இதயம் 20

 


இதயம் 20


மதுரை சித்திரைத் திருவிழாவைப் போல கோலாகலமாக இருந்தது அந்த மண்டபம். நெருங்கிய சொந்தத்திலிருந்து தூரத்து சொந்தம் வரைக்கும் அந்த மண்டபத்தை நிறைத்து விட்டனர்.


வந்தவர்களை வரவேற்கும் பொறுப்பேல்லாம் தேவன், விஷ்ணு  தலமையில் தான் இருந்தது.


மேடைக்கு கீழ் முன் வரிசையில் ஒரு பக்கமாக ஓரத்தில் சரஸ்வதி அமர்ந்து கொண்டார். தன் தங்கையிலிருந்து தன் மகன், சைத்து , கடைசியாகப் பிரகதி வரைக்கும் வேலைச் செய்துக் கொண்டிருந்தனர். 


அவர்களை எல்லாம் வெறித்துக் கொண்டிருந்தார் அவர். அவரை யாரும் வேலை செய்ய விடவும் இல்லை. 'இந்த வேலையை பார் அந்த வேலையை பார் 'என்று யாரையும் வேலை வாங்கும் மனமும் அவருக்கு இல்லை.


எப்போது கூப்பிடுகிறார்களோ அப்போது செல்வோம் என்று வேடிக்கைப் பார்த்த படி அமர்ந்திருந்தவரிடம் வந்து பேசும் சொந்தக்காரர்கள் கேட்கும் குதர்கமான கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி வாயடைத்தார். இவ்வாறே அவரது நேரம் சுற்றிக் கொண்டது .


மணமேடையில் எகாந்த் வெட்ஸ் பிரவஸ்தி என்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிச்சயம்  செய்வதற்கு வேண்டிய தட்டுகளும் அதில் அனைத்தும் பொருட்களும் நிறைந்திருந்தன.


மணமக்கள் அவரவர் அறையில் நண்பர்களின் கேலிக் கிண்டலுடன் தயாராகிக் கொண்டிருந்தனர் .


வைஷு, மேடைக்கு கீழ் நின்று கேமிரா'க்களை எல்லாம் சரியாகப் பொருத்திக் கொண்டிருந்தாள். வீட்டில் ஒரு புகைப்படக் கலைஞர் இருக்கும் போது வெளியிலிருந்து ஆள் அழைத்து வருவார்களா என்ன??? அவளுடன் பணி புரியும் பரணி, அகிலா, அவர்களுடன் புதிதாக சேர்ந்த கிஷோருமே அவளுக்கு உதவியாக வந்திருந்தனர்.


நிச்சயத்திற்கு அவள்  தயாராகி இருந்தாலும் தன் வேலையிலும் சரியாக இருந்தாள். 


"வைஷு, கேமிரா கூட இருந்தால் எங்களை மறந்திடுவீயே ! போ போய் எகா ரெடியாகிட்டானானு பார்"என்று அனுப்பி வைத்தார் மகிழ்.


"பார்க்கிறேன் பார்க்கிறேன்... நான் உன் மருமகன்(கேமிரா) கூட இருந்தால்  பிடிக்காதே உங்களுக்கு !" என்றவள் நொடித்துக் கொள்ள, "அதான்டி என் பயமே ! எங்க நீ இவனே போதும் இருந்துடுவீயோனு பயமா இருக்கு... வைஷு உன்னையும் இதே போல மேடையில மாலையும் கழுத்துமா பார்த்தால் தான் எனக்கு நிம்மதி!" தாயாக தன் ஆசையைச் சொல்ல,


"விடுமா ! இப்போ என்ன மேடையில் மாலையும் கழுத்துமா நிக்கணுமா? நான் மட்டும் நின்னா போதுமா?? கூட யாரும் நிக்கணுமா??"எனக் கேட்டு கடுப்படிக்க,  பல்லைக்கடித்தவர் "எனக்கு வேலை இருக்கு போய் சொன்னத செய்"என்று தள்ளாத குறையாக அனுப்பி வைத்தார்.


