இதயம் - 9

 இதயம் 9

மழை பொழிந்து ஓய்ந்திருக்க, சாலையில் மட்டும் நீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது . விடாது ஒரு மணி நேரமாக திவலையின் அரவம் மட்டுமே கேட்டு கொண்டிருந்தவர்களுக்கு இந்த அமைதி சற்று வித்யாசமாக இருந்தது. சாலையில் எங்கும் கருமையும் வெறுமையுமாக இருந்தது. தூரத்தில் கூட மனித நடமட்டமில்லை. வாசலில்  நின்று சாலையை பார்த்தவாறே இருந்தார் மகிழ். பிள்ளைகள் இருவரும் இன்னும் வீடு வந்து சேரவில்லை. 


"மகிழ், ஏன் ஈரத்தில நிக்கற? பசங்க வந்திடுவாங்க, நீ உள்ளவா மழைக்கு எங்கயாவது ஒதுங்கி இருப்பாங்க. இல்ல ஆபீஸ்லே இருந்திருப்பாங்க.வந்திடுவாங்க நீ வா"என்று நீள்விருக்கையில் அமர்ந்தவாக்கிலே சாலையை தவிப்புடன் பார்த்து கொண்டிருக்கும் மகிழ்மதியை உள்ளே அழைத்தார் விஷ்ணு. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு.


"இவங்க ரெண்டு பேருக்கும் பொறுப்பே இல்லங்க... மழை பெய்ற மாதிரி இருக்குனு தெரிஞ்சதும் வீட்டுக்கு வர வேணாமா? எங்க இருக்காங்களோ மழையில் நனைஞ்சுட்டாங்களா? வண்டி எதுவும் பிரேக் டவுன் ஆகிடுச்சா? என்னான்னு தெரியல, போன் பண்ணாலும் எடுக்க மாட்டீகிறாங்க... வீட்ல பெத்தவங்க பயப்படுவாங்களேனு கவலை இருக்கா,  என்ன பிள்ளைகளோ?" என புலம்ப ஆரம்பித்தார்.


அவரை புன்னகையுடன் பார்த்தவர், "மகிழ், நீ பயப்படற அளவுக்கு நம்ம பசங்க கவனக் குறைவா இருக்கிறவங்க கிடையாது. எதாவது அர்ஜண்ட் வொர்க்கா இருக்குமா?  நெட் கவரேஜ்  கிடைக்காம  இருந்திருக்கும் பத்திரமா வந்திடுவாங்க,  நீ இப்படி வந்து உட்கார்" என்றார். 


"ஒரு போன் பண்ணி சேஃப்பா இருக்கோம் சொல்றதுல என்னங்க?அப்படி என்ன தலைபோற அர்ஜண்ட்? நீங்க இப்படி அவங்களுக்கு சப்போர்ட் பண்றதுனால தான் அவங்க இப்படி அலட்சியமா இருக்காங்க" அவரை கடிந்து விட்டு மீண்டும் சாலையை பார்த்தார். 


"மகிழ்" என அவர் தாடையை திருப்ப, ஹாரன் சத்தம் கேட்க இருவரும் பார்த்தனர் வைஷூ தான் நின்று கொண்டிருந்தாள். மகிழ் எழுந்து கேட்டை திறக்க,  உள்ளே வண்டியை நிறுத்தி விட்டு அவர் தோளில் கையை போட்டு" என்னமா உள்ள நீயும் அப்பாவும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தீங்க போல" நக்கலாகக் கேட்டாள்.


அவளது கையைத் தட்டிவிட்டு கோபமாக உள்ளே சென்றார். உதட்டை பிதுக்கி தோளை குலுக்கிவிட்டு  அவர் பின்னே சென்றாள்.


"வா மா ஏன் லேட்டு? மழையில நனைஞ்சிடலியே?" 


"இல்லப்பா நனையல, ஆபீஸ்ல அர்ஜண்ட். ஆல்பம் ஒன்னும் முடிக்கணும் அதான் லேட்டு" என்றாள்.


தாயை ஒரு தரம் பார்த்து விட்டு, "என்னப்பா அம்மா ஏன் கோபமா இருக்காங்க? ஒருவேள உங்க ரொமான்ஸ்க்கு நடுவுல வந்துட்டேன்னு கோபமா?" அவரை வம்பிழுக்க, விஷ்ணு சிரித்தார்.


