இதயம் - 27

 இதயம் 27

கையில் அணிந்திருந்த வளையல்களை எல்லாம் மெது மெதுவாக கழட்டினாள் வைஷு. அவள் அணிந்திருந்த சிறு சிறு ஆபர்ணங்களை ஒவ்வொன்றாக கழட்டிக் கொண்டிருந்தாள்.


அவளது அறைக்குள் எகாவும் வஸ்தியும் பிரவேசித்தனர். கண்ணாடியூடே அவர்களைப் பார்த்து மென் முறுவல் பூத்தாள். இருவரும் தயக்கத்துடனே  அவள் பின்னே வந்து நின்றனர்.


"என்ன எகா மாமா திட்ட வந்தீயா? இல்ல அட்வைஸ் பண்ண வந்தீயா? ஏன் முட்டாள் தனமா பண்றனு கேட்க போறீயா?"என்று கேட்டு சிரித்தவளை கண்ணாடி வழியில் கண்டவன், அவளது கழுத்தை கட்டிக் கொண்டு கன்னத்தோடு கன்னம் சேர்த்தவன் 


"எப்பையும் என் வைஷு பண்றது சரினு சொல்றவன் நான். இந்த விஷயத்திலும் அதை தான் சொல்வேன்.  உன்னை தங்க கூண்டுல அடைக்க நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். உன் மனசையும்  கனவையும் புரிஞ்சுக்கற மகராசன் சீக்கிரமா வருவான். இல்ல நானே தேடிக்  கொண்டு வருவேன்"என்று நெற்றியை முட்டினான்.


அவனை கண்ணாடியூடே மீண்டும் பார்த்தவள் "மகாராசன் மட்டும் போதாது ராசா, அவன் குடும்பத்தையும் சேர்த்து கூட்டிட்டுவா" என்று செல்ல கட்டளை போட்டாள்.


"ஆகட்டும் தாயே !"என்று பணிய ராணி தோரணையில் அவனை கண்டு தலையை அசைத்தாள். இருவரும் சிரித்து விட்டனர். இவர்களை இருவரின் பேச்சை தூரமாக நின்று ரசித்தாள் வஸ்தி.


"என்ன நண்பா அமைதியா இருக்க??? உன் பங்குக்கு எதுவும் சொல்லலயா??" என நகைத்தாள்.


எகா விலகியதும் கழுத்தில் அணிந்திருந்த அட்டிகையை கழட்ட  தவித்தவளுக்கு உதவி செய்தவாறு. "நண்பா ! உன்னை பார்க்க கொஞ்சசோண்டு பொறாமையா இருக்கு. உன் விருப்பமெதுவோ அதை அப்படி செய்ற, உனக்கு சப்போர்ட்டா நம்ம குடும்பம் இருக்கு. உன் வாழ்க்கைய நினைச்சி நாங்க பயப்படணும் எந்த அவசியம் இல்லேடி.  


ஆனா, இது போல ஒரு குடும்பம் எல்லா பெண்களுக்கும் கிடைக்காது. பல பெற்றோர்களுக்கு மகளா பிறந்த முக்கால்வாசி பெண்களை எல்லாம் அவசரமா கல்யாணம் பண்ணி கொடுத்து இன்னொரு வீட்டுக்கு அடிமையா தாரவார்த்து கொடுக்கிறாங்க.


அந்த நிலமை மாறுமானு தெரியாது. ஆனா, இனி வர ஜெனரேசனாவது  மாத்த முயற்சி செய்யணும். உன் முடிவு ரொம்ப சரி வைஷு. ராணி மாதிரி வளர்க்க பட்ட நாம, ஏன் இன்னொரு வீட்ல வேலைக்காரியா கஷ்டப்படணும்...? யூ ஆர் ஆல்வேஸ் ரைட் நண்பா !"என்று அவளும் கட்டிக் கொண்டாள்.


"சரி நீ சொல்லு வஸ்தி. நீ இங்க ராணியா? இல்ல  வேலைக்காரியா??"என கேட்டாள் வைஷு.


