இதயம் - 16

 இதயம் 16

பிரெக் அடித்த வேகத்தில் அவள் கன்னத்தில் முத்தத்தைப் பதித்துவிட்டு பின்னே நகன்றான். அவன் இதழ் தீண்டியதும் சட்டென திரும்பி அவனைப் பார்த்தாள். அவனும் 'எப்படி முத்தம் கொடுத்தோம்??' என்று யோசனையோடு அவள் முகம் பார்த்தான்.


பல்லை அரைத்தப்படி"இறங்கறீயா???"என்றவளின் குரலில் அத்தனை காட்டம். சங்கடத்துடன் வண்டியிலிருந்து இறங்கி நின்றான். 


வண்டியைத் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு முறைப்புடன் அவன் முன் வந்து நின்றாள்.


"என்னாச்சி உங்க சபதம் மிஸ்டர் சைக்கோ??? எந்த இடத்தில உங்க சபதத்தை மிஸ் பண்ணீங்க??? நீங்க கிஸ் அடிக்க என் கன்னம் தான் கிடைச்சதா??" என்று கன்னத்தைத் தேய்த்தபடி சொன்னாள்.


"ஸாரி, நான் கவனமா தான் இருந்தேன். நீ சடனா பிரேக் போடுவனு நான் எதிர்பார்க்கல. அந்த இடத்தில யாரும் பிரேக் போடவும் மாட்டாங்க.. சோ இது அன்எஸ்பேக்ட்டடா நடந்தது. இதுல என் மிஸ்டேக் எதுவும் இல்ல. சமபந்தமே இல்லாம பிரேக் போட்டது நீ !! அதுனால தான் இது நடந்தது. இது ஜஸ்ட் ஆக்சிடெண்ட். இதை நீ பெருசு பண்ணாத. இல்ல சண்டைப் போட்டு  பழிவாங்கணும் நினைச்சா, நோ பிராபலம். நீயும் கிஸ் பண்ணிட்டு போயிட்டே இரு" என்று அவன் பெருந்தன்மையாகச் சொல்ல அதில் மேலும் கடுப்பானவள் ' இந்த சைத்தானோட தொல்ல எப்போ தான் இல்லாம போகுமோ!!!!'என்று  முன்னே நடக்க , இவனோ தோளை குலுக்கிவிட்டு பின்னே நடந்தான்.


இங்கோ  சரஸ்வதியின்  வீட்டை அவரது தங்கை தம்பியின் குடும்பம் ஆக்கிரமித்திருந்தனர். மேலும் அவர்களுடன் விஷ்ணு, மகிழ், வஸ்தி, எகா என நால்வரும் இருந்தனர்.  


வஸ்தி சொன்னதுக்கு ஏற்ப, முதலில் விஷ்ணுவும் மகிழும் சரஸ்வதி வீட்டிற்கு தான் வந்தனர். அவர்களை கண்டு குழம்பியவர், அவர்களுடன் நின்ற வஸ்தியையும் எகாவைக் கண்டு அதிர்ந்தார்.  


வஸ்தியை எகாவுடன் பார்த்த பின்பு தானே இந்த கல்யாணம் திட்டத்தையே தீட்டினார்.  இன்று நால்வரின் வருகையைக் கண்டு எங்கே'தன் திட்டத்திற்கு கேடு வந்திடுமோ' என்று பயந்தவர், வெளியே காட்டிக் கொள்ளாது அவர்களை உள்ளே அனுமதித்து, தன் குடும்பத்தையும் அழைத்திருந்தார்.


வந்தவர்களுடன் வஸ்தி நிற்பதைக் கண்டு மேலும் குழம்பினார் அகல்யா. சாந்திக்கு அக்காவின் அழைப்பும் , வந்தவர்களைக் கண்டும் புரியாது  பார்த்திருந்தார். அங்கிருந்த அனைவரும் பல பல எண்ணங்களுடன் இருந்தனர்.


"சொல்லுங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க??"


