இதயம் - 7

 இதயம் 7


'படாரென்று' கதவை திறந்து 'டம்மென' சாத்திவிட்டு கூடத்திலிருந்த நீள்விருக்கையில் அமர்ந்தவளின் கோபத்தைக் கண்டு பிரதீப் தண்ணீர் போத்தலை கொடுத்து பக்கத்தில் அமர்ந்தான். கதவை சாத்திய சத்தத்தில் உள்ளிருந்து பிரகதியும் அகல்யாவும் பதறிக் கொண்டு வெளியே வந்தனர். 


தண்ணீர் நெஞ்சில் வடிய வடிய போத்தலில் இருந்த நீரை  முழுவதுமாக குடித்தவளை, விநோதமாகப் பார்த்தவன் அவளின் கோபத்திற்கான காரணங்களைக் அவளிடம் கேட்டான் "அக்கா !  என்னாச்சி? ஏன் கோபமா இருக்க? போட்டோ தான வாங்க போன, வெறும் கையோடு வர்ற, மாமா கொண்டு வரலையா?" பொறுமையாகக் கேட்டான் பிரதீப்.

அவனது ' மாமா ' என்ற அழைப்பு அவளது கோபத்தை மேலும் தூண்ட, அவனிடமே அதை காட்டினாள்"அவனை மாமானு சொல்லாத பத்திக் கிட்டு வருது. ச்ச... அவன் மனுசனே இல்ல. சைத்தான் , சைக்கோ டா ! ச்ச்சீ ! அடுத்தவங்க பொருள்ல பத்திரமா அவங்கிட்ட சேர்க்கணும்ன்ற மேனஸ் இருக்கா அவனுக்கு? படிச்ச முட்டாள் டா அவன். இதுல அவன் விருப்பத்த கேட்டுடு தான் நான் நடக்கணும்மா? அதுக்கு நான் தனியாவே இருந்துட்டு போயிடுவேன். மோஸ்ட் இரிடெட்டிங் காய் டா, அவன்" என்று பல்லைக் கடித்த படிச் சொன்னாள்.


அவளது கோபம் அவனுக்கு இன்னும் விளங்கவில்லை, மொட்டையாக சைத்துவை திட்டும் அக்காளை புரியாமல் பார்த்தவன் தலையை லேசாகச் சொரிந்து  "அக்கா விஷயம் என்னானு சொல்லுக்கா ஒண்ணும் புரியல ?" என்றான்.

அவளும் நடந்ததைச் சொல்ல" சைத்து மாமா வா அப்படி?" என வாயைப் பிளந்து கேட்டவனை பிரவஸ்தி முறைத்தாள். அவள் முறைப்பைக் கண்டு இளித்தவன் மீண்டும் கேள்வியைத் தொடர்ந்தான் "ஓகே ! ஓகே ! கூல். அவரா கிழிச்சாரு ?" 


கோபத்தில் பல்லை அரைத்த படி"அந்த நாய் தான் கிழிச்சது. அவனுக்கு மரியாதை ஒரு கேடு  ராஸ்கல் !"என பொறுமினாள்.


"எதுக்கு கா உன் போட்டோவ கிழிக்கணும்?"சந்தேகம் தீராமல் கேட்டான்."வேற எதுக்கு, அவன் பேச்சை  கேட்காம போட்டோ வேணும் சொன்னதுக்கும் வேலைய விட்டு நான் நின்னதுக்கும் சேர்த்து தான் இந்த வேலைய பார்த்திருக்கு அந்த நாயி"  .


அவள் கோபத்தை பார்த்திருந்த அகல்யா, அதில் எண்ணெய் ஊற்றுவது போல "எல்லாம் இந்த போட்டோனால வந்தது. இதெல்லாம் தேவையாடி நமக்கு? அங்க சைத்து பேச்சைக் கேட்டு வந்திருக்க வேண்டியது தான? இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது, அனாவசியமா உன் அத்தைய நீ எதிர்த்து பேசிருக்க மாட்ட ! அப்படி என்ன உனக்கு குடும்பத்த எதிர்கிறளவுக்கு அந்தப் போட்டோ  முக்கியமா போச்சு?"