அவளும் எகா அறைக் கதவை தட்டிவிட்டுச் உள்ளே சென்றாள். அழகு டார்க் ப்ளூ கோர்ட்டில் ஆண்களுக்கு உரித்தான அழகில் அம்சமாக இருந்தான்.


தன்னை மறந்து  புன்னகையுடன் பார்த்து நின்றாள். "என்ன வைஷு ! ஐயா அழகுல மயங்கிட்ட போல !" தன்னை ஒருதரம் பார்த்துவிட்டு குறும்புடன் கேட்டான்.


"ஆமா டா எகா ! ரொம்ப அழகா இருக்கீயே ! என் கூட இருக்கிறவர இந்த அழகு என் கண்ணுக்குத் தெரியாம போச்சே ! இப்போ இன்னொருத்திக்கு சொந்தமாகும் போது தான், உன்னை  மிஸ் பண்ணிட்டோமோ தோணுது ! பக்கத்திலிருக்கற கழுதையோட அருமை துரத்திவிட்டதுக்கு அப்றம் தான் தெரியும் போல... "உதட்டை பிதுக்கிப் பாவமாக சொன்னவளை முறைத்தவன், 


"இப்போ நீ என்னை கழுதைனு சொல்லி ஓட்றீயா??? இல்ல என்னை மிஸ் பண்ணிட்டோம் ஃபீல் பண்றீயா???"


"ரெண்டும் தான் டா எகா ! வெளிய போய் தேடி கண்டு பிடிச்சி ஒரு இளிச்சவாயன் கட்டிக்கறதுக்கு அழகான இந்த இளிச்சவாயன கட்டிகிருக்கலாம். ம்ம்.. மிஸ் பண்ணிட்டேன்" என்று பெருமூச்சை விட்டாள்.


அவன் தான் நொந்து போனான்."ஸ்ஸ்பா முடியல இப்போ என்ன நீ என்னை மிஸ் பண்ணிட்டேன் பீல் பண்ற அதானே ! அந்த பீலே வேணாம், காத்துவாக்குல ரெண்டு காதல் பண்ணலாம்"என்று அவளை இழுத்து தன் கைச்சிறையில் வைத்துக் கொண்டான்.


இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். பின் தன் இடது கையிலிருந்த அலைபேசியில் தங்களை செல்பீ எடுத்தாள்.


"சரி சரி ! நீ ரெடி ஆகிட்டேல. அம்மா கேட்கச் சொன்னாங்க டா மாமா. நான் வாறேன்"என்று அவனை பாராமல் செல்லை நோண்டிய படி வெளியே சென்றவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டான்.


மீண்டும் வந்து கேமிராவுடன் நின்று கொண்டாள். 


நண்பர்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தான் எகாந்த். அவன் அலைபேசி அலற, எடுத்து பார்த்தான். வஸ்தி தான் கூப்பிட்டு இருந்தாள். 


ஆர்வமாக எடுத்தான் "ஹாய் பிரதி குட்டி !எங்கேஜ்மெண்ட்க்கு ரெடியாகாம என்ன போன்னு ! மாமா வந்து எதுவும் ஹெல்ப் பண்ணனுமா???"என்று குழைய, 


"சனியனே !! என்ன பெரிய விஜய் சேதுபதி நினைப்பா உனக்கு. காத்துவாக்குல ரெண்டு காதல் கேட்குதோ ! வந்தேன் வையேன் காத்துவாக்குல உன்னோட உயிரையும் எடுத்துடுவேன் போனை வை !"என்று திட்டிவிட்டு வைத்தாள்.


"அட சண்டாளி !!!  அப்படியே போய் சொல்லிட்டாளா??? இல்ல இங்க கேமிரா எதுவும் இருக்கா??? எப்படி இந்த விஷயம் அவ காதுக்கு போச்சு???"என்று வேகமாக கதவை திறந்து வெளியே எட்டிப்பார்த்தான். 


