இதயம் - 24

 இதயம் 24

எகாவும் வஸ்தியும் பத்திர பதிவு அலுவலகத்தில் காத்துக் கொண்டிருந்தனர்.


அவளின் கோர்த்த கையை கெட்டியாகப் பிடித்த படி அவள் செய்யும் கேலிகளை எல்லாம் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான் அவன். 


இருவரும் சேர்ந்திருந்த ஒவ்வொரு நொடியையும் காதலோடு அனுபவித்தனர். 


இங்கு வந்ததிலிருந்தும் கூட அவன் அவளது கையையும் அவள் அவனையும் விட்டு ஒரு இன்ச் நகரவுமில்லை. 


தன் வக்கீலிடம் பேசிக் கொண்டிருந்த மதிமா அவர்களை கவனியாமலும் இல்லை. அவரது வக்கீல் பேசிட்டு விட்டு உள்ளே செல்ல அவர்கள் அருகே வந்தார்.


"எகா ! அடுத்து நம்ப தான். அவங்க கூப்பிட்டதும் உள்ள போலாம் "என்றார். 

இருவரும் "சரிமா "என்றனர்.


அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்துக் கொண்டிருந்தார் என்பதை விட ரசித்துக் கொண்டிருந்தார் என்பதே சரி.


அவர் தங்களையே மூரலுடன் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 


அவரது எண்ணங்களை அறிய வஸ்தி அவரிடம் "என்ன எங்களையே பார்த்துட்டு இருக்கீங்க??"என்றாள்.


"உன் புருஷன் உன்னை முதல் முறையா என் கிட்ட கூட்டுட்டி வந்தப்போ,  நீ கட்டிக்கப் போற பொண்ணானு கேட்டேன். அதுக்கு இவன் இல்ல இல்லனு வேகமா சொன்னான். ஆனா இப்போ..." என்று அவர்   பாதிலே  நிறுத்தி இருவர் கோர்ந்திருந்த கைகளையும் குறும்போடு பார்த்து புருவங்களை உயர்த்தினார்.


"அப்போ எனக்கு, பிரதிய நான் காதலிக்கற பொண்ணு, கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுனு உங்க கிட்ட உரிமையா  சொல்லணும் தான் ஆசை. ஆனா அந்த டைம்ல வஸ்தி  என்னை விரும்பலை, என்னை நண்பனா தான் பார்த்தாங்க. அதான் ஓவரா அட்வாடேன்ஜ் எடுக்கக் கூடாதுனு தான் அப்படி சொன்னான். 


நீங்க சொன்னது போல நடக்கும் எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனா இவ்வளவு சீக்கிரம் நிறைவெறும் நான் நினைக்கில மா. எவ்வளவு கொடுத்து வச்சவன் தெரியல. ஆனா நான் ப்ளேஸ்ஸ்ட் மா.


அம்மா அப்பா இல்லாத குழந்தைங்க மகிழ்ச்சியோட இருப்பாங்களானு கேட்ட இல்லைனு தான் எல்லாரும் சொல்வாங்க.. ஆனா நான் சொல்ல மாட்டேன். அவங்க இருந்தால் கூட  எனக்கு இவ்வளவு மகிழ்ச்சி கிடைச்சிருக்குமா தெரியல. 


பட் நவ் ஐ'ம் வெரி ஹாப்பி. அப்பா அம்மா போல அத்தை மாமா , உடன் பிறந்தவள் போல வைஷு. எல்லாத்துக்கும் மேல உயிர் தோழியா காதலியா மனைவியா கிடைச்சிருக்கா என் பிரதி. எல்லாரும் பொறாமை படக் கூடிய அளவுக்கு நான் ப்ளேஸ்ஸ்ட் தானமா ??"எனக் கேட்டவன் குரலிலே, இந்த உலகத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மகிழ்ச்சியை விலைக்கு வாங்கியவன் போல அவ்வளவு மகிழ்ச்சி அவனுக்குள் இருந்தது. அவனது முகத்திலும் ததும்பி வழிந்தது.


