இதயம் - 4

 இதயம் 4

அன்று விடுமுறை நாளென்பதால்  சரஸ்வதியின் தங்கை குடும்பத்தையும் தம்பி குடும்பத்தையும்   தன் வீட்டிற்கு அழைத்திருந்தார் சரஸ்வதி. இது வழக்கமான ஒன்று.  விடுமுறை நாட்களில் கண்டிப்புடன் வீட்டிற்கு  வரச் சொல்லி விடுவார். மூன்று குடும்பம் ஒரே அப்பாட்மென்டில் தான் வசித்து வருகிறது. அனைவருக்கும் அது சொந்த வீடு தான். மூவரும் ஒரே இடத்தில் இருப்பதால், வாரத்தில் ஒரு நாளாவது அவரது இல்லத்திற்கு கண்டிப்பாக வந்துவிட வேண்டும் மீறினால், அவர் பேசும் பேச்சைக் காது கொடுத்து கேட்கவே முடியாது.

அவர் பேச்சை யாரும் அங்கே தட்டை செய்யவோ மீறவோ கூடாது. மீறினால் ஒண்ணு கரித்துக் கொட்டுவார் இல்லையேல்  அழுது ஒப்பாரி வைப்பார். 



சரஸ்வதியின் தன் குடும்பத்தை மட்டமல்லாது , தங்கை , தம்பி குடும்பத்தையும் சேர்த்தே ஆட்டி வைப்பார். அவர்களும் தன் அக்காவின் வாக்கே வேதவாக்காக எண்ணி அப்படியே பணிவார்கள்.  அவரது உடன் பிறந்தவர்கள் மட்டுமல்லாது அவர்கள் கட்டிக் கொண்டதும் பெத்ததுமே சரஸ்வதியின் பேச்சை தான் கேட்பார்கள், கேட்டாக வேண்டும்..



தாயில்லாத வீட்டையும் தந்தை சரியில்லையாத குடும்பத்தை இழுத்து பிடித்து கட்டுக்கோப்பாக கொண்டு வந்தவர் தான் சரஸ்வதி. தன் தம்பி, தங்கையைப் படிக்க வைத்து அவரே தம்பிக்கு வேலை வாங்கிக்  கொடுத்து தங்கைக்கு திருமணம் முடித்தும் வைத்தார். அவர் செய்த கடமையை பாசமென கருதி வாழும் அத்தம்பி  தங்கை தான் மட்டுமின்றி துணையானவர்களையும்  உள்ளிழுத்துக் கொண்டு அவர் தரும் சிறு சிறு இன்னல்களை பொறுத்து கொண்டு வாழ்கிறார்கள். அதிலும் அதிகமாக அவதிபடுவது அகல்யாவும் அவர் பெத்த மக்கள் மூவரும் தான். அவர்கள் தான் தம்பியின் குடும்பம்.


தம்பி நெஞ்சு வலியால்  இறந்து விட, அதற்கு காரணம் அகல்யா தான் என்று  பேச்சு வார்த்தையில் குத்தி விட்டு போவார். தன் தம்பியை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டாள் என்று சில நேரம் புலம்புவார். தவறு செய்யாத போதிலும் அகல்யாவை குற்றம் சொல்லி  குத்திக் குத்திக் கொண்டே இருக்க, அகல்யாவிற்கு நரக வேதனையா இருக்கும். தன் மகள்கள் பிரவஸ்தி , பிரகதி, மகன் பிரதீப், என  இந்த மூவருக்காக தான் உயிர் வாழ்கிறார். 


அன்பு என்ற ஆளுமைக்குள் அவர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறார். அவர்களுக்கென குடும்பம் குழந்தைகள் என வந்தாலும் தன் உரிமை , கடமை என நினைத்து அவர்களை கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிரபு எவ்வளவு சொல்லியும் தன் குடும்பம் தன் குடும்பம் என்று  அவர்களை சிறைப் படுத்தி வைத்திருக்கிறார் சரஸ்வதி.