இந்த அம்மாவை திருத்த முடியாது என்ற ரீதியில் பார்த்தவள் "மா ! அங்க நீ என் போட்டோவ மட்டும் தான் பார்க்கற. ஆனா நான் வெறும் போட்டோவா பார்க்கல என் ஆசைகளும் கனவுகளுமா பார்க்கிறேன் மா. அந்த ரெண்டையும் அவங்க எதிர்க்கறாங்க மா. இந்த வீட்ல சாய், சைத்து, பிரதீப்னு எது வேணும்னாலும் அவங்களுக்கு பிடிச்சத செய்யலாம் யாரும்  கேள்வி கேட்க மாட்டீங்க ! ஆனா, நானோ, சனாவோ, இல்ல பிரகதியோ  ஒரு சின்ன விஷயம் செஞ்சாலும் நூறு கேள்வி வரும். ஏன்மா இந்த பார்சியாலிட்டி? எனக்குனு சில ஆசைகளும் கனவுகளும் இருக்குமா அதை நான் நிறைவேத்திக்க கூடாதா? என் லைஃப்  என் டெசிஷன் மட்டும் இருக்கணும் நினைக்கறதுல என்ன தப்பு?அவங்க ஏன் என் லைஃப் லீட் பண்ணனும் நினைக்கிறாங்க? அதுக்கெல்லாம் என்னைக்கும் நான் அனுமதிக்க மாட்டேன். உங்கள போல, நீங்களே என் குடும்பத்தை பாருங்கனு என் லைஃப்  தூக்கிக் கொடுக்க மாட்டேன். இட்ஸ் மை லைஃப் மை டெசிஷன். என் முடிவுகள் மட்டும் தான் இருக்கணும், மத்தவங்களோடு சின்ன அட்வைஸ் கூட வேணாம் எனக்கு. ஐ னோ வாட் ஐ ஆம் டூயிங் சரியா "  என்றவள் தன் தம்பி தங்கையின் புறம் திரும்பி " உங்களுக்கும் சேர்த்து தான் பேசறேன் உங்க ஆசைகளும் கனவுகளையும்  என் கிட்ட ஷேர் பண்ணுங்க, டிஸ்க்ஸ் பண்ணுங்க. ஆனா யாருக்காகவும் மாத்திக்காதீங்க" என்று தாயை அழுத்தமாகப் பார்த்து விட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள்.


"என்ன டா, உன் அக்கா இப்படி இருக்கா? இவளால குடும்பத்துல என்ன என்ன பிரச்சனை வரப்போகுதோ !"


"சும்மா குடும்பம் குடும்பம் சொல்லிட்டு பயந்து சாவாத மா ! குடும்பம்னா நம்ம நாலு பேர் தான். அக்கா சொல்லுறதும்  செய்றதும் சரி தான். அவளுக்கு நாங்க எப்பையும் சப்போர்ட் பண்ணுவோம்... அவங்களுக்காக அக்காவ டிக்ரேட் பண்ணாத !"என்று அவனும் உள்ளே செல்ல... அகல்யா தான் பின்னாடி வரப்போகும் விளைவுகளை எண்ணிப் பயந்தார்.


மெத்தையில் கோபமாக விழுந்தவள் அலைபேசி எடுத்து உயிர்ப்பிக்க, திரையில் வைஷுவின் இரண்டு தவறிய அழைப்பை கண்டதும் தலையில் கைவைத்தாள். 'போச்சி, இவ கிட்ட என்ன சொல்ல?' எனக் குழம்பியவள் வேறு வழியின்றி மீண்டும் அவளுக்கு அழைத்தாள்.


அப்போது தான் வீட்டுக்கு வந்து தன்னை சுத்தப்படுத்தி விட்டு வந்த வைஷு, தனது அலைபேசி ஒலிப்பதை கண்டு எடுத்தாள். திரையில் வஸ்தியின் பெயரை கண்டதும் காதில் வைத்து "சொல்லுங்க வஸ்தி, சைத்தான் போட்டோவை கொடுத்துச்சா? இல்லையா?" சரியாகக் கேட்டாள். 