"எல்லாம் நல்ல விஷயம் பேசத் தான் வந்திருக்கோம். இது எகாந்த், என் அக்கா பையன். ஆனா, எனக்கும் இவன் மகன் போல தான். எங்க அக்கா இறந்ததுக்கு அப்புறமா நான் இவன என் புள்ளையா தான் வளர்த்தேன். *** கேட்ரீங் காலேஜ்ல பிரோப்சரா நல்ல சம்பளத்துல வேலை பார்கிறான். இது போக எங்களுக்கு சொந்தமா டீபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் ரெண்டு இடத்தில இருக்கு. 


சொந்தமா மூணு வீடு இருக்கு. அதுல இவனுக்கும் பங்கு உண்டு. எங்க புள்ளைக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்ல,  டீட்டோடலர். இதெல்லாம் ஏன் நான் உங்க கிட்ட சொல்றேன்னா??  உங்க பொண்ணு வஸ்தியும் எங்க பையன் எகாவும் விரும்புறாங்க. என் மருமகனுக்கு பிடிச்ச பொண்ண கட்டிவைக்கணும் எண்ணத்துல உங்க பொண்ணு வஸ்திய   எங்க பையனுக்கு கேட்டு வந்திருக்கோம்" என்று முடித்துக் கொண்டார்.


சரஸ்வதி, அகல்யா  இருவரும் மட்டுமே சினம் கொள்ள மற்ற அனைவரும்  அதிர்ச்சியில் இருந்தனர்.


"வஸ்தி என்ன சொல்றாங்க இவங்க???"எனக் கேட்டு அகல்யா பல்லை கடிக்க, வஸ்தியோ சாந்தியின் புறம் திரும்பி, "என்னை மன்னிச்சிடுங்க அத்த, எனக்கு உங்க பையன கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்ல. நான் எகாவ காதலிக்கிறேன். இவங்க பிரகதிய காட்டி  மிரட்டுனதுனால தான் நான் அன்னைக்கி கல்யாணம் பண்ணிக்கிறேன் ஒத்துக்கிட்டேன். ஆனா என்  மனசு கேட்கல எனக்கு எகா தான் வேணும். அவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று அவருக்கு மட்டுமில்லாமல் மொத்த குடும்பத்துக்கும் சேரத்தே சொல்லிவிட்டாள்.



"என்னடி கொழுப்பா???  அன்னைக்கே நீ காதலிக்கற விஷயத்தை சொல்ல வேண்டியது தானடி.  அன்னைக்கி சரினு  சொல்லிட்டு இன்னைக்கி வேணாங்கற என்னடி நினைச்சிட்டு இருக்க நீ???"சரஸ்வதி கத்த,


"என்னை மிரட்டி தான் சொல்லச் சொன்னாங்க சொல்றேன்ல.  நான் உங்க புள்ளய கட்டிகிட்டதுக்கு அப்றமா காதலிக்கிறேன் சொல்லல. இந்தக் கல்யாணம் நடக்க கூடாதுனு தான் முன்னாடியே சொல்றேன்.  இப்போ நான் சொல்றதுனால யாருக்கும் எந்த பாதிப்பும் இல்ல இங்க " என்றாள்.


"என் புள்ளய நினைச்சி பார்த்தியா டி, அவன் உன்னை தான் விரும்புறான். கட்டிக் கிட்டா உன்னை தான் கட்டிப்பேன் பிடிவாதமா இருக்கான் அவன் மனசு உடைஞ்சு போகாதா ???  எந்தப் பாதிப்பும் இல்லங்கற, உன்னையே விரும்புறவனுக்கு என்ன சொல்ல போற???"என தன் இளையமகனுக்காக  பேசினார் சரஸ்வதி.


அதை கேட்டு நக்கலாக சிரித்தவள்"உங்க பையன் என்னைய  காதலிக்கிறான். இதை நான் நம்பணும்??. உங்க புள்ளை  என்னை பழிவாங்க தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான். அவன் ஒன்னும் என்னை காதலிக்கல, அவன் கிட்ட போய் நான் கெஞ்சி நான் இந்தக் கல்யாணத்த நிறுத்தனு சொல்லணும்னு எதிர்பார்கிறான். 


