இதயம் - 25

 

இதயம் 25

"ஃபிரஷ் கிளிக்" என்று பொறிக்கப்பட்ட பலகையை தாங்கி நின்ற கட்டத்தையே பார்த்து கொண்டிருந்ததான் நவநீதன்.


எகாவின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஓடிப் போயிருந்தன... அவனது கல்யாணத்தில் வைஷுவைப் பார்த்து தன் விருப்பத்தையும் அவள் மேல் உண்டான ஈர்ப்பையும் சொல்லிவிட்டு போன நவநீதன் இன்று தான் அவளைக் காண அவளது அலுவலகத்திற்கு வந்திருந்தான்.


இந்த இரண்டு மாதங்களிலும் முகூர்த்த நாட்கள் அதிகம் இருந்தன. திருமணங்கள் , புகுமனை புகுவிழா ,  காதணி விழா என விஷேங்கள் நிறைய இருந்தன. இருவரும் படு பிசியாக, எதைப் பத்தியும் யோசிக்காமல் வேலையே  கதியென அதில் தலையைக் கொடுத்திருந்தனர்.


இரண்டு மாதங்கள் முடிய, விஷேங்களும் குறைந்திருந்தன. வேலை பளு குறைந்திருக்க, வைஷுவிடம் முடிவை கேட்டுவிட அவளது ஸ்டூடியோவிற்கே வந்துவிட்டான்.


உள்ளே நுழைந்தவனிடம் அகிலா தான் 'யாரென ?' விசாரித்தாள். " ஹாய் நான் நவநீதன், மிஸ் வைஷுவைப் பார்க்க வந்தேன்"என்றான்.


"வைஷுவையா??"என சந்தேகமாக அவனை நோட்டமிட்டவள் "வைஷுக்கு நீங்க என்ன வேணும்???"என்றாள்.


"நான் வைஷுவோட உட்பீ !"என்று சாதாரணமாக சொன்னான்.  அவளோ காதில் ஏதோ தவறாக கேட்டு விட்டதோ என்று எண்ணி"என்ன சொன்னீங்க  சார்?"என்று அவர் சொன்னதை உசிதம் செய்ய மீண்டும் கேட்டாள். புன்னகையுடன் "நான், வைஷுவோட உட்பீ "என்றான் தெளிவாக.


"ஓ..."என்றவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை."கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார். இதோ வர சொல்றேன்"என்று அவனை அருகில் இருந்த சோபாவில் அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.


ஆல்பம் ஒன்றுக்கு டிசைன் பார்த்து கொண்டிருந்தாள். பரணியும் கிஷோரும் போட்டோ பிரண்டை பரிசோதித்து கொண்டிருந்தனர்.


வேகமாக உள்ள வந்த அகிலா" மிஸ் வைஷ்ணவி உங்களை பார்க்க உங்க உட்பீ வந்திருக்காங்க..."என்று பல்லைக் கடித்து கொண்டு சொன்னாள். 

வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பட்டென திரும்பி இருவரையும் பார்த்தார்கள்.


"என்னடி உளற யார் வந்திருக்கா???"திரையிலிருந்து விழியகற்றாமல் அகிலாவிடம் கேட்டாள் வைஷு.


"நான் உளறலங்க... நிஜமாலுமே உங்க உட்பீ தாங்க வந்திருக்காங்க மேடம்"என்று மீண்டும் பல்லைகடித்து கொண்டு சொன்னாள்.


"உட்பீயா?? என்ன மேடம் சொல்லவே இல்ல. எனிவே காங்கிராட்ஸ்"என்று கிஷோர் முந்திரி கொட்டையாக கையை நீட்ட,  அதை தட்டிவிட்ட அகிலா,"இந்த துரோகி மேடமுக்கு இது ஒன்னு தான் குறைச்சல்..." என்று அலுத்துக் கொண்டாள்.


