இதயம் - 6

 இதயம் 6


கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு, வைஷு வருவதை பார்த்தவன், கண்களில் கோபக்கனல் ஜொலிக்க அவளை எரித்து விடுவது போல பார்த்தவன், அவளை திட்ட துடித்த நாவை கட்டுப்படுத்த முயன்றான்.


தன் மேலிருக்கும் தவறை  உணராதவனுக்கு மிக எளிதாகிப் போனது மற்றவர்களின் மேல் பழியை சுமத்துவது. இன்று வீட்டில்  நடந்ததலிருந்து பிரவஸ்தி வேலைக்கு வர்றாதது வரை,  அனைத்திறக்கும் காரணகர்தாவாக இருப்பது இவள்(வைஷு) தான் என்று ஈவு இரக்கம்  இல்லாமல் அவள் மேல் அப்பெரும் பழியைப் போட்டான். 

அவளை தன் மூளைக்கும் மனதிற்கும் விரோதியாக்கி வைத்திருக்கிறான்.

ஆனால் நடந்து வருப்பவளுக்கு மட்டும் அவள் மீது சுமத்த பட்ட குற்றம் தெரியட்டும்  அவனை பிரித்து மேய்ந்திருப்பாள்.


தன்னை நெருங்கியவளை வெறுப்புடன் பார்த்தான். ஆனால் அவளோ, அவன் பார்வை எப்படி வேண்டும்னாலும் இருந்து விட்டு போகட்டும் என்று அசட்டைச் செய்தவள் 

அவனிடம் வந்து," உங்க கசின் பிரவஸ்திய கூப்பிடுங்க நான் இந்தக்  போட்டோவை கொடுக்கணும்" என்றாள் சாதாரணமாக தான்


ஆனா அதுவே அவனுக்கு கோபத்தை தர,  பல்லைக் கடித்து தன்னை அடக்கியவன்"அவ, இன்னைக்கி கிளாஸ் எடுக்க வரல, எங்கிட்ட கொடுத்துட்டு போ,நான் கொடுத்திடுறேன்" அவள் முன் கைநீட்டி எங்கோ பார்த்தப்படி கேட்டான்.


"உங்க கிட்டயா கொடுக்க?" என முகத்தை சுருக்கி கொண்டு கேட்டாள். ஆள் காட்டி விரலை தன்னெஞ்சில் குத்திக் காட்டி " ஏன் என்ன பார்த்தால்  சைக்கோ மாதிரி தெரியுதா?"என்றான். 


"ஆமாடா சைத்தானே !"வாய்க்குள்ள முனங்கினாள் " வாட் ? என்ன சொன்ன?"என

அவள் முன் இரண்டடி எடுத்து வைத்தது  அவளை நெருங்கியபடி கேட்டான்"நத்திங்" என்றாள்.


"ம்ம்...கொடு " என்று திமிராக கையை நீட்ட, அவளுக்கு அவன் மேல் சந்தேகமாக இருந்தது. " அவங்க கிட்ட கொடுத்துவீங்க தான?" மீண்டும் சந்தேகமாக கேட்க,  அதில் மேலும் பல்லை கடித்தவன், " 

அவ்வளவு டவுட்  இருந்தா நீயே அட்ரைஸ் தேடி கண்டுபிடிச்சி கொடு ! யாருக்கு வந்தது நஷ்டம்" என்றும் தோலைக் குலுக்கி விட்டு உள்ள செல்ல  இருந்தவனை அழைத்தவள்," ஹலோ மிஸ்டர் என்னால முடியாது நினைக்கிறீங்களா? என்னால முடியும் ஆனா எனக்கு அதுக்கு எல்லாம்  டைமில்ல. இந்தாங்க நீங்களே கொடுத்திடுங்க"  என்று அவனிடம்  நீட்ட அவனும் வாங்கியவன் கீழே போடுவது போல பாவ்லா காட்டினான். அவளை முறைத்தவள், " பார்த்துங்க,  ரொம்ப கஷ்டப்பட்டு செஞ்சது" என்றவளை நக்கலாகப் பார்த்து " போட்டோவை என் லார்ஜ் பண்ணி பிரெம் போடறது உனக்கு கஷ்டமாக்கும்?" 


