இதயம் 8

 இதயம் 8


மப்பும் மந்தாரமுமாக இருந்தது அந்த மாலை வேளை. அன்னையிடம் தோழியுடன் வெளியே செல்வதாகப் பொய்யுரைத்து விட்டு கிளம்பியவளின் கையில் குடையை திணித்தவர் "மழை வர மாதிரி இருக்கு, எதுக்கும் இத வச்சுக்கோ"என்றவரை 

'இது எதற்கு?' என்று அலட்சியமாகப் பார்த்தாலும் அன்னைக்காக கையில் வைத்த படி வீட்டை விட்டு வெளியெறினாள். 

தனது அப்பாட்மெண்டை கடந்து சாலைக்கு வந்தவள், எதிரே வந்த ஆட்டோவை நிறுத்திப் போகுமிடத்தை சொல்லி ஏறிக்கொண்டாள். 


பதினைந்து நிமிடத்தில் எகாந்த் சொன்ன இடத்திற்கு வந்து அவனுக்காக நிழற்குடையின் கீழ் காத்திருந்தாள்.  கையில் வைத்திருந்த குடையை  தனது கைப்பையில் வைக்காமல்,  லத்தியை போல கையில் அடித்து கொண்டு நின்றாள். பதினைந்து நிமிடம் இருபத்தைந்து நிமிடமாக மாறியும் அவன் வரவில்லை, கடுப்பானது அவளுக்கு .  கடிகாரத்தையும் அவன் வரும் வழியையும் மாறி மாறிப் பார்த்தவளுக்கு கொஞ்சம் எரிச்சலும் வந்தது. அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தும் ரிங் அடித்து ஓய்ந்தது. 


'ச்ச... வஸ்தி ! முன்ன பின்ன தெரியாத ஒருத்தனை நம்பி வந்த முட்டாள்  உன்னை போல யாரும் இருக்க மாட்டாங்க. எந்த தைரியத்துல அவனை நம்பி வந்த ? சொந்த அத்தை பையனே சுயநலமா இருக்கும் போது எவனோ தெரியாதவனை நம்பி இவ்வளவு தூரம் வந்திருக்கீயே உன் தைரியத்தை பாராட்டறதா !  இப்பையும் ஒன்னும்  கெட்டு போயிடல,  வா போயிடலாம். இனி யாரையும் நம்பி வரக் கூடாது அதுவும் முன்ன பின்ன தெரியாதவனை நம்பி வரவே கூடாது' தனக்குள்ளே சொல்லிக் கொண்டவள் ஆட்டோவை எதிர்பார்த்தாள். எதிர் திசையில் ஆட்டோ வந்தாலும் மனதின் ஓரத்தில் அவன் வரமாட்டானா ? என்றே  இருந்தது. ஆட்டோ அவளை நெருங்கும் வரை அவனை எதிர்பார்த்தாள். ஆனால் அவன் வர்றாமல் போக, ஆட்டோவை நிறுத்த கையை அசைத்தாள். 


ஆட்டோ, சற்று தள்ளி போய் நிற்க, அவளும் ஏறப் போகும் வேளை இருவருக்கும் நடுவில் எகாந்த் வந்து நின்றான். "என்னங்க கிளம்பிட்டீங்க? நான் வரமாட்டேன் நினைச்சிட்டீங்களா? ஸாரிங்க கொஞ்சம் டிராபிக், அதான் லேட். சரி வாங்க போலாம்" என்று படபடவென பேசியவனை கையைக் கட்டி முறைத்த வண்ணம் நின்றிருந்தாள்.


ஆட்டோக்காரர் ஹாரனை அழுத்த, அவரை போகச் சொல்லியவன், அவளது சினத்தை அறிந்து காதில் கையை வைத்து "ஸாரிங்க"என்று முகத்தை சுருக்கிக் கெஞ்சினான். 


சற்று முன் தனக்குள் சொல்லிக் கொண்டவை எல்லாம் காற்றில் கரைவது போல இருந்தது அவளுக்கு. ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. முறைப்பதையும் நிறுத்தவில்லை.


"ஏங்க அதான் ட்ராபிக்னு சொன்னேலங்க நம்புங்க, உங்களை வெயிட் பண்ண வச்சிட்டோமேனு  உயிர கையில பிடிச்சி ஹை ஸ்பீட்ல வந்தேங்க. நீங்க என்னனா கிளம்பிட்டீங்க, பிராமிஸா டராபிக்  தாங்க..." என்று சத்தியம் செய்யும் அவனது சிறு பிள்ளைக் குணம் அவளை வெகுவாய் கவர்ந்தது. 


இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கியவள், முறைப்பதைக் கைவிட்டாள்.  "இனி இது போல நடக்காதுங்க, கண்டிப்பா நேரத்துக்கு வந்துடுவேன்"என்று அடுத்த முறையும் சந்திக்க வேண்டியே அவ்வாறு குறிப்பாக கூறினான்.அவனது குறிப்பு அவளறியாமல் இல்லை. ஆனாலும் பதிலெதுவும் பேசாமல் அமைதியாகவும் அதே நேரம் தனது கூர் விழிகளால் அவனை கூர் போடவும் தவரவில்லை.


"லேட்டாகிடுச்சி போலாம் வாங்க"என பின் இருக்கையை காட்ட, அமைதியாக ஏறிக் கொண்டாள். மிதமான வேகத்திலும் வேகத்தடையை வந்தால் ஓரமாகச் செல்லவும் அவளை பூ போல தாங்கி அழைத்துக் கொண்டு போனான். 


"என்னங்க அமைதியா வர்றீங்க? இன்னமும் கோபம் போலையா? அதான் ஸாரி கேட்டேனேங்க... நீங்க அமைதியா வர்றது எதோ போல இருக்குங்க..." என்றான் சோகமாக, 

அவனது சோகமான முகம் உள்ளுக்குள் சிரிப்பை தர, அதை அடக்கி வைத்து விட்டு" இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு?" என்று திருவாயை திறந்து கேட்டாள்.  ஆனால் அவளது கேள்வியில் அவனது முகம் தான் சுருங்கி விட்டது" இன்னும் கொஞ்சம் தூரம்ங்க"என்று வாயை மூடிக் கொண்டான். அதன் பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. 


அவன் சொன்ன நடனப் பள்ளியில் வந்துவிட இருவரும் இறங்கினார்கள். அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். அங்கே ஒரு வயதான பெண்மணி  இளம் பெண்களுக்கு நடனம்  சொல்லிக் கொடுத்து கொண்டிருந்தார். 


"வணக்கம் மதி மா " என்று எகா உள்ளே நுழைய, அவனை கண்டு புன்னகையுடன் "வா  எகா"என்றவர் பக்கத்தில் நின்ற பிரவஸ்தி பார்த்து புன்னகைத்தார். அவளும் அவருக்கு வணக்கம் வைத்தாள். 


"நான் சொன்னேல இவங்க தான் பிரவஸ்தி"என்றான்.


" ஓ... உன் லவ்வரா ?" என கேட்கவும் இருவருக்கும் பக்கென்றானது. ' ஓ அப்படி தான் சொல்லி வச்சிருக்கியா' என்பது போல அவனை அவள் முறைக்க. அவளது முறைப்பைக் கண்டு பதறியவன்

"ஐயோ மதிமா ! இது என் லவ்வர் இல்ல.... நான் எப்போ உங்க கிட்ட அப்படி சொன்னேன்?"


"நீ தானடா என் லவ்வரை கூட்டிட்டு வரேன் சொன்ன"


"எது நான் சொன்னேனா? மதிமா என்ன சொல்லுறீங்க?"என்று மீண்டும் பதறினான். "இரு..." என்று யோசித்தவர்"ஸ்ஸ்ஸ்ஸ்... அது ஷியாம் டா நீ இல்ல. ஆமா நீ என்னை சொல்லி இவளை கூட்டிட்டு வந்திருக்க?"எனக் கேட்கவும் அவன் தலையில் அடித்துக் கொண்டான். 


"ஸாரிங்க மதிமா ! அப்பப்ப கொஞ்சம் மறந்திடுவாங்க நாம தான் நியாபகப் படுத்தணும்" பிரவஸ்தியிடம் சொல்லிவிட்டு அவர் புறம் திரும்பியவனை" நீங்க தான, டான்ஸ் சொல்லிக் கொடுக்க ஒரு பொண்ணு வேணும் கேட்டீங்க,  நான் கூட்டிட்டு வர்றேன் சொன்னேனே மறந்துட்டீங்களா?" என அவன் நியாபகப் படுத்தவும் தலையில் கைவைத்தவர்.