மணமேடையை முழுவதும் தன் கேமிராவில் படம்பிடித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் அவளை முறைத்த படி நின்றிருந்த எகா விழுந்தான். 


அவளும் கேமிராவிலிருந்து கண்ணை எடுத்து அவனை பார்த்து"என்ன???"என புருவம் உயர்த்தி வினவினாள்.


"என்னடி பண்ணி வச்சிருக்க???"சைகையால் மணமகள் அறையைக் காட்ட, அவளும் சிரித்து கொண்டே போனை காட்டினாள். அவனும் போனை பார்த்தான். 


ஸ்டேட்டஸை பார்க்கச் சொல்லி சைகை செய்ய, அவனும் புலனத்தில் சென்று ஸ்டேட்டஸைப் பார்த்தவன் இதயத்தை பிடித்துவிட்டான். 


அதில் இருவர் எடுத்த செல்பீயை வைத்து கீழே 'காத்துவாக்குல காதல் வித் மணமகன் எகா 'என்று எழுதிருந்தாள். 


"அட பரதேசி !!!  இந்த ஆப்ப இந்த நல்ல நேரத்துல வைக்கணுமா???" என புலம்பியவன் வஸ்தியின் அறையை கட்ட, அவளோ வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள். 

"ஒழுங்கா போய் அவளை சமாதானம் செய். இல்ல "என்று பல்லைகடிக்க, அவளும் அவனுக்கு பல்லைக் காட்டி இளித்தாள்.


"போடி..."எனக் கும்பிட்டு கெஞ்ச, பழிப்பு காட்டிவிட்டு வஸ்தியின் அறைக்குச் சென்றாள். அவளோ தயாராகி தான் இருந்தாள். 


முதலில் இருவர் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை வைக்க தயங்கினாலும் வைஷு. பின்  வஸ்தியின் எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் வைத்தாள் வைஷு.


வஸ்தியும் புலனத்தில் வரும் வாழ்த்துக்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தவள், வைஷு வைத்திருந்த ஸ்டேட்டஸைப் பார்த்தாள்.


அதில் இருவரும் நிற்பதை கண்டு அவளுக்கு சிரிப்பு தான் வந்தது. இருவர் கண்களில் சிந்தும் நட்புணர்வே தெள்ளத் தெளிவாக காட்டியது அவர்களுக்குள் இருக்கும் கள்ளமில்லாத நட்பை . அதனால் அவளுக்கு கோபம் என்ற ஒன்று வரவேல்லை.


ஆனால் அவளது எதிர்வினை எகாவிடம் மட்டுமே விளையாட்டாகப் பாய்ந்தது. 'நம்மிடமும் கோபப்படுவாளோ !' என்று எண்ணி கொஞ்சம் தயங்கியபடி உள்ளே நுழைந்தாள் வைஷு. 


"ஹாய் வஸ்திக்கா ! "என அழைத்து வம்பிழுத்த படி வர, அவளை பொய்யாய் முறைத்தவள்,"அக்கா நான், தங்கச்சி நீ ! இதுல காத்துவாக்குல ரெண்டு காதல் அதுவும் எகா வோட" என கேலியாகக் கேட்டு சிரித்து வைத்தாள். 


"மூவிய ரீமேக் பண்றேன். காமெடி தர்பார் ஓட்டாத வைஷு. என்னால சிரிப்ப அடக்கவே முடியல"என்றாள். 


அவளை ஒரு நிமிடம் வெறித்தவள்" உங்களுக்கு எங்க மேல கோபம் வரலையா??? நான் எகா கூட சேர்ந்து நின்னு போட்டோ எடுத்தது உங்களுக்கு கோபம் இல்லையா ! உங்க பொஸேசிவ் எங்க போச்சு??? "ஆச்சர்யமாக கேட்டு வைத்தாள். 


