மடல் - 11

 மடல் -  11



உப்புக் காற்று எங்கும் வீச, மணல் மெத்தையில்  அமர்ந்து  மோதி விளையாடும் ஆழியின் அலைகளை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தனர் தேவா , திகழ்.


மதிய வேளையிலிருந்தே காவல் நிலையத்திற்கும் பள்ளிக்குமாக அலைச்சல் இருந்தது.


அலைச்சலால் ஏற்பட்ட உடல் சோர்வை விட, மனச் சோர்விலிருந்து தான் அவர்களால் வெளியே வர முடியவில்லை.


எத்தனையோ வன்மங்கள் அவர்களைப் பாதித்தது உண்டு. அதிலிருந்து போராடியது  தங்களை மீட்டுக் கொண்டதுவும் உண்டு. 


இதுவும் அதே போல தான் என்றெண்ணி கடக்க நினைத்தாலும் அதிகாரியின் வார்த்தைகளோ அவர்களை கடந்து செல்ல விடாமல் தடுத்தன. 


கற்பை மூலதனமாகக் கொண்டு தான் சில பெண்கள் தங்களுக்கு வேண்டியதை அடைந்து கொள்கிறார்கள்  என்றே சிலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் இந்தக் காவல் அதிகாரியும் ஒன்று தான்.


தனியாக வாழும் பெண்கள் சிலர் இப்படி தானென்ற முத்திரையும் குத்தப்படுகிறது.


அம்முத்திரையையும் கிழித்து கொண்டு முன்னேறும் பெண்கள் மீது வன்மம் கொண்டு வார்த்தைகளாலும் சில பட்டங்களாலும் வடித்து கொட்டுகிறார்கள்  இச்சமூகத்தினர்.


அதையும் மீறி சாதனை பட்டியலை நீட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள் பெண்கள்.


தேவாவின் தோள் மீது தலையை சாய்த்து, அவள் கைகளுடன் தன் கைகளை பிணைத்த படி அமர்ந்திருந்தாள் திகழ். 


இருவரும் எதுவும் பேசவில்லை. கடலை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தனர். நடந்ததை ஜீரணிக்க இங்கே வந்து விட்டனர். 


காவல் நிலையத்திலிருந்து வரும் போது வைகுண்டம் கதிரேசன்  அலைபேசி வழியாக அழைத்திருக்க, அவர்களிடம் நடந்ததைச் சொல்லி அலைபேசியை அணைத்து வைத்து விட்டனர்.


உண்ண கூட பிடிக்காமல் நேராக வந்தது என்னவோ கடல் அன்னையின் மடியைத் தேடித் தான். இருவரும் வந்து அதில் தஞ்சம் கொண்டனர்.


தேவாவின் அமைதி திகழை ஏதோ செய்ய, தன் அமைதியை கலைத்து அவளிடம் பேசினாள்.


"தேவா ! என்னடி அமைதியா இருக்க? பிரச்சனை இவ்வளவு தூரம் இழுத்து விட்ட என் மேல் உனக்கு கோபம் தானே ! அதை இப்படி அமைதியா இருந்து காட்றீயா? கண்டிக்கக் கூட செய்டி, திகழு வாய அடக்குனு சொல்லுடி ! இனி இது போல பிரச்சனை கொண்டு வந்திடாதன்னு கூட சொல்லு ! நாலு அடி கூட உன்னால தான் சொல்லி அடிடி.. உன் அமைதி தான் இதுங்கல விட பெரிய வலியா இருக்கு !"என்றாள்.



"அடியே ! உன் மேலே கோபப்படுணும்னா ! அந்த கரெஸ்பொண்டர் வந்தப்பவே கோபப்பட்டு இருப்பேன். இந்த அமைதி உன் மேல உள்ள கோபத்தினால இல்லடி... கஷ்டப்பட்டு  ஒரு பெரிய தவளைய விழுங்குன பாம்பு, கொஞ்ச நேரத்துக்கு நகர முடியாம தவிக்கும். மறுபடியும் கஷ்டப்பட்டு அதை வெளியே கக்கும், கக்கின  பிறகு தான் அது நார்மலாகும். அதே நிலமைல தான் நானும் இருக்கேன்.


ஜீரணிக்க முடியாம தவிக்கிறேன். ஆனா அது கொஞ்ச நேரம் தான். அப்புறம் வழக்கம் போல,  அடாவடியா இருக்க வேண்டியது தான்.


நீயும் அதே நிலையில தான் இருக்க... அமைதி தான் நமக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து. திரும்ப திரும்ப அதையே பேசிக்கிறதாலே காயம் பெருசாகுமே தவிர ஆறாது. ஆறணும்ன்னா அமைதியா இருக்கணும்..."என்று வாயில் ஒரு விரலை வைத்து சொல்ல, 


அதற்கு திகழோ கிண்டலாக,"அமைதியா அது உன் அகராதிலே இல்லையே ! புதுசா ஏதேதோ சொல்ற தேவா , என்ன இது?"என்றாள் பொங்கி வந்த சிரிப்பை மறைத்த படி .