பிரவஸ்தி , சைதன்யா இருவரும் உள்ளே நுழைந்தனர். பிரகதி,  பிரவஸ்தி அணிய சுடி ஒன்றை எடுத்து வந்திருந்தாள். நடன வகுப்பில் சேலையுடன் சொல்லித் தந்தாள். வீட்டிற்கு வந்ததும், பிரகதி கொடுத்த ஆடை மூன்றாவது அறைக்கு மாற்றச் சென்றாள்.


சேலையைக் கழற்றுவதற்கு முன்  அங்கிருந்த கண்ணாடியில் தன் முகம் பார்த்தாள். எகாந்த்தின் முகமும் மின்னி மறைந்தது.  அவன்  பேச்சும் நினைவிற்கு வர வெட்கச் சிரிப்பை உதிர்த்தாள். அவனை முதல் முறையாக சந்தித்த நாளும் வந்து போனது.


வியாழக்கிழமை அன்று  வழக்கமாக கோவிலுக்கு வந்தவன், பிரவஸ்தியை கண்டு தன்னை மறந்து, தூணில்  மறைந்து  நின்று அவளை நேரமறியாது ரசித்து நின்றான்.  வகுப்பு முடிந்து அவளும் கிளம்பி கோவில் பிரகாரத்தில் நடந்தாள். அவனும் வெட்கமின்றி பின்னே நடந்தான்.


அவள் நேராகப் பிரசாத கடைக்குள் நுழைய, சிரித்துக் கொண்டே வெளிய அவள் வருகைக்காகக் காத்திருந்தான். அப்போது அவனை அழைத்தார் அருகே இருந்த பாட்டி.


"சொல்லுங்க பாட்டி"  அவர் அருகே சென்றான். "இன்னைக்கி என் பேரன் பிறந்த நாள் தம்பி... அதுனால் கொஞ்சம்  இனிப்பு பொங்கலும் புளியோதரையும்  கொண்டு வந்திருக்கேன். ஆனா தொன்னைக் கொண்டு வரல,  என்ன பண்ண தெரியல, காசும் கொண்டுவரல பஸ்க்கு போகத் தான் இருக்கு. இத ரெண்டையும் கையிலையும் கொடுக்க முடியாது கொஞ்சம் உதவுங்க தம்பி" என்று கெஞ்சினார்.


அவன் அவர் காலடியில் வைத்திருந்த  வாலியை அளவிட்டவன்... "இருங்கப் பாட்டி " என்று  பிரசாத கடைக்குள் நுழைந்தவன் ,  அடித்து பிடித்து கூட்டத்திக்குள் நுழைந்து சரியாக பிரவஸ்தியின் அருகே நின்றான்.


எவ்வளவு முயன்றும் அவனால் அவளை  இடிக்காமல் இருக்க முடியவில்லை... அதை அவளும் கவனித்து விட்டு சிரிப்பை உள்ளடக்கிய படி  நின்றிருந்தாள். மேலும் ஒரு கூட்டம் அவனை இடிக்க , அவன் அவளை சட்டென இடித்து விட்டான். அவள் கொஞ்சம் தள்ளி  போய் நின்றவள் அவன் புறம் திரும்பி முறைக்க, "ஐயோ ! சத்தியமா நான் வேணுமே இடிக்கலங்க பின்னாடி தான் தள்ளிவிடுறாங்க" எனக் குழந்தை போல காரணம்  சொன்னவனைக் கண்டு சிரிப்பை அடக்கியவள், " தெரியும்ங்க , நீங்க வேணும்னே இடிக்கலனு. நானும் உங்களை முறைக்கலங்க" என்றதும் சிநேகமாய் சிரித்தான். 


அவள் கேட்டதை கட்டிக் கொண்டே, கடைக்காரர் " தம்பி உங்களுக்கு என்ன வேணும் கேட்டார்...  அண்ணே ! கொஞ்சம் வெள்ளை பேப்பரும்  இலையும் கொடுங்க " என்றதும், அதிர்ந்தவர், "எது இலை வேணுமா, அது எதுக்கு தம்பி?" 