" பின்ன இல்லையா. இது என்ன உங்கள மாதிரி கால் கைய ஆட்டிட்டு டான்ஸ்னு சொல்லி ஈசியா பணம் சம்பாதிக்கறது வேலைனு நினைச்சிட்டீங்களா  மிஸ்டர். உடலை வருத்தி ஆடுறது உங்களுக்கு கஷ்டம்னா, ஒரு பொருளோட அழக மாறாமல் அதே கலையோட போட்டோ எடுத்து கொடுக்கிறது எங்களுக்கு கஷ்டம் எந்த வேலையையும் எடைப்போடாதீங்க கஷ்டத்தோட அளவு கண்ணுக்கு தெரியாது" என்று அவனது வாயை அடைத்தாள்.


"அவங்க போன் நம்பர் கொடுங்க..."  என்று தன் போனை எடுத்தாள்.

" எதுக்கு?" என கேட்கவும், 


"போட்டோ கொடுத்தத சொல்லிட்டு, கையில கிடச்சதும் போன் பண்ணுங்க சொல்லணும் அதுக்கு தான்"என்றாள்.


"அந்த ஈரவெங்காயம் எல்லாம் வேணாம். கொடுத்துட்டேல  உன் வேலை முடிஞ்சுது கிளம்பு"என்றான் வாசலைக் காட்டி. அதில் காண்டானவள்" இங்க பெரிய வெங்காயம் இருக்கும் போது  நான் ஏன் ஈரவெங்காயத்த கொடுக்க போறேன்? போட்டோஸ் பத்தின ரீவியூஸ் கேட்கணும் போன் நம்பர் கொடுங்க " சமத்காரமாய் அவனோடு வாயடித்தாள்.


"யாரடி வெங்காயங்கற ?" என எகிற " என்னை இல்ல" என்றாள் "அப்போ நானா?" என்று பல்லைகடித்தான் "பச்... வாய் சண்டை போட நேரமில்ல யார் வெங்காயங்கறது கண்ணாடில பார்த்து தெரிஞ்சுக்கங்க.இப்போ போன் நம்பர்  கொடுங்க "என்றாள்.


"கொடுக்க முடியாது போடி" என்று உள்ளே செல்ல, அவனை உள்ளுக்குள் வசைப்பாடி விட்டு தன் வண்டியை நோக்கி நடந்தாள். 


பரதம் கத்துக் கொள்ள வந்த மாணவிகள் வீட்டுக்கு சென்று கொண்டிருக்க அவர்களை அழைத்து, " உங்க டான்ஸ் மிஸ் பிரஸ்வதியோட நம்பர் கிடைக்குமா?"  கூட்டமாக நின்ற குழந்தைகளிடம்  கேட்டாள்." எதுக்கு?" என  கோரஸாக கேட்டனர்.


"டான்ஸ் கத்துக்கத் தான்" என்று அவர்கள் முன் கழுத்தை அசைத்து சொன்னாள் . அவர்கள்  வாயில் கைவைத்து சிரித்த 

படி"அது அப்படி இல்ல இப்படி"என்று சொல்லிக் காட்டிட" மக்கூம் அது எப்படினு உங்க மிஸ் கிட்ட கத்துக்கிறேன். நீங்க போன் நம்பர்  கொடுங்க" என்றாள். அவர்களும் கொடுத்து விட்டுச்சென்றனர்.


அந்த நம்பரிலிருந்து டயல் செய்தாள். அந்தப் பக்கம் எடுக்கப்பட்டு அழகான யுவதியின் குரல் கேட்டது" ஹாய் நான் வைஷ்ணவி பேசறேன்" என்றாள்.


