இதயம் 22

 இதயம் 22


வைஷுவை மட்டுமே அவனிரு கண்கள்  பார்த்திருந்தன. அவனது கடுமையான பார்வை அவளிடம் பதில் வேண்டும் என்று அடம்பிடித்து நிற்பது போல இருந்தது. 


ஆனால் வைஷுவிற்கு, இன்றவன்  நடந்துக் கொள்வது எல்லாம் வித்தியாசமாகத் தெரிந்தது. அவனை விசித்திர பிறவியைப் பார்ப்பது போல பார்த்து வைத்தாள்.


"யாரவன்??"என மொட்டையாகக் கேட்டான்.


அவளும் புரியாமல்" எவன்???"என்றாள்.


"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிரிச்சி சிரிச்சி பேசுனீயே அவன் தான். யாரு ??" காட்டமாகவே இருந்தது அவனது கேள்வி.


அவனை கைக்கட்டி சன்னமாகப் பார்த்து வைத்தாள். அவள் பார்வையில் 'உனக்கு எதுக்கு?' என்ற கேள்வியை உணர்ந்தவன் அதனை சமாளிக்கும் விதமாக, "இல்ல சும்மா ஜென்ரலா தெரிஞ்சுக்க தான் கேட்டேன்" என்றாலும் பதில் வேண்டி தவிப்புடன் நின்றன அவனது கண்கள்.


அவனது இந்தத் தவிப்பு அவளுக்கு புதிதாக இருந்தது. 'இவனா ?இது சைக்கோ தானா இல்ல வேற எவனுமா??நம்ம கிட்ட இப்படி வந்து பேசறதே அபூர்வம். இதுல பொஸசிவ்வான கேள்வியை எல்லாம் கேட்குறான்' என்று யோசித்தவள்.


"சைக்கோ சார் ! tnpsc எக்ஜாம் எதுவும் எழுத போறீங்களா??? கரண்ட்  அஃபேர்ஸ் எல்லாம் கேக்குறீங்க??"என நக்கல் செய்ய,"பச்..."சலிப்படைந்தவன்" சொல்ல முடியுமா??? முடியாதா???"என்றான்.


பட்டென்று அவள் "முடியாது"  என்று முகத்தில் அடித்தது போல பதில் சொன்னாள். திரும்பி வேகம் கொண்டு சீற்றமாக நடந்தவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.


ஆனால் போன வேகத்தில் திரும்பவும் வந்திருந்தான். அவன் திரும்ப வருவான் என்று அவள் எதிர்பார்க்க வில்லை. புயல் போல வந்து நின்றவனை ஆச்சர்யம் குறையாமல் பார்த்து நின்றாள்.


"யாருனு சொல்றதுல என்ன பிரச்சனை உனக்கு? பிகு பண்ணாம யாரவனு சொல்லு"என்றான். அவனது கேள்விக்கு பதில் சொல்லியே ஆகணும் என்பது போல தான் இருந்தது அவனது பார்வை.


அவனையே விழியாகற்றாமல் பார்த்தாள். அவன் கண்களிலிருந்த தவிப்பும்  கோபமும் குறையவில்லை.  ஆனால் அது அவளுக்கு பிடித்திருந்தது. அவனிடம் மேலும் விளையாட்டு காட்டாமல் அனைத்தையும் சொன்னாள்.


"உ.. உனக்கு அவனை பிடிச்சிருக்கா???"


"இப்போ சொல்ல முடியாது. ஆனா அவன் கிட்ட பேசி பழகி பார்த்துட்டு வேணா சொல்றேன்"என்றதும் அவன் முகம் இறுக்கம் கொண்டது."அப்போ  உனக்கு இந்தக் கல்யாணத்துல இன்டெர்ஸ்ட் இருக்கா??"


"ம்ம்... இருக்கே சேம் ப்ரொஃபெஷனல இருக்கிறவன் கணவனா கிடைச்சா லக்கி தானா நான். என் கனவும் நிறைவேறும். அதோட எங்களுக்குள்ள ஒரு அன்டர்ஸ்டாடிங்கும் இருக்கும் . இன் பியூசர் லவ் கூட நிறைய வரலாம் சொல்ல  முடியாது. பார்க்க அழகா வேற இருக்கான்'நோ' சொல்ல தோணல சீக்கிரமா எஸ் சொல்லிடுவேன்"என்றாள். 

வராத வெட்கத்தை வம்படியாக வரவைத்து அவன் முன்னே காட்டி நின்றாள்.


