இதயம் - 23

 இதயம் -23


திருமணத்திற்கு வந்த சொந்தப்பந்தங்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருந்தன. வந்தவர்கள் தன் வருகையைப் புகைப்படத்தில் பதிய வைத்து, கொண்டு வந்த பரிசை கொடுத்தும் சிலர் மொய் வைத்து விட்டும் பந்தியில் வயிற்றை நிறைத்து விட்டுச் சென்றனர்.


மணமக்கள் அமர நேரமில்லாமல் வந்தவர்களுக்கும் புகைப்படத்திற்கும் புன்னகையை மட்டும் சிந்தினர். 

அவர்களுக்கு இணையாக புகைப்படக்காரர்களும் கணக்கின்றி புகைப்படங்களை சேமித்து கொண்டிருந்தனர். 


நெருங்கிய சொந்தங்கள் பந்தியை முடித்துக் கொண்டு  அக்காட என அமர்ந்து வெற்றிலையை வாயிலில் அசைப் போட்டவாறு  வீட்டு நடப்பு, தெரு நடப்பு, ஊர் நடப்பு என எல்லா நடப்பையும் பற்றியும்  பேசிக் கொண்டிருந்தனர். 


அதில் சரஸ்வதியும் உண்டு. வந்த உறவினர்களோடு ஊர்கதை பேசிக் கொண்டிருந்தார். 


அப்போது தான், வதனாவும் அவரது கணவன் நீலக்கண்டனும் உள்ளே நுழைவதை  கண்ட சரஸ்வதி. 'தன் கல்லூரியில் தோழி வதனா போல இருக்கிறாளே !' என்று யோசித்துக் கொண்டிருந்தார். 


விஷ்ணு, நீலகண்டனையும் வதனாவையும் 'தன் நண்பன்'என்றும் 'நண்பனின் மனைவி' என்றும் மணமக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். 


அவர்களும் மகிழ்ச்சியோடு இருவரையும் வரவேற்றனர். மணமக்கள் கையில் பரிசு பொருட்களை இருவரும் சேர்த்து கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இருவரையும் சாப்பிட அழைத்துச் சென்றார் விஷ்ணு. 


வதனாவும் நீலகண்டனும் சாப்பிட்டு முடித்து விட்டு வர, விஷ்ணு நீலகண்டனை அழைத்துக் கொள்ள,  தனியாக நின்ற வதனாவை பிடித்துக் கொண்டார் சரஸ்வதி.


"ஹேய் வதனா ! உன்னை பார்த்து எத்தனை நாள் ஆச்சு???" என சரஸ்வதி அவரை ஆராய்ச்சி செய்தபடி கேட்டார். 


அவரும் சரஸ்வதியை பார்த்த சந்தோஷத்தில் அவரை ஆராய்ந்தவர்"நல்ல இருக்கேன் டி நீ?"என்றார். 


"எனக்கு என்ன நான் நல்லா இருக்கேன். ஆமா இங்க என்ன? மாப்பிள்ளை வீட்டு சொந்தமா?" 


"இல்ல மாப்பிள்ளையோட மாமாவும் என் வீட்டுக்காரரும் பிரண்ட்ஸ். அப்றம் அவரோட பொண்ணை தான் என் பையனுக்கு எடுக்கலாம் இருக்கோம்"என்றிட, அவர்கள் முகத்தில் இருந்த உற்சாகம் வடிந்து போனது. 


"யாரு அந்த வைஷு பொண்ணையா???"என்று சந்தேகமாக கேட்டார். "ஆமா வைஷுவை உனக்கு தெரியுமா?? பொண்ணு எப்படி??? நீயும் மாப்பிள்ளைக்கு சொந்தமா???"அவர் கேள்வியை அடிக்கிக் கொண்டே போனார்.


"இல்லடி, என் தம்பி பொண்ணு தான் மணப்பொண்ணு"என்றார். 


"ஓ... சரிடி. இந்த வைஷு பொண்ண பத்தி உனக்கு தெரியுமா?? பொண்ணு எப்படிடி??"என்று கேட்டார். 


"சொல்றேன் தப்பா எடுத்துக்காத வதனா, அந்த வைஷு பொண்ண மட்டும் உன் வீட்டு  மருமகளா  எடுக்காத !"


