இதயம் - 13

இதயம் - 13

 வைஷு பேசியதில் அதிர்ந்து போய் நின்றாள் வஸ்தி. 'காதல் டராமாவா???' 'சரஸ்வதி மருமக??' இரண்டும் அவளை அதிர தான் வைத்தது.


"எங்க அத்தைய உனக்கு தெரியுமா???" என தன் சந்தேகத்தை கேட்டாள்.


"ம்ம்... தெரியும், நீங்க உங்க சொந்தக்கார பொண்ணோட கல்யாணத்துக்கு வரல. ஆனா, சைத்துவோட உங்க பேமிலியையும் பார்த்தேன். சைத்து உங்க ரிலேஷனா இருந்தா, அந்த சரஸ்வதியும் உங்க ரிலேஷனா இருப்பாங்கனு புரிஞ்சுகிட்டேன். சரஸ்வதி,  அவங்க  புள்ளைக்கு என்னை பொண்ணு கேட்டு வரும் போது அவங்களையும் அவங்க கேரக்டர் தெரிஞ்சு கிட்டேன். அந்த கல்யாணத்துலையும் அவங்களோட கேரக்டர் தெரிஞ்சிக்கிட்டேன். அவங்க சுயநலவாதி பளஸ் இந்த காலத்துக்கு சுத்தமா செட்டே ஆகாத உமன்னா அது அவங்க தான்.  பொய்னு சொல்லாதீங்க???" என்றாள்.


பதிலுக்கு சிரித்தவள்" நான் ஏன் பொய் சொல்லப் போறேன்? எல்லாம் உண்மை தான். அவங்க பேச்சை கேட்கணும் அவங்க முடிவை தான் மதிச்சி  நடக்கணும் . மீறினா குடும்பத்தை விட்டு ஒதுக்கி வச்சிடுவாங்க, இல்ல அடிப்பணிய வச்சிடுவாங்க... சரி என்னை ஏன் சரஸ்வதி மருமக தான? அவங்களை போல தான் இருப்பேன்.  எதவச்சி அப்படி சொல்ற நீ???  எந்த விதத்துல நாங்க அவங்களை போல இருக்கேன்"  என்று தன் சந்தேகத்தை கேட்டாள் வஸ்தி.



"ஆமா, நீங்களும் சுயநலவாதி தான் என் எகாவ  உங்க  தேவைக்கு நல்ல யூஸ் பண்ணிட்டு, வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க போறீங்க...  கல்யாணம் பண்ணுங்க. ஆனா, எதுக்கு சிம்பதி கிரியேட் பண்ணிட்டு இருக்கீங்க.. நான் உன்னை தான் காதலிக்கிறேன், ஆனா அந்த  பொய்ய ஏத்துக்கிட்டு தான் ஆகணும்.  உங்கமேல தப்பில்லாதது போல காட்டி நல்லவ போல நடிச்சி உங்க தேவை கிடைத்ததும் அவனை கழட்டிவிட்டீங்க..." என்று  ஆத்திரம் தாங்காமல்  உள்ளிருந்த   சினத்தை வார்த்தையை  கொட்டிவிட்டாள்.


அதை கேட்டு வஸ்தி கோபம் கொள்ளாமல் விரக்தியில் புன்னகைத்தவள், " நீங்க அத்தை பத்தி சொன்னது எல்லாம் அப்சலுட்லி கரெக்ட். ஆனா என்னை பத்தி சொன்னது முழுக்க முழுக்கத் தப்பு. நான் இப்பையும் சொல்றேன் எப்பையும் சொல்றேன் நான் காந்த் தான் காதலிக்கிறேன்.  எனக்கு இந்த கல்யாணம் வேணாம்  சொல்லி பார்த்துட்டேன். ஆனா என் முட்டாள் குடும்பம் கேட்கல. நான் கல்யாணம் வேணாம் சொன்னா, என் தங்கச்சிய அந்த சைக்கோக்கு கட்டி வச்சிடுவேன் எங்க அம்மா மிரட்றாங்க. நான் கல்யாணம் பண்ணிக்கலேனா, என் தங்கச்சி பலியாகிடுவா !!! அந்த  சைக்கோ அவளை சின்ன பிள்ளைனு பார்க்காது  கட்டிப்பான் அதுவும் என்னை பழிவாங்க. ஏன் இந்தக் கல்யாணத்துக்கு அவன்  ஒத்துக்கிட்டது கூட என்னை பழிவாங்க தான். என் தங்கச்சிக்காக தான் என் காதலையும் விடுத்து கல்யாணம் பண்றேன்" தன் பக்க விளக்கத்தை கொடுத்தாள்.


அவள் விழிகளை ஆராய்ந்தாள் வைஷு அதில் துளியும் பொய் இல்லை. அதை வைஷூவும் நம்பினாள்.


