மடல் - 4

 மடல் - 4


சுவிங்கம் மென்றபடி முன்னே வந்து நின்றவளை உச்சியிலிருந்து பாதம் வரை அளந்தான் தனிஷ்.

கருப்பு நிற சட்டையும், அதே நிற நிஜாரையும் அணிந்து முட்டி வரை சட்டைய மடக்கி விட்டிருந்ததால் அவள் கையில் போட்டிருந்த டாட்டூ பாதி மட்டுமே தெரிந்தது. அதற்கே முகத்தை சுளித்து வைத்தான் .

அவளுக்கு அதெல்லாம் பழகிப் போன ஒன்று. அவன் பார்வையை அசட்டை செய்து விட்டு "என்ன வேணும்?"என்று தன் திருவாயை மலர்ந்தாள்.

"என்ன வேணுமா? உன்னை மாதிரி பொண்ணுங்க  இருக்குறதால தான் பசங்க கெட்டு சீரழிஞ்சு போறாங்க ! பணம் யார் கிட்ட இருந்து வந்தா என்ன அவங்க சொல்றத அப்படியே  செஞ்சிட்றது ! அதானே உன் வேலை?" என கோபத்தில் கடுமையான வார்த்தைகளை விட்டிருந்தான் தனிஷ்.

அவனது வார்த்தைகளால்  தன்னுள் உண்டான சீற்றத்தை  தனக்குள் கட்டுப்படுத்த கண்களை மூடித் திறந்த திகழோ,  சற்று முன் பச்சை குத்திக் கொண்டவரை திரும்பி பார்த்தாள். அவரோ பச்சை குத்தியதை வருடியபடி  இருவரையும் பார்த்தார்.

"கஸ்டமர் இருக்காங்க ! அவங்களை அனுப்பி வச்சிட்டு உங்க பிரச்சனைக்கு வர்றேன் இருங்க !"என்றவள், அவன் பதிலை எதிர்பாராது அங்கிருந்து நகர்ந்தாள்.

திகழின் அலட்சியம் தனிஷ்ஷின் கோபத்தை மேலும் தூண்டி விட்டிருந்தது .

பச்சை குத்திக் கொண்டவரிடம் பணத்தை வாங்கி, அனுப்பி வைத்த பின்னே இவனிடம் வந்தாள்.

கடைக்குள் நுழைந்ததுமே கேள்வி கேட்டவனையும் தன் முன்னே தலைகுனிந்து பள்ளி சீருடை அணிந்த மாணவன் கண்ணீர் தடங்கலுடன் நிற்பதையும் கண்டு, தனிஷ்ஷை ஆசிரியரென யூகித்து கொண்டாள்.

"ஒரு பொண்ணுட்ட எப்பிடி பேசணும் தெரியாத நீங்க டீச்சரா? கடைக்குள்ள நுழைஞ்சதும் வாய்க்கு வந்தபடி பேசுறீங்க ! நீங்களே இப்படி இருந்தா? நாளைக்கு உங்கட்ட படிக்கற பசங்க எப்பிடி பொண்ணுங்கட்ட பிகேவ் பண்ணுவாங்க? கத்துக் கொடுக்கிறது மட்டும்  டீச்சரோட வேலை இல்ல அப்பிடியே நடக்கறதும் ஒரு டீச்சரோட வேலையும் தான்" என அவனுக்கே பாடம் எடுத்தாள்.

"என்ன எனக்கே பாடம் எடுக்கிறீயா நீ? எனக்கு பாடம் எடுக்கற அளவுக்கு நீ ஒன்னும் ஒழுங்கு இல்ல ! பணம் கொடுத்தா யாரு என்னன்னு கூட பார்க்காம டாட்டூ போடுவீயா? "எனப் பக்கத்தில் நின்ற ரவியை அவள் முன்னே நிறுத்தி,

"பாரு ! இவன் யாருனு தெரியிதா? இவன் கிட்ட பணம் வாங்கி, இவனுக்கு டாட்டூ போட்டிருக்க !
18 வயசுக்கு மேலே தான் டாட்டூப் போடணும்ன்ற ரூல்ஸ் தெரியாதா உனக்கு?  அது தெரியாம தான் டாட்டூ போட வந்தியா?" எனக் குரலை உயர்த்தி காட்டமாகவே கேட்டான்.

