இதயம் - 14

 இதயம் 14

வஸ்தியின் உண்மை நிலை தெரிந்த பின் சரஸ்வதியின் மேலும் சைத்துவின் மேலும் கொள்ளை கோபம்  வந்தது வைஷுவிற்கு. ஆனால் அந்த கோபம் எகா , வஸ்தியின் காதலை அழிக்கக் கூடும் என்பதில் அவள் தெளிவாக இருக்க, சரஸ்வதி, சைத்து யாராவது ஒருவரிடம் பேச எண்ணினாள்.


சரஸ்வதியிடம் பேசுவதும் சுவரைப் பார்த்து கத்துவதும் ஒண்ணுதான் எந்தப் பயனுமில்லை. அதனால் சைத்துவிடம் பேச நினைத்தாள். அவன் தன் வயதில் இருப்பவன். சைக்கோ என்றாலும் காதலை எதிர்ப்பவன் அல்ல என்று உள்ளுக்குள் ஓரத்தில் அவன் மேல் நம்பிக்கை இருந்தது அவளுக்கு.


மருத்துவமனையிலிருந்து அவனுக்கு அழைத்து ' பேச வேண்டும்' என்று மொட்டையாகச் சொன்னாள். அவனோ யோசித்து விட்டு, 'டான்ஸ் வொர்லட்' அவனது நடனப் பள்ளிக்கே வரச் சொன்னான்.


வஸ்தி, எகாவிடம் சொல்லாமலே அங்கே சென்றாள். எந்த ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக  இருந்தது அந்த நடனப்பள்ளியின் வரவேற்பு அறை...  சுற்றி நடனமாடும் ஆண் பெண்கள் புகைப்படங்களே இருந்தன.  அதைப் பார்த்த வண்ணமே வந்தவளை 'மிஸ்' என்று அழைக்க திரும்பி  பார்த்தாள். ஒரு இளைஞன் நின்றிருந்தான்..


"மிஸ் உங்களுக்கு என்ன வேணும்??"


"மிஸ்டர் சைத்தன்யாவை பார்க்கணும்"என்றிட, அவனோ அவன் இருக்கும் அறைக்கு வழிச் சொன்னான். அவளும் அவனிருக்கும் அறைக்குச்  சென்றாள்.


பாடல் ஒலித்தாலும் அவனது குரலும்  அந்த அறையில் தனியாகவே கேட்டது.. புஜங்கள் முறுக்கேறி பிதுங்கி நிற்க கையில்லா பனியன் அணிந்திருந்தான். வியர்வைத் திவலை நனைந்திருப்பதையும் கூட பொருட்படுத்தாது  மாணவர்களுக்கு சொல்லித் தருவதில் தீவிரமாக இருந்தான்.


விழியாகற்றாமல் அவன் ஆடுவதை தன்னை மறந்து ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.


தன்னை யாரோ பார்ப்பது போலிருக்க, திரும்பியவனின் கண்ணில் பட்டது வைஷு. மாணவர்களை பார்த்து கொள்ள சொன்னவன், அவள் அருகில் நெருங்க, இவளோ அவனை மட்டுமே பார்த்துக் கொண்டு நின்றாள். 


அவன் அருகே வந்த பின் தான். அவனையே பார்த்து கொண்டிருக்கிறோம் என்று தெரிய அருகே வந்து தலையை தாழ்த்தி நின்றாள். 


"சைட் அடிக்கற அளவுக்கா இந்த சைக்கோ இருக்கேன்???"என யோசிப்பது போல கேட்டு வைத்தான். 


"டான்ஸ் நல்ல ஆடுன... சோ"என்று அவள் நிறுத்திக் கொள்ள,  அவன் பிடித்துக் கொண்டு "சோ????"


"சோ... பார்த்தேன் அவ்வளவு தான். சிலர் அழகா இல்லேனாலும் அவங்க திறமை அவங்களை அழகா காட்டும் மிஸ்டர் சைக்கோ !!!! உன் திறமை உன்னை ரொம்ப அழகா காட்டுது. யூ லுக் ஹாண்ட்சம் மேன்"என்று வெட்கத்தை விட்டுச் சொன்னாள்.


"தேங்க்ஸ், என்ன பேசணும்???" என்றிட, அவள்"காஃபி???"என்றாள். அவனும் 'ம்ம்'என்றவன் உள்ளே சென்று பத்துநிமிடங்களில் அவன் வெளியே வர இருவரும் பக்கத்திலிருந்த காஃபி சாப்பிற்குள் நுழைந்தனர். 


ஆடர் கொடுத்துட்டு அவன் அவளை பார்த்திருக்க, அவளும் அவளை தான் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.