"ஸாரி டா எகா மறந்துட்டேன். வயசாயிருச்சில மறதியும் வந்துடுத்து அப்பப்ப" என்று பிரவஸ்தி பார்த்து சொன்னவர்" பரதத்துல என்ன படிச்சிருக்க மா?"எனக் கேட்டு உள்ளே அழைத்து போனார். அவன் அந்த வராண்டாவிலே அமர்ந்து கொண்டான்.

அரைமணி நேரத்துக்கு பிறகே இருவரும் வந்தனர். "தங்கஸ் எகா, எனக்கு வஸ்திய  ரொம்ப பிடிச்சிருக்கு அவளை நான் வேலைக்கு சேர்த்துகிறேன். என்னம்மா உனக்கு ஓகே தானே"

"எனக்கு ஓகே தான் மதிமா ! நாளையிலிருந்து வந்திடுறேன்" என்றாள். 


"ரொம்ப மகிழ்ச்சி மா. நாளையிலிருந்தே  வா  !"என்றார் அன்போடு. இருவரும் அவரிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தனர். "உங்களுக்கு இந்த இடம் பிடிச்சிருக்கா பிரவஸ்தி?"


"ம்ம்... ரொம்பங்க, கஜகஜனு சத்தமில்லாமல் எனக்கு பிடிச்ச ஜதி ஒலி மட்டும் கேட்கிற ஒரு தியான இடமா  பார்க்கிறேன். ரொம்ப நன்றிங்க இந்த நடனப் பள்ளியையும் மதிமாவையும் எனக்கு காமிச்சதுக்கு. வீட்ல இருந்து இங்க வர்ற தூரமா இருந்தாலும் வொர்த் தாங்க... ரொம்ப ரொம்ப நன்றிங்க"என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள்.


அவள் முகத்தில் கண்ட மகிழ்ச்சியே அவனுக்கு போதும் என்றானது."விடுங்க..

உங்களுக்கு இந்த இடம் பிடிச்சிருக்குல அதுவே போதும், அடுத்து எங்கங்க போகணும்?"எனக் கேட்டவனை ஒரு மாதிரியாக பார்த்தவள்,"வீட்டுக்கு தாங்க போகணும்?" 


"என்னங்க இவ்வளவு தூரம் வந்திட்டு  உங்க வேலை முடிஞ்சதும் வீட்டுக்குனு சொல்றீங்களே !"பாவமாக சொன்னவனின் பாவனை உள்ளுக்குள் எழுந்த அடக்கப்படாதச் சிரிப்பை அடக்க சிரமம் கொண்டாள்.


"வேற என்ன சொல்ல சொல்றீங்க?"


"இப் யூ டோன்ட் மைண்ட் ! ஒரு கப் காஃபி சாப்பிடலாமா? ப்ளீஸ் " என மீண்டும் கண்களை சுருக்கி அவன் கேட்க, அதன் அழகில் அவளால் எதையும் தட்டிப் பேச  முடிவில்லை. "சரி" என்று தலையை அசைத்தாள். உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டு வெளியே சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டவன் அவளை வண்டியில் ஏற்றிக் கொண்டு காஃபி சாப்'பிற்கு விரைந்தான்.

ஒரு பெரிய கடை முன் நிறுத்தியவன் உள்ளே அழைத்து போனான்., கடையின் உட்புற அழகை ரசித்தவாறே இடத்தில் அமர்ந்தாள். அவனும் அவளுக்கு எதிரே அமர்ந்தான். இருவருக்கும் பிடித்த காஃபி வகையை ஆடர் சொல்லி விட்டு அமைதியாக இருந்தனர்.

"அப்றம்" என அவன் ஆரம்பிக்க, "அப்றம் என்ன?" 


"வொர்க் , இடம் பிடிச்சிருக்கு சொன்னீங்க தான். உங்களுக்கு கம்ஃபர்ட்டபில்ல இருக்கும் தான?" 


"கண்டிப்பா, ஆனா ரொம்ப தூரமா இருக்கு. ரெண்டு பஸ் மாறி வரணும் போல இருக்கு அதான் யோசிக்கிறேன்" என்றாள். அதற்குள் இருவருக்கும் காஃபியும் வர்ற, இருவரும் அதை பருகினார்கள்.