"பட் நீ மட்டும் ப்ளேஸ்ஸ்ட் இல்ல வஸ்தியும் கூட தான். சும்மா பேச்சுக்கு  என் ஆளு, நான் கட்டிக்க போற  பொண்ணு ஈஸியா சொல்லிடலாம். ஆனா அவங்க விருப்பம் என்ன  அவங்க எண்ணம் என்னனு மதிச்சி , அதுக்கு மதிப்பு குடுக்கற மனசும் மனுஷனும் கிடைக்க ப்ளேஸ்ஸ்ட் தான் இல்ல வஸ்தி?"என்கவும், 


"என் மனுசுல இருக்கிறத அப்படியே சொல்லிட்டீங்க மதிமா.. நானும் ப்ளேஸ்ஸ்ட் தான். கல்யாணமானதும் வீட்ல இரு. எனக்கு சமைச்சி போடு. என் ஆசை தீத்துவனு சொல்ற புருஷங்களுக்கு மத்தியில் பொண்டாட்டியோட கனவுகளை தன் கனவா நிறைவேத்த நினைக்கும் புருஷனுங்ககள்ல என் புருஷனும் ஒன்னு.  ஏன் அவங்களை விட  ரொம்ப ஒசத்தி. 


காதலிக்க ஆரம்பிச்சி கொஞ்ச நாட்களானாலும் பூர்வ ஜென்மமா கொண்ட நம்பிக்கையை போல என் மேல அளவில்லாத நம்பிக்கை வச்சிருக்கான் என் காந்த். 


நான் அந்த அளவுக்கு தகுதியானாவளானு எனக்கு தெரியல.  எனக்காக யோசிச்சி  என் பேர்ல் சொத்து வாங்கணும், எனக்குனு ஒரு அடையாளம் கிடைக்கணும் நினைச்சு எந்த நம்பிக்கையில் இதெல்லாம் பண்றான் எனக்கு தெரியல. ஆனா அந்த நம்பிக்கைய  எப்பவும் உடைய விட மாட்டேன். அது எத்தனை வருஷம் பழமையானாலும்"காதல் வழிய சொன்னவள் நினைவு அவர்கள் முதல் ராத்திரியில் அன்று சென்றது.


இடையில் கை வைத்து அவனை முறைக்க, அவனோ தலையை சொரிந்த அசடு வழிய சிரித்தான்.


"அன்னைக்கி என்னவோ நல்லவன் போல வந்து, ஒரு போட்டோ தான் கொடுத்தானு என்கிட்ட சொல்லி  கொடுத்த.  இங்க இன்னொன்னு மாட்டி வச்சிருக்க ஃபிராடு ! எவ்வளவு தைரியம் உனக்கு. என் அனுமதி இல்லாம என் போட்டோவ வச்சிருப்ப நீ !"என பொய்யாய் கோபம் கொண்டாள்.



"அந்தப் போட்டோவே, உன் அனுமதி இல்லாமல் எடுத்தது தான். நியாபகம் இருக்கா? உன்னை போட்டோ எடுத்தது என் காதல் தூது புறா வைஷு தான். ஆனா  என் ஒரு பார்வைய உணர்ந்து எனக்காக எடுத்த போட்டோ இது. எல்லாத்தையும் கொடுத்திட முடியுமா??



என் மயிலு இது ! என் மயிலு  போட்டோவ நான் வச்சிக்க, உன் கிட்ட ஏன் நான் அனுமதி கேட்கணும்? 

கடவுள் போட்டோவை  எல்லாம் அந்தக் கடவுள் கிட்ட கேட்டா வச்சிருக்கோம் இல்லேல. அது போல தான் இது. உன் பெர்மிஷன் கேட்டு வைக்கணும் இல்ல"என்றவன் அவள் புகைப்படத்தின் அருகே சென்றான்.


