இதயம் 21

 இதயம் 21


தன்னைப் பற்றிக் கூறித் 'திருமணம் செய்துகொள்ள விருப்பமா?' எனக் கேட்ட ஆடவனை மேலும் கீழுமாகக் கைகட்டி நின்று பார்த்தாள். 


"என்னங்க சம்மதமா???"மீண்டும் கேட்டவனை புன்னகையுடன் ஏறிட்டவள்"ஹலோ !! வெயிட் வெயிட் யாருப்பா நீயி?? வந்த, நானும் போட்டோகிராபர் தான்னு சொன்ன. எனக்கும் போட்டோகிராபி பிடிக்கும் அதனால நமக்குள்ள எந்த பிரச்சினை வர்றாது சோ மேரேஜ் பண்ணிக்கலாமானு கேட்கற??? போட்டோகிராபர் தானா நீ? இல்ல ஜோசியரா???  நமக்குள்ள பிராபலம் வர்றாதுனு சொல்றதுக்கு முதல்ல நீ யாரு? எதுக்கு நீ என் கிட்ட வந்து இதெல்லாம் சொல்ற???அதை மொதல்ல சொல்லு"என்றாள்.


"ஆக்சுவலா !  உங்களுக்கு ஷாக் கொடுக்கத்தான் என்னை பத்தி  சொல்லாமல் ட்ரேக்ட்டா மேரேஜ் பண்ணிக்கலாமானு கேட்டேன். ஆனா நீங்க ரொம்ப கூல்ங்க. ஒரு  பையன் மேரேஜ் பண்ணிக்கலாமானு கேட்டால், அதிர்ச்சி அடையாம கேஸ்வல என்னா ஏதுன்னு கேக்குறீங்களே நீங்க ரொம்ப டிபரெண்ட்.. நான் ரொம்ப லக்கி" என மறுபடியும் வந்த விஷயத்தைச் சொல்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டு போனவனை கண்டு தலையில் அடித்துக் கொண்டாள்.


"ஹலோ நீ  இன்னும்  உன்னைப் பத்தி சொல்லல. சோ ப்ளீஸ்  உன்னைப் பத்தி சொல்றீயா???"சலிப்புடன் கேட்டாள். 


"ஓகே வைஷு ! நான் என்ன பத்தி சொல்றேன்.  நான் நவநீதன். போட்டோகிராபில பிஜி  முடிச்சி சொந்தமா ஸ்டூடியோ வச்சிருக்கேன். என் அப்பா பிஸ்னஸ் பண்றார். அம்மா  ஹௌஸ் ஒயிப். எனக்கு என் சொந்தக்கால்ல நிக்கணும் அப்பாவோட  பணத்துல வாழ விருப்பமில்லை.  சொந்தமா தொழிலை செய்ய ஆரம்பித்தேன். நல்லா போயிட்டிருக்கு. இன்னொரு பிராஞ்சு ஓபன் பண்ணனும் உழைச்சிட்டு இருக்கேன்.


போட்டோகிராபி தான் என் உயிர். கேமிரா தான் என்னோட காதலினு வாழ்ந்திட்டு இருக்கேன். உங்க அப்பா என் அப்பாகிட்ட வந்து  கேமிரா தான் என் காதலன்  வாழ்ந்துட்டு இருக்க உங்களை பத்தி சொல்ல, எங்க அப்பா என்கிட்ட சொல்ல, உங்களை  பார்க்காமலே எனக்கு பிடிச்சிப் போச்சிங்க. கேமிரா தான் காதலன் காதலியா வாழ்ந்திட்டு இருக்க நம்ம ஏன் காதலன் காதலியா? கணவன் மனைவியா வாழக் கூடாது???" என்று கேட்டு நின்றவனை விழியகற்றாமல் பார்த்தாள். அவனும் பதில் வேண்டி நின்றான். 