"அஃப்கோர்ஸ் நான் ராணி தான். எப்பவோ நான் செஞ்ச புண்ணியம். இந்த குடும்பமும் இந்த  மகராசனும் கிடைச்சிருக்காங்க எனக்கு. இல்லேனா, நானும் இன்னொரு வீட்டுலே அடிமையா இருந்திருப்பேன். ஏன் சொந்த அத்தை வீட்லே கூட வேலைக்காரியா இருந்திருப்பேன்... என் நேரமும் நல்லா தான் இருந்திருக்கு" என்று சொல்லி சிரித்தாள்.


"வைஷு, மாமா , அத்தை கிட்ட பேசு சோகமாக  இருக்காங்க..."என்றான். அவளும் எழுந்து வெளிய வந்து பார்த்தாள்.  இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.


விஷ்ணு பக்கத்தில் அமர்ந்து அவர் நெஞ்சில் சாய்ந்தவள், "என் மேல் கோபமா அப்பா ! இல்ல வருத்தமா ! நான் பேசினது தப்புன்னு நினைக்கிறீங்களா?"என கேட்டு அவர் சட்டை பட்டனை திருக்கினாள்.


அவளது கையை பற்றி, அதில்  முத்தம் பதித்தவர், "எப்பையயும் என் மக தவறா யோசிக்க மாட்டாள். தப்பா பேசவும் மாட்டாள். உன் மனசுக்கு பட்டத்தை நீ செய்வடா, செய்யணும் அதான் அப்பாக்கும் வேணும்.


நீ இந்த வீட்லே இருக்கும் போது பிடிச்சது எல்லாம் செய்னு சொல்லிட்டு, போற வீட்ல உன்னை அடிமையாவோ இல்ல உனக்கு அது சிறையாவோ மாத்த விடுவேனா? அதுக்கு நீ எங்க கூடவே ராணி மாதிரி இருந்திடுனு சொல்லிடுவேன்டா ! 


அப்பாக்கு எப்பையும் தன் மகளை நினைச்சி பெருமையா தான் இருக்கும்.  எங்களுக்காக தான் இறங்கி போய் அந்தம்மா கிட்ட பேசின, இல்லேன்னா எடுத்த எடுப்பிலே கிளம்புங்க சொல்லிருப்ப அப்படித்தானே " என்று சிரித்தார். அவள் தன் தாயை பார்த்தாள்.


அவரும் அவள் அருகே வந்து" என்ன டா நான் ஏதாவது சொல்வேன் நினைச்சியா? தாயா இருக்கிறத காட்டியும் நானும் ஒரு பொண்ணு. தன் மக , அடிமையா இருக்கணும் நினைப்பேனா? இவங்களுக்கு உன்னை மருமகளாக்க கொடுத்து வைக்கல அவ்வளவு தான் சிம்பிள்"என்று தோலை குலுக்கினார்.


"அப்பாடா இந்த குடும்பத்துல நான் மட்டும் லூசுனு நினைச்சேன்... ஆனா எல்லாரும் லூசு தான் போல "என்று கூறி சிரிக்க, அவள் வலிக்காமல் திருகிச் சிரித்தார் விஷ்ணு. இறுக்கமான மனநிலையும் இதமாக மாறியது.


                         ****


வைஷுவின் மதி முகத்தை கண்ட பின் அன்று அவனுக்கு எதுவும் ஓட வில்லை. அவளது அலங்காரத்தை வைத்து  யூகித்து கொண்டான் அவளை பெண் பார்க்க வருகிறார்கள் என்று. ஏனோ உள்ளுக்குள் லட்ச கடுப்புகளும் கோபங்களும் எரிமலையாக  உள்ளுக்குள் வெடித்தனர்.


'அங்கே என்ன நடந்திருக்கும்? சம்மதம் சொல்லிருப்பாளா? ஏற்கெனவே தன்னிடம் 'ஓ கே ' சொல்ல போறாதாக தானே சொன்னாள். ஒரு வேள சொல்லிருப்பளோ ! டேட் ஃபிக்ஸ் பண்ணிருப்பாங்களா??  எப்படி தெரிஞ்சிக்கிறது?'என்று யோசித்த வண்ணம் இருந்தவனுக்கு வஸ்தியின் நியாபகம் வர சிறிதும் தயங்காமல் அவளுக்கு அழைத்து விட்டான்.


எகாவின் கைச்சிறையில் மாட்டிக் கொண்ட வஸ்திக்கு அவனது அழைப்பே தப்பிக்க வழியாகிப் போனது . அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டு சிட்டாகப்  பறந்து  வெளியே வந்து விட்டாள்.