"ஏங்க உங்களுக்குனு ஒரு வண்டி இல்லையா?" 


"இல்லங்க...  அம்மா கொஞ்சம் என்னை நினைச்சி பயப்படுவாங்க. அதான் வண்டி எல்லாம்  வாங்க வேணாம் சொல்லிட்டாங்க. ஆனா எனக்கு ஓட்ட தெரியும்" 


"ம்ம்.. அவங்க பயமும் சரி தான். நீங்க பஸ்லே வாங்களேன்..." என்றான் காஃபியை பருகிய படி.


"ம்ம்ம் வரலாம் தான் ஆனா, வாங்கற சம்பளம் எல்லாம் அதுலே போயிடும்ங்க... என்ன பண்றது" என்று டேபிளை குத்தினாள்.

"இஃப் யூ டோன்ட் மைண்ட், நான் ஒண்ணு சொல்லட்டா?"என அவன் பீடிகைப் போட, 

" என்னங்க?"


"உங்களுக்கு பிரச்சனை இல்லேன்னா சொல்லுங்க, நானே உங்களை பிக்கப் அண்ட் டிராப் பண்றேன். எனக்கு அதுல எந்த ஆட்சபனையும் இல்ல !" சாதரணமாக சொல்லித் தோளை குலுக்கியவன் மேல் சினம் சிறிதும்  எட்டிப் பார்க்கவில்லை. குழந்தைகள் பொம்மை வண்டியை வைத்துக் கொண்டு 'நான் உன்னை அழைத்து செல்கிறேன்' என்பது போல தான் அவளுக்கு தோன்றியது.


'என்னாச்சி உனக்கு ? அவன் எது பேசினாலும் சொன்னாலும் ரசிக்கற உனக்கு கொஞ்சம் கூட கோபமே வரலையா? மானங் கெட்ட மனசே உனக்கு என்ன தான் ஆச்சு?' என அவள் தனக்குள்ளே கேட்க, 'நீ செஞ்ச பாவத்தினால நான் இப்போ இப்படி கிடக்கறேன்' என்று அவள் மனம் சலித்துக் கொள்ள, ' நான் என்ன பாவம் பண்ணினேன்?' மனத்தோடு அவள் சண்டைப் பிடித்தாள். ' பின்ன அவனை ஆ- னு பார்த்து சைட் அடிச்சது இல்லாம அவனை மறுபடியும் பார்க்க மாட்டேனா ஏங்கினேல அதான் காரணம். நான் பாட்டு செவனேனு தான இருந்தான். நீ தான் அவன் கிட்ட தடுமாறி என்னையும் சேர்த்து  தடுமாற வைக்கிற. ஃபால்ட் இஸ் யூர்ஸ் 'என்றது அவள் மனம்.


அவளுக்கும் மனதுக்கும் நடுவில் நடக்கும் உரையாடலை அறிந்து கொள்ளாதவன், அவளது அமைதியை கண்டு பயந்து" ஏங்க என்னங்க அமைதியாகிட்டீங்க? நான் எதுவும் தப்பா சொல்லிருந்தா மன்னிச்சிடுங்க... ஒரு பிரண்டா  உங்க மேல உள்ள அக்கறையில் தான் கேட்டான் ஸாரிங்க" என்று மன்னிப்பு கோர,


"நான் உங்களை தப்பா எடுத்துக்கலங்க !" என்றவள் சொல்ல "அப்போ என் கூட வர உங்களுக்கு இஷ்டமா?" ஆர்வமாகக் கேட்டான். அதில் புருவமுயர்த்தி அவனை முறைத்தவள்

"ஒரு நாளைக்கே லேட்டா வந்து , டிராஃபிக்னு ரீசன் சொல்றீங்க. நான் வெயிட் பண்றத நினைச்சு உயிரை  கையில பிடிச்சிட்டு வந்தததா சொன்னீங்க... இப்படி டெய்லி நடந்தா என்ன பண்றது?  தயவு செய்து எனக்காக நீங்க ஹை ஸ்பீட்ல வண்டி ஓட்டாதீங்க, உங்களை கெஞ்சிக் கேட்கிறேன். இல்ல அது என் இஷ்டம்னா எப்படி வேணா  ஓட்டுவேன் சொன்னா உங்க இஷ்டம். நானும் பிரண்டா அக்கறையில தான் சொன்னேன்" என்றவளின் கன்னத்தை  முத்தங்களால் நிரப்பிட ஆசை தான் அவனுக்கும்.