"ம்கூம் கிழிச்சிருச்சி?" என்று நடந்ததை பாதி மட்டுமே சொன்னாள். "எனக்கு அவன் மேல அப்பவே டவுட் ! பையன் கொடுக்க மாட்டான் தான் உள்ள இருக்க பட்சி சொல்லுச்சி. ஆனாலும் ஏதோ அவன் மேல துளி நம்பிக்கையில குடுத்தேன், ச்சா ஏமாத்திட்டானே. ஆமா ஏன் இப்படி பண்றான்? என்ன பிரச்சனை அவனுக்கு?"


"பேமிலி பிராபலம் அதான்..."என்றிழுத்தவள்." இஃப் யூ டோன்ட் மைண்ட், எனக்கு  இன்னொரு முறை என் போட்டோவ பிரேம் போட்டு தர முடியுமா?" என தயங்கிய கேட்டாள்.


அவள் தயக்கம்  புரிந்து, அவளும் இயல்பாக, "டோன்ட் வொர்ரி மூனு போட்டோஸ் பிரேம் போட்டேன். மூணையும் தான் கொண்டு வந்தேன். பட்  சைத்தான் மேல இருந்த நம்பிக்கையில் ஒண்ணு தான் அவன் கிட்ட கொடுத்தேன்.. சோ பேலன்ஸ் ரெண்டு  எங்கிட்ட தான் இருக்கு. நீங்க டூமாரோ  மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து வாசல்ல நில்லுங்க. அந்த சைட்ல தான் நாளைக்கு எனக்கு வேலை இருக்கு.  நான் அப்படியே வந்துக் கொடுத்துட்டு போறேன். ஒகேவா???"எனவும்


"ஸோ ஸ்வீட் தாங்க்ஸ்' ங்க" என்றவளின் குரலில் தெரிந்த குதூகலத்தை  உணர்ந்தவள் அவளோடு சேர்ந்து புன்னகைத்தாள்." சரிங்க, நாளைக்கு மீட்  பண்ணலாம்" என்று போனை வைத்தாள் பிரவஸ்தி.


இவளுக்கும் நாளைக் காலையில் வேலை உண்டு தான் அதுவும் அவள் சொன்ன இடத்தின் எதிர்திசையில் வேலை. அவளுக்காக தான் அவளை அங்கே வரச் சொன்னாள். ஆனாலும்"என்ன செய்வது?" என்று?சிந்தித்தவளுக்கு சட்டென மூளையில் மின்னலொன்று வெட்டியது, நேராக எகாவை தேடிச் சென்றாள்.


அவனோ, அடுப்பில் காளானை கிண்டிக் கொண்டிருந்தான். செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டு தன் கைவண்ணத்தை காளானில் காட்டிக் கொண்டிருந்தான். உள்ளே நுழைந்தவளை, அவன் சமைத்து கொண்டிருந்த உணவின் வாசனை இழுக்க, அருகில் சென்று நுகர்ந்தவள் " அடிபோலி எகா !" என்றான். அவளைப் புன்னகையுடன் பார்த்தவன் பதிலுக்கு அப்பாடலின் வாரியை  இவனும் பாடினான்


"கண்பாசை பேசினால் நானென்ன செய்வேன். கம்புயூஷன் ஆகிறேன் உள்ளுக்குள்ளே !" என்று பாடினான் குதூகலமாக. அவளுக்கும் அவனது குதூகலத் தொற்று ஓட்டிக் கொள்ள அடுத்த வரியில் இருவரும்  சேர்ந்து பாடவும் ஆடவும் ஆரம்பித்தனர்.


"ம்ம்ம்... பறக்க பறக்க துடிக்கிதே 

பழக பழக பிடிக்கிதே

பழைய நினைவு மறக்கதே

பெண் தொகை வருடுதே!" அதில் வருவது போல அழகாய் இருவரும் ஆடினார்கள். அவனோடு  ஆடிக் கொண்டே அவனிடம் உதவிக் கேட்டாள் வைஷு."எகா, எனக்கு நீ ஒரு ஃபேவர் செய்யணும்" அவனும் ஆடிக் கொண்டே, "என்ன ஃபேவர்?"


"ஒரு போட்டோவ டெலிவர் பண்ணனும்"


ஆடுவதை நிறுத்தியவன்"வாட்? என்னை என்ன டெலிவர் பாயாவே மாத்தலாம் முடிவு பண்ணிட்டியா நீ ! சான்ஸே இல்ல நான் காலேஜுக்கு போகணும்?"என்று உணவை கிண்டினான்.