"பேசாதடி, லேட்டாகும்னா ஒரு போன் பண்ணி சொன்னா என்ன? நகர முடியாத வேலையா என்ன? ஒரு போன். அம்மா லேட்டாகும் வந்துடுவேன் பயப்படாதீங்க சொன்னா என்னடி? எவ்வளவு தவிச்சிப் போயிட்டேன் தெரியுமா?"என்று முகத்தை திரும்பினார்.


அவர் தாடையை திருப்பி, "ஸாரி மா, சொல்லணும் நினைச்சேன் மறந்துட்டேன். இனி அப்படி இருக்கவே மாட்டேன். சொல்லிட்டே லேட்டா வர்றேன்ன்" என்று கண்ணடிக்க, "பொம்பல புள்ள நேரத்துக்கு வர்றதுக்கு என்னடி?" 


"மா , இது உனக்கு செட் ஆகல. இனி சரியா வந்துர்றேன். இல்ல போன் பண்ணி சொல்லிடுறேன் ஓகே வா. எங்கே சிரி பார்ப்போம். ஸ்மைல் ப்ளீஸ்" என்று தனது கேமராவில் அவரை போக்ஸ்  செய்ய, இழுத்து பிடித்த கோபமும் காற்றோடு பறந்தது. ஒரே கிளிக்கில் அவரது சிரிப்பு அழகிய புகைப்படமானது.


"குட் கேர்ள்"என்றவள் எகாவின் அரவமில்லாமல் இருக்க, அவனைத் தேடி அவனது அறைக்குச் சென்று கதவை திறந்தாள்.


"அவனும் இன்னும் வரல மா !" விஷ்ணு சொல்ல அறையை திறந்தவளின்  கண்ணீல் பட்டது என்னவோ கவர் செய்யப்பட்ட வஸ்தியின் புகைப்படம் தான். வேகமாகச் சென்று கையில் எடுத்துக்கொண்டு நேராக அன்னையிடம் வந்தாள்.


"அம்மா இத அவன் எடுத்திட்டு போலையா? நான் ரெண்டையும் தானே எடுத்துட்டு போகச் சொன்னேன். இத மட்டும் இங்க வச்சிட்டு போயிருக்கான்" 


"நீ சொன்னத அப்படியே சொன்னேன்டி. ஒருவேள மறந்துட்டானோ !" என்றார்.


"மறந்துட்டு எல்லாம் போகல, அந்தப் பிராடு நாயி வேணும்னா தான் வச்சிட்டு தான் போயிருக்கான்" அவனை கடிந்து கொள்ள,


"எதுக்கு அவன் வச்சிட்டு போகணும் அப்படி என்ன இதுல இருக்கு?" பிரிக்காத அந்தப் புகைபடத்தை பற்றி கேட்க.


"இதுல தான் உன் மருமவனோட காதல் ஓவியமே இருக்கு" என்றதும் இருவரும் வியந்தனர். "காதல் ஓவியமா? எங்க பிரி" விஷ்ணு வியக்கக் கேட்டார்.


அவளும் பிரித்து காட்ட, ஆடும் மயிலாய் பிரவஸ்தி இருந்தாள். "ரொம்ப அழகா இருக்கா வைஷு. இவள தான் எகா லவ் பண்றானா?" 


"ஆமாமா  ஒன்சைட் லவ் இவங்க கிட்ட தான் போட்டோவ கொடுக்க சொல்லி அனுப்பினேன். பயபுள்ள இன்னமும் காணோம். என்னென்ன சொதிப்பி வச்சிருக்கானோ !" என்று யோசிக்கையிலே அவனும் வந்துட்டுவிட்டான் விசில் அடித்தப்படி.


"ஹாய் மாமே "என்று விஷ்ணு அருகில் அமர்ந்து நீரை எடுத்து பருகினான். தன்னை தான் மூவரும் பார்த்து கொண்டிருப்பதையும் கவனிக்காது  பருகியவன் வாயை துடைத்துவிட்டு "அப்றம் மாமே என்ன டூயிங் ???" என்று அவர் தொடையில் கைவைத்து கேட்டான்.


"உனக்காக தான் மருமவனே காத்திட்டு இருக்கேன்" என்றார் அவன் தோளில் கை போட்டப் படி.

" எனக்காகவா என்ன மாமே?"


"வேற ஒண்ணும் இல்ல டா உன் காதல் காவியத்தை கேட்கத் தான் காத்திட்டிருக்கேன்"என்று சிரிக்காமல் சொன்னார். 