"வைஷ்ணவிவிவி ... "என இழுத்தபடி  யாரென்று அவள் யோசிக்க, "போட்டோக்கிராபர் வைஷ்ணவி, உங்களை மார்னிங் போட்டோ எடுத்தேனே !" என்றதும் நியாபகம் வர" ஓ...  யா யா ! வைஷ்ணவி ! ஸாரி கொஞ்சம் மறந்துட்டேன்" 


"இட்ஸ் ஓகே"


"என் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்?" 


"உங்களை பார்க்க டான்ஸ் ஸ்கூலுக்கு வந்தேன்... உங்க போட்டோவ உங்க கசின் சைத்தான் ஸ்ஸ்... ஸாரி சைத்து கிட்ட கொடுத்துட்டு போன் நம்பர் கேட்டேன் ஆஸ்யூஸ்வல் கொடுக்கல ! ஸோ உங்க ஸ்டுடெண்ட்ஸ் கிட்ட வாங்கி போன் பண்றேன்" என்று உண்மையை சொன்னாள்.


"ஐயோ !! அவன் கிட்ட கொடுத்துட்டீங்களா? என்றவள் பதற,

"ஏன் என்னாச்சி?"


"ஹான்... நத்திங் `!  ஓகே நான் அவன் கிட்ட  வாங்கிக்கிறேன்" என்று சமாளித்தாள்.


"ஓகே போட்டோ பார்த்துட்டு எப்படி இருக்குனு இந்த நம்பருக்கு கால் பண்ணி சொல்லுங்க மேம்" என்றிட, ,அவளும் " சரி " என்று போனை வைத்தாள்.


'ஐயோ !  அந்த சைக்கோ கையில் போட்டோ போயிருக்கே !   அதுக்கு ஆயுள் இருக்குமா? குரங்கு கிட்ட  கொடுத்த பூமாலைய கூட பத்திர மா வச்சிருக்கும், ஆனா ஷைத்தான் கைக்கு போன போட்டோ என்னாகுமோ?' என அவள்  அச்சப் படுவது போல அவனும் போட்டோவை கையிலேந்தி பார்த்தான்.


பிரவஸ்தி அழகாக தன் காலை வளைத்து இருப்பது போல அந்த புகைப்படத்தில் இருக்க. அதையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பிரவஸ்தியின் முகம் மறைந்து போய் அதில் வைஷ்ணவியின் முகம் மட்டுமே வந்தது. அவளைப் பார்த்த கணத்திலிருந்து இன்று அவளது   உரையாடல் வரையிலும் நியாபகம் வர, கோபம் வைஷுவின் மேல் பழியாக வந்தது.  அவனது கோபத்திற்கு பலியானது அந்தப் போட்டோ.  சைத்தான் கையில் கிடைத்த அப்புகைப்படைத்தை நாறுநாறாக கிழித்தான்.


வானில் கருமை சூழ, சைத்து விடம் போட்டோ வாங்குவதற்காக  அவன் வீட்டிற்கு வந்திருந்தாள். அவளை கண்டதும் சாந்தி கோபமாக உள்ளே செல்ல , அவரது கோபத்தின் காரணத்தை தவறாக யூகித்தாள்.


"ஒருவேள சரஸ பேசினதுக்கு சாந்தி என் மேல கோபமா இருக்கோ !" என எண்ணியவள், " ஹாலில்  அமர்ந்து டீவி பார்த்து கொண்டிருந்த தேவன் அருகில் வந்து அமர்ந்தவள், " என்ன தேவ் மாமஸ் உங்க ஒயிப்  ஏன் கோபமா இருக்காங்க?"