பதிலுக்கு சிரித்தவள்"உங்க இடத்துல வேற பொண்ணு இருந்தால், சத்தியமா சொல்றேன் உங்க எகா செத்தான்.ஆனா நீங்க நின்னது எனக்கு தப்பா தெரியல பொஸேசிவ்வும் வரல. காந்த்க்கு நான் எவ்வளவு முக்கியமோ அதை விட அதிகம் நீங்க அவனுக்கு முக்கியம். உங்க உறவு என்னானு எகா சொல்லி புரிஞ்சுகிட்டேன்.அதுனால் எனக்கு இது பெருசா தோணல..."என்றாள்.  அவளை தாவி அணைத்துக் கொண்டாள் வைஷு.  



"நீங்க சொன்னது போல எகா தான் எனக்கு எல்லாம் சின்ன வயசுல இருந்து அவன் விரல் பிடிச்சி தான்  நடக்க பழகினேன். எங்களுக்கு இடையில் இப்படி ஒரு உறவு வரும்னு யதார்த்தம் தெரியாம பழகிட்டோம்.


பிரிவுன்ற ஒன்னு எல்லா உறவுகளுக்கும் இருக்கும்ன்ற நிதர்சனம் வளர்ந்த பிறகு  தான் தெரிஞ்சது.  எங்களுக்குள்ள எந்த உறவு வந்தாலும் அக்சப்ட் பண்ணிக்க நாங்க தயாரானாலும். அந்த புது உறவு எங்களை புரிஞ்சுக்கணும் எங்க உறவை உணர்வையும் மதிச்சாலே போதும் என்ற எண்ணத்தில நாங்க  இருந்ததோம். ஆனா நீங்க ரொம்ப கிரேட். எங்களை புரிஞ்சிக்கிட்டீங்க"என்று அவள் கையை பற்ற, 


"வைஷு , உங்களுக்கு எகா எப்படியோ அப்படியே என்னையும் பாருங்க. நானும் உங்க தோழி தான். இந்த நாள் வரைக்கும் உங்களுக்கு காந்த் கிட்ட இருக்க உரிமை வருஷங்கள் கடந்து இருக்கும். அதை நான் எடுக்கவும் மாட்டேன் அதுக்கு தடை போடவும் மாட்டேன். உங்க எகா எப்பையும் உங்க எகாவா தான் இருப்பான். என்னால உங்க உறவுக்கு எந்த ஆபத்தும் வர்றாது சரியா ! அப்படியே என்னை எகாவோட மனைவியா பார்க்காமல் உங்க தோழியா பாருங்க "என்று அவள் கைப்பற்றிச் சொல்ல, அவளை அணைத்து முத்தமிட்டாள்.


"தாங்ஸ் வஸ்தி"எனவும் 

செல்லமாக கிள்ளி வைத்தவள். "நானும் உன் தோழி தான் நியாபகம் வச்சுக்க..."என்று செல்லமாக மிரட்ட, "சரிங்க தோழியாரே !"என பணிவது போல சொல்லித் தானும் சிரிக்க அவளும் சிரித்தாள்.


இங்கே நல்ல நேரத்தில் பெரியவர்கள் அமர்ந்து அவர்கள்  முன்னிலையில் நிச்சய பத்திரிக்கையை வாசித்தனர். பின் தட்டையை இரு குடும்பமும் மாற்றிக் கொண்டன. மணமகனை அழைத்து  மாலைப் போட்டு ஆசிர்வதித்தார் விஷ்ணு. மணப்பெண்ணை அழைத்து பிரபுவே மாலையிட்டு ஆசிர்வாதம் செய்தார். 


பின் சரஸ்வதி பிரபு காலில்  இருவரும் விழுக, ஆசிர்வாதம் செயதனர். பின் அடுத்தடுத்து பெரியவர்கள் வர விழுந்து வணங்கினார்கள். 


மேடையில் இருவரும் நிற்க , சொந்தங்கள்  நண்பர்கள் என அனைவரும் வந்து பரிசளித்து வாழ்த்திவிட்டுச் செல்ல தயாராக இருந்தனர். 