பரணியோ"அகி, கொஞ்சம் வாய அடக்கு"என்றவன் குழம்பி நின்ற 

வைஷுவை பார்த்து"யார் உன் உட்பீ வைஷு??"நிதானமாக கேட்டான்.


"தெரியல பரணி... அகி, பெயர்  என்ன சொன்னான்?"


"நவநீதன்..."என்றாள்.


ஒரு நிமிடம் பொட்டில் தட்டி யோசித்தவள்,"ஓ... அவனா...! வர சொல்லு "என்றாள்.


"அவனானா எவன்? யாரவன் சொல்லு?"  விடாப்பிடியாக தெரிந்தே ஆகணும் என்று அகிலா ஒத்தக்காலில் நின்றாள்.


"அகி... முதல்ல அவங்க ரெண்டு  பேரும் பேசிக்கட்டும். அப்றம் என்னனும் கேட்போம். இப்போ நீ கொஞ்சம் அமைதியா இரு" என்று அவளை அடக்கியவன் "போய் அவர வர சொல்லு"என்றான்.


இருவரையும் முறைத்து விட்டுச் சென்றாள் அகிலா."தேங்க்ஸ் பரணி"என்றவள் அவன் 'எதற்காக வந்தான்?'என்ற யோசனையில்  இறங்கினாள்.


அவள் ஆழந்த யோசனைக்குள் செல்ல, அவள் முன் சொடக்கிட்டு நின்றான் நவநீதன்.


"நான் எதுக்கு வந்தேன்  யோசிக்கறீங்க போல"கைகட்டிக் கொண்டு கேட்டவனை  மூரலுடன் வரவேற்றாள் வைஷு.


"உண்மை தான் மிஸ்டர் நவநீதன்... திடீர்னு உங்க விசிட் எதுக்குனு யோசித்தேன். சரி வாங்க உள்ள போய் பேசலாம் "என்று மற்றொரு அறைக்குள் அழைத்து போனாள்.


அறைக்குள் இருந்த சோபாவில் அமர சொல்லியவள் இடைவெளி விட்டு அவளும் அமர்ந்தாள்."சொல்லுங்க மிஸ்டர் நவநீதன், என்ன விஷயமா வந்திருக்கீங்க??" 


"என்ன விஷயமா வந்திருப்பேன்  நீங்க நினைக்கறீங்க???"


அவள் கைகளை விரித்து'தெரியவில்லை' என்றாள். அவன் விழிகளைப் பார்த்து கொண்டிருந்தவன்"என் ப்ரோபசலுக்கு பதில் கேட்டு வந்திருக்கேன் வைஷு. உங்க ஆன்ஸர்??"என்று விஷயத்துக்கு வந்து சேர்ந்தான்.


"ஓ... ஸாரி மிஸ்டர் நவீ ! டூ மன்த்ஸ் ரொம்ப பிஸி. எதை பத்தியும் யோசிக்க முடியாத அளவுக்கு வேலை... அதுல நீங்க சொன்னத பத்தி யோசிக்க மறந்துட்டேன்"என்று கொஞ்சமாக வழிந்தாள். அது அவனுக்கு பிடித்து விட ரசித்தான். 


"ஸாரி ஸாரி...!"என கேட்டவாறே இருந்தவளை சமாதானமாக்கும் பொருட்டு" வைஷு டோன்ட் சே ஸாரி. ஐ நோ வைஷு, டூ மன்த்ஸா நாம எவ்வளவு பிஸியா இருந்தோம் நமக்கு தெரியும் . நானும் கூட வொர்க்ல மாடிக்கிட்டேன் தான். ஸோ நோ பிராபலம். நீங்க மறந்திருப்பீங்க எனக்கு ஒரு எண்ணம் இருந்தது. அதான் நியாபகம் இருந்தால் பதில் கேட்டுடு போலாம். இல்ல நியாபகப் படுத்திட்டு போலாம்னு வந்தேன்"என்றவனை வியப்பாக பார்த்தாள்.