"ஏன்டி??"சற்று முகம் வாடி. "சரியான வாயாடி. பெரியவங்கனு மதிக்கறதும் இல்ல  மரியாதை கொடுக்கறதும் இல்ல... எதிர்த்து எதிர் பேசிட்டு திரிவா ! முதல்ல இவளை தான் என் புள்ளைக்கு  பொண்ணு கேட்க போனேன்" என்று அன்னைக்கி நடந்ததை கொஞ்சம் காரசாரமாக கூட்டி சொல்ல, அவர் முகம் ஏதோ போல் ஆகிவிட்டது. 


கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் வீட்ல  இருக்க மாட்டாளாம்?? தன்  கனவுனு சொல்லிட்டு வெளிய ஊர் சுத்த போவாளாம். மருமகளா இருக்க மாட்டாளாம். வேலை  செய்ய மாட்டாளம்.. இவளை  உன் புள்ளைக்கு கட்டி வச்சி நீ என்ன பண்ண போற? வீட்டுக்கு அடங்க மாட்டா?? அவங்க அப்பாவும் அம்மாவும்  வளர்த்திருக்காங்க பாரு... நல்லவேள எனக்கு அப்படி மருமகள அமையல, என் மருமக என் பேச்சை கேட்டு, அமைதியா இருந்துப்பா ! எதிர்த்து 'ம்ம்ம் ' கூட சொல்ல மாட்டா ! ரொம்ப தங்கம்... " என்று தன் மருமகளை உயர்த்தி பேசி, வைஷுவை மட்டம் தட்டி பேசினார். 


அவர் பேச்சை எல்லாம் கேட்டு வைஷுவை தவறான பெண் என்று தனக்குள்ளே சித்தரித்துக் கொண்டார் வதனா ! 


"நல்லவேள கடவுளா பார்த்து உன்னை என் கண்ணுல காமிச்சி இருக்கார். இல்லேனா இவளை கட்டிட்டு என் குடும்பமும் நானும் நிம்மதி இல்லாமல் தவிச்சு இருப்போம். என் புள்ள வேற கட்டுனா இவளை தான் கட்டுவேன் நிக்கிறான். அவன் கிட்ட எப்படி இந்த உண்மைய சொல்லப் போறேனோ !அவன் எப்படி எடுத்துப்பானோ தெரியல !"என மகனை நினைத்து புலம்பினார். 


"பொறுமையா எடுத்து சொல்லு வதனா ! உன் புள்ள புரிஞ்சுப்பான். அந்த சனியன வீட்டுக்கு கூட்டுட்டி வரதும் மூதேவியை வீட்டுக்கு கூட்டிட்டி வர்றதும்  ஒன்னு தான் ..." என்றிட அவர் மனதில் அவளை பீடையாக எண்ணிக் கொண்டார்.


நீலகண்டனை வதனாவை அழைக்க சரஸ்வதியிடம் சொல்லிக் கொண்டு  அவர் அருகே சென்றாள். 


வதனாவையும் நீலகண்டனையும் மகள் வைஷுவிற்கு  அறிமுகம் செய்து வைத்தார்.  தன் வருங்கால மருமகள் என்று அவளிடம் மரியாதை நட்பும் கலந்த விதமாக நீலக்கண்டன் பேச, வதனாவோ அவளை ஒரு மாதிரி பார்த்துவிட்டு சிறு சிரிப்போடு நிறுத்திவிட்டார்.


அவர் வாய் திறந்து பேசவே இல்லை பகட்டாக இருந்தார். அவரை பார்த்த நொடியே  யூகித்து விட்டாள் அவர் எப்படி என்று. இருந்தும் பொறுமையாக இருந்தாள். 


இருவரும் அங்கிருந்து சொல்லிக் கொண்டு கிளம்ப, வதனாவின் மாற்றம் விஷ்ணுவிற்கு கூட நெருடலாக தான் இருந்தது. தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். 


மணமக்களை வைத்து நிறைய புகைப்படம் எடுத்தாள்  வைஷு. பின் அவர்கள் இருவரையும் உண்ண வைத்து விட்டு,  தாமதமாக வந்தவர்களுடன் பேசி போட்டோ எடுத்துக் கொண்டு நல்ல நேரத்தில் மண்டபத்திலிருந்து  கிளம்பினார்கள்.


விஷ்ணு வீட்டிற்கு இரு குடும்பமும் காரில் வந்து இறங்கினார்கள். தான் வாழ போகும் வீட்டை கண்களால் அளந்தவள், உள்ளே செல்லும்  ஆர்வத்தில் தன் காதல் கணவனை கையை காதலாக இறுக்க பற்றி வலது காலை வைத்து உள்ளே  நுழைந்தாள். 