"வாழ்த்துக்கள்"என்று பல்லைக் கடித்து சொல்பவனின் மேல் இன்னும் சுவாரசியம் கூடியது. ஆனாலும் எதுவும் அவனிடம் கேட்காமல் "தேங்க்ஸ்"என்றாள்.


அதற்கு மேலும் நிற்க  பிடிக்காமல் விறுவிறுவென சென்று விட்டான். போகும் அவனையே பார்த்தவளுக்கு புரிந்து புரியாமலும் இருந்தது.


"ஏன் இந்த சைக்கோ இப்படி நடந்துக்குது? இது நம்ம பார்த்த சைக்கோ இல்லையே !!! ஒருவேளை என்னை லவ் பண்றானோ ? ச்சச்ச இவனுக்கும் சரி இவன் பெரியம்மாக்கும் சரி வைஷுனாலே அலர்ஜி தான. எதுக்கோ கேட்டு போறான் போகட்டும்"என்று அவளும் அகன்று விட்டாள்.


ஆனால் அவனோ மண்டபத்தில் இருக்க பிடிக்காமல் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.

சோர்வாகவும் கோபமாகவும் வீட்டுக்கு வந்தவன் மெத்தையில் விழுந்தான்.  அடக்க முடியாத கோபம் ஆனால்' எதற்கு வருகின்றது?' என்பது அவனுக்கு புரியாத புதிராக இருந்தது.


"அவ, யாரையோ கல்யாணம் பண்ணினா உனக்கு என்ன?" மூளை கேட்டிட, அதன் பக்கம் சாய இருந்தவனின் மனம் சொன்ன பதிலில் குழம்பி நின்றான்.


"உனக்கு அவள பிடிச்சிருக்கு. நீ அவளை விரும்புற. அவ எந்த பையன் கிட்ட பேசினாலும் கோவம் வர்றதுக்கு காரணம் அதான்..."என்றது.


"பொய் ! உனக்கு அவளை பிடிக்காது.அவ யாருகூட பேசினா உனக்கு என்ன??? அவள பத்தி நினைக்கறத விடு "மூளை சொல்ல.  மனமோ"அப்போ ஏன் அவளை நாலு பேர் பார்க்கறாங்கன்றதுக்காக அவளை வழிமறிச்சி அல்வா ஊட்டி விட்ட,  எல்லாம்  பிடிக்காத கணக்குல போய் சேர்க்கணுமா?? நீ அவளை லவ் பண்ற சைத்து. உனக்கு கோபம் வர காரணம் அதான். ஒழுங்கா  அவ கிட்ட காதலை சொல்லிடு இல்லேன்னா அவனுக்கு ஓகே சொல்லிட்டு போயிட்டே இருப்பா !"மனம் அவனை சரியாக வழிநடத்த, மூளை அவனை தன் பக்கம் இழுத்தது.


"அப்படி நீ அவளை விரும்பினாலும் அவ உன்னை காதலிக்கவே மாட்டா. அவளை நினைச்சி நீ தான் பைத்தியகாரன போல திரிய போற ! ஆரம்பித்துலே  இதையெல்லாம் கட் பண்ணிட்டு. இல்ல உனக்கு தான் பிரச்சினை. சைத்து என்னைக்கும் இறங்கி போகக் கூடாது"என்றது.


மூளையும் மனதும் வாக்குவாதம்  செய்ய பாவம் மாட்டிக் கொண்டது சைத்து தான்.குழம்பி குழம்பி விடைக் கிடைக்காமல் குப்புற விழுந்தது தான் மிச்சம்.மறுநாள் சாந்தி அழைத்த அழைப்பை ஏற்ற பின் குளித்து முடித்து  கிளம்பிச் சென்றான்.


***

மணமக்கள் மேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அதனை,  அகல்யா  கீழே கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தார். சரஸ்வதி யாருக்கோ வந்த விருந்து போல பிரபுவுடன் நின்றிருந்தார். 


சாந்தியும் கண்களில் கண்ணீருடன் தேவன் அருகே நிற்க, மகிழ் விஷ்ணுவிற்கு சொல்லவா வேண்டும் தாய் தந்தை இழந்து ஐந்து வயதிலிருந்து 'மாமா...மாமா'என்று அவர் நெஞ்சில் ஒட்டிக் கொண்டு வளர்ந்தவனல்லவா. நாத்தனார் பையன் என்று மகிழும் அக்கா பையன் என்று விஷ்ணுவும் ஒரு போதும் அவனை பார்த்ததில்லை...  தன் சொந்த மகனென்று வளர்த்தனர். 