"ரொம்ப நன்றிங்க, என் மேல அக்கறை எடுத்துகிட்டதுக்கு. இனி ஹை ஸ்பீட்ல வண்டி ஓட்ட மாட்டேங்க பிராமிஸ் " என்றதும் சிரித்து விட்டாள். 


"சரி வாங்க மழை வரது போல இருக்கு சீக்கிரமா வீட்டிக்குப் போலாம்" என்று அவளை அழைத்து கொண்டு வெளியேறியவன், அவளை அவ்வீட்டில் இறக்கி விட்டு"என்ன எமர்ஜென்சினாலும் என்ன உதவினாலும் கால் பண்ணுங்க வந்துடுறேன்" என்று அப்பட்டமாக வழிந்தான்.


"எப்போ இருந்து நீங்க இந்த ஃபீரி சர்வீஸ் ஆரம்பச்சீங்க ?" 


"இன்னைலிருந்து தான். அதுவும்  உங்களுக்கு மட்டும் தான் . எனி டைம் ஐ ஆம் அவேலப்பில் " என்றான் தோளை குலுக்கிவிட்டு.

"அப்படியா ! ஆனா நீங்க லேட்டா வர்றத பார்த்தா உங்க சர்வீஸ் குட்டா  இல்லையே ! போன் பண்ணா எடுக்கறது இல்ல. போன் பண்ணி எங்க வர்றீங்கணும் சொல்றதும் இல்ல. நான் எப்படிங்க  உங்க சர்வீஸ நம்பறது?" 


" ட்ராவல்ல இருந்தனால போனை எடுக்கல, அண்ட் உங்களுக்கு போன் பண்ணி சொல்ல, நீங்க தான் எனக்கு நம்பர் கொடுக்கல. அப்ப நான் என்னங்க பண்றது? பொண்ணுங்க கிட்ட நம்பர் கேக்குறது தப்புனு எங்க மிஸ் சொல்லி தான் வளர்த்திருக்காங்க. அதான் நான் உங்க கிட்ட கேட்கல. ஆனா நீங்களாவது கொடுத்திருக்கலாம்"  என்றான் பாவமாக,"என்னங்க பண்றது  எங்க மிஸ்ஸூம் பசங்க கிட்ட போன் நம்பர் கொடுக்கூடாதுனு சொல்லி தான் வளர்த்திருக்காங்க அதான் நானும் கொடுக்கல" என்றாள் பதிலுக்கு.


"ஈஈ.. சரியா தான் வளர்த்திருக்காங்க... அப்போ  நான் ட்ராவல் பண்ணும் போது மிஸ்ட் கால் கொடுத்தது  நீங்க இல்லையா?" தெரிந்தே தான் கேட்டான் ஒருவித கேலியுடன்.


"இல்ல... எங்க மிஸ் !"என்று பதிலுக்கு அவளும் நக்கல் செய்ய, சிரித்து விட்டான்." சரிங்க நான் வர்றேன். குட் நைட் " என்றவன் கிளம்பிட, அவன் கண்ணிலிருந்து மறையும் வரைப் பார்த்து  நின்றவள் சிரித்து கொண்டே வீட்டிற்குச் சென்றாள்.


அவள் வீட்டை விட்டு வெளியேறி வருவதற்கு முன்னே அவன் அவளுக்காக காத்திருந்தான், 'இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன், சரி அப்படியே உங்களையும் ட்ராப் பண்ணலாம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். வாங்க நானே டிராப் பண்ணிடுறேன்" என்றவனை ஏற இறங்க பார்த்தவள்,"இன்னும் எத்தனை நாளைக்கு இதே ரீசன சொல்லிட்டு என்னை ட்ராப் பண்ண வருவீங்க?"


"எனக்கு நீங்க போனை பண்ணி சீக்கிரம் வா டா எகா 'னு  சொல்ற வரைக்கும் இந்த போரிங்கான ரீசன் தான் சொல்லுவேன்" என்று  முதல் அட்டெம்டாக தன் காதலை நாசூக்காகச் சொல்ல முயன்றான். அவன் சொன்னவிதம் அவளது இதயத்தில் ஒர் இன்ப அதிர்வலை பெரும் தாக்கமாக வந்தது போனது

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2