"அதுவா என்னை நானே அப்டேட் பண்ணி இருக்கேன்.. அதுல இந்த அமைதிய ஆட் அப் ஆன் கொடுத்து இன்ஸ்டால் பண்ணிருக்கேன்..! இனி என்னை  நீ அடிக்கடி அமைதியோடு தான் பார்ப்ப !"என்று பெருமிதத்தோடு சொல்ல, 


"அமைதியோட உன்னையா...? உனக்கு கடைசி வரைக்கும் லிங்கே ஆகாத ஒன்னு இந்த அமைதி.

நீயே நினைச்சாலும் உன்னால முடியாது தேவா !!! பேசிட்டே இருக்க  தேவா தான் ரொம்ப அழகு ! அது தான் எனக்கும் பிடிக்கும் "என அவள் தாடையைப் பற்றிக் கொஞ்ச, ,  இவளும் சிரிப்புடன், அவளை தான் பார்த்திருந்தாள்.


தேவாவின் தாடையை பிடித்து கொஞ்சி கொஞ்சி பேசுவதை கண்டு அவர்களை தாண்டி செல்ல வந்த பட்டாளம், பெருங்குரல் எடுத்து சிரிக்க அவர்கள் இருவரும் பட்டாளத்தை கண்டு கொள்ளாமல் பேசி மகிழ்ந்திருந்தனர் .


அவர்களை கடந்து சென்ற அக்கூட்டத்தில் ஒருவன், "டேய்  இங்க பாருங்க டா வானவில்லு"என்று அவர்கள் இருவரையும் கலாய்த்து விட்டுச் செல்ல, 


அவர்களோ வானவில் என்றதும் வேகமாக சிறு பிள்ளை போல வானத்தை தான் அண்ணாந்து பார்த்தனர்.


செம்மை, நீலத்துடன் ஆங்காங்கே கலந்து இருக்க,  ' எங்கே?'  என வானத்தை ஆவென பார்த்தவர்களுக்கு அப்போது தான் புரிந்தது அவர்கள் தங்களை கலாய்த்து விட்டு சென்றிருக்கின்றனர் என்று.


பெரிதாக கோபம் கொள்ளவில்லை... கண்ணில் காண்பதை வைத்து கற்பனை கட்டி விடுவது மனிதர்களின் சிறப்பம்சம் அதை மாற்ற முடியாது. 


தூரமாகச் செல்லும் அந்தக் கூட்டத்தை கண்டு விட்டு சிரிப்புடன் பார்த்தனர்.


" முன்னாடி பொண்ணுங்கள  வானவில்ன்னு வர்ணிப்பாங்க..


ஆனா இப்ப  யார் யாரையோ வானவில் ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க ! என்னவோ மனுஷங்க மத்தியில மனுஷனா வாழ்றதே பெருசா இருக்கு !"என்று தேவா பெரு மூச்சு இழுத்து விட்டாள்.


திகழ் அதை மென்சிரிப்புடன் ஆதரித்தாள் 


*****


பள்ளி முடிந்தும் அலுவலகம் இன்னும் இயங்கி கொண்டு தான் இருந்தது. அலுவலகத்தில் அனைவரும் வேலை செய்துக் கொண்டிருக்க, இவன் மட்டும் அறையில் அமர்ந்து நடந்ததை அசைப் போட்டபடி அமர்ந்திருந்தான்.


அவனால் நடந்த விஷயத்திலிருந்தும்  அதிகாரி கேட்ட  கேள்வியிலிருந்தும் வெளியே வர முடியவில்லை.



அவனுக்கே அதிகாரி கேட்ட கேள்வி பாதிப்பை உண்டாகியது என்றால், பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறெல்லாம் வேதனை கொள்கிறார்களோ !


விஷயம் தந்தையிடம் சென்றது பெரிதல்ல, ஆனால் அதில் அவர் ஏன் தலையிட்டு இவ்வாறு செய்தார்? என்ற கேள்வி அவனுக்குள் குடைந்தது. 


'தன்னை ஒரு வார்த்தை கேட்காமல் போலீஸ் வரை சென்று புகார் அளிக்க காரணம் என்ன? 'என்று யோசித்தவனுக்கு தலை விண்ணு விண்ணென்று வலிக்க, வீட்டிற்கு கிளம்பி விட்டான்.