தன் மூத்த மகனுக்கு கல்யாணம் என்பது போல கண்ணீர் வடித்தனர். 


வைஷு அவர்கள் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை மேடைக்கு அழைத்து தன் பக்கத்தில் வந்து நிற்குமாறு பணித்தான் எகா. 


அவளும் பொறுப்பை பரணியிடம் கொடுத்து விட்டு மேடை ஏறி எகா அருகில் வந்து நின்றாள்.


வஸ்திக்கும் எகாவிற்கு நடுவே வந்தவள், "என்ன மாமே ! சுகர் மாத்தர போடலியா? கை ரொம்ப நடங்குதுபோல,  தாலி கட்டிடுவீயா? இல்ல நான் கூட இருக்கணுமா???"என கிசுகிசுக்க, 


"அடியே ! எனக்குனு கசினா  நீ மட்டும் தான் இருக்க, நீ என் கூட இருக்கணும் கூப்டா??? என்னை நோயாலியா எல்லாருக்கும் காட்டிடுவா போலையே. ஒரு சப்போர்டுக்கு நில்லுடி"என்றான். 


"மாமஸ், நான் வேணா சப்போர்ட்டுக்கு இருக்கவா???" பிரகதி உள்ளே வர, 


"ஓ... வித் பிளசர் தாராளமா உட்கார்டா. உங்க அக்காவை வேணா எழுப்பி விட்டுடுவோமா????"என கேட்டு வஸ்தியை நக்கலாகப் பார்த்தான். 


"ஒன்னும் பிரச்சினை இல்ல காந்த். பிரகதி இங்க உட்காரட்டும். நான் சைத்து பக்கத்துல நின்னுகிறேன் எப்படி வசதி???" என புருவத்தை உயர்த்தி கேட்க, பதிலின்றி இருமல் வந்தது போல சமாளித்தான் எகா. 


வஸ்தியும் வைஷுவும் ஹைபை போட்டுக் கொண்டனர். அவர்களில் கேலி கிண்டலை ரசித்தனர் பெரியவர்கள்.  நல்ல நேரம் நெருங்க... ஐயர் தாலி வைத்திருந்த தாம்பூல தட்டை நீட்டி ஆசிர்வாதம் வாங்கச் சொல்லிக் கொடுத்தார். வைஷு வாங்கி கொண்டு ஆசிர்வாதம் வாங்க ஒவ்வொருவரிடம் சென்றாள்.. 


சைத்து, ஒரு ஓரமாக நிற்க அவன் பக்கத்தில் வந்து நின்றான் நவநீதன். அவனை கண்டதும் நகரலாம் என்று  நினைக்கும் போதே இருவரை நோக்கி கையில் தட்டோடு  வந்த வைஷு அவளை நெருங்கி இருந்தாள்.. 


முதலில் தட்டை சைத்துவிடம் நீட்ட தொட்டு வணங்கினான். அடுத்து  நவநீதனிடம் நீட்ட, அவன் தொடாமல் குனிந்து, "சீக்கிரமா ஓகே சொல்லுங்க,  இதே மேடையில் கல்யாணத்தை வச்சிக்கலாம். உங்க பதிலுக்கு ஈகர்லி ஐ ஆம் வெயிட்டிங். ரொம்ப நாள் காக்க வைச்சிடாதீங்க. எனக்கு தாலிய பார்த்ததும் கை ரெண்டும் பரபரக்குது" என அவள் காதில் கிசுகிசுக்க, அது சைத்துவின் காதிலும் விழுந்திட, புகை வராத குறையாக இருவரையும் முறைத்து நின்றான். 


'அட அலப'என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவள் சிரித்த படி நகர்ந்தாள். தன் அருகே நின்றவனை 'கொன்றாலும் இந்தக் கோபம் அடங்காது போல' எனப் பார்வையிலே அவனை பஸ்பமாக்கி கொண்டிருந்தான் சைத்து.


ஐயர் தாலியை எகாந்தின் கையில் கொடுக்க, விஷ்ணுவையும் மகிழையும் பார்த்துவிட்டு வஸ்தியையும் பார்த்தான். அவளது நீர் சூழ்ந்த இரு அம்பகங்களோ அவனுக்கு அனுமதி தர, தாலியை அவனது மயில் கழுத்தில் கட்டினான். 