"வாட் காதல் காவியமா?" என்று அதிர்ந்தவன், அப்போது தான் எதிரில் நின்றிருந்த இருவரையும் பார்த்தான். வைஷு வஸ்தியின் புகைப்படத்தை அவன் முன் ஆட்டினாள். 


"போட்டு கொடுத்துட்டா போண்டா"என முணங்கிவிட்டு இன்று நடந்த அனைத்தையும் சொன்னான்.  இருவரும் அவனை மெச்சுதலாக  பார்த்தனர். 


"மிஸ்டர் எகாந்த், நீங்க பெர்போர்மன்ஸ்ல வோர்ஸ்ட்னு நினைச்சேன். ஆனா கிழி கிழி கிழிச்சிட்டீங்க, வெர்ரி குட் ஜாப்... நெக்ஸ்ட் ஸ்டெப் என்ன?" வைஷு அவனை பாராட்டினாள். "வேற என்ன ட்ரைவர் வேலை பார்க்கணும் மார்னிங் அண்ட் ஈவினிங் பிக்கப் அண்ட் ட்ராப் " என்று பெருமையாகக் சொல்ல, வைஷு வாயை பொத்தி சிரித்தாள்.


விஷ்ணு குலுங்கி குலுங்கி சிரித்தவர்"அடேய் மருமவனே உன்னை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா"


"அடப்பாவி உன்னை செஃப் ஆக்க,  நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டோம். இப்படி நீ டிரைவர் வேலை பார்க்க போறேன் சொல்றீயே டா !  அப்ப காதலுக்காக உன் வேலைய விட போறீயா எகா" புரியாமல் கேட்டு வைத்தார் மகிழ்.


"ஐயோ அத்தை, வேலய விடுறேன் நான் எப்போ சொன்னேன். வேலைக்கும் போவேன்.  சைட்ல என் காதலையும் டெவலப் பண்ண, ட்ரைவராவும் போவேன் சொல்றேன்" என்று பல்லைக் கடித்தான்.


"பார்த்துடா மருமவனே, கடைசியில் நீ ட்ரைவரா மட்டும் இருந்திட போற" அவர் நக்கல் செய்ய அவனை முறைத்தான். "எகாந்த பேசாம, நாம் போய் பொண்ணு கேட்டா என்ன?" மகிழ் கேட்க,


"ம்ம்... அத்தை கேட்கலாம் அதுக்கு நீங்க கொஞ்சம் காலம் பொறுக்கணும்.முதல்ல  அவளை நான் காதலிக்க வச்சிடுறேன்" என்று எழுந்தவன் வைஷு கையில் இருக்கும் படத்தை வாங்கி உயர்த்தி பிடித்தவன் "லவ் யூ மிஸ்ஸ் பிரவஸ்தி எகாந்த் "என்று சொல்லிச் சென்றான். மூவரும் அவனை ஆதூரமாகப் பார்த்தனர். 


மறுநாள் அவன் சொன்னது போல  எதாவது சாக்கு சொல்லி தினமும் அவளை நடனப்பள்ளியில் இறக்கிவிடுவதும் வீட்டில் கொண்டு வந்து விடுவதுமாக முழு டிரைவராக மாறினான். அவளும் இப்போதெல்லாம் அவனை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டாள் அவர்களது நட்பு விருச்சமாகி இருவருக்குள்ளும் காதலாக துளிர்விட்டு கொண்டிருந்தது.

***

நாட்கள் அதன் போக்கில் செல்ல, சரஸ்வதி வீட்டின் தாய்மாமனின் பேத்திக்கு கல்யாணம் என்பதால் அனைவரும் குடும்பமாகச் செல்ல வேண்டிய கட்டாயம்.


வேறு வழியின்றி அனைவரும் சரஸ்வதி வீட்டில் ஒண்ணு கூடினார்கள்.  அன்று நடந்த பிரச்சினை பிறகு இன்று தான் அகிலா , பிரதீப்பும் பிரகதியும் வந்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அந்த இடம் அந்நியமாக இருபது போல இருந்தது. 


"தாய் மாமனின் பேத்திக்கு கல்யாணம் மொத்த குடும்பமும் செல்ல வேண்டும்"என்று சாந்தியிடம் சொன்னவர், அகிலாவையும் அழைக்குமாறு கூடுதலாகச் சொன்னார். "எல்லாரும் கண்டிப்பா போகணும் சாந்தி, சாய் கல்யாணத்துக்கு மொத்த குடும்பமும் வந்திருந்தாங்க, சாக்கு எதுவும் சொல்லாம எல்லாரும் வந்திருக்கணும் சொல்லிடு" என்று கட்டளையே போட்டு விட்டார். 