***


மாலையில் பள்ளியிலிருந்து வரும் மகனை எதிர் பார்த்திருக்கும் சிறு பிள்ளை கொண்ட தாயை போல தான், மூன்று  பள்ளியின் தாளாளராக இருந்தாலும்  தனக்கு அவன் சிறு பிள்ளை என்பது போல தான் அவன் இல்லத்திற்கு வந்ததும் நடந்து கொள்வார்.


தனிஷ்ஷிற்கும் அது பிடித்திருக்கும்,  அவன் வாழ்க்கையில் எத்தனையோ பெண்கள் கடந்து சென்றிருக்கிறார்கள். அவன் பெரிதாக எண்ணிய பெண்கள் இருவர் தான். 


ஒன்று அவன் தாய் வைஷ்ணவி, மற்றொரு பெண் தென்றல். அவனை பாதித்த பெண்களும் இவர்கள் தான்.


தென்றல் மேல் கொண்ட காதலை கொஞ்சம் கொஞ்சமா மறக்க முயற்சி செய்கிறான். அவர்களது நட்பு, இன்னும் தொடரத் தான் செய்கிறது. 


தற்போது அவன் வாழ்வில் இருக்கும் ஒரே பெண் , அவன் தாய் தான்.தோழியாக, தாயாக, மகளாக பார்ப்பது அவரை தான்.



வேகமாக உள்ளே வந்தான். மகனின் காலடி ஓசை வைத்தே அவனது மனநிலையை அறிந்துக் கொள்ளும் தாய் தான் வைஷ்ணவி. அவனது வேக நடையே பறைசாற்றியது அவனது கோபம்.  அவனது அலுவலக பையை தூக்கி எறிந்து விட்டு நீள்விருக்கையில் அமர்ந்தான். அவன் செய்கையை கவனித்தப்படி அவன் அருகே அமர்ந்தார்.


அவர் கண்ணை காட்ட , உள்ளே சென்ற பெண் குவளையில் நீர் நிறைத்து கொண்டு வந்து கொடுக்க , அதை எடுத்து மகனுக்கு கொடுத்தார்.


அவனும் வாங்கி முழு மூச்சாக குடித்து முடிக்க அவன் கையிலிருந்து வாங்கிய கண்ணாடி குவளையை வேலைக்கார பெண்ணிடம் கொடுத்து அனுப்பி வைத்தவர், மகனிடம் "என்ன கோபம்? யார் மேல் கோபம்?" விசாரித்தார்.



"அப்பா இருக்காரா?"


"இருக்கார் டா இவ்வளவு நேரம் தூங்கினார். போன் வந்தது பேசிட்டு இருக்கார்" என்றார். அவரது அறையின் திசையை பார்த்து விட்டு, 


"உங்க புருஷன் என்ன பண்ணினார்  தெரியுமா?"என்று அனைத்தையும் சொல்ல, தன் மகனை முதல் முதலாக கோபமும் அதிர்ச்சியுடன் பார்த்தார்.


"என்ன தனு இது? அவங்க காலி பண்ண வைக்க,  நீ பணம் கொடுக்கிறேன் சொன்னியா ? எந்த தப்பு பண்ணலனு தெரிஞ்சும் அவங்களை ஏன் காலி பண்ண வைக்கணும் நினைச்ச? 

இது என் தனு இல்லையே ! உன்னால வாழ்ந்தவங்க தான் இருக்கணும் அழிஞ்சவங்கன்னு இருக்க கூடாது எத்தனை முறை சொல்லி இருக்கேன். 


இது வரைக்கும் சரியான தான ப்பா இருந்த ! இப்போ  என்ன ஆச்சி உனக்கு? பதவி எதுவும் உன்னை மாத்திடுச்சா தனு?"என கேட்க, மனசாட்சி போல இடிக்கும் அன்னையை நிமிர்ந்து நேர்பார்வை பார்க்க முடியவில்லை.


"சாரி மா ! என்னோட ஈகோ என் கண்ணை மறைச்சிடுச்சு ! புத்தி  கேட்டு போய் கோபப்பட்டு பண்ணிட்டேன். 


உன்னை போல, அந்த தாத்தா எடுத்து சொன்னதும் என் தவற உணர்ந்து, அந்த விஷயத்தை மேற்கொண்டு எடுத்துட்டு போகல, அதையே மறந்துட்டேன்.



ஆனா உன் புருஷன் தான் அந்தக் கடை மேலே கேஸ் கொடுத்தது.  எதுக்கு இந்த வேலைய அவர் பண்றார் மா ? என்னை கேட்காம ஏன் இந்த வேலைய செய்தார் ?  அந்த பொண்ணுங்க பாவம் மா  ! ஒரு பையனா என்னாலே அந்தக் கேள்வியை ஜீரணிக்க முடியாம  தவிக்கிறேன். அந்த பொண்ணுங்க எவ்வளவு கஷ்டப்படுவாங்க...?!  அப்பா அவங்க  காலி பண்ணனும் ஏன் நினைக்கிறார் எனக்கு புரியல மா ?"என தாயிடம் ஆதங்கம் கொள்ள, 


இதற்கெல்லாம் காரணமான பிரபாகரனோ, அசட்டையாக வந்து அமர்ந்தார். தாயும் மகனும் அவரை தான் பார்த்தனர் இல்லை முறைத்தனர்.


