மடல் 3

 மடல் 3


அதிகாலை வேளையில் ஆள் அரவமற்ற பணக்கார வீதியில் ஒற்றை ஆளாக, நடையோட்டம் மேற்கொண்டிருந்தான் தனிஷ்.


திடமான நெஞ்சமும் ஏற இறங்க மூச்சு வாங்கிய படி மெல்ல ஓடி வந்தவன், அரண்மணையை போல அகன்று விரிந்திருந்த வில்லாவினுள் நுழைந்தான்.


"தேவகி இல்லம்" என்று கருங்கல்லில் பெரிதாய் பொரிக்கப்பட்டிருந்த அப்பெயர் வரவேற்கவே இடம்பெற்றிருந்தது.


வேலை ஆட்கள் தத்தம் வேலை செய்துக் கொண்டிருக்க, கூடத்தில் பெரிதாய் நீண்டிருந்த நீள்விருக்கையில் அமர்ந்தான்.


அவன் வந்ததும் ஒரு பக்கம் பழச்சாறு நீட்டிக் கொண்டு வேலையாள் வந்து நிற்க, மறுபக்கம் அவன் வியர்வையை துடைத்துக் கொள்ள துவாலை  வைத்துக் கொண்டு மற்றொரு பணியாள் நின்றிருந்தான்.


துவாலையை வாங்கி வியர்வையை துடைத்தவன், பழச்சாறையும் வாங்கி பருகிட, உள்ளிருந்து வைஷ்ணவியும் பிரபாகரனும் வெளிப்பட்டனர்.


"குட் மார்னிங் பா , குட் மார்னிங் மா "என்றான்.


"குட் மார்னிங் தனு !"என இருவரும் ஒரு சேர சொல்லிய படி அவனுக்கு எதிரே அமர்ந்தனர்.


பிரபாகரன்  மகனிடம் நேரத்தை காட்டி" தனு ! இன்னைக்கி நீ கரஸ்பொண்டட்டா பதவி ஏற்க போற ! நேரமா போக வேணாமா?  ஸ்டாஃப்க்கும் சரி ஸ்டூடண்ட்ஸ்க்கும் சரி நாம முன்னோடியாக இருக்கணும். பங்சுவாலிட்டிய மெயின்டெயின் பண்ணனும் தனு ! சீக்கிரமா கிளம்பி என்னோட ஸ்கூலுக்கு வா ! "


"அப்பா ! நீங்களே கரஸ்பொண்டட்டா இருங்களே !  உங்களால முடியற வரைக்கும்  நம்ம மூணு பிராஞ்சுக்குமே இருங்க ! உங்களுக்கு அப்புறம் நான் பார்த்துக்கிறேன். எனக்கு கரெஸ்பொண்ட்டாவோ இல்ல பிரின்சிபலாவோ இருக்க இஷ்டம் இல்ல ! எனக்கு டீச்சரா இருக்கணும் ஸ்டூடண்ட்ஸ்க்கு என்னால முடிஞ்ச ஞாலேஜ கொடுக்கணும்... ப்ளீஸ் பா ! கொஞ்ச நாளைக்கு இந்த பொறுப்புகள் எல்லாத்தையும் நீங்களே பாருங்க ! என்னை பார்க்க சொல்லி ஃபோர்ஸ் பண்ணாதீங்க...!  எனக்கு டீச்சரா இருக்க தான் பிடிச்சிருக்கு. ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் அந்தப் பொறுப்பை நான் எடுத்துக்கிறேன்..."என்று தன் ஆசையை விளக்க, அதில் விருப்பமில்லாமல் அவனை பார்த்தார்.


"ரெண்டையும் ஒண்ணா பார்க்க கூடாதா தனு? கரஸ்பொண்டட்டா இரு ப்ளஸ் டீச்சாராவும் இரு ! எனக்கு நீ


கரஸ்பொண்டட்டா இருந்து ஸ்கூல்ல கவனிச்சக்கணும் . ஆனா நீ டீச்சரா இருக்கணும்னு உன் தகுதிய ஏன் குறைச்சிக்கற?!"என்றார்.