சாந்தி அதை அகிலா விடம் சொல்ல, முதலில் தயங்கி "வரவில்லை" என்றார். சரஸ்வதியின் கட்டளையைச் சொன்ன பின் "வர்றேன்" என்றார். "போகவில்லை என்றால் இன்னும் பிரச்சினையை இழுப்பது போல இருக்கும்" என்று சாந்தி சொல்ல, தலையை அசைத்தார். 


ஆனால் பிரவஸ்தி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை, "எனக்கு வேலை தான் முக்கியம்" என்று சொன்னது போல வேலைக்கும் சென்று விட்டாள். 


அனைவரும் சரஸ்வதியின் வீட்டில் இருந்தனர். ஆண்களின் சிரிப்பலைகள் மட்டுமே கேட்டது. தாய்மாமன், குடும்பத்திற்கே ஆடை எடுக்க பணம் கொடுத்திருந்தார். சரஸ்வதியே அனைவருக்கும் தேர்வும் செய்தார். அவருக்கு பிடித்தது போல. 


யாருக்குமே அவரது தேர்வு பிடிக்கவில்லை முகத்தை ஒரு மாதிரியாக வைத்து கொண்டு தான் வாங்கினார்கள். ஏன் அதையும் அணிந்து தான் வந்திருந்தனர். ஆண்கள் அனைவரும் கேட்டரிங்கில் வேலை செய்பவர்களை போல ஒரே நிறத்தில் தான் சட்டை, அதுவும் பச்சை கலரில். 


பிரபுவிலிருந்து பிரதீப் வரைக்கும் அதே பச்சை கலர் தான். தன் சட்டையை எண்ணி நொந்து போனார்கள். 


பெண்களுக்கு மஞ்சள் கலரில் பட்டுச் சேலை, ஆளை எரித்தது. சனாவிற்கும் பிரதிக்கும் சுடிதார். உள்ளே செல்லவில்லை கஷ்டப்பட்டு போட்டு வந்தனர். இதில் தப்பித்தது என்னவோ பிரவஸ்தி தான்.


அகிலா தனித்து அமர்ந்திருந்தார். பிரதீப் சாயுடன் அமர்ந்து கொண்டு ஏதோ பேசினார்கள். பிரகதி சனாவுடன் அமர்ந்திருந்தாள். அனைவரும் சைதன்யாவிற்காக தான் காத்துக் கொண்டிருந்தனர். 


கழுத்தில் இரண்டு செயின் மட்டுமே சனா அணிந்திருந்தாள். பிரகதி ஒரே ஒரு மெல்லிய செயின் மட்டுமே அணிந்திருந்தாள்.  


சனாவையும் பிரகதியையும் பார்த்த சரஸ்வதி, சனாவை அழைத்தார். "என்னடி கொஞ்சமா நகைப் போட்டுடு இருக்க, இந்தா இதையும் போடு" என்று கழுத்தில் இருந்ததை அவளுக்கு போட்டுவிட்டு அகிலாவை ஒரு மாதிரி பார்த்தார். 


'என் பேச்சை கேட்டால் பாசமாக இருப்பேன். இல்லை என்றால் விரோதி தான்' என்று சொல்லாமல் சொன்னது அந்தப் பார்வை.


அகிலா, பிரகதியைப் பார்த்தார். அவளோ இதுக்கு நமக்கு சம்மந்தமில்லை என்பது  போல போனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிரவஸ்தி அவளுக்கு இரவிலே  பாடமெடுத்து விட்டாள். அத்தையின் செயலுக்கு எதிர்வினைக் கட்டக் கூடாது என்று. அதையே போல அவளும் நடந்துக் கொண்டாள். ஆனால் அகிலாவுக்கு தான் மகளை பார்க்க நிம்மதியாக இருந்தாலும் அவரது விரோத பார்வையைத் தாங்க முடியவில்லை .