"அண்ணா ஒரு சின்ன பர்போஸ்காக தான் ப்ளீஸ் கொடுங்க , அதுக்கு பணம் கூட கொடுக்கறேன்" என்று கெஞ்ச காசை வாங்கிக்  கொண்டு அவரும் அவன்  கேட்ட அளவில் இரண்டையும் கொடுத்தார். அருகே இருந்த ஒருவர், "என்ன தம்பி பிரசாதமா இந்த இலையும் பேப்பரையும் திங்க போறேளா?"எனக்  கேட்டு நகைச்சுவை சொன்னது  போல சிரித்தும் கொண்டார்,

அவனும் அசராமல் " அட ஆமாங்க... ஒரு சேஞ்சுக்கு இதையும் தின்னு பார்க்கலாம் தான் இலையும் பேப்பரை வாங்கறேன். சாப்ட்டு  பார்த்துட்டு சொல்றேன் நீங்களும் சாப்பிடுங்க..." என அவர் சிரிப்பை வாயோடு அடைந்தான். அவனை ' லூசா ' என்பது போல பார்த்தார். 


"ஏங்க மண்ணை தின்ன குழந்தைய கடவுளா பாத்தீங்க, இலையும் பேப்பரையும் தீங்கற மாட்டை கூட கடவுளா தான் பார்க்கிறீங்க, இது ரெண்டையும் திங்க போற என்னையும் ஏன் நீங்க கடவுளா பார்க்கக் கூடாது?" எனக் கேட்டவனை முறைத்து விட்டு "பகவானே ! " கன்னத்தில் போட்டுக் கொண்டு திரும்பிக் கொண்டார். அவர்  நெற்றியில் இருந்த ஒற்றை நாமத்தை கண்டு தானே அவனும் அவரை அவ்வாறு கேட்டான்.


அவனது பேச்சு அவளுக்கு சுவாரஸ்யமாக இருந்தது . அவன் கூட்டத்தை விட்டு வெளியே வர, அவளும் அவனைத் தொடர்ந்து வெளியே வந்தாள். அவனோ நேராக பாட்டியிடம்  சென்று வாலி அருகே அமர்ந்து கொண்டு  உள்ளே புளியோதரையும்  பொங்கலையும் சேர்த்து பொட்டனம் போட்டான். 


"கையில் ஒரு ஒரு கை கொடுக்கலாம்ன்னா நீ என்ன தம்பி பொட்டனம் போடுற ?"


"பாட்டி ஒரு ஒரு கை கொடுக்கறனால வயிறும் நிறையாது அதுக்கான பலனும் நமக்கு கிடைக்காது.  இருக்கிறவங்களும் இல்லாதவங்களும் கொடுக்கறத விட, இயலாதவங்களுக்கு தான் கொடுக்கணும் அப்ப தான்  இந்த புண்ணியம் உங்க பேரனை போய் சேரும்" என்று வேகமாகப் பொட்டனம் போட்டான். அவன் மொழிந்த வார்த்தைகள் மனத்திற்கு இன்பமளிக்க அவனது பேச்சை மீண்டும் மீண்டும்  கேட்க  தூண்டியது. எவ்வளவு முயன்றும்  அவளால்  அவனிடமிருந்து பார்வையை திருப்ப முடியவில்லை.


பொட்டனம் போட்டு முடித்தவன், கைத்தாங்களாக, பாட்டியை பிடித்து அவர் கொண்டு வந்த பாத்திரங்களை ஏந்திக் கொண்டி வீதிக்கு வந்தவன்,  நடக்க முடியாத, கால், கை இல்லாதவர்கள் என இயலாதவர்களுக்கு பார்த்து பார்த்து கொடுத்தவன். ஒரு பொட்டனத்தை தன்னோடு வைத்துக் கொண்டான். அவனை கேள்வியாக பார்த்தது அந்தப் பாட்டி.


"உன் பேரன் எனக்கு இல்லையா?" என உரிமையாகக் கேட்டதும் கண்ணீர் தாரைத்தாரையாக கொட்ட, "ஐயோ !! பாட்டி ஏன் அழறீங்க?"என்று பதறினான்.