****


கீழே பந்திக்கு போடப்படும் உணவகளனைத்தும் தயாராக இருக்க , பிரதீப்பும் சைத்துவும் தான் அதை மேற்பார்வைப் பார்த்து கொண்டிருந்தனர். அங்கே பரிமாற  கேட்ரிங்  ஆட்களும் தயாராக தான் இருந்தனர்.


ஆட்கள் இன்னும் சாப்பிட வராததால் காலியாக இருந்தது பந்தி நடக்கும் இடம்.


நீலமும்  மஞ்சளும் கலந்த நிறத்திலிருந்த லெகாங்வில் தேவதையாக வரும்  வைஷுவை தூரத்திலிருந்து வரும் போதே கண்டு கொண்டான் சைத்து.


அவளை கண்டதும் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனது உறுப்புகளிலிருந்து செல்கள் வரைக்கும் இயங்காமல் அசைவற்று நிற்க, அவளைத்  தான் பார்த்திருந்தான். 


கால்சட்டையும் சட்டையுமாக பார்த்தவளை இன்று லெங்காவில் பார்த்ததும் உள்ளே இதயம் வெகுவாக வேகமாகத் துடித்து வெளியே குதித்து அவளிடம் சரணயடைய வேண்டி நின்றது. அதை தடுத்து படி இதயத்தை பிடித்துக் கொண்டான்.


அவனை வித்தியாசமாகப் பார்த்த பிரதீப் அவனை உலுக்கினான். "மாமஸ் ! நீங்க இப்படி சிலையா நிக்க காரணம் நடந்து வர சிலை தானே !"என அவன் காதுக்கு மட்டும் கேட்க, அதில் உணர்வு பெற்றவன், "என்ன கேட்ட??" 


"அந்த சிலைய பார்த்து தான் நீங்க இப்படி சிலையாக நிக்கிறீங்களானு கேட்டேன் மாமஸ்"என்றவனை பிடரியில் அடித்து அனுப்பி வைத்தவன், அவளுக்காக காத்திருந்தான். 


அவன் காத்திருக்க, அருகே பரிமாற நிற்கும் கேட்டரிங் ஆட்கள் அனைவரும் வைஷு வருவதைப் பார்த்து அவளை சைட்டடித்துக் கொண்டு அவள் அழகை பத்தி பேசி மகிழ்ந்தனர். அது இவன் காதுகளுக்கு துல்லியகமாக கேட்க பல்லை கடித்தவன் அவளை உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தினான்.


"இங்க ஏன் வந்த?? உனக்கு என்ன வேணும்???"எனக் கேட்டவனை ஒரு மாதிரி பார்த்தவள், "எனக்கு பன் அல்வா வேணும் சாப்பிட வந்தேன்"என்றாள். 


"நீ இங்கே நில்லு "என்றவன் வேகமாக கப்பில் போட்டு எடுத்து வந்து கொடுத்தான். "இந்தா... கிளம்பு இங்க இருந்து???"என்றான். 


'லூசா இவன்' என்பது போல பார்த்தவள்"ஏன் நான் இங்க இருந்து கிளப்பணும்? இங்க நின்னு தான் சாப்பிடுவேன் என்ன பண்ணுவ??"என திமிராக கேட்டவளை முறைத்தவன் அவள் கையிலிருந்த பன் அல்வாவை பிடிங்கி, அவனே ஒரு வாய் அள்ளி ஊட்டிவிட்டான். அவள் விழித்தவாறு முழுங்கினாள்.


""ஏய் யூ...!"என வாயை திறக்கும் முன் இன்னொரு வாய் வைத்தான். அதையும் கஷ்டப்பட்டு விழுங்கியவள் ஏதோ மீண்டும் சொல்ல வாயெடுக்க, கடைசி வாயை வைத்தவன், "சாப்பிட்டேல கிளம்பு... கிளம்புடி"என்று கத்தினான். 


காரணமில்லாமல் கத்துபவனைக் கண்டு கோபம் கொண்டவள் "போடா !! சைக்கோ பேயே"என்று திட்டிவிட்டு வந்தவழியே சென்று விட்டாள். அவளை அனுப்பி வைத்தவன் அந்த ஆட்களை முறைத்துவிட்டு சென்றான்.