அவனை தன் புறம் திருப்பியவள்,  அவன் முன் நின்று"அன்னக்கி  மட்டும் நீ  டெலிவரி பாயா போறேன் சொன்ன? இப்போ எனக்காக போகக் கூடாதா? " 


"அ....அ...அன்னைக்கி 'என் காதலுக்காக டெலிவரி பாயா போவேன்' சொன்னேன். அதுக்காக, எல்லா நேரம்  போவேன் அர்த்தமா என்ன? டெலிவரி பண்ண எல்லாம் போக முடியாது. அதுவும் உனக்காக எல்லாம் போக முடியாது முடியவே  முடியாது  போடி " என்றவன் தெனாவெட்டாக மறுக்க, "ஒ... அப்படியா ! காதலுக்கு நீ எந்த லெவலுக்கு  வேணா இறங்குவ. ஆனா எனக்குனா நீ எதுவும்  செய்ய மாட்ட அப்படி தான !" இடையில் கைவைத்து சன்னமாகக் கேட்டாள்.


"ய்யா...!"என்றான் படு கூலாக, " ஓ...  அவ்வளவு திமிரா ! எனக்காக  எதுவும்  செய்ய மாட்டியா? அப்போ நான் மட்டும் ஏன் உன் காதலுக்கு ஹெல்ப் பண்ணனும் மாநிற துரோகியே?  எனக்காக எதுவும் செய்ய மாட்டேன் சொல்லிட்டேல இனி நானும் உன் காதலுக்கு  எந்த ஹெல்பும் பண்ணமாட்டேன்" என ரோசமாகச் செல்லி செல்ல இருந்தவளின் கையை பிடித்தவன்"என்னடி சொல்லுற புரியல ஒன்னும்?"


"அதுவா எகா ! பிரவஸ்தியோட போட்டோ கிழிஞ்சி போச்சாம். அதுனால் வேற போட்டோ இருந்தால் கொண்டுவாங்கனு கேட்டாள். நானும் கொண்டு வர்றேன்  சொல்லிட்டேன். ஆனா என்ன பண்ண எனக்கு அதுக்குள்ள  வேற வேலை வந்திடுத்து. சரி நம்ம பையன அனுப்பி  போட்டோ கொடுக்கற சாக்குல அவ கிட்ட பேச சான்ஸ் கிரியேட் பண்ணி கொடுக்கலாம் பார்த்தால். சார் ரொம்ப பிகு பண்றீங்க, அதுனால வேற நான் அதுக்கு ஆள செட் பண்ணி விடலாம் முடிவு பண்ணிட்டேன்"  என்றவள் அவன் கையிலிருந்த தன் கையை உருவ முயல,  மீண்டும்  கெட்டியாக பிடித்துக் கொண்டவன்" எது வேற ஆள  செட் பண்ணி விடப் போறீயா?" பதறினான்.


அவன் பதற்றத்தை கண்டு வந்த அச்சிரிப்பை மறைத்த படி"டெலிவரி பாய்க்கு டா , முண்டம்" எனத் திட்டிவிட்டுச் சென்றாள்.


'ஐயோ எகா ! தர்ஸ்டேக்கு இன்னும் நாளு இருக்கும் போது இடையில் கிடைக்கற வாய்ப்பு வாண்டாட வேணாம் சொல்றீயே டா  முட்டாள் ! காதலுக்காக டெலிவரி பாய் என்ன பேப்பர் போடுற பையனா கூட போகலாம் தப்பே இல்ல ! இப்போ என்ன பண்ணுவேன், இந்த வாயா வச்சிட்டு சும்மா இருக்கறது இல்ல, இவளை வேற சமாதானம் பண்ணனுமே ! அப்போ தானே பிரதிய பார்க்க முடியும்' என உள்ளுக்குள் புலம்பியவன், கிண்டிய மஸ்ரூமை தட்டில் போட்டு கிளரி, அதில் கொத்தமல்லியை படர விட்டு  ஒரு ஸ்பூனை திணித்து அவளை தேடிச் சென்றான். 