"கரஸ்பொண்டட்டா விட டீச்சர் பதவி ஒன்னும் தகுதி குறைச்சல் இல்லை பா ! கரஸ்பொண்டட்டான நீங்க டீச்சரை நம்பி தானே ஸ்கூல்ல ரன் பண்றீங்க... அவங்க தகுதி நம்மல விட குறைச்சல் இல்ல ப்பா ! ப்ளீஸ் அப்பிடி பேசாதீங்க. அண்ட் தென். ஒரு வேலை பார்த்தாலும் ஒழுங்கா பார்க்கனும் பா ! ஆத்துல  ஒரு காலும் சேத்துல ஒரு காலும் வச்சு தடுமாறி நிக்கிறதுக்கு.  நான் ஏதாவது ஒரு இடத்துல சேஃப் நின்னுக்கிறேன். ப்ளீஸ் டோண்ட் ஃபோர்ஸ் மீ பா ! அம்மா சொல்லுங்க !"என்று தாயையும் உடனிழுக்க,


எதற்கெடுத்தாலும் மகனுக்கு சாதகமாகப் பேசுபவர் மகனே பேச அழைக்கும் போது சும்மா இருப்பாரா? மகனுக்காக பேசும் வேலையை ஆரம்பித்தார் வைஷ்ணவி.


"ஏங்க ! அதான் அவன் சொல்றான்ல. மூணு ஸ்கூலும் அவனோடது தான். அதுல அவன் டீச்சரா இருந்தா என்ன ? கரஸ்பொண்டட்டா இருந்தா என்ன? எப்படியும் நம்ம ஸ்கூலுக்கு தானே உழைக்கிறான். பசங்களுக்கு  சொல்லி குடுக்கறேன் நிக்கிறவன எதுக்குங்க தடுக்குறீங்க?! அவன் டீச்சாரவே இருக்கட்டும்..."என்று வழக்கமாக செய்யும் வேலையை சிறப்பாகச் செய்தார்.


"அதானே  ! சும்மாவே அம்மாவுக்கு மகன் எது சொன்னாலும் வேதவாக்கு தான். இது மட்டும் என்ன வெறும் பேச்சா போயிடுமா? முதல்ல வந்த புருஷனை விட,  அடுத்து வந்த பிள்ளை தான் உனக்கு முக்கியமா போயிட்டான்ல. புருஷன் பேச்சை கேட்டு நல்ல பிள்ளையா இருந்த உன்னை, இவன் வந்து கெடுத்துட்டான். ராஸ்கல்!! என் பொண்டாட்டிய உன் இஷ்டத்துக்கு பேச வைக்கிற நீ !  பாரு மகன்... மகன்... உருகுறா ! புருஷன்ற எண்ணமே இல்ல இவளுக்கு !"என மனைவியே மகனுக்கு ஒத்து ஊதுவதால் மகன் மீது கொஞ்சம் பொறமைப் பட்டார்.


அவரது பொறாமையை கண்டு தாயும் மகனும் சிரித்து கொண்டனர்.


"என்ன சிரிப்பு வேண்டியிருக்கு இங்க?"என கடிந்திட,


தனிஷ்ஷோ"இப்போ எதுக்கு பா என் மேல பொறாமையும் கோபமும் பட்றீங்க? நான் என்ன பண்ணிட்டேன்?"என பொங்கி வந்த சிரிப்பை மறைத்தபடி கேட்டான்.


"சிரிக்காத பாவி ! எதுவுமே பண்ணாதது போல கேக்காத டா ! என் அப்பா ! அதான் உன் தாத்தா சொல்லிட்டார்னு நீ மதுரைக்கு போனதுமில்லாம என் பொண்டாட்டிய வேற கூட்டிட்டு போயிட்ட ! நான் இங்க இவ இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?  இவளும் புள்ள முக்கியம் உன்னோடவே வந்துட்டா என்னை தவிக்க விட்டு ! " என ஏக்கமாகச் சொல்ல, தலையில் அடித்துக் கொண்ட வைஷ்ணவி


"ஏங்க !! புள்ளை முன்னாடி என்ன பேசிட்டு இருக்கீங்க?" என வைஷு அவரை அடக்க முயன்றார்.


