின் தான் நினைவுற்று 'நானும்  ஏன் இவளுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறேன்?'என்று  தனக்குள் கேட்டுக் கொண்டவள் அங்கே நிற்க, "ஸ்ரீ ராம ஜெயம்"என்று முணங்கிக் கொண்டே நடந்த அகிலா, அருகே தோழியை காணானதும் திரும்பி பார்த்தாள்.


'பே' என தனியா விழித்த படி நின்று கொண்டிருக்கும் தோழியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவள் அவளருகே சென்று" ஏன்டி   இங்கே நிக்கற? வாடி சுத்தலாம்"என்று 


"வா சுத்தலாம்மா??? நூற தாண்டிருச்சிடி..."என்று முட்டியை பிடித்துக் கொண்டு வைஷு சொல்ல... "தெரியும்... நூத்தியெட்டு தடவ சுத்தணும். இன்னும் எட்டு தான் இருக்கு வா "என்று கையை பிடித்து இழுத்துக் கொண்டு "ஸ்ரீ ராமஜெயம் " என்று முணங்க ஆரம்பித்தாள்.


"இவரை எதுக்குடி நூத்தியெட்டு தடவ சுத்தற?"கேட்டுக் கொண்டே அவள் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்.


"நான் நினைச்சது நடக்கணும் தான். இவரை நூத்தியெட்டு தடவ சுத்துறேன்"என்றாள் நடந்து கொண்டே. 


"அப்படி என்ன காரியம் நடக்கணும்னு நீ இவ்வளவு தூரம் சிரதத்தை எடுத்து நடக்கற?"


"வேற எதுக்கு கல்யாணம் நடக்கணும் தான்... என்னைவிட சின்ன வயசுக்காரிங்க வயித்துல ஒன்னு இடுப்புல ஒன்னு வச்சிட்டு திரியுதுங்க... எங்க அம்மா என்னை காரித் துப்புது. அதான் பக்தியில் இறங்கி எனக்கு கல்யாணம் நடக்கப் பிராதனை செய்றேன்" என்றாள்.


"அதுக்கு என்னையும் ஏன்டி  

சுத்த விடுற?" 


"நீயும் அகிலாவுக்கு சீக்கிரமா மாப்பிள்ளை பார்த்து கட்டிவை கடவுளேனு அவர் கிட்ட ஜஸ்ட் பண்ணு. அப்றம் உனக்கு கூட ஆஃப்பிலிகேசன் போட்டு வை" என்றாள்.


"இவர் எப்போடி மேட்ரிமோனி ஆரம்பிச்சார். நீ சொல்லவே இல்ல" என்று கேலி செய்ய, 


"ஸ்ஸு.. கேலி பண்ணாதடி... பீ சீரியஸ்"என்று தீவிரமாக நடக்க, "அதே நானும்  சொல்றேன். சீரியஸாவே  சொல்றேன், நீ நூத்தியெட்டு தடவை இந்த பேச்சுலரை சுத்துறதுக்கு பதிலா. மதுரையில் இருக்க பேச்சுலர்ஸ் பின்னாடி சுத்தியிருந்தால் கூட இந்நேரம்  கல்யாணம் நடந்திருக்கும். டைத்த வேஸ்ட் பண்ணிட்டு இருக்க டி நீ !"என்று அறிவுரை சொல்ல அவளை முறைத்து விட்டு ஆஞ்சினேயரை தரிசிக்கச் சென்றாள். வைஷுவோ கால் வலியில் அமர்ந்துவிட்டாள்.


கோபுரங்கள் மேலும் அதில் வடிக்கப் பட்ட சிற்பங்களின் மீதும் புறாக்கள் அமர்ந்திருப்பதை ரசித்து கொண்டிருந்தவள், கோவிலுக்குள் நுழையும் வதனாவையும் பார்த்தாள்.


அன்று பார்த்தது தான் அதன் பின் அவரை பார்க்கவும் இல்லை.  அவர்கள் பற்றிய செய்தியும் பெரிதாக கேட்கவுமில்லை. இரு முறை நவநீதன் வந்து கெஞ்சியது  நினைவிற்கு வந்தது. அவள் தான் மறுத்துவிட்டாள். அதை எல்லாம் நினைத்தவளுக்கு சோகம் பெரிதாய் வந்து தாக்கிட வில்லை. மென் முறுவலோடு அவரைப் பார்த்திருந்தாள்.


அவர் முகத்தில் அன்று பார்த்த களை  இன்று இல்லை. முகத்தில் சோகம் குடிக்கொண்டிருப்பதை புகைப்படக்காரியான அவள் அறிந்து கொண்டாள்.