அவன் ஒன்னும் என்னை நேசிக்கல. உங்க புள்ள நேசிக்கிறான் பதறிங்க, அவன் மனசு உடைஞ்சு போயிடும் கவலைப்படுறீங்க. நானும் இந்த வீட்டுப் பொண்ணு தான் எனக்கும் மனசு  இருக்கு. நானும் எகாவ காதலிக்கிறேன் , அவனை விட்டுட்டு உங்க புள்ளைய கல்யாணம் பண்ணினா என் மனசு உடையாதா?? அது என்ன அவனுக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம், ஆம்பள பிள்ளைனா துடிப்பீங்க, பொட்ட பிள்ளைங்க நான் எக்கேடு கேட்டு போனா என்ன அதானே !!"என்றதும் வாயை மூடிக்  கொண்டார்.


"பெரியவங்கள எதிர்த்து பேசாத வஸ்தி !!!  உனக்கு தான் கல்யாணம் முடிவாகிடுச்சில. அதை அவங்க கிட்ட சொல்லாம, உன்னைப் பொண்ணு  கேட்க கையோட கூட்டிட்டு வத்திருக்க இதெல்லாம் ஒரு பொண்ணு பண்ற காரியமா???? "அகல்யா தன் மகளை கடிந்தார்.



இன்னும் தன்னையும் தன் காதலையும் புரிந்து கொள்ளாத அன்னையைப் பார்க்க கூட அவளுக்கு விருப்பமில்லை. அவர் பக்கம் திரும்பக் கூட இல்லை. கண்களை மூடி தன் கோபத்தை அடக்கினாள். அவளைப் பார்த்து கொண்டிருந்த எகா எழ முடியாமல் எழுந்து நிற்க அவனை தாங்கினாள் வஸ்தி.


"தப்பு தான் ஆன்ட்டி. நாங்க காதலிச்ச விஷயத்தை முன்னாடியே சொல்லிருக்கணும். அதுக்கான வாய்ப்பு வஸ்திக்கு அமையலனு சொல்லறதா? இல்ல கிடைக்கலனு சொல்லறதா?  எனக்கு சரியா சொல்ல தெரியல. 


அந்த வாய்ப்பு அவளுக்கு கிடைச்சிருந்தா கண்டிப்பா அவ சொல்லிருப்பா ஆன்ட்டி.


சரி அவ தான் சொல்லல அவ மேலயே தப்பு இருக்குனு வச்சிப்போம். அவ சொல்லாம விட்டதுக்காக  நான் மன்னிப்பு கேட்டுகிறேன். ப்ளீஸ் ஆன்ட்டி இப்போ அந்த வாய்ப்ப எங்களுக்கு கொடுங்க"என கேட்டதும் அவராலும் அடுத்து பேச முடியவில்லை  அமைதியானார் 


"பெரியவங்க எல்லாரும் எங்களை மன்னிக்கணும். அவளோ இல்ல நாங்களோ உங்களை ஹார்ட் பண்ணிருந்தா வெரி ஸாரி. ஆனா ப்ளீஸ் எங்க காதலை அக்சப்ட் பண்ணிக்கணும் நீங்க எல்லாரும். வஸ்தி என்னை தான் மனசுல நினைச்சிட்டு இருக்கா, அவன் மனசுல நான் இருக்கும் போது உங்க புள்ளைய அவளுக்கு கட்டி வைக்கிறது உங்க புள்ளைக்கு நீங்க செய்ற துரோகம் மா. அதை தெரிந்தே செய்யாதீங்க??? 


நீங்க சைத்து தான் வஸ்தியை பார்த்துப்பான் நம்புறீங்களா ஆன்ட்டி??ஆனா அவனை விட உங்க பொண்ண அதிகம் நேசிக்கறது நான். என் அம்மாவ போலவும் என் குழந்தை போலவும்  அவளை நான் நிச்சயமா பார்த்துப்பேன்.  நீங்க என்னை நம்புங்க ஆன்ட்டி. நம்பி உங்க பொண்ண கொடுங்க, வாழ்ந்து காட்றோம்" என்று அவர்களுக்கு சொல்வது போல தன்னை தாங்கி நிற்கும் வஸ்தியின் கண்களை பார்த்து சொன்னான். அவளும் அவனை இமைக்க மறந்து  கண்கள் கலங்க பார்த்து  நின்றாள். அவளது கண்ணீரை துடைத்து விட்டான்.