"காலையில் நீ காட்டுன மாஸ் சீன பார்க்க முடியலனும் யாரும் ரீவைன் பண்ணலனும் கோபமா இருக்கா  போல !" என குத்து மதிப்பாக சொல்ல, 


"இன்னுமா அவங்க அந்த கமர்சியல் சீன சொல்லல...? இந்நேரம் அந்த சீன அழுது புலம்பி கோபப்பட்டு சொல்லிருப்பாங்னு. நினைச்சேன்  ஏன் சொல்லல?" என தாடையில் கையில் வைத்து யோசித்தவளின் முதுகில் ஒன்று  வைத்து முன்னே வந்தார் சாந்தி.


"ஏன் அக்காவை கிண்டல் பண்ணிட்டு இருக்கீயா நீ? அவளை கேலி செய்யாம உனக்கு தூக்கம்னு ஒன்னு கண்ணுல வர்றாது அப்படி தானே ! இதுல நீங்க கூட்டு வேற ! அக்காக்கு தெரியட்டும் வறுத்து எடுத்துடுவா !" என மிரட்ட அதை அசட்டை செய்தவள், " அக்கானு அக்கானு நீ மாமாவை வேணா மிரட்டலாம். ஆனா என்னை முடியாது ! "


"அதானே ! சரி அகல்யா இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்காளா? நல்லாயிட்டாளா? என்ன பண்றா?" 


"உங்க நாத்தனர் சரியாக இன்னும் ஒரு வாரம் ஆகும்... இவ்வளவு அக்கறையா கேக்குறவக வந்து பார்க்கணும்... அக்கறை எல்லாம் அக்காக்கு பயந்து அடக்கி வச்சிக்குவீங்க போல !" என கேலியாக சொன்னாலும் அவரையும் தாக்கி தான் பேசினாள்.


அதில் அவர் முகம் வாடிப்போனது, "என்ன தான்டி பண்ண? எங்க அக்காவ எதிர்த்து பேச முடியல. சொன்னாலும் புரிஞ்சக்கற ஆளும் இல்ல அவ. தான் புடிச்ச முயலுக்கு காலே இல்லன்னு சொன்னாலும்,  ஆமா தான்  எங்களை சொல்லல சொல்லுவா சொல்லணும் நினைப்பா. இல்லைனு எதிர்த்தா, நாங்க அவ கோபத்துக்கு பலியாகணுமே !" 


"அதுக்காக, அவங்க என்ன சொன்னாலும் அப்படியே கேட்கணுமா? அப்றம் எதுக்கு எங்களை படிக்கவச்சி வேலைக்கு அனுப்புறீங்க ? மூளை இருந்தும் யோசிக்கக் கூடாதுனா எந்த விதத்துல இது நியாயம் ? நீங்க வேணா உங்க அக்கா பேச்சை கேளுங்க அவங்க வாக்கே தெய்வ வாக்குனு சொல்லுங்க ஆனா என்னால முடியாது ! எனக்கு சைத்து பிடிக்கும் நான் இல்லைனு சொல்லல ஆனா அவன் எனக்கு ஒத்து வர மாட்டான் அத்தை. அவன் பேண்ட் ஷர்ட் போட்ட சரஸ்வதி. ரெண்டு பேரும் ஒன்னும் தான். அத்தை என் லைப் என்டராகக் கூடாதுனு நினைக்கிறேன் இதுல சைத்து வேறயா? நிச்சயமா நான் ஹாப்பியா இருக்க மாட்டேன்" 


"ஏன்டி  அப்படி சொல்லுற?" 


"நானே உங்களுக்கு புரூப் பண்றேன். என்னை போட்டோ எடுத்த பொண்ணு அந்த போட்டோவ  பிரேம் போட்டு உங்க புள்ளை கிட்ட கொடுத்துட்டதா சொன்னாங்க. அவன் அப்படியே கொண்டு வந்துட்டா, நான் அவனை கல்யாணம் பண்ணிக்கறத கன்சிடர் பண்றேன். அவன் கொண்டு வரலேன நான் சொல்றது தான் உண்மை இனி அவனை கல்யாணம் பண்ணிக்கனு சொல்லி என்னை ஃபோர்ஸ் பண்ணக் கூடாது" என்றிட தன் மகன் மேல் இருந்த நம்பிக்கையில் சரி என்றார். 