"இவ்வளவு உதவி செஞ்ச உனக்கு கொடுக்கணும் எனக்கு தோணலையே பா ! அதான் அழுகை வந்துடுச்சி, மன்னிச்சிடு தம்பி !" என அவன் கைப்பிடித்து  கெஞ்சியவரின் கைய பிடித்து அழைத்தவன் ஆட்டோ அமர்த்த, "ஆட்டோல போற அளவுக்கு காசு இல்லப்பா, நான் பஸ்லே போய்கிறேனே"


"இந்த வெயிட்டெல்லாம் தூக்கிட்டு பஸ்ல ஏறவேணாம் நான் காசு கொடுக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க "  ஆட்டோக்காரரிடம்  காசைக் கொடுத்து அவர் சொல்லும் இடத்தில்  இறக்கி விடச் சொன்னான். அந்தப் பாட்டியும் அவனை ஆசிர்வதித்து விட்டுச் சென்றார். 


கடைசி வரையிலும் அவன் செய்த அனைத்தையும் பார்த்துவிட்டு தான் புன்னகையுடன் நகன்றாள். 'மறுபடியுமா அவனை சந்திக்க இயலுமா?' என்ற கேள்வி அவளுக்குள் எழாமல் இல்லை. 


மனசில்லாமல் அவ்விடத்திலிருந்து சென்றவளுக்கு, விதியாக இன்னொரு முறைப் பார்க்க நேர்ந்ததும் மனதிற்குள்  ஒரு இன்ப அதிர்வு தோன்றியது... 'ஆனால் இது தொடருமா?' என்ற வேறொரு கேள்வி எழ , தன் மனம் போற போக்கை கண்டு தலையில் அடித்தவள் உடையை மாற்றினாள்.


அவள் உடையை மாற்றிக் கொண்ட நேரம் வெளியே சரஸ்வதியின் சத்தம் கேட்க, 'அத்தை  ஏன் இப்படி கத்துறாங்க?' என்று தனக்குள் கேட்டுக் கொண்டு உடையை மடித்து தன் பைக்குள் வைத்துவிட்டு வெளியே வந்தாள். 


தாய் அகல்யா கைகளை பிசைந்து கொண்டு நிற்க, பிரகதியும் அவர் பக்கம் நின்று  அக்காவை பாவமாகப் பார்த்து  நின்றாள். அவள் அருகே வந்து நின்றவள்" என்னாச்சிடி ஏன் அத்தை கத்தறாங்க?" என காதோரமாக கேட்டாள்.


"உன்னைய தான் அக்கா கத்துறாங்க?" என்று குண்டை தூக்கிப் போட்டாள், "என்னையவா நான் என்னடி பண்ணேன்?"என அதிர்ந்தாள்.


"நீ என்ன பண்ணனு உனக்கு தான்க்கா தெரியும். சைத்து  மாமா கோவமா வந்துச்சு, அத்தை ஏதோ கேட்க, இதுவும் ஏதோ சொல்ல, உடனே கத்த ஆரம்பிச்சிட்டாங்க..."


"ஒருவேள இன்னைக்கி நடந்ததை சொல்லிட்டானோ ! இருக்கும் இருக்கும்..  பத்த வச்சிட்டானே இந்தப் பரட்டை. ஊர் உலகத்துல  கசினா பொறந்தது எல்லாம் உதவியா இருக்கு. எனக்கு மட்டும் இது உபத்தரமா இருக்கு' என்று  தலையில்  அடித்து கொண்டாள்.


"என்னடி பண்ண?" அகல்யா பயந்து கொண்டே கேட்டார்.


"நான் ஒன்னும் பண்ணலம்மா " என்றாள் சலிப்பாக, "அப்பறம் ஏன்டி அவங்க கத்துறாங்க... "ம்ம்.. " என தோளை உலுக்கி விட்டு முன்னே நடந்தாள். 


அங்கே உணவு மேசையில் சைத்து அமர்ந்து தோசை உண்டு  கொண்டிருந்தான். அவனுக்கு தோசையை வார்த்தவாறு கத்திக் கொண்டிருந்தார் சரஸ்வதி. 