"என் மயிலு !! நான் கண்ண திறக்கும் போதும் மூடும் போதும் என் கண்ணுக்குள் என் மயிலு முகம் மட்டுமே இருக்கணும். அந்த நாளும் அப்படியே கழியணும். என் மயிலுக்கு நான் நிறைய முத்தம் கொடுத்திருக்கேன்.  அவகிட்ட நிறைய முறை அழுதிருக்கேன், சிரிச்சிருக்கேன் ஏன் குடும்பமே நடத்திருக்கேன். நீ என்னை விட்டு போறேன் சொன்ன அன்னைக்கி என் மயிலே கதினு இவகிட்ட புலம்பி சரணடைஞ்சிட்டேன்.  


என் மயிலே எனக்கு போதும்னு இருந்திடலாம் நினச்சேன். ஆனா அதுக்குள்ள என்னமோ நடந்து நீ எனக்கே எனக்குனு கிடைச்சிட்ட, நம்ப முடியல மயிலு,  என்னோட பேராசையும் நிறைவேறிருக்கு..." புகைப்படத்திடம் பேசி முத்தம் வைத்தான். 


அவன் கையிலிருந்து அவளது  புகைப்படத்தைப் பிடிங்கியவள் அதை மாட்டி விட்டு அவன் புறம் திரும்பி"நான் இருக்கும் போது என்ன மயிலு குயிலு கொஞ்சிட்டு இருக்க?? என்ன கொஞ்சுடா.

இனிமே நீ என் முகத்தில தான் விழிக்கணும், என் முகத்தை பார்த்து தான் தூங்கனும்... எனக்கு தான் முத்தம் கொடுக்கணும் என் கிட்ட தான் அழணும் புலம்பணும், என்னோட தான் குடும்பம் நடந்தணும்  ஒரு விரல் நீட்டி புருஞ்சதா" என அவள  மிரட்டும் தோரணையை கண்டு சிரிப்புவர,  அடக்கியவன். அவளது இடையை வளைத்து முரட்டுத்தனமாக தன் பக்கம் இழுத்து இடைவெளியை குறைத்தவன்"அப்போ குடும்பம் நடத்தலாமா மயிலு ???"எனக் கிறக்கத்தில் கேட்டு அவள் விழியை நோக்க, அவன் விழியை நேருக்கு நேராகப் பார்த்திருந்தவள், பார்வையின் வீச்சு தாங்க முடியாமல் விழித் தாழ்த்தினாள். 


அவளை தூக்கிக்கொண்டு மெத்தையில் கிடத்தி அருகினில் படுத்தவன் அவளையே பார்த்திருந்தான். அவளும் தான். அவள் விரல்களைப் பிடித்து சிறு சிறு முத்தமாகப் பதித்து விரலைகளை அலங்கரித்தான். 


நெற்றில் முத்தத்தைத் திலமாக இட்டவன் அவள் முகம் பார்க்க விழிகளை மூடிக் கொண்டு அதை முழுதாய் அனுபவித்தாள்."மயிலு"என்று பூ போல அழைக்க, மெல்ல விழிந்திறந்து அவனை பார்த்தாள். 


"உன்னோட ஆசைகள் என்ன? என்ன ஐடியா வச்சிருக்க? அடுத்து என்ன பண்ணலாம் இருக்க?"என்று அவளை தன் அணைப்புக்குள் அடக்கி உச்சில் தன் கன்னம் பதித்து கேட்டான். 


அவளும் புரியாமல் அவன் முகம் பார்க்க அவள் பார்வைக்கு முத்தம் வைத்தவன்"என்னடா குடும்பம் நடத்தலாமானு கேட்டுட்டு , இப்போ இந்தக் கேள்வி கேக்குறானே பார்க்கிறீயா?" அழகு முகத்தை பார்த்து கணித்து கேட்க மெல்லமாக ஆடியது அவள் தலை.