***


"ஏன்டி முகத்தை தூக்கி வச்சிருக்க?? நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன் உனக்கு நல்லவே தெரியும். அப்றம் ஏன்டி இந்த முறைப்பு??? அந்த வைஷு பிசாசு ஸ்டேட்டஸ் வச்சத்துக்கு  நான் தான் ஆள? என் கிட்ட தான் கோப்பப்டுவீயா? உன் எகா எவ்வளவு நல்லவன் நான் சொல்லி தான் உனக்கு தெரியுமா என்ன???பேசுடி"எனக் கெஞ்ச,


"நானும் உன்னை நல்லவன் தான் நினைச்சேன் டா ! ஆனா..." என அவள் பேசும் முன்" ஆனா, ஆவனா எல்லாம் இல்ல. எப்பையும் உன் எகா நல்லவன் தான்டி. நீ சந்தேகப் படணுன்ற  அவசியமே இல்லடி. என்னை நம்பு"என்று கெஞ்ச,'உன்னை நம்பணுமா??' என்ற ரீதியில் அவனை பார்க்க, அவனோ, கீழே நிற்கும் வைஷுவை முறைத்தான். அவளோ படு குஷியில் இருந்தாள். 


"பாருடி அந்தப் பிசாச.  உன் கிட்ட என்னை மாட்டிவிட்டுடு எப்படி சந்தோசமா இருக்குனு. எல்லாம் அது செஞ்சா சதிதான். நான் எதுவும் பண்ணலடி"என்று விட்டால் காலில் விழுந்து விடுவது போல பணிந்து கெஞ்சினான்.


"அவளை கட்டிபிடிச்சி நின்னது நீ. அவளை சொல்றீயா " என்று கேட்வளைத் தலையை பிடித்துக் கொண்டு பார்த்தான்.


அவனைப் பார்க்க பாவமாக இருக்க, இறங்கி வருவது போல "சரி உன்னை மன்னிக்கிறேன். ஆனா தண்டனைகள் கண்டிப்பா இருக்கு உனக்கு"என்றாள்.



"சரி சரி, நாளைக்கு நைட் நமக்குள்ள நடக்கப் போற லவ்மேக்கிங்ல நீ என்ன தண்டனை வேணா கொடு செல்லம். மாமா வெயிட்டிங் "என்று காதில் கிசுகிசிக்க, அதில் சிவந்தவள்"ச்சீ பொறுக்கி"என்று செல்லமாக அடித்தாள். அவனோ அவள் கன்னத்தில் முத்தம் பதித்தான். 


அவர்கள் முட்டிக் கொள்வதையும் கொஞ்சிக்  கொள்வதையும் வீடியோவாகவும் புகைப்படமாகவும் எடுத்தாள் வைஷு. 


அவள் அவர்களை புகைப்படம் எடுக்க, அவளது பெயரைச் சொல்லி யாரோ அழைப்பதைக் கேட்டு  யாரென திரும்பி பார்த்தாள். அவளெதிரே சிறு சிரிப்புடன் ஒருவன்  நின்றிருந்தான்.


"ஹாய் வைஷு !! நானும் ஒரு போட்டோகிராபர் தான். சொந்தம்மா ஸ்டூடியோ வச்சிருக்கிறேன். நானும் என் ப்ரோஃபஷன ரொம்ப லவ் பண்றேன். ஸோ நம்ம ப்ரோஃபஷன பத்தி நமக்குள்ள எக்ஸ்பலனேசன் கொடுத்துக்கணும் அவசியம் இல்ல.

அதனால நமக்குள்ள எந்த பிரபலமும்  வரப் போறதும் இல்ல. சோ ஏன் நாம மேரேஜ் பண்ணக் கூடாது??? நீங்க என்ன சொல்றீங்க வில் யூ மேரி மீ???"என கேட்டு  அவளை அதிர வைத்தான் அவன்.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2