சாந்தியும் இதை கவனிக்க தான் செய்தார். உடனே பிரகதியை அழைத்து, "ஏய் பிரகதி நீ என்னடி சிம்பிளா வந்திருக்க? வா வந்து அத்தை செயின் தர்றேன் போட்டிக்கோ" என்றார்., 


"வேணாம் அத்தை, அம்மா போட சொல்லி ரெண்டு மூனு செயின் கொடுத்தாங்க தான். ஆனா எனக்கு தான் செயின் போட்டாலே அலர்ஜி ஆகிடுது. இந்த செயின் போட்டே பழகினதுனால ஒன்னும் தெரியல, இல்லேன்னு பொறி பொறி வந்திடும். அக்கா ட்ரீட்மெண்ட்க்கு போலாம் சொல்லிருக்கா" என்று  முடித்துக் கொண்டாள்.


சரஸ்வதி ' தன் செயல் வீணாக போனதை' எண்ணி முணங்கி கொண்டார்.  அவரது கோபத்துக்கு மேலும் தூபம் போடுவது போல, வந்தான் சைத்து. அவனுக்கு பிடித்த டார்க் ப்ளூ கலரில் கை முடியை மடித்து விட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான். 


அவனை எல்லாரும் ' பே ' வென பார்த்தனர். அனைவரது பார்வையையும் தன் மேல் படிவதைக்  கண்டு அவர்களை பார்த்தவன்"ஏன் என்னையே எல்லாரும் பார்க்கிறீங்க என்னாச்சி உங்களுக்கு?" 


"டேய் நான் உன்னை எந்தச் சட்டைய போட சொன்னேன், நீ என்னடா இந்த சட்டைய போட்டிருக்க?" பதறினார் சாந்தி. 


"நீ கொடுத்தது சட்டையா? நான் என்னவோ டேபிள் மேல விரிக்கற வச்சிருந்த துணி நினைச்சேன்" என்றிட, பிரபு சிரித்து விட்டார்.

அவர் சிரிப்பை தன் முறைப்பில் அடக்கியவர், "சைத்து, எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் சட்டை எடுத்திருக்கேன். நீயும் அதையே போட்டுவா" தன்மையாக சொன்னார் சரஸ்வதி. 

" வாட்?" என அங்கிருந்த ஆண்களை பார்த்தான். அனைவரும் அவனை பாவமாகப் பார்த்தனர். அவர்களை கண்டு பக்கென்று சிரித்துவிட்டான். 

"என்னப்பா இது  மென்டல் ஹாஸ்பிட்டல்ல இருக்கறது போல பச்சை கலர்ல ட்ரெஸ் போட்டீருக்கீங்க..." 

"இன்னும் கொஞ்ச நாள்ல உங்க கூட 

இருந்திருந்தா அது நடக்கும்" என்றார் பிரபு. அவன் சிரிப்பை நிறுத்த வில்லை."இந்த கலர யார் செலக்ட் பண்ணினது?" 


"எல்லாம் உங்க பெரியம்மா தான்" என்றார் தேவன்."பெரியம்மாவா, அவங்க தான் வயசானவங்க , இந்தக் கலர எடுத்திருக்காங்க, அதை அப்பாவும் பெரியப்பாவும் போடலாம். நீங்க ஏன்டா அதையே எடுத்தீங்க, வேற எடுக்க வேண்டியது  தான. பார் நல்லவா இருக்கு?"எனக் கேட்டு பெரியம்மாவின் கோபத்தை மேலும் தூண்டினான். 

சனாவும் பிரகதியும் சிரிப்பை அடக்கினார்கள். அதைக் கண்ட சரஸ்வதி  "சைத்து, போய் அந்த  ட்ரெஸை போட்டுவா " என்றார் கோபத்தை அடக்கி. 

"நானா சான்ஸே இல்ல பெரியம்மா, எனக்கு செட் ஆகாத கலர் அது . நான் போட மாட்டேன். ப்ளீஸ் என்னை கம்பல் பண்ணாதீங்க" என்று முடிவாகச் சொன்னான்.

சரஸ்வதிக்கு பிரஷர் ஏற 'புஸ் புஸ்' வென மூச்சை இழுத்து விட்டார். பயந்து போனார்கள் அனைவரும். 

சாந்தி, சைத்துவை அந்தச் சட்டையை அணியச் சொல்லி கெஞ்ச,  அவனோ "முடியாது" என்று முரண்டு பிடித்தான். சரஸ்வதிக்கு இரத்தம் அழுத்தம் கூடியது. அவருக்கு பிடிக்காத சட்டை அணிந்ததற்கே ரத்தம் அழுத்தம் கூடிப்போக, பிடிக்காத பெண்ணை மணந்தால் என்னாகுமோ???

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2