'இப்படியும் ஒருத்தனா???'என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதே நேரம்,'நடிக்கறானோ' என்று கூட தோன்றியது . அவன் விழிகளை கூர்ந்து கவனித்தாள்.


'ஒரு வேள இவன் தான் நமக்கானவனோ ! இவன் நமக்கு செட்டாவானா??? உள்ளுக்குள் இருக்கும் பட்சி என்ன எதுவும் சொல்ல மாட்டிகிது. இவன் தான் எனக்கானவனா???' என்று கேட்டாள். அவளது உள்மனம் பதிலளிக்காது அமைதியாக இருக்க , குழம்பினாள்.


அவள் குழம்பி போய் இருக்க, அவன் சிந்தனையை கலைத்தவன்" நோ பிராபலம் வைஷு ! இன்னும் ஒரு பைவ் டெஸ் கூட எடுத்துக்கோங்க... ஐ வில் வெயிட் ஃபார் யூ..."என்று பெருமிதமாக  சொல்ல அவர்கள் இருவருக்கும் காஃபி எடுத்து வந்து கொடுத்தான் கிஷோர்.


"தேங்கஸ்" என்று சொல்லிவிட்டு இருவரும் எடுத்துப் பருகினார்கள். அவன் ஸ்டூடியோவை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சைத்துவும் அவனது நண்பனும்  உள்ளே நுழைந்தார்கள்.


கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்தாலும் அகிலா வைஷுவையும் நவிநீதனை பற்றியும்  யோசித்துக் கொண்டிருந்தாள்.


தன் நண்பனின் திருமணத்திற்கு வீடியோ கவரேஜ் எடுக்க இவர்களை புக் செய்ய வந்திருந்தார்கள். இருவரும் உள்ளே நுழைய எதிரே நின்ற அகிலாவிடம் வந்தனர்


"ஹலோ ஹலோ" இரண்டு முறை அழுத்தமான அழைப்பிற்கு பின் நினைவு பெற்றவள்"ஸாரி... ஸாரி சார் சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்?"


"நான் வைஷுவ பார்க்கணும்..."என்றதும்

"நீங்களுமா???சத்தமாக அலுத்துக் கொண்டாள் அகிலா.


"வாட்??? நீங்களுமா னா வேற யாரு?"என்றான்.


"ஸாரி சார். அவங்க அவங்களோட உட்பீ கூட பேசிட்டு இருக்காங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஏதாவது பங்கசனுக்கு புக் பண்ண வந்திருந்தாலும் சொல்லுங்க பண்ணலாம்..."என்றாள்.


"அவங்க உட்பீ யார்???"என்று கடைசி சொன்ன வார்த்தைகளை கவனிக்காது கேட்டான்.


"மிஸ்டர் நவநீதன்" என்றாள்.

'ஒரு வேள அவனா இருப்பானோ' என்று கணித்தவன் தன் நண்பனின் புறம் திரும்பி, "மச்சி,  நீ இவங்க கிட்ட டீடேய்ஸ் சொல்லு. நான் வந்துடுறேன் மச்சி.."என்று உள்ளே வேகமாக  நடந்தான்.


"சார் சார் "அகிலாவின் அழைப்பையும் பொருட்படுத்தாது உள்ளே சென்றான். பரணியும் கிஷோரும் ஹாலில் வேலை பார்த்துக் கொண்டிருக்க, சாத்தப்படாத அறையிலிருந்து பேச்சு சத்தம் கேட்டது உள்ளே செல்லாது கதவைத் தட்டினான்.


'யாரென?' நவநீதன் வைஷுவைப் பார்க்க, அவள் தனக்கும்  தெரியாது என்பது  போல தோளைக் குலுக்கி விட்டு "எஸ் கமின்" என்றாள். 