"ஒரு நாள்லே என் டான்ஸ் பார்த்ததும் எனக்கு ஃபேனாக்கிட்டீயோ !!!"என கேலியாக கேட்கவும் புன்னகை செய்தவள் நேராக விஷயத்துக்கு வந்தாள்,


"சைத்து, உனக்கு இது தெரியாது. ஆனா ப்ளீஸ் புரிஞ்சுக்க ட்ரைப்பண்ணு. இன்னொருத்தன் பொருளை தனக்கு சொந்தமாக்க நினைக்கறதே தப்பு. அதே போல தான் இன்னொருத்தன் காதலிய உன் மனைவியாக்க நினைக்கிறது ரொம்ப பெரிய தப்பு ஆண்ட் பாவமும்  கூட, சோ நீ பிரவஸ்திய கல்யாணம் பண்ற ஐடியாவ விட்டுடு. அவ எகாந்த லவ் பண்றா. அவன் கூட தான் வாழணும் ஆசைப்படுறா அதுனால இந்தக் கல்யாணம் வேணாம் நிறுத்திடு!! சைத்து" என்றாள்.


"ஒ... லவ் வேறயா??? லவ் பண்றவ என்னை ஏன் ஏமாத்தணும்?? எனக்கு ஏன் ஓகே சொன்னா???" என தாடையை தடவிக் கொண்டு கேட்டான்.


"எல்லாம் உங்க அத்தையும் பெரியம்மா செய்ற சதி  தான்..."


"ஓ... எல்லாத்தையும் போல்டா ஃபேஸ் பண்றவ தானே அவ,  அவ லவ்வ வீட்ல சொல்லிட வேண்டியது தான??? எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லணும்?? என்னை மணமேடையில உட்கார வச்சிட்டு இவ  ஓடவா???"அவள் தன்னை ஏமாத்தி விட்டாள் என்ற கோபத்தில் பற்களை அரைத்தான்.


"அவ உன்னை ஏமாத்த நினைக்கல, கல்யாணம் வேணாம் தான் சொல்லிருக்கா, ஆனா அவங்க அம்மா,  அவ தங்கச்சிய உனக்கு கட்டி வச்சிடுவேன்  சொல்லி மிரட்டுனதுனால  தான் அப்படி சொல்லிருக்கா"என்று விளக்கினாள்.


அதில் அவனுக்கு மேலும் கோபம் வந்தது வீட்டினர் மேல் . தன்னை பார்த்தால் தலை ஆட்டுற பூம் பூம் மாடாக தெரியுதா இவர்களுக்கு, இவங்க யாரா காட்டினாலும் கட்டிக்கிறதுக்கு???' உள்ளுக்குள் அவனுக்கு கனன்றது. 'அவர்களுக்கு இருக்கு ' என்று  எண்ணிக் கொண்டவன்.  தன் பதிலை ஆர்வத்துடன்

எதிர்பார்க்கும வைஷுவின் முகத்தை குறும்பாக பார்த்துச் சிரித்தவன், அந்தக் கோபத்திலும் மனம் அவளை வம்பிழுக்கச் சொல்ல, அதை செய்ய ஆரம்பித்தான்.


"ம்ம்... வஸ்தி தான் சொல்லல நீயாவது சொன்னீயே !! சரி ஓகே எனக்கு வஸ்தி வேணாம் சொல்லி இந்தக் கல்யாணத்த நிறுத்திடுறேன். வஸ்திய உன் கசினே கல்யாணம் பண்ணிக்கட்டும். நான் அதுக்கு தடையா இருக்க மாட்டேன்.பட் என்னை யார் கல்யாணம் பண்ணிப்பா??? எனக்கு யார் பொண்ணு தருவா???? பிரகதி கொழுந்த சோ  வாய்ப்பில்லை.. ம்ம்ம்... பேசாம

என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறீயா?? " என கேட்டு அவளை அதிர வைத்தான்.


'என்ன??' என முழிக்க, " என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறீனா சொல்லு இந்தக் கல்யாணத்தை நான் நிறுத்துறேன்" என்றான்.


அவள் யோசிக்க உதட்டைக் கடித்து தன் சிரிப்பை அடக்கினான் சைத்து. சுடச்சுட தன் முன்னிருந்த காஃபியை பருகினான்.


" சரி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றதும் 

பருகிய தேநீர் வெளியேற புரையேறியது  அவனுக்கு.  தன் எதிரே அமர்ந்தவளின் பதிலால். ஆனால் அவளோ சலனமில்லாமல் அவனையே பார்த்திருந்தாள்.


"ஆர் யூ ஸ்யர்???" எனக் கேட்க, அவளோ கைகளை கட்டி அவனை சன்னமமாக முறைத்தவள், "இந்த சோறு குழம்பு வேலை எல்லாம் இங்க வேணாம்... உனக்கு எனக்கும்...." என உதட்டை பிதுக்கியவள், "அதவிட எனக்கு  உன் பெரியம்மாக்கும் தினமும் மூன்றாம் நான்காம்  போரே வந்தாலும் வியப்பில்ல. இந்த சில்லி கொஸ்டின்ல  இந்த சில்வண்டை எல்லாம் சிக்க வைக்க முடியாது சைக்கோ"என்றிட, அவனும் அசட்டையாக தோளை குலுக்கினான். 