"குடும்பம் தானே இன்னும் குத்துமதிப்பா ஒரு நாற்பது வருஷம் இருக்கு... நடத்திக்கலாம். அதுக்கு முன்ன கல்யாண வாழ்க்கையை தாண்டி உனக்குள்ள ஒரு ஆசை , உனக்குன்னு ஒரு கனவு இருக்குமே. அதை சொல்லு, நிறைவேத்த இப்போ உன் புருஷன் நான் இருக்கேன்"என்று மீசையை முறுக்கிவிட, மீசையிலும் உதட்டிலும் பட்டுப்படாமல் முத்தம் வைத்தாள். 


அவனை இறுக்கி அணைத்து கொண்டவள் நெஞ்சில் முகத்தைப் புதைத்து இதயத்துடிப்பை தாளமாக்கிக் கண்ணை மூடியவள், ஒரு நிமிடம் மௌனமாகிப் பின் பேச ஆரம்பித்தாள்.


"எனக்கு மதிமாவை போல நாட்டிய பள்ளி வைக்கணும், நிறைய குழந்தைகளுக்கு பரதம் சொல்லிக் கொடுத்து அரங்கேற்றம் நடந்தணும். அது தான் என்னோட ஆசை, கனவு எல்லாம். எனக்கு இன்னொருத்தார் கிட்ட வேலை எல்லாம் பார்க்க இஷ்டம் இல்ல. 


தனியா ஒரு பள்ளி வச்சி, அதுல நான் ஆசிரியரா இருக்கணும்... நான் கற்ற கலைய, பரதம் கத்தக்கணும் நினைக்கற குழந்தைக்களுக்கு கற்று தரணும். அவ்வளவு தான் காந்த் என் கனவு " என்றாள். 


அவனும்"ம்ம்ம்"கொட்டி யோசித்தவன். சட்டென நினைவு வந்தவனாக அவளை பிரித்து தன்னைப் பார்க்க வைத்தவன்" ஹேய் மயிலு ! இப்போ தான்  நியாபகம் வருது. நம்ம மதிம்மா, அவங்க புள்ளை கூடவே அமெரிக்கால செட்டில் ஆகப் போறாங்களாம். அந்த வீட்டையும் நடனபள்ளியையும் விக்கறதா சொல்லிட்டு  இருந்தாங்க...  நாம் அதை வாங்கிடலாமா??"எனக் கேட்டவனை விழி விரித்து பார்த்தாள்


"என்ன?"எனக் கேட்டு அவன் புருவங்களை உயர்த்தினான்.

"அவ்வளவு பணத்துக்கு எங்க போறது காந்த்?"தவிப்பாய் கேட்டாள். 


"அதை பத்தி நீ கவலைப்படாத பிரதி ! மாமா கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ண சொல்றேன். அம்மாவோட நிலங்கள் நிறையா இருக்கு. அதுல ஒண்ண வித்து உன் பேர்ல வாங்கிடலாம் என்ன ? உனக்கு சம்மதமா?? "என்றவனை கண்கலங்கப் பார்த்தவள்"ஏன் காந்த் என் பேர்ல் வாங்கற உன் பேர்ல வாங்கலாமே"


"என் பேர்ல உன் பேர்ல இனி எதுவும் தனித்தனி இல்ல எல்லாம் ஒன்னு தான்.  நான் இருந்தாலும் இல்லேனாலும்"என்னும் போதே வாயை பொத்தி" வேண்டாம்" என்றாள். அவள் கையில் முத்தம் வைத்தவன்"எல்லாம் ஒரு கணிப்பு தான் பிரதிமா. அது உனக்கு துணையா இருக்கும். நான் இதைப் பத்தி மதிமா கிட்ட பேசறேன். உனக்கு முழு சம்மதம் தானே ? இல்ல வேற ஐடியா இருக்கா??" 


"ம்கூம்" தலையை இடதுவலது புறமாக அசைத்தவள் அவனோடு  ஒன்றி விட்டாள். 


அவள் சம்மத்துடனே நாட்களை கடத்தாமல் மறுநாளே அவன் விஷ்ணுவிடம்  இதை பத்திப் பேச, வஸ்தியோ, விஷ்ணுவும் மகிழும் 'வந்த அடுத்த நாளே சொத்தை விற்கு படி  பேச வைத்துவிட்டாள்' என்று அவர்கள் எண்ணிவிடுவார்களோ என்று பயந்திருந்தாள். 