புயல்போல வேகமாக நுழைந்தான். அவனை கண்டதும் வைஷு எழுந்து நின்றாள். உள்ளே நுழைந்த போதே அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த இடைவெளியை கணித்து விட்டவனுக்கு ஓர் பக்கம் குளிர்  பரவ மற்றொரு பக்கம் இருவரும் அருகருகே அமர்ந்திருப்பது எரிந்தது. 



"வாங்க மிஸ்டர் சை... சைத்து... என்ன திடீர்னுஉஉ???" என்று அன்று கண்ட அதே தவிப்பை கொண்டு நின்றவனைக் கண்டு இழுத்தாள்.


"அதுஉஉ.. உன்... உங்களை பார்க்க தான் வந்தேன் மிஸ் வைஷு"என்றான் நவநீதனைப் பார்த்து. அவன் சைத்துவை சாதாரணமாக  பார்த்து வைத்தான். ஆனால் சைத்துவிற்கு அவனை பார்க்க பார்க்க, பளார் என்று பத்து முறை அடித்து அவனது துரத்திட வேண்டும் என்பது போல இருந்தது. 


"இவங்க யார் வைஷு??" 


"இவர் சைதன்யா. என் கசினோட ஒயிப்போட கசின்"என்று சைத்துவை அறிமுகம் செய்து வைத்தாள்.


சைத்து அவனையும் வைஷுவையும் பார்க்க, அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து அவள் சொல்வதற்குள் அவன் முந்திக் கொண்டு " இப்போ வரைக்கும் பேமிலி பிரண்ட். இன் ஃபியூசர் ஹஸ்பண்ட் ஆகலாம் ..."என்று அவனாக முடிவு செய்து கொண்டு அவளனுமதியின்றி சொன்னான்.


வைஷு அவனை முறைக்க, அவனோ அழகாக சிரித்து கண்ணடித்தான். இந்தக் காட்சியைக் கண்டு சைத்துவிற்கு ரத்தம் அழுத்தம் தான் உண்டானது.


"ஓகே வைஷு... பைவ் டெஸ் கழிச்சி கால் பண்ணுங்க ஐ ஆம் வெயிட்டிங்"என்று சொல்லிவிட்டு சைத்துவிடம் ஒரு தலையசைப்பை கொடுத்து விட்டு விடைப்பெற்றான். அவன் முதுகை இருவரும் வெறித்து நின்றனர். அவன் மறையவும் வைஷுவின் கவனம் சைத்துவின் புறம் சென்றது.


"சொல்லுங்க மிஸ்டர் சைத்து, என்ன இந்தப் பக்கம்??? அதுவும் அவசரமாக என்னை வந்து பார்க்கற அளவுக்கு என்ன விஷயம்???"என்றாள். 


"அவனுக்கு ஓகே சொல்லிட்டீயா வைஷு..."என்று சம்பந்தமில்லாமல் கேட்டான். 


"என்ன சைத்து, இங்க வந்த விஷயத்தை மறந்துட்டீங்களா என்ன? வேற எதையோ கேட்டுடு இருக்கீங்க?" புருவம் உயர்த்தி கேட்டாள் 


அவனுக்கு பதில் சொல்ல சற்று தடுமாறிப் போனான். அவனை நினைத்து அவனுக்கே வியப்பாக இருந்தது. 'எந்த ஒரு விஷயத்திலும் ஈடுபாடு காட்டாத அவன். வைஷு விஷயத்தில் மட்டும் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறான். 'ஏன்?' என்ற காரணத்தை இன்னும் முழுமையாக கண்டறிய முடியவில்லை அவனால். ஆனாலும் அவள் தன்னுடைமையை போலவும் அவள் தனக்கே தனக்கென்று வேணும் என்ற ஓர் உணர்வும் உள்ளே அவனை அழுத்திக்   கொண்டிருக்கிறது.


"மிஸ்டர் சைத்து, என்ன யோசனை? கேட்டதுக்கு பதில் இல்லையே?"என்றாள்.