"எனக்கு பொண்ணு  யார் தருவா??? எனக்கு பொண்ணு கிடைக்குமா??? என்ற கேள்வி இங்க அவசியமே இல்ல அது உனக்கும் எனக்கும் தெரியும்.  வஸ்தி தான் இந்த  உலகத்துல  உனக்காக பொறந்தவனு 

நீயோ இல்ல உன் பெரியம்மாவோ நினைச்சிட்டு இருந்தா !!!! நினைச்சிட்டு மட்டுமே இருக்க வேண்டியது தான். அவ  உனக்கு படைக்க பட்டவ இல்ல... உனக்குனு உன் தலையெழுத்துல எழுதி வச்சிருக்க பொண்ண சீக்கிரமா நீ மீட் பண்ணுவ, இல்ல உன் பெரியம்மா கடைஞ்சு எடுப்பாங்க...  ஆனா அது வஸ்தியோ டாம் ஸ்யூர் நானோ இல்ல. சோ தேவை இல்லாதத யோசிக்காம,  இந்தக் கல்யாணத்த நிறுத்த பார் !! இது லைஃப் மேட்டர் கொஞ்சம் யோசி"என்றாள். 


தாடையை தடவிய படி யோசித்தவன், "வெல் !!! நீ சொன்னதையும் யோசித்தேன். அக்சுவலி எனக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பமில்ல, அவ வந்து என் கிட்ட ஸாரி கேட்டு இந்த கல்யாணத்த நிறுத்திடுனு கெஞ்சணும் தான், நான் ஓகே சொல்றது போல சொன்னேன். அவ எங்கிட்ட ஸாரி சொல்லி கெஞ்சினா போதும், நான் மேரேஜ கேன்சல் பண்ணிடுவேன்"என்று படு கூலாக சொல்ல, அவளோ வாயை பிளாந்தாள்.


"அட சண்டாளா !!!! உன்னால ஒரு லவ்வ்ர்ஸ் அநேகமாக பிரிஞ்சி இருப்பாங்கடா, அவங்களோட சாபத்தை  வாங்கி இருப்ப !! சைக்கோ வா இரு ! ஆனா ஒருத்தோரோட வாழ்க்கைய அளிக்கறளவு மிருகமா இருக்காத !!! உனக்கு வஸ்திக்கும் தனிப்பட்ட மனஸ்தாபம் இருக்கலாம் அந்தக் கணக்கை தீர்த்துக்க, அவங்க வாழ்க்கை தான் கிடைச்சதா??? இதுல வஸ்தி வாழ்க்கை மட்டுமில்ல எந்த தப்பும் செய்யாத என் எகா வாழ்க்கையும் அடங்கி இருக்கு. உன் டார்கெட் வஸ்தி  தானே !! என் எகா என்ன பண்ணினான்?? உன் ஒருத்தன் கோபத்தால அவன் வாழ்க்கையும் சேர்ந்து அழியணுமா? அதுக்கு நான் விட மாட்டேன்.  உனக்கு விருப்பம் இல்லன்ற உண்மைய உன் பேரண்டஸ் , உன் பெரியம்மா கிட்ட சொல்லி இந்த கல்யாணத்த ஸ்டாப் பண்ணு சைத்து. இந்த விளையாட்டெல்லாம் வேணாம்"என்றாள்  ஆத்திரத்தோடு.


"ஓ... அப்போ நீ வஸ்திக்காக பேச வரல உன் எகாக்காக பேச வந்திருக்க ரைட்???"


"யா... அஃப்கோர்ஸ். நான் என் எகாக்காக தான் பேச வந்தேன். என் எகா நல்லா இருக்க நான் என்ன வேணா செய்வேன் ஸாரி சொல்லணும்னா கூட சொல்லுவேன். சண்டை போடணும்னா கூட போடுவேன்  எனித்தங் எல்ஸ் ஃபோர் மை எகாந்த்"என அவள் கூறக் கேட்டதுமே அவனுக்கு கடுப்பாகி போனது. 


பல்லைகடித்து தன்னை சமன் செய்தவன், "என் எகா என் எகா வார்த்தைக்கு வார்த்தை சொல்ற,  டூ யூ லவ் ஹிம்????"என தன் சந்தேகத்தை கேட்க, பட்டென அவளும்" எஸ் ஐ லவ் ஹிம்" என்றாள் அவன் அதிர்ந்து விட்டான்.



இங்கோ வஸ்தி,  அகல்யா , சரஸ்வதி மற்றும் தன் குடும்ப உறுப்பினர்கள் முன் எகாந்தைக் காட்டி " நான் இவனை தான் காதலிக்கிறேன், இவனை தான் கல்யாணம்

 செய்துக்கப் போறேன்"என்று கூறி அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினாள் வஸ்தி.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2