மாடிக்கு தனக்கு பிடித்த புத்தகத்தை எடுத்து கொண்டு அந்த இரவு எழிலை ரசித்தப்படி பாட்டுக் கேட்டுக் கொண்டே புத்தகத்தை புரட்டினாள்.


அவளைத் தேடி மாடிக்கு வந்தவன்,  அவளை உரசிய படி அமர்ந்து," வைஷு செல்லம் ! உங்களுக்காக உங்களுக்கு பிடிச்ச மஸ்ரூம் கொண்டு வந்திருக்கேன் சாப்பிடுங்க !" என்று ஒரு வாய் ஸ்பூனில் அள்ளி ஊதி விட்டு ஊட்டிவிட்டான். 


"எப்படி இருக்கு?" அவள் சாப்பிடுவதை ஆர்வமாகப் பார்த்தபடி கேட்டான். " ம்ம்... செம்ம எகா !"என்று அவன் கையிலிருந்து மஸ்ரூமை முழுக்க அவளே காலி செய்ய , அவளே பார்த்திருந்தான். ' உனக்கு வேணுமா?' எனக் கேட்காமல் முழுவதுமாக அவளே தின்றாள்.

முழுதாய் உண்டு முடியது விட்டு தட்டை அவனிடம் கொடுத்து , விட்ட வேலையை தொடங்க அதில் கடுப்பானவன்  புத்தக்கத்தை பிடிங்கி அருகே வைத்து விட்டு " வைஷு ! நானே டெலிவரி பாயா போறேன்டி ப்ளீஸ் !" எனக் கெஞ்ச, அவன் கெஞ்சுவதை சுவாரஸ்யமாக பார்த்தவள், "போயி என்ன பண்ணுவா?" 


"ம்ம்... போட்டோவை கொடுத்துட்டு ! அவளை ஆசை தீர பார்த்துட்டு வந்துடுவேன்"என்றவனை வெட்வா ? குத்தவா ? என்ற ரீதியில் பார்த்தாள்.


"என்னடி?"


"நீ தேற மாட்ட டா ! உனக்கு எல்லாம் எதுக்கு லவ் ? நீயெல்லாம் வானத்துல போற  ஏரோபிளேன ஆஆஆ...னு பார்க்க தான் லாயிக். உனக்கு காதல்லாம் செட்டே ஆகாது . உன் காதலுக்கு ஹெல்ப் பண்றேன் பாரு என்னை சொல்லணும். ஒரு தத்திய அந்தப் பொண்ணுக்கு செட்  பண்ணி விட்டு அந்த பாவத்தை நான் சுமக்க விரும்பல ! அவ வேற ஆள பார்த்துக்க கட்டும் நானும் டெலிவரிக்கு வேற  ஆள பார்த்துகிறேன்"  என்று கிளம்பியவளை கையை பிடித்து  தன் பக்கத்தில் அமர்த்தி" ஏய்  இருடி ! என்ன சொல்லிட்டேன். ஆள மாத்தணும்ங்கற பாவத்த பண்ணமாட்டேன்ங்கற தெளிவா சொல்லுடி" 


"உன்னை, அந்தப் பொண்ண பார்க்கவா டா அனுப்புறேன். பார்த்தால் மட்டும் போதாது, பேசணும் பேசி பேசி பிரண்ட்ஸாகி அட்லீஸ்ட் நம்பரையாவது வாங்கிட்டு வரணும். அதை விட்டுட்டு பார்த்துட்டு வருவேன்ங்கற பேயே ! டெவல்ப் ஆகுடா மாமா !"


"ஓ... நீ சொல்லிட்டேலடி  நாளைக்கு. உன் மாமனோட பெர்மான்ஸை" என்று காலரை கெத்தாகக் தூக்கி காட்டி கூறிவிட்டு சென்றவன். மறுநாள் அதிரடியாகத் தயாராகி முன்னதாகவே பிரவஸ்திக்காக காத்துக் கொண்டிருந்தான்.


அவளும் வந்துவிட, வைஷு சொன்ன ரெட் ஷார்ட்டை வைத்து அடையாளம் கொண்டு திரும்பி நின்று கோபுரத்தை பார்த்து கொண்டிருந்தவனின் பின்னால் வந்து " ஹலோ" என்றாள்.