சரஸ்வதி  ஏற்கெனவே வீட்டை பார்த்து விட்டதால் அமைதியாக நுழைந்தார். மற்ற  அனைவரும் வீட்டை வியப்பாக பார்த்தனர். அகல்யாவிற்கு மகள்  வாழ போகும் வீட்டைபெருமிதமாகப் பார்த்தார். 


பூஜை அறையில் விளக்கேற்றி  கடவுளை தன் கணவனோடு தரிசித்தாள். பெரியவர்கள் சிறியவர்கள் என பேசி நேரத்தை கடத்த, இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பி இருந்தனர்.


சரஸ்வதி வஸ்தியின் அருகே வந்தவர்"ம்ம்... மனசுக்கு பிடிச்சவர கட்டியிருக்க மகராசியா இரு . என்னைய எயித்து பேசறது போல இங்கயும் பேசி  வாழ்க்கைய கெடுத்துக்காத ! ஒழுங்கா நடந்துக்க"என்றார் அவளுக்கு மட்டும் கேட்கும் படி.  


"கவலைப் படாதீங்க அத்தை. உங்க கிட்ட பேசினது போல இங்க யார்கிட்டயும் எய்த்து பேசலாம் மாட்டேன். ஏனா இங்க இருக்க யாரும் ஆண், பெண்னு பேதம் பார்க்கற ஆட்கள் இல்ல.

மத்தவங்க உணர்வுகளையும் அவங்க தேவைகளையும் மனசால அறிஞ்சு நிறைவேத்த நினைக்கறவங்க... அதுனால நான் கேட்டு பெறாமலே எனக்கு எல்லாம் கிடைக்கும். முக்கியமா அன்பு, பாசம் , உரிமை  எல்லாம்..."என்று கர்வத்தோடு சொன்னவளை கண்டு எரிச்சலாக இருந்தது. தன்னைமீறி அவளுக்கு  நல்ல வாழ்க்கை கிடைத்த புகைச்சல்  அதிகமாக இருந்தது அவருக்கு .


"என்னடி ஆசை பட்ட வாழ்க்கை கிடைச்சிருச்சினு திமிரா??? பார்ப்போம்டி எத்தனை நாள் உன்னை தூக்கி வச்சி கொண்டாடுறாங்க... உன் திமிருக்கு இந்த வீட்ல எத்தனை நாள் தாக்கு பிடிக்கறனு பார்ப்போம்..."என்றார் கடுப்பில்.


"என் திமிரை எங்க காட்டணுமோ அங்க தான் காட்டுவேன் அத்தை... அப்றம் டெட்லைன் விதிக்கிறீங்களோ ! ஆனாலும் பார்க்கத்தானே போறீங்க... நான் சந்தோசமா வாழ்றதையும்... சீக்கிரமா உங்க கையில் பேர பிள்ளைய திணிக்கத் தான் போறேன். என்னை பார்த்து நீங்க சந்தோசம் தான் படத்தான் போறீங்க" என்று  சத்தமாக சொன்னாள், அவர்களை நோக்கி சாந்தி வருவதை கண்டு.


"ஆமாடி செல்லமே ! இந்த அத்தைங்களுக்கு வேற என்ன வேணும்???  குடும்பமா சந்தோசமா நீ வாழ்றதா பார்த்தாலே போதும்டி.

உன்னை எனக்கு மருமகளா ஆக்கிணும் ரொம்ப நாள் ஆசை என்ன பண்ண? நான் பெத்தது சரியில்ல. 


வேற வீட்டுக்கு போயிட்டோம் , இனி இவங்க எல்லாம் அந்நியம் நினைச்சிக்காத என்னைக்கும் உனக்கு அத்தைங்கனா நாங்க தான். உனக்கு ஒன்னுனா நாங்க வருவோம், மறந்திடாத கண்ணு. உனக்கு அம்மா வீடு மட்டுமில்ல அத்தைங்க வீடும்  இருக்கு வந்துட்டு போ" என்று கண்கள் கலங்க அவரை அணைத்துக் கொண்டாள்.


அக்லயா அழுகையோடு அருகில் நிற்க, அவரை சிரித்த முகத்தோடு பார்த்து கொண்டிருந்தாள் வஸ்தி.