இந்தக் காட்சி சரஸ்வதியை தவிர அனைவரைக்கும் பிடித்திருந்தது. 


சாந்திக்கு தன் மகனை பற்றி நன்றாக தெரியும். அன்று சம்மதம் சொன்னது கூட விரும்பமில்லாமல் தான் சொன்னான்.  இன்று வஸ்தியை எகா பார்த்த பார்வையில் வழிந்த காதல் அன்று சம்மதம் சொன்ன சைத்துவின் கண்களில்லை. வெறும் ஒரு குரூரம் மட்டும் தான் இருந்தது. அன்றிலிருந்து அவருக்கு அது உறுத்தலாக தான் இருந்தது. இன்று அது மிக தெளிவானது  தெளிந்தது. 


வஸ்திக்கு தன் மகனை விட எகாவே சிறந்தவன் என்று முடிவு செய்தார். ஆனா ஏனோ அக்காவை மீறி சொல்ல தயக்கம், அதே தயக்கம் தான் பிரபுவுக்கும் தேவனுக்கும். 


அகல்யாவிற்கு எகாவை பிடித்திருந்தாலும், அவரை எதிர்த்து அவளை கட்டிக் கொடுக்க முடியுமா??? அப்படி கொடுத்தால், தன் இரண்டாவது மகளை சைத்துவுக்கு கேட்டு விடுவாரோ என்ற பயம் இருந்தது. 


அன்று  ஏதோ பேச்சுவாக்கில் வஸ்தியை விட பிரகதியே அமைதியானவள், அவளை கூட சைத்துவிற்கு பேசி முடிக்கலாம் என்று தன் சொந்தக்கார பெண்ணிடம் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டு விட்டார். 


அன்றிலிருந்தே அவருக்கு அதை நினைத்து பயமாகத் தான் இருந்தது. ஆனால் அந்தப் பயத்தை போக்க , வஸ்தியை அவர் பெண் கேட்டதும் சம்மதம் என சொல்லிவிட்டார். ஆனால் வஸ்தி திருமணத்தை மறுக்க,  அவர் கொண்ட பயத்தை வைத்து மிரட்டி அவளை சம்மதிக்க வைத்தார். 


இன்றோ வஸ்தியின் மீறலால். எங்கே தன் மகனுக்கு பிரகதியைக் கேட்டு விடுவாரோ என்ற அச்சம் மேலோங்க எதுவும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். 


சரஸ்வதி, "எல்லாம் சரி தான். ஆனா, நீங்க எங்க ஆளுங்க தானா?? முக்கியமா இந்த பையன் எங்க இனம் தானா???"எனக் கேட்டு விஷ்ணுவையும் மகிழையும் அதிர வைத்தார். 


வஸ்திக்கு கோபம் வந்து பேச எத்தனிக்க, அவள் தோளை அழுத்தி பேசாதே என்று கண்களை காமித்தவன், தன் மாமனைப் பார்த்தான். அவர் கண் ஜாடையைக் காட்டிவிட்டு சரஸ்வதிக்கு பதில் அழிக்கும் முன்பே அவருக்கு பின்னே இருந்து ஒரு குரல் வந்தது. வேற யாருமில்லை வைஷு தான், 


" ஏன் மேடமுக்கு என்னை பெண் பார்க்க வரும் போது தெரியாதா நாங்க உங்க ஆளுங்க தானு??? அதெல்லாம் பார்த்து தான என்னை பொண்ணுப் பார்க்க வந்தீங்க. நாங்க உங்க இனம்னா என் மாமா எகாவும் உங்க இனம் தான் சரஸ்வதி மேடம்" என்றால் ஒருவித நக்கலுடன். 


அவள் சொன்ன செய்தி அவருக்கும் பிரபுவுக்கும் தவிர மற்ற அனைவருக்கும் புதிதாக இருந்தது. ஏன் சைத்துவிற்கு  கூட,  சரஸ்வதியைக் கேள்வியாகப்  பார்த்தான்.  


தன்னை எதிர்த்து  கேள்வி கேட்டு வரும் வைஷுவை தீயாக முறைத்தார். அவளது கேள்வியில் வாயடைத்தும் போனார்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2