இருவரையும் ஆசையாக பார்த்தவனுக்கு தென்றலின் ஞாபகம் வராமல் இல்லை. அவளோடு இப்படி ஒரு வாழ்க்கை வாழத் தானே ஆசைப்பட்டான். ஆனால் அவனது காதல் தான் பட்டுப் போய் விட்டதே.


' தென்றல் இன்னொருவனின் மனைவி  ஆகிவிட்டாள் ' என்று மூளை உரைத்தாலும்,  மனம் அவளை மறக்கவில்லை. அவளை மறக்க முயற்சித்து தான் பெங்களூர்க்கு செல்ல முடிவெடுத்தான். ஆனா அவனது தந்தையின் கட்டளைக்கு  இணங்க சென்னையில் குடும்பத்துடன் இருக்கிறான்.


"நான் உண்மை தாண்டி சொன்னேன்... நீ என்னை விட்டுட்டு பிள்ளை தான் முக்கியம் அவன் கூடவே இருந்துட்ட ! என்னை பத்தி உனக்கு அக்கறைனு ஒன்னு இல்லையே !! இதான் சாக்கு நான் இன்னொரு பொண்ண செட் பண்ணிருக்கணும்... என்ன பண்ண இந்த அப்பாவி,  ஶ்ரீ ராமனா போயிட்டேன்.  உன்னையே நினைச்சிட்டு இருந்ததால , வேற பொண்ண செட் பண்ணிக்க தோணலை எனக்கு !"என்றார்.


"ஓ... உங்களுக்கு இன்னொரு பொண்ண செட் பண்ற ஐடியா வேற   இருக்கா?"என அவரை வம்பிழுக்க,


"பாத்தியா தனு ! நான் ஶ்ரீ ராமனா இருக்கேன்றது காதுல விழுகல ! இன்னொரு பொண்ண செட் பண்றேன் சொன்னதும் மட்டும் விழுந்திருக்கு பாத்தியா ! இது தான் கல்யாண வாழ்க்கை இப்படி தான் இருக்கும்..."என்றார்.


"ஏங்க அவனை பயமுறுத்திறீங்க?


"பயமுறுத்துல ! இதான் நிதர்சனம் ! இப்படி தான் இருக்கும் சொல்றேன். ஆஸ ஆ ஃபாதர் என் பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க வேணாமா? . மை சன், உன்னையும் சம்சாரத்தோட சம்சாரியா பார்க்கனும் ஆசை வந்துருச்சு எனக்கு. பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாமா?"


மனைவியிடம் ஆரம்பித்து மகனிடம் வந்து முடிக்க, அவனோ அமைதியாகி விட்டான்.


"இவனுக்கு பொண்ணு பார்க்க கூடாதுங்க ! இவனா, ஒரு பொண்ண காதலிக்கிறேன் வந்து நின்னா தான்  இவனுக்கு கல்யாணம்..."என்றார் கேலியாக.


வைஷ்ணவி கூறியதில் அதிர்ந்த பிரபாகரனோ , சிறு கோபம் கொண்டு "உனக்கு என்ன பைத்தியமா  வைஷு? அவனா காதலிக்கிறேன் வந்து சொன்னாதான் கல்யாணகங்கற ! அவன்  யாரை காதலிச்சாலும் கட்டி வைப்பீயா நீ?!என்றார்.


"ஏங்க கட்டி வச்சாதான் என்ன?" என்றார் அசட்டையாக, இருவரும் ஏதோ பேசி கொள்ளட்டும் என்று அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.


"என்ன வைஷூ நீ? அதுக்காக நம்ம ஸ்டேட்டஸ்க்கு கொஞ்சமும் ஒத்துப் போகாத ஒரு பொண்ண கூட்டிட்டு வந்தா நீ அச்சப்ட் பண்ணுவீயா? ஏற்கெனவே ஒரு பொண்ண காதலிச்சு அது தோல்வில முடிஞ்சது நீ தான் எனக்கு சொன்ன !