"சின்ன பையன் வந்து கையை நீட்டினா என்ன ஏதுன்னு  விசாரிக்காம டாட்டூ போட்டு விட்ருவீயா!  டாமிட் ! அவனுக்கு ஏதாவது ஆச்சினா நீ பொறுப்பாவியா? பெத்தவங்க கண்சென்ட் இல்லாமல் எப்படி நீ இவனுக்கு டாட்டூ போட்டு விடலாம்? நான் போலீஸ்க்கு கால் பண்ணுவேன்.
டாட்டூ ஷாப்ல  இல்லீகளா சில வேலைகள் நடக்குதுனு கம்பளைண்ட் பண்ணுவேன்"என்று அவளை மிரட்டினான்.

அவனது மிரட்டலை பொருட்படுத்தாது. அவன் பேசின வார்த்தைகளை கவனித்து கேட்டிருந்ததிலே 'எதற்கு வந்து இங்கே பொங்குறான்?' என்று புரிந்து போக, மெல்ல எட்டு வைத்தவள்,

தன் முன்னே நின்ற மாணவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் திகழ் பாரதி.

ஏற்கனவே பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவன், கன்னத்தில் விழுந்த அறையால் மேலும் பயந்து நடுங்கினான்.

"அவன எதுக்கு அடிச்ச நீ?"

"பொய் சொன்னா, அடிக்காம, உங்களை மாதிரி இனி இது போல செய்யக் கூடாது தம்பி ! பொய் சொல்ல கூடாது தம்பினு கொஞ்சி பேசணுமா? என்னால முடியாது ! நான் ஒன்னும் இவனுக்கு டீச்சர் இல்லை. அடிக்காம பேச ! எதுக்கு டா பொய் சொன்ன?" மேலும் கையை ஓங்க அவளது கையை பிடித்துக் கொண்டான் தனிஷ்.

"அவனை அடிச்சா? குடுக்குற கம்பளைண்ட்டுல இதை சேர்த்து கொடுப்பேன்..."

அவன் கையிலிருந்து தன் கையை உறுவிக் கொண்டவள், "குடுங்க ! நானும் என் கடை பேரை தப்பா யூஸ் பண்ணிருக்கான் இவன் மேலே
கம்பளைண்ட் குடுக்கிறேன் "என்றாள் பதிலுக்கு. அவள் அப்படி சொன்னதும் பயந்து போனான் ரவி.

"என்ன மாட்டிக்கிட்டதும், தப்பிக்க இப்பிடி ஒரு கம்பிளைண்ட்ஆ?"

"ஹலோ மிஸ்டர் ! மொதல்ல உண்மை என்னனு தெரிஞ்சிட்டு வந்து பேசுங்க ! அவன் என் கடை பேர சொன்னா, உடனே நாங்க தான் போட்டோம் சொல்லிட்டு சண்டைக்கு வந்துடுவீங்களா? எங்க கடைக்கினு சில ரூல்ஸ் இருக்கு. அதுல முக்கியமான ரூல்ஸ் 18 வயசுக்கு மேலே தான் டாட்டூ போடுவோம் வித் பேரண்ட் கண்சண்ட்.  பாருங்க இங்க !"என்று சுவரில் ஒட்டிருந்த தாளை காமித்தாள்.

அதில்  பச்சை குத்த வருபவர்களுக்கு சில நிபந்தனைகள் இருந்தன.