ஆம்,அவர்  வீட்டில் இருவரும் வதனாவிடம் பேசுவதில் இல்லை. அவர் சமைத்த சமயலை சாப்பிடுவதும் இல்லை.  அவரை மொத்தமாக ஒதுக்கி வைத்த விட்டது போல தான் வீட்டிலும் வெளியிலும் வலம் வருகிறார். இன்று தன் சோகத்தை கொட்ட கோவிலுக்கு வந்திருக்கிறார். 


அவரை விடுத்து தன் தோழியைப் பார்க்க வரிசையில் நின்று ஆஞ்சினேயரை தரிசிக்க காத்துக் கொண்டிருந்தாள்.அவளை பார்த்துவிட்டு அங்கு வரும் மக்களை பார்வையிட ஆரம்பித்தாள். ஏனோ கேமிராவை எடுத்து புகைப்படம் எடுக்க அவளுக்கு ஆர்வம் இல்லை கோவிலுக்கு வரும் ஒவ்வொரு மக்களையும் கவனித்து கொண்டிருந்தாள்.


அப்போது தான் திடீரென அலறல் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தாள். வதனாவை சுற்றி பத்து பேர் நின்றனர். அவர் பக்கத்தில் குழந்தை வைத்துக் கொண்டிருந்த ஒரு பெண் கத்திக் கொண்டிருந்தாள்.


வதனா அவர்களிடம் சமாளிக்க முடியாமல் திண்டாகிக் கொண்டிருந்தார்.

அவர் முகத்தை பார்த்து விட்டு வேகமாக விரைந்து கூட்டத்தை விலகி அவர்கள் முன் வந்து நின்றாள். அவளை கண்டதும் வதனா கொஞ்சம் திடுக்கிட்டார்.


குழந்தையை வைத்து கத்திக் கொண்டிருந்தவளிடம் திரும்பி" என்ன பிரச்சனை மா உங்களுக்கு? ஏன் இவங்களை திட்டிறீங்க?"


"கொஞ்ச நேரம் குழந்தைய பிடிங்கனு குழந்தைய இவ கிட்ட கொடுத்தா, குழந்தை கழுத்துல இருக்க செயின திருடி வச்சிகிட்டாங்க இவ. கேட்டா இல்லைங்கறா. அதான் கேட்டுட்டு இருக்கோம்"என்றாள்.


"ஐயோ ! நான் சத்தியமா திருடலமா  சொன்னா யாரும் நம்ப மாட்டிக்கிறங்க... நான் ஏன் மா திருட போறேன். நீ சொல்லுமா நான் திருடுவேணா நான் திருடியா நீ சொல்லுமா?"என்று  அழாத குறையாக கெஞ்சிக் கொண்டிருத்தார் வதனா.


"நடிக்காத மா. திருடனவங்க  என்னக்கி குற்றத்தை ஒத்துக்கிட்டு இருந்திருக்காங்க. நல்லா பார்க்க டிப்டாப் இருக்க, ஆனா பண்ற வேலைய பாரு. ஒழுங்கா அந்த செயினை கொடுத்திடு இல்ல போலீஸ் கூப்பிடுவோம்"என்று ஒரு பெண்மணி மிரட்ட, அவருக்கு  அழுகை வந்தது விட்டது .


"ஏய்  என் குழந்தை கழுத்தில இருக்க செயின கொடுடி"என்றாள் குழந்தையின் அம்மா. 


"வயசுல மூத்தவங்க கொஞ்சம் மரியாதையா பேசுங்க.. இவங்க திருடுனாங்களா இல்லையானு  தெரிஞ்ச்சிக்காம பேசாதீங்க... "என்று அவள் வாயை அடைத்தவள் சில  கேள்விகள் கேட்டாள்.


"குழந்தைய அவங்க கிட்ட கொடுக்கும் போது கழுத்துல செயின் இருந்ததா?" 


அவள் யோசித்தவாறு" இருந்ததுனு நினைக்கிறேன்"என்று இழுக்க, அவளை முறைத்து விட்டு குழந்தையை வாங்கிச் சோதித்தாள். குழந்தையின் இடுப்பில் சுற்றி இருந்த கருப்பு கயிற்றில் அந்த செயிணும் உள்ளே  சுத்தி இருந்தது . அதை கண்ட அனைவரும்  அமைதியாகிட அந்தக் குழந்தையின் தாயோ தலை குனிந்தாள்.