"சின்ன பொண்ண வச்சி, பிளாக் மெயில் பண்றாங்களா உங்க பேமிலி !!! இதுல சரஸ்வதி, சைக்கோ அவங்க  பெயரை கேட்டாலே கட்டுப்பாகுது!!! " என்றாள் வைஷு 'தினமும் கட்டி அழறோமே ' என்ற எண்ணம் வர, சிரிக்க மட்டுமே முடிந்தது அவளால்.


"அப்போ எங்க எகா???அவன் வாழ்க்கை??" என கேட்கும் போதே அவளுக்கு நெஞ்சையடைத்து கண்ணீல் நீர் திரள நின்றாள்.


"வைஷூ...."என முணங்கினான்  எகாந்த். அவன் அருகே சென்று "எகா"என்றவள் அவன் முனங்களை கேட்டாள்.


"அவங்களை எதுவும் சொல்லாத ப்ளீஸ் !!! அவங்க அவங்க வீட்ல சொன்ன பையனை கல்யாணம் பண்ணிக்கட்டும்.. தெரிஞ்ச அந்த பொண்ணோட வாழ்க்கைய எங்க  காதலுக்காக பலி கொடுக்கணுமா விடு "  விழியை திறக்காமல் நெஞ்சில் ஏற்பட்ட வலியிலும் அதனால் வடிந்த கண்ணீருடன்  சொன்னான் எகாந்த.


அவன் அவ்வாறு கூற வஸ்தியின் கண்களும் கலங்கி இருவரையும் பார்க்க பாவமாக இருந்தது. சரஸ்வதி,  சைத்துவின் மேல் கோபம் வந்தது.


"ப்ளீஸ் அழாதீங்க பிரவஸ்தி !!!" அவள் அழுவதை அறிந்து சொல்ல, அவனது' பிரவஸ்தி' என்ற அழைப்பு  உள்ளுக்குள் அடிவாங்கியது போல இருந்தது.


"ஸாரி பிரவஸ்தி, வைஷு என்ன சொல்லிருந்தாலும் அதுக்கு நான் ஸாரி சொல்லிக்கிறேன். என் மேல் இருக்க  அக்கறையில உண்மை தெரியாம பேசிட்டாள். ஸாரி" என்றான் மூணாவது மனுஷியிடம் பேசுவது போல பேசினான் அவன் அவனையே வெறித்தாள் அவள். 


"எனக்கு ஒண்ணுமில்ல பிரவஸ்தி, சும்மா கால்ல தான் அடி ஒன்வீக்ல சரியாகிடும். நீங்க இதை எல்லாம் நினைச்சி கவலைப்படாதீங்க. உங்க ஃபியூசர், பத்தி மட்டும் யோசிங்க... என்னை ஜஸ்ட் பாசிங்க கிளவுட் கிர்ஸ் நினைச்சிக்கங்க... 

அண்ட் மதிமா உங்களை கேட்டான். ப்ளீஸ் வேலை விட்டு நிக்காதீங்க கண்டினியூ பண்ணுங்க ஒரு ஆட்டோ அரேஞ்ச் பண்ணிக்கங்க போக ஈஸியா !!!"என்று அ(ச)க்கறையாகப் பேசினான்.


அவனை வேற்று கிரகவாசி போல பார்த்து வைத்தாள் வைஷு.'இவனெல்லாம் அக்கமார்க் 90ஸ்' கிட்டு தான். காதல் தோல்வி ஆகிடுச்சி,  வீட்லே பார்க்கற பையனை தான் கல்யாணம் பணிக்கப் போறேன் சொல்றாங்க.  கோபம் வந்து அலப்பறை கூட்டுவான் பார்த்தால் அக்கறையா பேசிட்டு இருக்கான். இவன் தேற மாட்டான் இவன் இப்படி இருந்தா இவங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறேன் தான் போவாங்க , பழமா இருக்கீயே டா எகா !!' என தலையில் அடித்துக் கொண்டாள் வைஷு.


பிரவஸ்திகோ கோபம் தாளவில்லை அவனது 'பிரதி' இல்லாமல் ' பிரவஸ்தி'  என்று அழைத்தே வெறி ஏத்த ,  தன் கைப்பை கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தாள்.


"பிரவஸ்தியா, நான் உனக்கு பிரவஸ்தியா???" என்று முதுகிலே மொத்தினாள். "உன் பெயர் பிரவஸ்தி தானடி அதை தான் சொன்னேன். ஐயோ அம்மா !!!" என்று அலறினான்.


வைஷு வஸ்தியின் அவதாரத்தை கண்டு முதல் பயந்து போனாள். அவளது கோபத்தில் அவளது உண்மையான காரணத்தை உணர்ந்தாள். அவள் மேல் இருந்த சிறு சங்கடமும் விலக எகா அடிவாங்கும் கண் கொள்ளா காட்சியை கண்டு களித்தாள்.


"மத்தவங்களுக்கு தான் அது...  உனக்கு என்ன டா??? ஏதோ மூணாவது மனுஷி கூப்பிடறது போல பிரவஸ்திங்கற" மேலும் இரண்டு அடி போட்டாள்.