"சோ !! இது தான் எங்க ரூல்ஸ். ஒரு சின்ன பையனுக்கு டாட்டூ போட்டு விட்டு அவன் தர காசுல எங்க வயித்தை நிரப்பணும் அவசியம் எங்களுக்கு இல்ல. இவனுக்கு நாங்க டாட்டூ போட்டு விடல. இவன் யார் கிட்ட போட்டான் அவன விசாரிங்க ! இங்க வந்து கத்துற வேலையெல்லாம் வேணாம்" என்றாள் பொறுமையாக,

அவளது கண்களில் தெரிந்த தீவிரத்தையும் அவள் பேச்சிலிருந்த நிமிர்வுமே எடுத்து சொல்லியது பச்சைக் குத்தியது இவள் இல்லை என்று.

திரும்பி ரவியிடம்"பொய் சொன்னியா? யாரு உனக்கு டாட்டூ போட்டு விட்டா? எதுக்கு இந்த ஷாப் பேர சொன்ன?"என அவனிடம் கேள்விகளை திருப்ப,

"ச... சாரி சார்... எனக்கு டாட்டூ போட்டு விட்டது எ .. என் ஃப்ரெண்டோட அண்ணன். அவங்களை மா.. மாட்டி விடக் கூடாது தான், ஸ்கூல் பக்கத்துல இருக்க இந்த கடை பேர சொன்னேன்...! நீங்க கடைக்கு அழைச்சிட்டு வந்து விசாரிக்கப் மாட்டீங்க நெனைச்சி இந்தக் கடை பேர சொல்லிட்டேன் சார் "என திக்க திணறி விளித்தான்.

ரவியை முறைத்த தனிஷ், நுதலை தேய்த்தப்படி திரும்பி அவனை பார்க்க, திகழின் இதழோ கேலியாக வளைந்தது. தனிஷ்ஷை பாவம் பார்ப்பது போல பார்த்தவள், பக்கத்திலிருந்த ரவியிடம்,

"அறிவு இருக்கா உனக்கு ! பொய் சொல்றது தான் சொல்ற, தூரமா இருக்கற கடை பேர  சொல்லி இருக்க கூடாதா ! பக்கத்துல இருக்க என் கடை  பேர சொல்லி, இப்பிடி  மாட்டிகிட்டீயே தம்பி !"என்று அவனுக்காக அவள் பரிதாபப்பட,

"ஷாட் அப் !"எனக் கத்தினான் தனிஷ்.

"ஸ்கூல்  பக்கத்துல டாட்டூ ஷாப் போட்டது தப்பு ! இங்க இந்தக் கடை இருக்கிறதுனால தான் அவங்களுக்கு டாட்டூ போட்ற எண்ணம் வருது ! வேற இடமே கிடைக்கலையா உனக்கு? "என பல்லை கடித்தான்.

"வெயிட் வெயிட் ! நான் என்ன டாஸ்மார் கடையா வச்சிருக்கேன் ! டாட்டூ கடை வச்சிருக்கேன். ஸ்கூல் பக்கத்துல டாஸ்மார் கடை தான் இருக்க கூடாது. டாட்டூ கடை இருக்க கூடாதுனு எந்த ரூல்ஸூம் இல்ல ! என் கடையால எந்த ஸ்டூடண்ட் கெட்டு போனதை நீங்க பார்த்தீங்க ? அதுக்கு சர்வே இருக்கா ? வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிட்டு நிக்காம கிளம்புங்க ! எனக்கு நிறைய வேலை இருக்கு !"என்று அவனை அசட்டை செய்து விட்டு திரும்பியவளின் புஜத்தை பிடித்திழுத்து தன் பக்கம் அவளை திருப்பினான்.

"மிஸ்டர்...!"என்று அவன் கையிலிருந்து தன் கையை இழுத்துக் கொண்டாள்.

"ஹாவ் டேர் டூ ட்ச் மீ? டீச்சர்ல நீங்க, ஒரு பொண்ணுக்கு கிட்ட இவ்வளவு ரூட் நடந்துக்கிறீங்க ! அது தான் நாங்க டாட்டூ போட்டு விடலனு தெரிஞ்சதுல கிளம்ப வேண்டியது தான ! இன்னும் உங்களுக்கு என்ன வேணும்?"என சீறினாள் அவனிடம்.