"என்ன ஏது பார்க்காம, கொஞ்சம் கூட  யோசிக்காம ஒருத்தர் மேல ஈஸியா பழிய போட்டிருவீங்க. நீங்களும் அதை யோசிக்காம விசாரிக்காம கண் முடித்தனமா  நம்புவீங்க... ச்சீ போங்க அங்கிட்டு" என்றாள் கோபத்தில்.


அங்கிருந்தவர்கள் மன்னிப்பு கேட்டு விட்டு நகர்ந்தனர். குழந்தையின் தாயும் மன்னிப்பு கேட்டுவிட்டு நகர்ந்தாள். அவர்கள் விலகி சென்றதும்  வதனாவை தனியாக  அழைத்து அமர வைத்தவள் தண்ணீர் கொடுத்தாள்.


வாங்கி குடித்த பின்பு தான்  உள்ளே எழுந்த படபடப்பும் அழுகையும் கொஞ்சம் மட்டுப்பட்டது.


"ரொம்ப நன்றி மா...  நீ மட்டும் இல்லேனா என் நிலமை? நினைக்கவே பயமா இருக்கு "என்று நெஞ்சில் கைவைத்தவர் பதட்டம் கொண்டார்.


"விடுங்க ஆன்ட்டி. இன்னொருத்தர் சொல்றத ஆராயாமல் கண் மூடித்தனமா நம்புற கூட்டம் இருக்கிற வரைக்கும், உண்மைய அடிச்சி பேசினாலும் நம்ப மாட்டாங்க..."என்றவளின் கூற்றில் உள்ள உண்மை அவருக்கு சுட்டது.


அவள் கையை பற்றி" உண்மை தான் வைஷுமா. அதுவும் உன் விஷயத்ததுல ரொம்ப சரி. என்னை மன்னிச்சிடு வைஷுமா. கண் மூடித்தனமா ஒருத்தர் சொன்னதை நம்பி உன்னைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்காம, நீ இப்படி தான் முடிவு பண்ணி, உன்னை என் பையனுக்கு  கல்யாணம் செய்து வைக்க கூடாதுனு ஒதுக்கி தள்ளின பாவத்துக்கு தான், இப்போ நான் தண்டனை அனுபவிக்கிறேன்"என்று அழ அவளுக்கு புரியவில்லை.


"என்ன சொல்றீங்க நீங்க??"என்று புரியாமல் கேட்டாள். அவரும் நடந்ததை முழுவதும் சொல்ல.' ஓ சரஸ் ஆன்ட்டி இது உங்க வேலை தானா...!'எண்ணிக் கொண்டவள் வதனாவை பார்க்க  அவரோ மன்னப்பு கோரினார்.


"கல்யாண விஷயத்தில பொண்ணை பத்தியோ பையன பத்தியோ நல்லா விசாரிச்சிட்டு தான் மேற்கொண்டு பேசுவாங்க அது தப்பில்ல. ஆனா அவங்களை பத்தி ஒருத்தர் கிட்ட மட்டும் விசாரிச்சி, அதை கண் மூடி தனமா நம்பினீங்களே அதான் தப்பு. அதுவும் என்னை விரோதியா நினைக்கவறங்க என்னை புகழ்வாங்களா என்ன ? இட்ஸ் ஓகே லீவ் விட். நான் உங்களை மன்னிச்சிட்டேன்"என்றாள்.


"ரொம்ப நன்றிடா... உன் மேல  எனக்கு தோன்றிய தவறான பிம்பம் தான் உன்கிட்ட என்னை அப்படி பேச வச்சது. இப்போ அந்த பிம்பம் பொய்னு தெரிஞ்சிடுச்சி. உன்னை போல எனக்கு மருமக கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். ப்ளீஸ் மா என் மகனை  ஏத்துக்கோ மா. உன்னை தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லிட்டு இருக்கான். ஒத்தப் புள்ள அப்படியே இருந்துடுவானோ பயமா இருக்கு. ப்ளீஸ்  மா. மறுபடியும் உங்க வீட்ல வந்து பேசுறோம்"என்று அவள் கையை பிடித்து கெஞ்ச, 


அவளோ சின்ன மூரலுடன்"மன்னிச்சிட்டேன் தான் சொன்னேன். மறந்துட்டேன் சொல்லல ஆன்ட்டி... என்னால சில விஷயங்களை மறக்க முடியாது. அதுல இதுவும் ஒன்னு. உங்க பிள்ளை கிட்ட நான் பேசுறேன். கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பார். நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைங்க. நான் வரேன்"என்று அகிலாவை அழைத்துக் கொண்டு போய்விட்டாள்.  கண்ணீரை துடைத்துக்  கொண்டவர் தன் நீசதனத்தை எண்ணி வருந்தினார்.