இவள் வரவும் சைத்து அவளை முறைத்து விட்டுத் தோசை முழுங்கினான்.  ' ஏன் இந்த நாயி என்னை முறைக்கிது வரும் போது நல்லாதானே வந்தான். இல்ல நாம தான் கவனிக்கலையா? ' எனக் எண்ணிக் கொண்டே அமராமல் நின்றவள், சமயலறையில் இருந்து சரஸ்வதி அவனுக்கு ஐந்தாவது தோசை எடுத்துக் கொண்டு வரும் போது பிரவஸ்தியை பார்த்தார். அவளும் அவரை தான் பார்த்தாள். 


"வாடி சாப்பிடுறீயா?" என்று தோசையை அவன் தட்டில் வைத்தார். "ம்ம்..." என்று அமர, உள்ளே சென்றார். " ஏன் நீ இப்போ மூஞ்சிய தூக்கி வச்சிட்டு உட்கார்ந்து இருக்க?" அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்  கேட்டாள்.


"உன்கிட்ட சொல்லணும் எனக்கு அவசியம் இல்ல போடி" என்று மீண்டும் தோசையை முழுங்க, "சரி சொல்லாத போ " என்று தோளை குலுக்கிவிட்டு  டீவி யைப் பார்த்தாள். அவளது  அலட்சியம் அவனுக்கு மேலும் கோபத்தை தூண்ட, தண்ணீர்  குடித்து விட்டு டம்ளரை ' டொம் ' என்று வைத்தான்.  அதற்கும் அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை. தன்னை தாங்கி கெஞ்சி சமாதானம் செய்ய வேண்டுமென்று எண்ணியவனுக்கு அவளது செயல் ஏமாற்றத்தையும் கோபத்தையும் கொடுக்க, அவள் காலை மிதித்து தன் புறம் அவள் கவனத்தை திருப்பினான்.


"ஸ்ஸ்ஸா.. ஆஆ, எரும, என்னடா உன் பிரச்சினை?" என்றாள் வலியில் முகம் சுளித்து. "நான் யார்டி உனக்கு?" 


"இது தெரியுமா தான் என் கூட இத்தனை வருசமா வளர்ந்தியா ?" என நக்கலடிக்க, மீண்டும் அவள் காலை மிதித்தான். " சைத்து நாயே வலிக்கிதுடா" என்று காலை உதறினாள். 


"நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி" என்றான் பற்களை அரைத்தபடி. "என் அத்தை பையன் என் கசின் போதுமா? எதுக்கு இப்படியெல்லாம் கேட்டுட்டு இருக்க நீ?"


"ம்ம்.. உனக்கு நியாபகம் இருக்கானு  தெரிஞ்சுக்க தான்?"என்றான் முறைப்பாக, "என் நியாபகத்து இப்போ என்ன கொள்ளை வந்துச்சி?"


"அதான் என்னை அவங்க ரெண்டு பேர்  முன்னாடி விட்டுக் கொடுத்துட்டு நின்னியே அப்ப வந்துச்சி !" என்றான் முகம் சிவந்து. 


"நான்  ஒண்ணுமே பண்ணல டா !" 


"அதான் டி பிரச்சனையே ! அவன்  அவ கசினுக்கு எப்படி வரிஞ்சு கட்டிக்கிட்டு வந்தான். நீ என்னடி பண்ண எனக்காக? அந்தப் போட்டோஸ் டெலிட் பண்ண சொன்னேனே பண்ணியா?  இல்ல பண்ண சொன்னீயா? இளிச்சிட்டு நிக்கற, அவன் உன்னை ' அழகு' னு சொன்னதும் வெட்கப்படுற ' ச்சி ' பார்க்க நாராசமா இருந்ததுடி" 


"எனக்கு அந்தப் போட்டோஸ் பிடிச்சிருந்தது அதுனால டெலிட் பண்ண சொல்லல,  'அழகு'னு அவர காம்பளிமெண்ட் கொடுக்க சொன்னது நான் இல்ல. அவர் கொடுத்தா, நான் எப்படி பொறுப்பாவேன்? அண்ட் எனக்கு அந்தக் காம்பிளிமெண்ட்ல கோபம் வரல, அவர் கோபப்படுறது போல சொல்லவும் இல்ல, அதுனால சிரிச்சேன்"


"ஓ... இப்படி தான் யார்  வந்து உன்னை அழகுனு  சொன்னாலும் இளிச்சிட்டு நிப்பீயா?" என்றதும், அவன் முன் விரலை நீட்டி" மைண்ட் யூர் வோர்ட்ஸ் சைத்து " என எச்சரித்தாள். கோபத்தில் டேபிளைக் குத்தினான்.