அவனும் " எஸ் " என்று திரும்ப, இருவரின் கண்களிலும் பளீச்சென ஒரு  மின்னல் வெட்டியது. கருமணிகள் அசையாது பார்த்து கொண்டிருந்தன வெகுநேரமாக,  அருகே எழுந்த சத்தத்த்தில் தான் தங்களை மீண்டும் உயிர் பித்து கொண்டனர்.


"ஹாய் குட் மார்னிங் !" என்றான்.


"குட் மார்னிங் !" என்று அவளும் புன்னக்கைச் செய்தாள்." இந்தாங்க உங்க போட்டோ" என்றவன் கொடுக்க,  வாங்கிக் கொண்டு" தங்க்ஸ் " என்றவள் கையில் வைத்து பார்த்தாள். காகிதத்தால் மறைந்திருந்து. ஒரே ஒரு போட்டோவை மட்டும் தான் எடுத்து வந்திருந்தான் இன்னொன்றை தன் அறையில் வைத்து கொண்டான். இது வைஷுவிற்கே தெரியாது,  அதற்காக  தான் அரக்கபறக்க அதிகாலையில் ஏழு மணிக்கெல்லாம் வர சொல்லியது.


ஒரு போட்டோவை மட்டும் கையில் வாங்கியவள், இன்னொன்று என்று அவன் கையைப்பார்க்க எதுவும் இல்லை அவனிடம்" என்னங்க  ரெண்டு போட்டோ  இருக்கு சொன்னாங்க. ஒன்னும் தான் கொடுக்கிறீங்க. இன்னொன்னு  ??? " என்று கேட்க, " ரெண்டா??? ஒன்னு தானே கொடுத்தா என் கிட்ட?" என்று தெரியாதது போல கேட்டவனின் விழிகள் திருட்டு முழி முழித்தன.


"ஆனா என் கிட்ட  ரெண்டு சொன்னாங்களே !" என யோசிக்க, "நான் வேணா போன் பண்ணி தரவாங்க? அவ வேற அவசர அவசரமா போகணும் ஒரு போட்டோவை கொடுத்துட்டு போனா, ட்ராவலிங் இருப்பா இருங்க கூப்பிடுறேன்" என்று போனை  கையில் எடுத்தவனைத் தடுத்தவள், "இருக்கட்டும்ங்க நான் அப்றம் பேசுகிறேன்" என்றாள். 

'அதானே எனக்கும் வேணும்' உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன்

"இஃப் யூ டோன்ட்  மைண்ட் கோயிலுக்கு போலாமா வர்றீங்களா?" தயக்கத்தோடு கேட்டான்." போலாம்... பட்  உங்களுக்கு டைம் ஆகலேனா போகலாம்"


"இன்னும் டைம் இருக்குங்க வாங்க போலாம்" என்று அவளை அழைத்து கொண்டு உள்ள சென்றான். உடமைகளைப் பாத்திரமாக கொடுத்து விட்டு உள்ளே சென்றனர்.  கூட்டமில்லாமல் இருக்க விரைவில்  கடவுளை தரிசித்து விட்டு  ஒர் இடத்தில்  இருவரும் அமர்ந்தனர்.


"ஏங்க, இன்னக்கி தர்ஸ்டே இல்லையே ! கோவிலுக்கு வருவீங்களா?" 


"கோவிலுக்கு வர்றதுக்கு எதுக்குங்க  கிழமை பார்க்கணும்? நான் டேஸ் எல்லாம் பார்க்க மாட்டேன். எப்போ தோணுதோ அப்ப வருவேன்.. ஆண்ட்  தர்ஸ்டே  எனக்கு இங்க பரதம் கிளாஸ் இருக்கு அதுனால அந்த டேல வருவேன். நான் தர்ஸ்டே தர்ஸ்டே வருவேன் உங்களுக்கு எப்படி தெரியும்?" என சந்தேகத்துடன் புருவமுயர்த்தி கேட்வளைக் கண்டு வழிந்தவன்" அன்னைக்கி அந்த பாட்டி சொன்னாங்க தர்ஸ்டே தான் டான்ஸ் கிளாஸ் இருக்குனு அதான் நீங்க அன்னைக்கி மட்டும் வருவீங்கனு பிக்ஸ் பண்ணி கேட்டேன் " என்று  சமாளித்தான். அவளோ இதழுக்குள்புன்னகையை அடக்கி கொண்டாள். இருவருக்குள்ளும் அமைதி. பின் அவளே அவனைப் பற்றி கேட்க தன்னை பற்றியும் தன் வேலை பற்றியும் சொன்னான். அவளும்  தனக்கு வேலை இல்லாததையும் வேலை தேடுவதாகவும் சொன்னாள்.