"என்ன அம்மாவும் பிள்ளையும் ரொம்ப பாசமா பாக்கிறீங்க  என்ன விஷயம்?"


"இன்னுமா உங்களுக்கு விஷயம் தெரியாம இருக்கும்?"

என்றதும்  சிரித்தவர் "தெரியும் சொல்லு"என்றார் நக்கலுடன்.


"எதுக்கு என் பேரை சொல்லி போலீஸ் கம்பலைண்ட் கொடுத்தீங்க?"


"கடைய காலி பண்ண?"


"அந்தக் கடையால, நமக்கு என்ன இடைஞ்சல் ? ஏன் காலி பண்ண  கம்பளைண்ட் கொடுக்கணும்?"


"உன் ஈகோவா டச் பண்ண , அந்த பொண்ணுங்களை சும்மா விடக் கூடாதுனு தான, அந்த ஓனர் கிட்ட பேசி பணம் தர்றேன் சொன்ன, அதுக்கு அவர் மசியல..


எனக்கு நியூஸ் வந்தது, அதான் நான் போலீஸ்ட்ட கொஞ்சம் பணம் கொடுத்து, கம்பளைண்ட் போல செட் பண்ணி, காலி பண்ண சொன்னேன்... உனக்கு ஏன் அவசரம் எதுக்கு வாபஸ் வாங்கின?"


"இப்போ புரியுது உனக்கு ஏன் இந்த புத்தி திடீர்  வந்ததுனு? உங்களுக்கு மனசாட்சி இல்லையா? அவன் முடிவெடுத்தா? அது தப்பு ரைட்டுனு சொல்ற இடத்தில இருக்க நீங்க, தப்புக்கு துணை போகக் கூடாது, அவனையும் போக விடக் கூடாது  !" என்ற மனைவியை அலட்சியம் செய்தவர், 


"தப்போ சரியோ, பணக்காரன் ஏழை னு வந்திட்டா பணக்காரன் தான் ஜெயிக்கணும் அதுக்கு என்ன வேணா செய்யலாம் தனு ! இதெல்லாம் பிஸ்னஸ் பண்றவங்ளுக்கு தாரக மந்திரம்...  பாவம், பரிதாபம் பாக்கலாம் கூடாது !"என்று அவர் பேசிக் கொண்டே சொல்ல இவனுக்கு கடுப்பாக இருந்தது.


"நீங்க எப்டி வேணா இருங்க ! என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க ! என் பதவிய யூஸ் பண்ணி நீங்க பண்ண காரியம் எனக்கு சுத்தமா பிடிக்கல ! 


நான் பணக்காரணும் இல்ல ஏழையும் இல்ல உழைச்சு சாப்பிட்ற மக்கள்ல நானும் ஒருத்தன்! தேவைன்னா அடுத்தவன் குடியை கெடுக்க நினைக்கும் ஆள் நான் இல்லை. ஒரு முறை ஸ்லீப் ஆனதுக்கே இங்க குத்துது! 


இதுல நீங்க சொல்றது படி நான் நடந்தா , என் காலம் ரொம்ப குறுகிய  காலமாயிடும்.  


என் வாழ்க்கைய அழகா வாழணும் ஆசைப்பட்றேன். சேரை அள்ளி போடணும் நினைக்காதீங்க !"என்று விறுவிறுவென  உள்ளே நுழைந்து விட்டான். 


மகனின் முகத்தில் வெற்றியின் களிப்பை பார்க்க எண்ணி, கடைசியில் அவனே அவரை மண்ணை கவ்வ வைக்க, 


மகன் மீது சிறு கோபம்,

இதில் மனைவியும் அவரை முறைத்து எழுந்து சென்று விட்டார்.


மகனை விட புருஷனை எண்ணி ஐயம் கொண்டார் வைஷ்ணவி.





அடுத்த அத்தியாத்திலிருந்து...


"இங்க என்ன பண்றீங்க?"என்று எதிர்பாராத நேரத்தில் நுழைந்தான் விஷ்ணு.


"அவங்க என்ன பண்ணா உங்களுக்கு என்

ன ?! திறந்து இருந்தா உடனே உள்ளே நுழைஞ்சிடனுமா? கேட்டு உள்ளே வர தெரியாதா? உன் கடையில இருக்க புத்தக்கத்துல சொல்லையா?"என கேட்டு விஷ்ணுவை கடுப்பாகினாள் தேவா !

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2