"சொல்லு சைத்து... என்ன திடீர்னு போன் எல்லாம் பண்ணிருக்க என்ன விசேஷம்?" என்று கேட்டாள் கொஞ்சம் நக்கல் தோணியில். அவனும் விடாமல்,"விசேஷம் இங்க இல்ல அங்க தான் போல இருக்கு..." பொடி வச்சி தான் கேட்டான்.


பேசறது சைத்து தானா என்று ஒரு முறை சோதித்தவள், அவன் கேள்விக்கு பதிலளித்தாள். "ஆமா சைத்து, வைஷுவ பொண்ணு பார்க்க வந்திருந்தாங்க..."என்று பெருமூச்சை சொரிந்தாள்.


"என்னாச்சு எல்லாம் ஒகே தான . டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்களா என்ன?" 


"பச்... இல்ல"என்று நடந்ததை சொல்ல இங்கே அந்த ஆட்டக்காரனோ குத்தாட்டம் போட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.


"ஓ ... சரி. வைஷு என்ன பண்றா ஃபீல் பண்றாளா?" தன்  சந்தோஷத்தை மறைத்து கொண்டு கேட்டான்.


"இல்ல ஃபீல் பண்ணல... ஆமா இதெல்லாம் நீ ஏன் கேக்குற? பொதுவா நீ அடுத்தவங்க விஷயத்துல தலையிட மாட்டியே புதுசா வைஷு பத்தி எல்லாம் கேக்குற ?"என சந்தேகமாகக் கேட்டாள்.


" பச்... எனக்க வேலை இருக்கு வை" என்று வைத்து விட்டான்.


"அடப்பாவி ! "என்றவள் சைத்துவை பற்றி யோசிக்க, அவனோ ஆள் இல்லாத அறையில் ஆட்டம் போட்டான்.


ஆடக் காத்திருப்பவனும் காலில் சலங்கை கட்டியது போல இருந்தது அந்தச் செய்தி. தன்னை மறந்து ஆடியவனின் ஆட்டத்தை நிறுத்த அலறியது அவனது அலைபேசி.


அவனது பெரியம்மா தான் அவனது சந்தோஷத்தை பறிக்கும் விதமான செய்தியைச் சொன்னார்.


"சைத்து கண்ணா, பத்திரிக்கை அடிச்சி வந்திருச்சிப்பா. நீ வந்தா குலதெய்வம் கோயிலுக்கு போயிட்டு வந்து, உறவுக்காரங்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சிடலாம்"என்றார்.


அவ்வளவு தான் அவனது சந்தோஷத்தை போல சக்தியும் வடிந்து போனது. அப்படியே அமர்ந்து விட்டான். "சைத்து சைத்து..."என அழைக்க, நினைவு பெற்றவன்" வர்றேன்  பெரியம்மா "என்று வைத்தவனுக்கு தன் தவறு சுட்டது.


அன்று வைஷுவின் மேல் கொண்ட கோபத்தோடு வந்தவன் பெரியம்மா காட்டிய பெண்ணின் புகைப்படத்தை கூட பார்க்காது' சம்மதம் ' தெரிவிக்க, அந்த ஒருவார்த்தை போதாதா சரஸ்வதிக்கு அவ்வளது தான் உற்சாக பானம் குடித்தது போல மடமடவென அவனது கல்யாண வேலைகளை தொடங்கி விட்டார்.


ஜாதகத்தைப் பார்த்தார். எட்டுப் பொருத்தம் இருக்க, பெண் வீட்டாரிடம் சம்மதம் கேட்டார். அவர்களும் ஒத்துக் கொண்டனர் பெண்ணின் விருப்பத்தையும் கேட்காமல்.


பெண் பார்க்கும் படலாம்  எல்லாம் வைக்க வில்லை. பெரியவர்கள் சென்று நாட்களை குறித்து விட்டு வந்தனர். கல்யாண நாள் நெருங்க, அடுத்த கட்ட நடவடிக்கையாகப் பத்திரிக்கை அடித்து வந்து விட்டது. இனி  சொந்தக்காரர்களுக்கு கொடுக்க வேண்டியதும்,  ஆடைகள் தேர்வு செய்வது மட்டும் தான் வேலை.