"நான் கேட்டதுக்கும் பதில் சொல்லலை வைஷு ! முதல்ல உன் பதிலைச் சொல்லு. அவனுக்கு சம்மதம் சொல்லிட்டீயா??"அதே பிடிவாத்தோடு கேட்டான்.


"என்ன பிரச்சினை சைத்து உங்களுக்கு... நான் ஓகே சொன்னால் என்ன? சொல்லேனா உங்களுக்கு என்ன??? என்  விஷயத்துல ஏன் உங்களுக்கு இந்த தீவிரம்...?"என அசட்டையாக கேட்டவளை சுவற்றில் சாய்த்தவன் அவளது இதழ்களை வன்மையாக முற்றுகையிட்டு தன் இதழ்களுக்குள் சிறை செய்தான். 


தன் முழு ஆத்திரம்  தீரும்  வரை அவ்வளிதழை விடவே இல்லை. அவளிதழில் ரத்தம் கசிய முத்ததினுடே இரத்ததையும்  சுவைத்தவன். அவனை  மெல்ல விடுவித்தவன்"எனக்கு என்ன தீவிரம்னா கேட்டா? நான் உன்னை லவ் பண்றேன்டி. உன்னை மட்டும் தான் கல்யாணமும் பண்ணிப்பேன். நீயும் தான். உன் காதல் எனக்கு மட்டும் தான். உன்னோட கல்யாணம் என்னோட மட்டும் தான். எவனாவது நடுவில வந்தான் செத்தான்..."என்று மிரட்ட, மிரட்சியுடன் அவளை பார்த்திருந்தான். 


அவள் மிரண்ட விழிகளுக்குள் தன்னை தொலைத்தவன் பெருமூச்சொரிந்து கண்களை மூடி திறந்து அவள் விழிகளை பார்த்து "ஐ லவ் யூ வைஷு"என கையை நீட்டிச் சொன்னான்.   

அவனையே வெறிக்க வெறிக்க பார்த்தாள். 

அவனோ மேலும்  அவளை நெருங்க, அவனை போட்டு உலுக்கி எடுத்தாள்..


"மிஸ்டர் சைத்து... மிஸ்டர் சைத்து... அடேய் சைக்கோ... "என்று உலுக்க, கனவு உலகத்திலிருந்து வெளியே வந்தான். 


"என்னாச்சி???" என்றான் விழித்தபடி.


"அதை நான் கேட்கணும் மிஸ்டர்? உங்களுக்கு என்னாச்சி? சம்பந்தம் இல்லாம கேள்வி கேட்குறீங்க? பதில் கேட்டால் சிலை போல  நின்னு கனவு காணுறீங்க? என்ன பிரச்சனை உங்களுக்கு??" கைகட்டி அவனிடம் கேட்டாள். 


"எது கனவா???"தன்னை ஒரு தரம் பார்த்து கொண்டான். 


"லுக் மிஸ்டர் சைக்கோ... நான் நவீ கூட பேசும் போதெல்லாம் மூக்கு வேர்த்த மாதிரி நீங்க வந்திடுறீங்க... இதை கோயின்ஸிடன்ஸ் சொல்ல முடியல. என் கெஸ் சரினா நீங்க என்னை லவ் பண்றீங்களா???"அவன் முன்னே சன்னமாக நின்று கேட்டாள்.


"ஆம்"என்று உள்ளிருந்த ஒரு பட்சி  சொல்ல சொல்ல, மூளையோ அவளது திமிரைக் காட்டி சொல்லாதே. எப்படியும் உன்னை அவள் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.' நஷ்டம் உனக்கு தான்' மூளை அடித்துச் சொல்ல குழம்பி பதில் கூறாமல்  நின்றான்.


அவன் அமைதியை கண்டு பெருமூச்சொரிந்தவள், அவனிடம்"நீங்க என்னை லவ் பண்ணலைனா சந்தோசம். பண்ணிருந்தால் ப்ளீஸ் அதை மறந்திடுங்க... என்னால் உங்க கூடயோ, இல்ல உங்க பெரியம்மா கூடயோ குப்பை கொட்ட  முடியாது... வந்த விஷயத்தை சொல்லுங்க... இல்ல எதுவுமில்லேனா  ப்ளீஸ்" என்று வாசலை காமித்தான்.