நல்ல வேளை அந்தப் பொண்ணு நமக்கு மருமகளா வரல ! இனியாவது அவனை காதலிக்க சொல்லி தூண்டி விடாம பொறுப்பான அம்மாவா நமக்கு ஸ்டேட்டஸ் நிகரான ஒரு பொண்ண பார்த்து அவனுக்கு கட்டி வைக்க பாரு ! சும்மா காதலச்சிட்டு ஒரு பொண்ணோட வந்தால் தான் கல்யாணம் அவனை தூண்டி விட்ற வேலலாம் வேணாம் ! புருஞ்சதா !" வா வந்து எனக்கு பிரேக் ஃபாஸ்ட் எடுத்து வை !"என்று உணவு மேசையை நோக்கி சென்றார்


பிரபாகரன் கூறிச் சென்றதை ஜீரணிக்க முடியாமல் திணறினார் வைஷ்ணவி. மகன் மனதிற்கு பிடித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து வாழ வேண்டும் என்று அவர் நினைக்க.


வைஷ்ணவியின் கணவரோ தங்கள் வசதிக்கு நிகரான குடும்பத்தில் பெண்ணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.


இருவரது முடிவுக்கும்  முரணாக காதலும் வேண்டாம் கல்யாணம் வேண்டாம் என்று நினைக்கிறான் தனிஷ்.


மூவரில் யாருடைய எண்ணத்திற்கு யார் இறங்கி வரப் போகிறார்களோ. இல்லை அவரவர்கள் எண்ணத்திலிருந்து போராட போகிறார்களோ.


****


மகனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றார் பிரபாகரன். தியாகராஜ வித்யாலையா மேல் நிலை பள்ளி என பெரிய எழுத்துக்களில் தன்னை அடையாளம் கட்டிக் கொண்டிருந்த அந்தப் பள்ளி.


சென்னையில் புகழ்பெற்ற பள்ளிகளில் இப்பள்ளியும் ஒன்று.


பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த குழு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து தான் தனிஷ்ஷை பள்ளியின் தாளாளராக நியமிக்க இருந்தார் பிரபாகரன்.


ஆனால் அவனுக்கு அதில் உடன்பாடு இல்லாத காரணத்தால்,  பிரபாகரன் குழு உறுப்பினர்களிடம் பேசுவதற்காக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.


குழு உறுப்பினர்களுடன் அமர்ந்த பிரபாகரனும் தனிஷ்ஷிடம் மீண்டும்  முடிவை மாற்றச் சொல்லி கோரிக்கை விடுக்க, அவன் பிடித்த பிடியில் நின்று விட்டான்.


ஆனாலும் பிரபாகரன் விடுவதாக இல்லை என்னுடன் சேர்ந்து அவனும் தாளாளராக இருந்து வேலை செய்ய போவதாகவும். அதே நேரம் மாணவர்களுக்கு நல்ல ஆசிரியராகவும்  பணியாற்றுவான் என்று அவனிடம் பதிலைக் கூட கேட்காது முடிவாகச் சொல்லிவிட்டு சந்திப்பை முடித்துக் கொண்டார்.


தந்தையைப் பார்த்து இருபுறமும் தலையை அசைத்து விட்டு எழுந்தான். அவருடன் வாதாடவில்லை. அவர் சொன்னத்தையும்  ஏற்றுக் கொண்டான்.


பள்ளியில் அனைவருக்கும் அவனை தெரியும் என்பதால் மரியாதை நிமித்தமாக அனைவரும் அவன் முன்னே வந்து அவனை வாழ்த்தினார்கள்.


அதனோடு கூடுதல் தகவலாக, பன்னிரெண்டு , பதினொன்றாம் வகுப்பு கணினி பிரிவுக்கும் கணித ஆசிரியராகவும் இருப்பதாக தகவலும் வர, அதையும் மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டனர்.


முதல் நாள் பன்னிரெண்டாம் வகுப்பிற்குச் சென்றான். மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர்.


மாணவர்களை அமரச் சொல்லி விட்டு , ஒவ்வொரு மாணவரின் பெயரை சொல்லச் சொல்ல. அவர்களும் எழுந்து சொன்னார்கள். கடைசியாக அமர்ந்த மாணவன் எழுந்து தன் பெயரை " ரவிக்குமார் " என்று சொல்லி உட்காரும் முன் அவன் இடது கை புஜத்தில் பச்சை குத்தியிருப்பதை பார்த்து விட்டான் .