"உங்களுக்கு ஆட்சபனை இல்லேனா நான் சொல்ற இடத்துக்கு பரதம் கிளாஸ் எடுக்கப் போறீங்களா? அவங்க ஏற்கெனவே ஆள் வேணும் சொல்லிட்டு  இருந்தங்க, நீங்க போறீங்களா? " எனக் கேட்க, யோசித்தவள் "எங்க சொல்லுங்க போறேன்" என்றாள்.  அவனும் அவளிடம் முகவரியைச் சொல்ல, அவளுக்கு அந்த ஏரியா பழக்கமில்லாததால் முழித்தவள் "நான், அந்த இடத்துக்கு போனதில்ல எப்படி போகணும் தெரியாதே " என்றாள்.


"இஃப் யூ டோன்ட் மைண்ட் !  முதல் தடவை நான் உங்களை கூட்டிட்டு போறேன். உங்களுக்கு அந்த அட்மாஸ்பியர் பிடிச்சருந்தால் ஜாயின் பண்ணிக்கங்க.. ரொம்ப தூரம் எல்லாம் இல்ல, கிட்ட தான் அண்ட் செஃப்டியும் கூட" என்றதும் யோசித்தாள்.

"உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்தால் வாங்க இல்லேன்னு இட்ஸ் ஓகே !" என்றான்.


"எங்க எப்போ வரணும் சொல்லுங்க வர்றேன்" என்றாள். அவனுக்கு இன்ப அதிர்ச்சி தான்." இப்போ  எனக்கு 

வொர்க் இருக்கு ஈவினிங் பார்க்கலாம் இதான் என் நம்பர் நோட் பண்ணிங்க.. **** இங்க வந்து நில்லுங்க. நீங்க வந்துட்டீங்கனா கால் பண்ணுங்க" என்றான். அவளும் குறித்து வைத்துக் கொண்டாள்.  பின் இருவரும் கிளம்பிட, அவளை பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு குதூகலமாக  வேலைக்குச் சென்றான்.

****

தான் அணிந்திருந்த  பச்சக்கலர்  சட்டையை , ஆயிரம் முறை வெறுப்புடன் பார்த்துவிட்டான். அதைக் கிழித்து எறிய கைகள் பரபரத்தாலும் அவனால் முடியவில்லை. பக்கத்தில் இருக்கும் அவனது பெரியம்மா அதே ஆயிரம் முறை  'ரொம்ப அழகா இருக்குடா  சைத்து உனக்கு' என்று  சொல்லிக் கொண்டு நெற்றி முறுக்கினார். ஆனால் அவனுக்கு தான் அந்த பச்சை சட்டையில் வலம் வர பிடிக்கவில்லை... ' எப்படி இதைக் கழட்டி எறிவது 'என்று யோசித்தவனுக்கு  வேலையே வைக்காமல், அவன் சட்டையில்  சாம்பாரை இரண்டு மூன்று கரண்டி அதிகமாகவே அதுவும் சரஸ்வதிக்கு முன்னே ஊற்றினாள் வைஷு. 


"பிடிக்கலேனா எதையும் கிழிச்சி எறிய தெரிஞ்ச சைக்கோக்கு. சட்டைய கிழிக்க எவ்வளவு நேரமாகிட போகுது??? ஒருவேள கோபத்த விட பயம் கொஞ்சம் அதிகமாக இருக்கோ ????"என சரஸ்வதியைப் பார்த்து சொன்னவள் இன்னொரு கரண்டி அவன் மேல் ஊற்றி" பிடிக்காத எதையும் கடவுளே வந்து செய்ய சொன்னாலும்  செய்யக் கூடாது" என்று கருத்து அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல, அவனுக்கு கோபத்திற்கு பதில் உதட்டில் மூரலே வந்தது.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2