இதயம் - 12

 இதயம் - 12

தன் காதலைச் சொல்லி விட்டு அவன் விடைபெற்றாலும்  அவளால் அவ்விடத்தை விட்டு துளியும் நகர முடியவில்லை. மனமோ அவனுடனே சென்றிருக்க, வெறும் கூடாய் அவளது மெய் அவ்விடத்தில் ஆணி அடித்தாற் போல் நின்றது.


தேதி, கிழமை, நாள் என எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்து ஒரு வழியாக அவனது சொல்லாத காதல் பாரத்தைச் சொல்லி இறக்கி வைக்க, அவளுக்கு இப்போது இரு மடங்கானது காதல் பாரம் .


என்னதான் நாளைக்கு என்றாலும் காதல் பாரம் அவளை அழுத்த தான் செய்தது. அவனிடம், அவன் சொன்ன நொடியே 'காதலைச் சொல்லி இருக்கலாம்' என்று மனம்  எண்ணியது. அவன் சென்ற பின் ஒவ்வொரு நொடியும் யுகங்களாக பாரம் சுமப்பவளைப் போல  தன்னை தானே எண்ணினாள்.


'எதற்கு இந்த திமிர் , கர்வம் எல்லாம்?? நாளை ஏன் சொன்னேன் ?' என்று தன்னையே  திட்டிக் கொண்யே நின்றாள் பதினைந்து நிமிடமாக. அவள் கடத்திய பதினைந்து நிமிடத்தை உணர்ந்து தலையில் அடித்து கொண்டு இல்லத்தை நோக்கி நடந்தாள்.


அதற்கு முன்னமே சரஸ்வதி, வீட்டிற்கு செல்லாது நேராக சாந்தியின் வீட்டிற்குள் நுழைந்தார் அக்காவின் திடீர் விஜயத்தைக் கண்டு குழம்பினார் சாந்தி.


"என்னக்கா திடீர்னு வந்திருக்க?? என்ன விஷயம் க்கா???" எனக் கேட்ட படி தண்ணீர் பொத்தலை கொடுத்தார்.


அதை வாங்கி பருகியவர்"ஆமாடி விஷயமா தான் வந்திருக்கேன்"என்று வாயை துடைத்து நீர் பொத்தலை மேசையில் வைத்தவர் "எல்லாம் நம்ம சைத்துவோட கல்யாணத்த பத்தி தான்டி பேச வந்திருக்கேன். அவனுக்கு இப்போ இருபத்தி ஏழாவுது. வயசு ஒத்தப்படையில் இருக்கும் போதே கல்யாணத்த பண்ணிடுவோம்.நீ என்ன சொல்ற??" 


"சரிக்கா, கல்யாணம் பண்ணலாம். எனக்கும் அதான் தோணுச்சி. ஆனா அவனுக்கு ஏத்தப் பொண்ணா பார்க்கணுமே ! இப்போ பார்க்க ஆரம்பிச்சாலும் இந்த வயசு முடியறதுக்குள்ள கிடைக்கணுமே ! இல்லேன்னா இரண்டு வருஷம் பொறுத்து தான் கல்யாணம் பண்ணனும்..."என்றவர் வருத்தமாக சொல்ல.


"இப்ப நீ ஏன் சோகமாக மொகத்த வெக்கிற, பொண்ணு இல்லாமலா, நான் அவன் கல்யாணத்த பத்தி பேச வந்திருப்பேன். பொண்ணல்லாம்  இருக்கு ஜாதகம் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிடலாம் என்ன சொல்ற??"


"யார்க்கா பொண்ணு??? நம்ம சொந்தமா???" ஆர்வமாக கேட்டார் சாந்தி.


"வேற யாருமில்லடி நம்ம வஸ்திய தான் சொல்றேன். அவளை தான் சைத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம் சொல்றேன்"என்றதும் சாந்தி அதிர்ந்து விட்டார்.


"என்னக்கா சொல்ற வஸ்தியவா, அவளுக்கும் நம்ம சைத்துக்கும் ஆகாது. அவங்க ரெண்டு பேருக்குமா கல்யாணம் பண்ணி வைக்க, வேணாம்க்கா, விருப்பம் இல்லாம கட்டி வைக்கிறது தப்பு. வேற பொண்ண பார்ப்போம்க்கா"என்றார்.