சரியாக அவனும்  வந்து அழைப்பு மணியை அழுத்தினான். போய்  கதவை திறந்தவர் அவன் கையை தான் பார்த்தார். அவன் கையில் எதுவுமில்லை... முகம் செத்து விட்டது அவருக்கு. அவனுக்கு வழியை விட்டார். ஹாலில் வஸ்தியைப் பார்த்தவனுக்கு கோபம் வந்தாலும் எதுவும் காட்டாது உள்ளே செல்ல இருந்தவனை தடுத்தாள் வஸ்தி.


"சைத்து எங்க  என் போட்டோ ?" 


"எந்த போட்டோ?" அவளை பாராமல் கேட்டான். " அவங்க போன் பண்ணி சொல்லிட்டாங்க, உன் கிட்ட கொடுத்ததா? என் போட்டோ எங்க? எடுத்துட்டு வரலையா ? டான்ஸ் ஸ்கூல் வச்சிட்டு வந்துட்டியா?"என கேள்வி மேல் கேட்டவும் கடுப்பாகிப் போனான்.


"வர வழியில்ல கிழ விழுந்து  ஒடஞ்சி டேமேஜ் ஆகிடுச்சி. அதான் தூக்கி குப்பை தொட்டில போட்டுட்டு வந்துட்டேன்" என்று அசட்டையாக சொல்ல அவளுக்கு பலியாக கோபம் வந்தது.


"வாட் ? குப்பையில் போட்டியா? பொய் சொல்லாத சைத்து என் போட்டோவ என்ன பண்ண?"


"அதான் சொல்றேன்ல. பைக்கில் இருந்து கீழ  விழுந்து ஒடஞ்சிப் போச்சி குப்பைத் தொட்டில் போட்டு வந்துட்டேன்..." 


அவளுக்கு கோபம் கரையை கடக்க, அதற்குள் முந்திக் கொண்ட சாந்தி, "ஒடஞ்சா  என்ன அதை அப்படியே கொண்டு வர வேண்டியது தான. அதை சரி பண்ணிக்கலாம்ல ஏன் குப்பை தொட்டில போட்ட சைத்து? "அவனது தாயும் கேட்க, 


"இன்னுமா அத்தை  உங்களுக்கு புரியலை, சார் என் மேல உள்ள கோபத்தை அந்தப் போட்டோ மேல் காமிச்சருக்கார். அதை அவரே கிழிச்சி குப்பைத் தொட்டில போட்டு இருக்கார்... அப்படி தானே !"


"ஆமான்டி அப்படி தான்  நீ மட்டும் என் மேல உள்ள கோபத்துல வேலைக்கு வரலேனு சொன்னேல அது போல தான் இதுவும் என்ன பண்ணனுமோ பண்ணிக்க "என்று அறைக்குள் சென்று பொத்தேன கதவை சாத்திக் கொண்டான் இவளும் கோபமாக சென்று விட்டாள். இருவரையும் பார்த்து குழம்பி போய் நின்றனர் சாந்தியும் தேவனும்.... 

"என்னங்க இன்னைக்கி தரஸ்டே இல்லையே ! இன்னைக்கி எதுக்கு இங்க வந்துருக்கிங்க?" அவன் கேட்க, "நான் நாளும் கிழமையும் பார்த்து கோவிலுக்கு வர மாட்டேங்க... அண்ட் தர்ஸ்டே தர்ஸ்டே நான் தான் கோவிலுக்கு வருவேன் உங்களுக்கு எப்படி தெரியும்?" என புருவமுயர்த்தி  கேட்டவளை அசட்டு வழிய சிரித்தான் அவன்...

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2