ஆனால் மகிழ் தன்னுடைய  சம்மத்தை தெரிவித்ததும் இல்லாமல் ஆதரவாகப் பேச, அவள் மனதில் இருந்த பயமகன்றது. அடுத்தடுத்த வேலைகள் நடந்தேற. இருவரும் பத்திர பதிவு அலுவலகத்திலிருந்து வெளியே வந்திருந்தனர். 


இதர வேலைகள் முடிய இரண்டு பக்கத்திலும் கையெழுத்து வாங்கிக் கொண்டு அந்த வீட்டை வஸ்தியின் பெயருக்கு மாற்றிட, பணமும் கைமாறியது. இதர வேலைகள் அனைத்தும் நல்ல படியாக முடிந்திட, மூவரும் வெளியே வந்தனர்.


"நானும் உங்க அப்பா மட்டுமே ஆசையா நிறைய கனவுகளோடும் காதலோடும் வாழ்ந்த வீடது. அவர் போனதுக்கு அப்றம் விக்கக் கூடாதுனும் சாகற வரைக்கும் அந்த வீட்லே இருக்கணும்னு முடிவு பண்ணி, அந்த வீட்லே ஒரு நடன பள்ளி ஆரம்பிச்சி காலத்தை ஓட்டிட்டு இருந்தேன். ஆனா, நம்ம நினைக்கற அனைத்தையும் அவன் அப்படியே நடக்க விட்டுடுவானா என்ன??? எப்பையும் அவன் வழியில தான் நாம போயாகணும்.


என் மகனுக்கு இப்போ நான் தேவை.  போகணும், போய் தான் ஆகணும் இல்லியா??? என் வீட்டை யாருக்கு விக்கப் போறோம் அவங்க என்ன அந்த வீட்டை என்ன பண்ணுவாங்களோன்ற பயம் இருந்தது. ஆனா, இப்போ அந்த பயம் கொஞ்சமும் இல்ல.. 


என்னைப் போல என் வீட்டை நேசிக்கறங்கவளுக்கு கிட்ட தான் என் வீடு போய் சேர்ந்திருக்குனு நினைக்கும்   போது ரொம்ப சந்தோசம் இருக்கு எகா. பத்திரமா பார்த்துக்க..."என்று அவனது

கையை பற்றிக் கெஞ்சுதலாகச் சொன்னார்.


"இப்பையும் அது உங்க வீடு தான் மா . நீங்க இந்தியா வந்தால் உங்களுக்காக அந்த வீடும் நாங்களும் காத்திட்டு இருப்போம்..."அவர் கையை அழுத்தி நம்பிக்கை அளித்தான் எகா. அவரது கண்கள் கலங்கி போயின.


                              ***


"வைஷு, எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னா, கல்யாணத்துக்கு அப்றம் அவ வேலைக்குப் போகக் கூடாது... எனக்கு வேலைக்கு போற மருமகள் வேண்டாம். வீட்லே வீட்டப் பார்த்துட்டு இருக்க மருமகளே போதும்"என்றார்.


எதை சொன்னால் வைஷு, ' கல்யாணம் வேணாம் ' என்று தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டு சரியாகச் சொன்னார். அவர் அப்படி சொன்னதை எதிர்பாராத நீலகண்டனும் நவநீதனும்  புரியாமல் விழித்தனர். 


"ஸாரி ஆன்ட்டி, எனக்கும் வேலைக்குப் போக வேணாம்னு சொல்ற மாமியார் கூட வேண்டாம்... ப்ளீஸ் இதுக்கு மேலே  பேச எதுவும் இல்ல வெளிய போறீங்களா??"என்று சிரிப்புடனே சொல்ல, மற்ற அனைவரும் அதிரந்தனர்.

'இது தானே தனக்கு வேண்டும்' என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டார் வதனா

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2