"பொதுவா பொண்ணுங்க அம்மா விட்டுட்டு பிரியறத நினைச்சு அழுவாங்க... ஆனா இந்த அம்மா விட்டு பிரியறதே சந்தோசம் நினைச்சிட்டல... அந்த அளவுக்கு உன்னை கொடுமைப்படுத்திட்டேன்ல" என்று முந்தானையில் கண்ணீரை துடைத்து படி சொன்னார்.


"உண்மை தான் மா... நீ என்னை அவ்வளவு படுத்திட்ட, கொடுமைனு சொல்றத விட அதிகமா காயப்படுத்திட்ட, வலி இன்னமும் இருக்குமா??? அதான் என்னவோ அழுக வரல ! எனக்கு நீ இங்க இருந்து மனசார திருப்தியோட  போகணும் நான் நினைச்சேன். அதான் அழல.  நம்ம வீட்ல இருக்கறத விட  நான் இங்க ரொம்ப சந்தோசமா இருப்பேன் மா ! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நீயும் நம்பி இங்க இருந்து போ. நம்மலோட உறவு அவ்வளவு தானு நான் நினைக்க மாட்டேன். வீட்டுக்கு வருவேன். எனக்கு பிரசவம் பார்க்கப்போறது நீ தான். வீட்டுல  வந்து  என்னை பார்னு உட்கார்ந்து இருப்பேன். நீ தான் பார்க்க போற. எனக்கு உன் மேல இருந்த கோபம் வருத்தம் எல்லாம் போயிடுச்சு... இனி  நீ நிம்மதியா தூங்கு" என்றாள் கண்ணீரை துடைத்து விட்டு.


அவள் கைகளை பிடித்து கண்ணில் ஒற்றிக் கொண்டு முத்தம் வைத்து மகளை திருப்தியுடன் பார்த்தார். பிரவீனும் பிரகதியும் அவளை அணைத்துக் கொண்டனர்.


"எங்க மேல கோபமா அக்கா ! "பிரவீன் கேட்க,"கோபம் எல்லாம்  இல்ல. ஆனா, பேசற நேரத்துல பேசாம இருந்திடாதீங்க. நல்லா படிக்கணும் பிரகதி... பிரவீ அம்மாவ பார்த்துக்க... "என்றாள் இருவரும் சரியென்று தலையை அசைத்தனர். சாய்யிடமும் அவன் மனைவிடமும் சனாவிடமும் பேசி விட்டு சைத்துவிடம் பேச வந்தாள்.


"என்ன நீ தான் என் கடவுள்  ! உன்னால தான் இந்த வாழ்க்கை. நீ மட்டும் என்னை பிடிக்கல சொல்லிருந்தா , இந்நேரம் நான்  இங்க இருந்திருக்க மாட்டேன் அதானே ! "என்று தன் கெத்தை விட்டுத் தராமல் பேசினான்.


"நீ திருந்தவே மாட்டியா???"


"திருந்திட்டா கதை நல்லா இருக்காதே ! எனிவேஸ் ஹாப்பி மேரிட் லைஃப். வேற என்ன பேச இருக்கு???" என்றான்.


"தேங்க்ஸ் சைத்து. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நமக்குள்ள நல்ல பிரண்ட்ஷிப் இருந்திருக்கலாம். என்ன பண்ண பெரியவங்க பார்வை சரியில்ல" என்று சரஸ்வதியை பார்த்து  சொன்னவள்." சீக்கிரமா , உன் மேரேஜ் நியூஸ் சொல்லு ! "என்றாள். 


உடனே அவனது கண்கள் வைஷுவை  பார்த்து விலகின. ஏனென்று அவனுக்கே தெரியவில்லை. உள்ளுக்குள் ஒரு வெறுமை சூழ்ந்திருந்தது. சிறு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான். 


வஸ்தி தன் குடும்பத்தை சிரிப்புடன் வழியனுப்பி வைத்தாள்.


அவளது தோளை வலிய கரம் அணைக்க, பாக்கவாட்டில் பார்த்தாள் எகா தான்."நீ அழுவ , உன்னை தேத்தலாம்  நினைச்சா, நீ சிரிச்சுட்டு இருக்க?? அழுக வரல !"


"வரலையே !"உதட்டைப் பிதுக்கி, தோளை குலுக்கி விட்டுச் சொன்னவளை வியப்பாகப் பார்த்தான்." ஏன் வரல??"