இவ்வளவு தூரம் சென்று விட்டது. மனதில் இருந்த துளி நம்புக்கையும் வடிந்து போனது. வைஷு எனக்கில்லை என்ற எண்ணம் அவன் மூளைக்குள் வண்டாக குடைந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக மிருகமாக மாற்றிக் கொண்டிருந்தது. 


'கல்யாணத்தை நிறுத்த சிறுதேனும் வழி   இருக்கிறதா?' என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறான். ஆனால் எல்லாம் வழியையும் அடைத்து விட்டார்  அவனது பெரியம்மா சரஸ்வதி என்று அறியாமல் போனான்.

                              ****

குலதெய்வ கோயிலில் பத்திரிக்கையை வைத்து வழிப்பட்டவர்கள்.  நெருங்கிய உறவுகளுக்கு கொடுத்து பின் தங்கள் வீட்டில் சம்மதம் வைத்த சம்மந்திகளுக்கும் கொடுத்தனர். முதலில் ஸ்ருதி வீட்டிற்கு கொடுத்தவர்கள்.


அடுத்ததாக வைஷு வீட்டிற்கு வந்தனர் . அகல்யா வரவில்லை. சாந்தியும் தேவனும் பிரபுவும் சரஸ்வதியும் வந்திருந்தனர்.


முறைப்படி பத்திரிக்கை வைத்து அழைத்தனர். வைஷுவைப் பார்த்த சரஸ்வதி அந்தப் பேச்சை எடுத்தார்.


"உங்க பொண்ணுக்கு வர வரனெல்லாம் தட்டி தட்டி போகுதே ! எதுவும் தோஷமா இருக்கும். என்னனு பார்த்து நிவர்த்தி பண்ணுங்க சீக்கிரமா உங்க பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும்"என்றார்..


"ஆமா சரஸ்வதி அத்தே ! எனக்கு  வன்ம தோஷம் இருக்கு. என் மேல் நிறை பேர் வன்மம் வச்சிருக்காங்களாம் அவங்க காலடி மண்ணை எடுத்து பூஜை பண்ணினா போதுமா.  அந்த வன்மம் அவங்க குடும்பத்துக்கே திரும்பிடுமா. அதான் காலடி மண்ண எடுக்க தான் வெயிட்டிங்..." என்றதுமே காலை உள்ளிழுத்துக் கொண்டார் சரஸ்வதி. அதை அவள் கவனியாமலும் இல்லை  உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.


அவளது கேலியில் அனைவரும் சிரித்தனர். 'இந்தப் பொண்ணை சைத்துக்கு பார்க்காமல் விட்டோமே' என்ற கவலை இருந்தது சாந்திக்கு.


"ஆமா அத்தை... வைஷுக்கு வந்த வரன் தட்டிப் போனது உங்களுக்கு எப்படி தெரியும்? வீட்ல நான் யாருக்கும் சொல்லலையே!"என்று சந்தேகமாக கேட்டாள்.


"வதனா ஆன்ட்டி சொல்லிருப்பாங்க வஸ்தி"என்று வைஷு சொல்லுவும் திடுக்கிட்டு விழித்தார்.


"ஓ... உங்களுக்கு அவங்கள தெரியுமா??" அவள் மேலும் கேட்க, "என்ன நீ தெரியுமானு கேக்குற. அவங்க  இவங்களுக்கு காலேஜ் பிரண்ட். உன் கல்யாணத்துல பார்த்து அவங்க பிரண்ட்ஷிப் புதுப்பிச்சி கிட்டாங்க இல்லையா சரஸ் அத்தே !" எனவும் அவருக்கு தூக்கி வாரி போட்டது.


'என்ன  நேர்ல பார்த்த மாதிரி சொல்றா? 'எப்படி இவளுக்கு தெரிந்தது?'என்று கதி கலங்கிப் போனார். இன்னும் இங்கே இருக்க வேண்டாம் என்று எண்ணியவர் அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார்.


அவர் சென்றதும்,  வஸ்தி அவளை தனியாக அழைத்து விவரங்கள் கேட்டாள். அவள் அனைத்தையும்  சொல்ல வஸ்திக்கு கோபம் கோபமாக  வந்தது.


"அவங்களை ஏன் சும்மா விட்ட வைஷு??"


"விட்டு பிடிப்போம் வஸ்தி"என்று சொல்லி மர்மமாகச் சிரித்தாள்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2