"வெல் மிஸ்டர் நவீ ! ஒரு போட்டோகிராபர  இன்னொரு போட்டோகிராபரால புரிஞ்சிக்க முடியும் சொல்றீங்க.  நான் உன்னையும் நீ என்னையும் புரிஞ்சுக்க இந்த போட்டோகிராபி போதும் அப்படி தான !"


"அப்படி இல்ல...  இதை பேஸ்மெண்டா வச்சி அப்படியே நம்ம ரிலேஷன்ஷிப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக அண்டர்ஸாடிங்கா கொண்டு போகலாம்னு... அரேஞ்ச் மேரேஜ் எல்லாம் அப்படி தான போயிட்டு இருக்கு, முழுசா புரிஞ்சு யாரும் கல்யாணம் செய்துக்கல... கல்யாணம் செய்து பிறகு புரிஞ்சுக்க முயற்சி பண்றாங்க... நம்ம லைஃப்பையும் அப்படியே கொண்டு போகலாம்"என்றான் 


"யூ ஆர் கரெட். ஆனா, நான் கொஞ்சம் யோசிக்கணும். எனக்கு நிறைய டைம் வேணும். என்னால உன்ன போல உடனே எல்லாம் ஓகே சொல்ல முடியாது. லைஃப்ல முக்கியமான கட்டத்துல எடுக்கற முக்கியமா டெசிஷன். சோ ஐ நீட் டைம்  ப்ளீஸ் டோன்ட் மைண்ட் மிஸ்டர் நவநீதன் " என்று தன் பக்கம் விளக்கத்தை சொன்னாள். 


"நோ ஐஸுஸ் வைஷு ! நல்லா யோசிச்சி உங்க முடிவை சொல்லுங்க . உடனே சொல்லணும் இல்ல. பொறுமையா யோசிங்க, நிறைய டைம் எடுத்துக்கோங்க ! ஆனா நல்ல முடிவா சொல்வீங்கனு  கொஞ்சம் எதிர்பார்க்கிறேன். பாய்"என்று அங்கிருந்து சென்று விட்டான். 


அவன் சென்றதும் "உஃப்"என உதடு குவித்து ஊதியவள், கண்ணை மூடி தன்னை நிதானிக்க, அவள் தோளில் ஒரு வலிய கரம் படரந்தது. கண்ணை திறந்தாள். 


அங்கே அவளது தந்தை விஷ்ணு தான் நின்றிருந்தார் "இதெல்லாம் உங்க வேலை தானா ப்பா??"


"ஆமாடா ! எனக்கு நீ..."என அவர் ஆரம்பிக்கும் போதே" மாலையும் கழுத்துமாக பார்க்கணும் ஆசையா???"என கேட்க, "ஈஈஈ"இளித்து வைத்தவர் 


"பெத்தவங்களுக்கு வேற என்னடா ஆசை இருக்க போகுது?? பொண்ண நல்லா வளர்க்கணும் படிக்க வைக்கணும் நல்லவனா பார்த்து கட்டி வைக்கணும் பேர புள்ளைய பார்க்கணும் எல்லாரையும் போல  எங்களுக்கு இந்த ஆசையெல்லாம் இருக்காதா டா???"


"அதானே என்ன ஆசை இருக்க போகுதுனு சொல்லி எத்தனை ஆசைய அடுக்கற  நீ ! எல்லா பேரண்டஸையும்  போல நீங்களும் இருக்கணுமா?? பெத்த பொண்ணோட  கனவை நிறைவேத்த எப்படி எல்லாம் துணையா இருக்கலாம் யோசிங்க... அவ கனவை  நிறைவேத்தினதும் சந்தோசப்படுற பேரண்டஸா இருங்க... கல்யாணம் புள்ளைக்குட்டி பார்த்து சந்தோசப்படுற போரிங் பேரண்ட இருக்காதீங்கப்பா !" என்றால் சலிப்பாக,


"சரிடா, நீ சொல்றது போல  உன் கனவை எண்ணி நாங்க சந்தோசப்படுற பேரண்ட்டாவே இருக்கோம்.  ஆனா நீ மேரேஜ் பண்ணிக்கவே மாட்டியா??எங்களோடவே இருக்க போறீயா???"