"எனக்கு பிடிச்ச விஷயத்த நான் அக்சப்ட் பண்றேன் பண்ணல, நீ  ஏன் அதுல தலையிடுற?  அதை டெலிட் பண்ண சொல்லி, நீ ஏன் ஆடர் போடுற? நான் அதை என் அடர்ஸ் கொடுத்து கொடுக்க சொல்லிருப்பேன். ஆனால் உனக்கு பிடிக்கலேன்றனால உன் வார்த்தைக்கு அமைதியா இருந்தேன்.. அது தப்புனு இப்போ தான்டா புரியுது.  இனி என் விஷயத்துல தலையிடாத, உனக்கு அதுல எந்த ரைட்ஸ் இல்ல" என்று சொல்லி முடிக்க, சரஸ்வதி தன் குரலை உயர்த்தினார்.


"ஏன் இல்ல,  அவனுக்கு தான்டி ரைட்ஸ்  இருக்கு.  அவன் உன்னை கட்டிக்க போறவன். அவன் சொல்றத தான் நீ கேட்கணும்.. அவன் உன் நல்லத்துக்கு தான டெலிட் பண்ண சொல்லிருக்கான் அது உனக்கு  தப்பா தெரியுதோ ! அங்க பொண்ணு இல்லாம  ஒரு பையன் உன்னை போட்டோ எடுத்தாலும் அப்படி தான் டெலிட் பண்ண சொல்லாம இளிச்சிட்டு இருப்பீயா ?" எனக் கேட்டதும், சுர்ரென்று கோபம் வர " அத்தை" என்று கத்தினாள். 


"என்னடி கத்துற? பொம்பளை பிள்ளையா வீட்ல டியூஷன் எடுத்துட்டு இருனு சொன்னா கேட்காம டான்ஸ் ஆடுறேன் அது ஆடுறேன்னு போன, எதுக்கு இப்படி போறவன் வர்றவனெல்லாம் உன்னை பார்த்து  போட்டோ எடுக்கறதுக்கா. கல்யாணத்துக்கு அப்புறமும்  இப்படி  ஆடிட்டு இருந்த கொன்னுடுவேன் ராஸ்கல். ஏய் அகல்யா உன் பொண்ணு கிட்ட சொல்லிவை, கோயில்ல ஆடுறேன் தெருவில ஆடுறேன் ஊர சுத்தாம ஒழுங்கா வீட்ல இருக்கச் சொல்லு அவளை. சீக்கிரமா சைத்துக்கும் இவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் " என்றவர், "பொண்ண வளர்திருக்கா பாரு !" என்று அவர்கள் கேட்கும் படியே முணங்க, அகல்யாவிற்கு இதயத்தில் மேலும் அடிவாங்கியது போல இருந்தது. 



"ஸாரி அத்தை என்னால உங்க இஷ்டம் போல இருக்க முடியாது. நான் ஆடுவேன் ஆடிட்டே இருப்பேன்... அதைத் தடுக்க யாரலையும் முடியாது. அப்றம் உங்க சைத்துக்கு, வேலைக்குப் போகாம,  வீட்லே இருந்து  வீட்டு வேலை எல்லாம் பார்த்துக்கற ஒரு நல்ல வேலைக்காரியா ஸ்ஸ்ஸ்ஸ்" நாக்கை கடித்தவள், " நல்ல மருமகளா பார்த்து கட்டிவைங்க...  என்னால் இவனை கட்டிக்க முடியாது. இவன்  என் கசினா இருக்கும் போதே என்னை இவ்வளவு காயப்படுத்தறான்.. புருஷனா வந்தா, என் அம்மா கதி தான் எனக்கும். அதுக்கு நான் ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்" என்று சைத்துவையும் சரஸ்வதியையும் அழுத்தமாக பார்த்து விட்டு சென்றாள். அவர்கள் இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2