"அண்ட்  இன்னும் பைவ் டெஸ்ல எப்படியும் நவீகிட்ட ஓகே சொல்லிடுவேன். அவனுக்கும் எனக்கும் தான் மேரேஜ். கல்யாணம் வைத்தால் கண்டிப்பா உங்களை கூப்பிடுவேன் வந்திடுங்க"என்றாள் புன்னகையுடன்.


அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை அவனால் தன்னுடன் வந்த நண்பனை கூட கவனிக்காது கோபமாக அவனை  விட்டுச் சென்று விட்டான். அவன் அழைக்க அழைக்க  திரும்பி பாராது சென்றதை ஸ்டூடியோவிலிருந்து அனைவரும் பார்த்து கொண்டு தான் இருந்தனர் அதில் வைஷூவும் ஒருத்தி.


தன் நண்பர்களிடம் நவநீதனை பற்றிச் சொன்னவள் சைத்துவை பற்றிச் சொல்ல மறைத்து விட்டாள்.


ஆத்திரத்துடன்  அங்கிருந்து வந்தவன் முட்டாளாய் யோசிக்காமல் பெரியம்மா காட்டிய பெண்ணின் புகைப்படத்தை பாராது 'சரி , உங்கள் இஷ்டம்' என்று சொல்லிவிட்டு முடங்கிக் கொண்டான்.


அவர் முகம் சந்தோஷத்தில் பிரகாசிக்க, மகன் இருளை தேடிச் சென்று கொண்டிருப்பது தெரியவில்லை. சைத்துவிடம் சொன்னது போல அடுத்து வந்த ஐந்து நாட்களில் வைஷு யோசித்து, விஷ்ணுவின் அறிவுரையில் மகிழின் ஆசைக்காக நவநீதனை திருமணம் செய்ய ஒத்துக் கொண்டாள். 


ஆனாலும் அவள் உள் மனது அவளுடன் பேசவில்லை. அவளை குழம்பி தவிக்கும் படி செய்தது.  எது நடந்தாலும் நடக்கட்டும்  என்று எண்ணிக் கொண்டவள் நவநீதனை போல' காதல்' என்று சொல்லாமல் பெண் கேட்டு வர சொல்லிவிட, அவனுக்கு அவன் தந்தைக்கும் ஏகப்போக சந்தோஷம்.. ஆனால் அவர்களின்  சந்தோசம் துளியும் வதனாவிற்கு இல்லை.   ஆத்திரம் , கோபம் தான் வந்தது. இருவருக்கும் முன்னால் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை காட்டவுமில்லை


'என்ன செய்வதென்று' புரியாமல் தவித்தவருக்கு விடைச் சொல்லும் ஒரே ஆள் சரஸ்வதி என்று எண்ணியவர் அவருக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவரும் யோசித்து எங்க அடித்தால் அவளுக்கு கோவம் வரும் என்று அறிந்த வைத்திருப்பதை போல் தெளிவாக  வதனாவிற்கு புரியும் படி திணித்தார்.


வதனாவும் அதனை கற்பூரம் போல பிடித்துக் கொண்டத்தோடு தன் வேலையையும் காட்ட முடிவு செய்தார். கொஞ்சமும் தன் மூளைய உபயோகிக்காது அடுத்தவர் பேச்சைக் கேட்டு  தன் வீட்டிற்கும் தனக்கும்  நல்லது செய்கிறேன் என்ற பெயர் வழியில் மகனின் ஆசைi மனதை உடைக்க திட்டம் போடுகிறார். வைஷுவின் வாயால் கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல வைக்க நினைத்தவர் மகனின் கோபத்தை சம்பாதிக்கப் போகிறோம் என்று அறியாமல் போனார்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2