"இல்லப்பா சத்தியமா சந்நியாசியா போக விருப்பம் இல்ல. மேரேஜ் பண்ணிப்பேன். எனக்கு இவன் ஓகேனு மனசுல பட்டால், என்னால் இந்த லைஃப்ப லீட்  பண்ண முடியும் தோணினா கண்டிப்பா அந்த லைஃப் அக்ஸ்சப்ட் பண்ணிப்பேன். எனக்கும் மேரேஜ் , ஹஸ்பண்ட் குழந்தைங்கனு வாழணும் ஆசை இருக்கு. ஆனாலும் அது நார்மல் வாழ்க்கையா இருந்திட கூடாதுப்பா !"


"சரிமா நவீ ! அவன பத்தி என்ன நினைக்கற? அவனோட வாழ்றது நார்மல் லைஃப்பா இருக்கும் நினைக்கிறீயா???"


"கண்டிப்பா ! அவனோட ஒரு ஸ்மூத் லைஃப் வாழலாம்.. சரியான கம்போர்ட்டுக்கு பிறந்தவன் பா அவன். ஓரே பிரோபஷனாம்   நமக்குள்ள சண்டை  வர்றாதாம். அப்படியே அண்டெர்ஸ்டாண்டிங் லைஃப்ப கொண்டு போலாம் சொல்றான்.எனக்கு இது சரி படும் தோணல"என்றாள்.


"அப்போ இவன் வேணாமா???"


"வேணாம் சொல்லல. யோசித்து சொல்றேன்"என்று நகன்று விட்டாள். 


***


"ஹேமா !!! இது உன் பொண்ணா??? "ஆச்சர்யமாக கேட்டார் சரஸ்வதி. சாந்தியின் அழைப்புக்கு சொந்தங்கள் சூழ வந்திருந்தனர். சரஸ்வதி,  நிச்சயம் முடிந்ததும் சொந்தங்களுடன் ஐக்கியமாகி விட்டார். 


பேசிக் கொண்டே இருக்கையில்  அமர்ந்தவர். தனது தூரத்து சொந்தம் தம்பியின் மனைவி, நாத்தனார் முறையில் இருக்கும் ஹேமாவிடம் தான் பேசிக் கொண்டிருத்தார். குடும்பங்களின் நல விசாரிப்பகளோடு ஆரம்பித்த கதை மகளுக்கு பெண் பார்க்கும் விஷயம் வரை பேச அதைப் பிடித்துக் கொண்டார் சரஸ்வதி. 


தன் மகள் ஆர்த்தியின் புகைப்படத்தைக் அவரிடம் காட்ட, பட்டுச்சேலை அணிந்து குடும்ப பெண்ணாக  இருக்கும் ஆர்த்தியை கண்டவர் அதில் தன் அனுகூலத்தைத்  தேட ஆரம்பித்தார். 


"யூஜி முடித்து வீட்டில் இருப்பதாகவும். வரன் பார்ப்பதாகவும் சொல்ல..."அவ்வளவு தான் சரஸ்வதி மீண்டும் சைத்துவை வைத்து கற்பனை கோட்டையை கட்ட ஆரம்பித்தார். 


சாந்திக்கு கூட அந்தப் பெண்ணை பிடித்திருந்தது தான். ஆனாலும் மகனின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் யோசித்தார். 


ஆனால், சரஸ்வதியோ முடிவே செய்துவிட்டார். இவள் தான் தன் மருமகள் என்று. அதை ஹேமாவிடமும் அந்த ஆசையை விதைக்க ஆரம்பித்தார். 


இங்கோ வைஷு புதிய ஆடவனிடம் பேசிக் கொண்டிருந்ததை கண்ட சைத்து, அவளை தனியே அழைத்துக் கடும் விசாரணையை அவளிடம் நடத்திக் கொண்டிருந்தான். 

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2