"இந்த ஷாப்ப காலி பண்ணனும்... இனி இங்க நீ டாட்டூ ஷாப் போடக்கூடாது. இங்க ஏரியா தவிர வேற எங்க உனக்கு டாட்டூ ஷாப் போடணுமோ போட்டுகோ ஐ வில் ஹெல்ப் யூ !! இங்க இனி இந்தக் கடை இருக்கக் கூடாது "என்று அநியாயமாக மிரட்ட, அவளும் அவனும் பணிவதாக இல்லை.

"என்னை காலி பண்ண சொல்ல நீ யாரு? நீ சொன்னதும் காலி பண்ணி போகணுமா? நான் டாட்டூ ஷாப் வச்சிருக்கிறனால தான் உன் ஸ்கூல் பசங்க கெட்டு போறாங்களா? என் கடையால உங்களுக்கு என்ன பிரச்சனை? போய் உன் ஸ்டூடண்ட் கண்ட்ரோல் பண்ணு... என்னை கண்ட்ரோல் பண்ணாத கெட் அவுட்!" என்று கத்தினாள்.

"நான் சொன்னதும் நீ கேட்டு இருந்தா கடை மிஞ்சி இருக்கும்... இப்போ டூ லேட் ! எப்படி நீ இந்த ஏரியாவுல கடை போட்ற நானும் பார்க்கிறேன்" என மிரட்டி விட்டு சென்றான்.

அவளோ தனிஷ்ஷின்  மிரட்டலை அசட்டை செய்து விட்டு வேலையை கவனிக்கலானாள்.

கோபத்துடன் பள்ளி வந்து சேர்ந்தான். அங்கே ரவியின் பெற்றோர் நின்றிருக்க, திகழ் மேலுண்டான கோபத்தில் இருவரையும் காய்ச்சி எடுத்து விட்டான்.

"ஒன்வீக்குள்ள இவன் கையில் இந்த டாட்டூ இருக்க கூடாது. இவனை அழைச்சிட்டு போங்க ! டாட்டூவ மொத்தமா அழிச்சிட்டு வந்ததுக்கு அப்புறம் தான் இவனை ஸ்கூல்ல படிக்க அலோவ் பண்ணுவேன்.. இப்போ அவனை கூட்டிட்டு போங்க !"என்று முடிவாக சொல்லி விட, அவர்கள் எவ்வளவு கெஞ்சியும் பயனில்லாமல் போனது.

தாளாளர் அறையில் வந்தமர்ந்தவனுக்கு கோபம் இன்னும் மட்டுப் படவில்லை... இன்னும் திகழ் பேசின பேச்சை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. எப்படியாவது அவளது கடையை காலி செய்ய வைத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது அவனது மூளை.

"அலெக்ஸ் "என்று அழைக்க, வேகமாக உள்ளே நுழைந்தான் ப்யூன் அலெக்ஸ்.

"எனக்கு அந்த காம்ப்ளக்ஸ் பத்தின முழு விவரம் வேணும் ! அது யாரோடது, அதுல யார் கடையெல்லாம் இருக்கு எல்லா விவரமும் வேணும்  சீக்கிரமா விசாரிச்சு வந்து சொல்லுங்க !"என்றான்.

அவரும் ' சரி ' என்ற தலை அசைப்புடன் குழம்பியபடி வெளியே சென்றார்.

திகழ் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்று அவனது கோபத்திற்கு தூபமாகிப் போனது. 

தன் இயல்புக்கு மாறாக கோபப்படுவதும். நினைச்சதை நடத்தியாக வேண்டும் என்ற வீம்புமே தான் தன் இயல்பிலிருந்து பிரிந்து புதிதாக மாற்றம் கொண்டது போல அவனுக்கே தோன்றியது.

தனக்குள் நடக்கும் மாற்றத்தை மெல்ல கிரகிக்க முயன்றான்.



Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2