"நீ இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கப் போற, அப்போ எனக்கு நீ மூணாவது மனுஷி தான நீ!!!" 


"ஓ.... மூணாவது மனுஷில நான்!!!மூணாவது மனுஷில" அடியை மேலும் கூட்டினாள்.


"அம்மா... அப்பா... அடியே நான் பேசண்ட்டுடி இந்த அடி அடிக்கற???வலிக்குதுடி" என்று முதுகைப் பிடித்தான்.


"வலிக்கணும் என் வலிய புரிஞ்சுக்கணும் தான் டா அடிக்கிறேன். முன்னாள் காதலினு சொன்னா கூட மனசு ஆறி இருக்கும். ஆனா முணாவது மனுஷினு சொல்லி என் வெறி ஏத்திட்ட. உன்னை கொல்லாம விட மாட்டேன்டா" என்று முடியைப் பிடித்து ஆட்டினாள்.


"நீ மட்டும் என் தங்கச்சி முக்கியம் போன, அப்போ எனக்கு எப்படி இருக்கும்???"


"ஓ... சார் பழிவாங்குறீங்களோ!!!" 


"ஆமான்டி என்னடி பண்ணுவ??" என்று எகிறியவனைக்  குனியவைத்து முதுகில் போட்டவள்,"நீ என்ன பண்ணுவீயோ ஏது பண்ணுவீயோ  உடனே குடும்பத்தோட வந்து பொண்ணு கேக்குற???"


"அப்போ உன் தங்கச்சி???" 


"வீட்ல ஒத்துக்கிறாங்களா பார்ப்போம் இல்லையா நான் என் தங்கச்சியை கூட்டிட்டு வந்துடுறேன் நீ தான் எங்க ரெண்டு பேரையும் பார்க்கணும்..." என்றாள்.


"ஓகே... டபுளா வந்தா எனக்கு சந்தோசம் தான்..." என்றவனை மேலும் அடிக்க ஓங்க அவளை இழுத்து மடியில் போட்டு அவள் இதழை சட்டென சிறை செய்தான்.

முதல் அவனது புஜங்களை அடித்து கிள்ளி வைத்தவள் மெல்ல பற்ற ஆரம்பித்தாள். இருவரின் இதழமும் எச்சிலும் ஒன்றென கலக்க ஆரம்பித்தன.


'அடப்பாவி இப்போ தான் உன்னை பழம் சொன்னேன்... அது தப்பாடா, ஆனா நீ பிஸ்தாவா இருக்கீயே ! பச்சை பிள்ளைய வச்சிட்டு பாரின் கிஸ்ஸெல்லாம் அடிக்கறான் பாவி !!!'



"டேய் டேய் எகா!!! நான் இன்னும் போகல இங்க தான் இருக்கேன். ஒரு சிங்கள்ல வச்சிட்டு இந்த மாதிரி சீன்'னெல்லாம்  ஓட்டாதீங்க டா என் குட்டி நெஞ்சு தாங்கற சைஸ் இல்லடா!!!" என்றவள் புலம்ப ,


"ஏய் சீ டிஸ்டர்ப் பண்ணாம கிளம்புடி"என்றவன் மீண்டும் தன் பணியைத் தொடர," எல்லாம் நேரம் டா !!! "என்று புலம்பிய படி தன் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அவர்கள் முத்தங்களோ நீண்டன.

****

"சொல்லு !!! எதுக்கு வர சொன்னா" கடுப்பில் நெற்றியைத் தேய்த்து கொண்டு கேட்டான். "இன்னொருத்தன் பொருளை தனக்கு சொந்தமாக்க நினைக்கறது தப்பு. அதே போல இன்னொருத்தன் காதலிய உன் மனைவியாக்க நினைக்கிறது ரொம்ப பெரிய தப்பு பாவம். சோ பிரவஸ்திய கல்யாணம் பண்ற ஐடியாவ விட்டுடு. அவ எகாந்த் லவ் பண்றா அவன் கூட வாழ ஆசைப்படுறா அதுனால இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு!! என்றாள்.


"ஒ... சரி நிறுத்திடுறேன். வஸ்திய உன் கசினே கல்யாணம் பண்ணிக்கட்டும். நான் தடையா இருக்க மாட்டேன்.பட் என்னை யார் கல்யாணம் பண்ணிப்பா??? எனக்கு யார் பொண்ணு தருவா???? நீ பண்ணிக்கிறீயா?? "


'என்ன??' என முழிக்க, " என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறீனா சொல்லு இந்தக் கல்யாணத்தை நான் நிறுத்துறேன்" என்றான். முதலில் யோசித்தவள், பிறகு" சரி நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றதும் அவனுக்கு புரை ஏற கண்கள் கலங்க அவளை பார்த்தான். சலனமில்லாமல் அவனை பார்த்தாள்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2