"அதெல்லாம்... இனி இந்த வீட்ல எப்படிடா வாழ போறோம்ன்ற பயத்தோட  இருக்கறவங்களுக்கு,  நம்ம அம்மா அப்பா விட்டுட்டு போறாங்களே வேற நினைச்சி  அழு வாங்க, நான் ஏன் அழணும்?? எனக்கு இந்த வீட்டை நினைச்சோ இல்ல இங்க இருக்க ஆட்களை நினைச்சோ எந்த பயமும் இல்ல.  என் வீட்ட விட இங்க நான் ரொம்ப சந்தோஷமா இருப்பேன். அதுல எனக்கு எந்த  சந்தேகமும் இல்ல..."என்றவளை காதல் கனிய பார்த்தவன் வேண்டும் என்றே, 


"ஒருவேள நான் புருஷன் கொடுமை பண்ணா, மகிழ் உனக்கு மாமியார் கொடுமை பண்ணா, வைஷு உனக்கு நாத்தனார் கொடுமை பண்ணா என்ன பண்ணுவ???"கேட்க, அவள் பதில் சொல்லும் முன் முந்திக் கொண்ட மகிழ்.


"உனக்கு தாண்டா மாமியார் கொடுமை, கொழுந்தியா கொடுமை பொண்டாட்டி கொடுமை நாங்க எல்லாரும் சேர்ந்து பண்ண போறோம்.


நான் ஏன்டா என் பொண்ண கொடுமை பண்ணனும்??? நாங்க எல்லாரும் சேர்ந்து  உன்னை தான் கொடுமை பண்ண போறோம் பாரு" என்றவர் "நீ வா டா குட்டி"என்று மகிழ் வஸ்திய அழைத்துக் கொண்டு போனார்.


"ப்ரூட்ஸ்"என்று முணங்கிக் கொண்டு பின்னே நடந்தான்.


நல்ல நேரத்தில் வஸ்தியை சாந்தி முகூர்த்தத்திற்கு அனுப்பிட அவளை தயார் செய்ய, விஷ்ணுவும் வைஷுவும் எகாவை தயார் செய்தனர்.


"அப்பா ! லவ் பண்ண, பொண்ணே இல்லேன்னு ஒரு மாசத்துக்கு முன்ன புலம்பின 90'ஸ்கிட் நீங்க பார்த்தீங்களா???"


"அந்த கிட் தான் இப்போ மென் ஆகிட்டான் மா ! ஆனா பாரு ஒரு வேட்டிக் கட்ட தெரியுதா??? தாலியவே எப்படி கட்டினான் தெரியல"என்றதும் வைஷு வாய்விட்டே சிரித்தாள்


"அசிங்க படுத்தாத மாமே ! வேட்டி எனக்கு நிக்கலனா நான் என்ன பண்ண??? "


"இப்படி ஒவ்வொன்னுத்துக்கும் காரணம் சொல்லாத. அப்றம் முத்தம் கொடுத்தால் குழந்தை பொறக்கும்னு முத்ததோட  நிறுத்திடாத ! அதுல நிறைய பாடம் இருக்கு கத்துகிட்டு அவளுக்கும் கத்து கொடு... டவுட்னா இந்த மாமன் கிட்ட கேளு"என்று அவன்  

காதுக்குள் கிசுகிசுக்க, "இது டூ மச் மாமே ! எனக்கு எல்லாம் தெரியும்??"


"எப்பிடி டா???"என அதிர்ந்தார்.


"ம்ம்... கிளாஸ் போனேன். போ மாமே என்னை வெட்கப்பட வைக்காத"என்று நகம் கடித்து வெட்கப்பட்டான். 


இருவர் மட்டும் பேசிக் கொள்வது அவள் காதில் விழவில்லை என்றாலும் அவர் பேசிக் கொள்வது சுவாரஸ்யமாக இருந்தது வைஷுவிற்கு.


"ஆல் திபெஸ்ட் மருமகனே !"என்று  வைஷுவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். வஸ்திக்காக காத்திருந்தான்.


மகிழ், வஸ்திக்கு சில அறிவுரைகளை மட்டும் சொல்லி விட்டு அவளை எகா அறைக்கு அனுப்பி வைத்தார்.  உள்ள வந்தவளின் பார்வை அதில் நிலைக்குத்தி நிற்க, அதனை கண்ட எகா தலையை சொறிந்து அசடு வழிய நின்றான். அவனை தீயாக முறைத்து வைத்தாள் வஸ்தி

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2