"ரவி நில்லு !"என்றவன் அருகே வந்து புஜத்தைப் பற்றியிருந்த சட்டையை தூக்கினான். அதில் சின்னதாக நாய் குட்டியை பச்சையாகக் குத்தியிருந்தான்.


"என்ன இது?"


"சார்ர்ர்!!! "என இழுத்து தலை குனிந்தான்.


"உனக்கு பதினெட்டு கம்ப்ளீட் ஆகல அதுக்குள்ள என்ன டாட்டூ வேண்டிருக்கு உனக்கு? எங்க போட்ட? எப்போ போட்ட உன் அப்பா அம்மாக்கு தெரியுமா?"என தனிஷ் கேள்விகளை அடுக்கினான். அவனும் கண்ணீர் விட்டபடி பதில் சொன்னான்.


அவனை அழைத்துக் கொண்டு அலுவலகத்தில் முதல்வர் அறைக்குள் வந்தவன்


பன்னிரெண்டாம் வகுப்பு ஆசிரியர்களையும் வர சொல்லி கட்டளையிட, ஆசிரியர்களும் வந்து விட்டனர்.


அவனது புஜத்தை காட்டி "இதை யாரும் பார்க்கவே இல்லையா? அவன் டாட்டூ போட்டு டூ விக்ஸ் ஆகிருக்கு, யாருமே பார்க்கலேல ! பி.டி சார் கூட வா பார்க்கல ! இவன் இப்படி தைரியமா டாட்டூ போட்டு ஸ்கூல் கேம்பஸ் திரிஞ்சிருக்கான். நீங்க யாரும் பார்க்கலன்றனால நாளைக்கு இன்னொருத்தன் போட்டு வருவான். எப்படி உங்க மேலே பயம் வரும் இவங்களுக்கு? இதான் லாஸ்ட் வார்னிங் ! கொஞ்சம் அலார்ட் இருங்க டீச்சர்ஸ் !" என்றவன்,


ரவியின் வகுப்பு ஆசிரியரிடம் "ரவியோட அப்பா அம்மாவா வர சொல்லுங்க !"என்றான்.


ரவியிடம் திரும்பி "இந்த டாட்டூ எங்க போட்ட ?"என்று வினவ, அவனோ போட்டு விட்ட நண்பனை காப்பாத்த, பள்ளிக்கு பக்கத்திலிருந்த காம்ப்ளக்ஸில் ' ஶ்ரீ தி 'பச்சைக் குத்தும் கடையின் பெயரை சொல்லி தப்பிக்க நினைத்தான்.


"அந்தக் டாட்டூ ஷாப் எங்க?"என விடாமல் வினவிட, பக்கத்தில் நின்ற ஆசிரியர் முன் வந்து " நம்ம ஸ்கூல் பக்கத்துல தான் இருக்கு !"என்றான்.


"டாமிட்!!! நம்ம ஸ்கூல் பக்கத்துல இருந்தா ஸ்டூடண்ட்ஸ் போட தான் செய்வாங்க !!! ரூல்ஸ்  ஃபாலோவ் பண்ணாம ஸ்கூல் ஸ்டூடண்ட் டாட்டூ போட்டு விட்டிருக்கான். அவனை இன்னைக்கி சும்மா விடக் கூடாது "என்று ரவியை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருக்கும் காம்ப்ளக்ஸ் நுழைந்தவன், மாடியில் ஏறி , திறந்து வைத்திருந்த 'ஶ்ரீ தி ' பச்சை குத்தும் கடைக்குள் புயல் போல நுழைந்திருந்தான்.


அங்கே தேவா இல்லை திகழ் மட்டும் இருக்க, கஸ்டமர் ஒருத்தருக்கு கையில் டாட்டூ போட்டு அப்போது தான் முடித்தாள்.


அவனது அழுத்தமான காலடிகளை வைத்து சட்டென திரும்பி பார்த்தாள்.


பச்சைக் குத்துவது ஆண் என்று  கற்பணையுடன் வந்தவன் அங்கு பெண்ணை எதிர்பார்க்கவில்லை


திகழை கண்டு அதிர்ந்தான். அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் கை முழுவதும் வரைய பட்டிருந்த டாட்டூவை  கண்டு முகம் சுளித்தான்.


Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2