                           ****


நாட்கள் படையெடுத்து  சென்றன. சைத்துவின் திருமணத்திற்கு இரண்டே நாள் தான் இருந்தது. சைத்துவின் வீடு கல்யாணக் கலை கொண்டிருக்க, சைத்துவின் முகம் கலையிழந்து  தாடி முடியுமாக சித்தரைப் போல இருந்தான்.  சரஸ்வதியிலிருந்து பிரகதி வரைக்கும் அனைவரும் அவனிடம் சொல்லி பார்த்து விட்டார்கள். அவன் கேட்பதாக இல்லை...


எதையோ இழந்தது போல இருந்தது அவனுக்கு. அவன் உள்ளத்தில் இருந்த காதல் வலிக்கு, இழப்பிற்கு' காதல் தோல்வி' என்று பெயர் கொடுத்து கொண்டாலும் காதலைச் சொல்லாமல் எப்படி தோல்வி என்பதாகும். முயற்சி செய்யாமல் கைவிட்ட காதலை காதல் தோல்வி என்பதா??


நெஞ்சில் ஆக்கிரமித்திருந்த வலி இன்னதென்று சொல்ல முடியாமல் யாரிடமும் பகிர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.


அவன் தவிப்பு மற்றவர்களுக்கு புரியவில்லை என்றாலும் சாய்க்கு ஓரளவு புரிய, அவனை தனியாக அழைத்துச் சென்றான். இருவரும் காலாற நடந்தனர்.


"சொல்லு சைத்து உனக்கு என்ன பிரச்சினை?? கல்யாணத்துல உனக்கு இன்டரஸ்ட் இல்லாதது போல நடந்துக்கற நீ. உன் பேஸ்ஸூம் சரியில்ல. வாட் ஹாப்ண்ட் மேன்? எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு"என்றான் தோள் தட்டி 


ஆழ்ந்த மூச்சை வெளியே இழுத்து விட்டவன் தன் அண்ணனிடம் அனைத்தையும் சொன்னான். சிறு அதிர்வை முகத்தில் காட்டியவன் பின் சிரித்துக் கொண்டே, "உனக்கும் உன் பெரியம்மாவுக்கு வித்தியாசமே  இல்ல ரெண்டு பேருக்கும் ஈகோ ஜாஸ்தி தான்..  


அதுனால அவங்க என்ன பலனை அனுபவிக்கற போறாங்க தெரியல... ஆனா, இப்போ நீ அனுபவிக்கற, வாழ்க்கையில் ஒரு தடவ கிடைக்கற வாய்ப்பை பயன்படுத்திக்கணும், அதுல ஈகோ , கோபம், பயம்னு பார்த்தால் உன் காதலை மிஸ் பண்ண வேண்டியது தான். நானும் அனுபவிச்சிருக்கேன் அந்த பெயினை "என்று வைஷுவை மனதில் வைத்துக் கொண்டு சொன்னான்.


"நீ ரெண்டு விதமான முடிவுகளை எடுக்கலாம்... ஒன்னு உன்னை சார்ந்த முடிவு. இன்னொன்னு நம்ம குடும்பத்தை  சார்ந்த முடிவு. ரெண்டுல நீ எந்த முடிவு எடுத்தாலும்  யாராவது ஒருத்தர் பாதிக்கப்பட போறங்க தான். யோசி சைத்து நல்லா யோசி. உன் வாழ்க்கையா? நம்ம குடும்பமா? உனக்குள்ள கேட்டு பார். அது சொல்லும்... காலம் தாழ்த்திடாத. அதுக்கு அப்றம் எடுக்கற முடிவு எதுக்கும் உதவாது"என்றான். அவனும் யோசிக்க ஆரம்பித்தான். 


******


"பொண்ண வரச் சொல்லுங்கோ"ஐயர்   குரல் கொடுக்க,  பொண்ணுக்கு பதிலாக வைஷு வந்து சைத்துவின் பக்கத்தில்  அமர்ந்தாள். அதைக் கண்ட சரஸ்வதியோ காளி அவதாரம் எடுத்தார்.


"நீ என்னை விரும்பறேல அப்போ என் கழுத்துல தாலிய கட்டு" என்று வைஷு சைத்துவிடம் அதிகாரமாய் சொல்லி கழுத்தை நீட்ட, சரஸ்வதியோ "சைத்து அவ கழுத்துல தாலிய கட்டுன. நான் செத்து போயிடுவேன்" என்று மிரட்ட இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்ட சைத்து அவர்களை சமாளிக்க முடியாமல் தலை சுற்றி வைஷுவின் மடியிலே மயங்கி விழுந்தான்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2