அவளது கண்கள் தாயை காண, அவரோ ஆனந்தக் கண்ணீருடன் மகளை மட்டுமே பார்த்திருந்தார். தாயின் மேல் கோபம் இருந்தாலும் அவர் எதிர்பார்த்த சந்தோஷத்தை கொடுத்த திருப்தியுடன் கண்ணை மூடி அவன் அணியும் மாங்கல்யத்தை ஏற்றுக் கொண்டாள்.


ஐயர் தந்த குங்குமத்தையும் தாலியிலும் நெற்றிலும் வைத்தான். அக்கனியை மூன்று முறை இருவரும் விரல் கோர்த்து சுற்றி வந்தனர். 


முதலில் சரஸ்வதி பிரபு காலிலும் பிறகு விஷ்ணு மகிழ் காலிலும் அடுத்தடுத்து சாந்தி தேவன், அகல்யா காலிலும் விழுந்து வணங்கினார்கள். 


மகளை திருமண கோலத்தில் பார்ப்பது பெற்றோர்கள் கொண்ட கனவுகளில் ஒன்றும் கூட, கண்குளிர மகளை பார்த்து திருஷ்டி வழித்தார். 


"உங்க பொண்ணு மட்டும் தான் அழகா இருக்காளா அத்தை? "என்று எகா அவருடன் இலகுவாக பேச, அவரோ மருமகன் தன்னிடம் பேசியதில் ஆனந்த அதிர்ச்சியில் இருந்தார். 


"எனக்கும் திருஷ்டி கழிங்க... இங்க இருக்க பொண்ணுங்க கண்ணெல்லாம் என் மேல் தான் இருக்கு"என்றான் ஓரவிழியால் மனைவியை பார்த்த படி.


அவன் சொன்னதும் வேகமாக அகல்யா அவனது முகத்தையும் வழித்து நெற்றி முறித்தார். விரல் மடக்கியதில் சத்தம் கேட்க "பார்த்தீங்களா??? அத்தை எனக்கு உங்க மேல் எந்த கோபமும் இல்ல. கொஞ்சம் வருத்தம் தான். நீங்க என்னையும் உங்க மகனா பாருங்க போதும்.  எனக்கு நீங்க இன்னொரு அம்மா.  உங்க மகனை விட்டு தள்ளி இருக்காதீங்க. பயந்தும் விலகிப் போகாதீங்க, உங்க மூத்த மகன் நான் தான் "என்றான். அவருக்கு நா எழவில்லை வார்த்தை வர வில்லை. கண்ணீர் கொட்ட, அவனோ வஸ்தியிடம் கண்ணைக் காட்டினான். அவளோ தாயை கட்டிக் கொண்டு சமாதானம் செய்தாள்.


சொந்தங்கள் வந்த வேலையைப் பார்க்க மணமக்கள் இருவரும் பிஸியாகி போனார்கள்.



****


"வதனா !! எப்படி டி இருக்க??? நீ இங்க என்னடி பண்ற???"கல்லூரி தோழியை எதிர்பாராத நேரத்தில் கண்டதும் மகிழ்ந்தவர் பக்கத்தில் அமர வைத்து கதைகள் பல பேசினார் சரஸ்வதி.


தன் மகனுக்கு பெண் பார்த்ததையும் 'அவள் இங்கே தான் இருக்கிறாள்' என்றும் சொல்ல, சரஸ்வதியோ ஆவலாக யாரென்று காட்டச் சொன்னார்.


மணமக்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் வைஷுவைக் காட்டினார் அவர்.


'அவளா????'என்று முகத்தை சுழித்தவர் தோழியிடம் "வதனா ??? உன் குடும்ப விஷயத்துல தலையிடுறேன் நினைக்காத  ! இந்த பொண்ண தயவுசெய்து உன் வீட்டுக்கு மருமகளா எடுக்காத, உங்க வீட்டோட நிம்மதியே போயிடும்" என்று வைஷுவைப் பற்றி இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி அவர் மனதில் அவளை பற்றி தவறாக  நினைக்க வைக்க பேசினார் சரஸ்வதி.

வதனாவும் வைஷுவை தவறாக எண்ண ஆரம்பித்தார்.


தன் தோழியை காப்பாற்றியதாக நிம்மதி கொண்டார். ஆனால் அவருக்கு தெரியவில்லை அவர் செய்த இந்தக் காரியம் அவள் தங்கள் வீட்டுக்கு மருமகளாக  வரப்போகிற அஸ்திவாரம் என்று

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2