"அடியே பைத்தியம் யாருக்குடி விருப்பமில்ல??? சைத்துக்கு அவளை கட்டணும்னு தான் ஆசை . உனக்கும் எனக்கும் ஏன் அகல்யாவுக்கும் அதான் விருப்பம். அன்னைக்கி ஏதோ சண்டையில வஸ்தி சைத்துவ வேணாம்  சொல்லிட்டா !!!, அதுக்கு இப்பையும் அதே சொல்லுவாளா??கோபத்துல சொல்றதெல்லாம் பிடிச்சிட்டு தொங்காத சாந்தி நீ. அகல்யாவுக்கு போன போட்டு சைத்து வஸ்தி கல்யாணத்த பத்தி பேசணும்  சொல்லு, அவ வருவா "என்றார். 


சாந்தியும் அகல்யாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல"ரொம்ப சந்தோசம் அண்ணி. நான் வந்திடறேன்"என்று சொல்லி வைக்க, ஓரளவுக்கு அவர் திருப்தியாக இருந்தாலும் வஸ்தி என்ன சொல்வாள் என்று மனம் நெருடலாக இருந்தது.


அவருக்கு வஸ்தி என்றால் கொள்ளை பிரியம். அவள் தனக்கு மருமகளாக வந்தால் கோடி சந்தோசம் தான். ஆனால் அதில் அவளுக்கும் முழு விருப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஒரு பெண்ணாய் யோசிக்க தான் செய்தார்.அவள் வந்த பிறகு கேட்க  வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்க, சரஸ்வதி பாதி வெற்றி அடைந்தாக எண்ணிக் கொண்டார்.


அகல்யாவிற்கு சாந்தி பேசினதிலிருந்தே மனம் ஒரு கட்டுப்பாட்டில் இல்லை. அன்று நடந்ததிலிருந்து சரஸ்வதி, அவரையும் அவரது பிள்ளைகளையும் குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்து போல இருந்தது. இந்தக் கல்யாணப் பேச்சில் மீண்டும் குடும்பத்தோடு இணைந்து போல  இருந்தது. மகிழ்ச்சியில் இருந்தார்.


உடை மாற்றி வந்தாள் வஸ்தி, தாயின் முகத்தில் கண்ட இன்ப ஒளி வட்டத்தைக் கண்டு புருவம் சுருக்கி யோசித்தவள் அவர் அருகே சென்று என்னவென்று கேட்டாள்.

"என்னம்மா உன் முகம் டாலடிக்குது என்ன விஷயம்???" 


"உங்க அத்தை இன்னைக்கி நைட் உனக்கும் சைத்துக்கு கல்யாணம் பண்ற பத்தி பேச கூப்பிட்டு இருக்காங்க... ரொம்ப நாள் கழிச்சி அவங்களே இறங்கி வந்து உன் மேல அக்கறை பட்டு கல்யாணத்த பத்தி பேச வந்திருக்காங்க..அதான் சந்தோசமா இருக்குடி"என்றவரை விநோதமாகப் பார்த்தாள்.


"நீங்க எல்லாரும் என்ன பைத்தியமா???? இல்ல பைத்தியமா கேக்குறேன்??? நான் தான் தெளிவாக அவனை எனக்கு பிடிக்கல கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்  சொன்னேனே ! திரும்பவும் அதே பேசிட்டு இருக்கீங்க...  எனக்கு சைத்துவ கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல...  என்னை கேட்டால் நான் அதை தான் சொல்லப் போறேன், எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்ல..." அழுத்தமாகச் சொன்னாள்.


"வாய மூடுடி. சுத்தமா ஒட்டும் ஒறவும்  இல்லாமலே வாழணும்  முடிவு பண்ணிட்டீயோ !!! அவங்களே இறங்கி வந்து கல்யாணம் பத்தி பேசறாங்க. நீ தலைமேல நின்னு ஆடாத" 


"அதுக்காக பிடிக்காதவன கட்டிக்கிட்டு வாழ சொல்றீயா???"


"`அவனுக்கு என்ன குறைச்சல்???"


"அவன் ஒரு சைக்கோ !! அவனுக்கும் உங்க அண்ணிக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல...  அவங்களை போல அவன் உன்னை மதிச்சதே இல்ல. அவனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அத்தை, மாமியார்  உன்னை மதிப்பானு  நினைக்காத, இன்னும் உன்னை அவன் கீழா தான் பார்ப்பான். அதுவும் உங்க அண்ணி சப்போர்ட்ல... யோசிக்காம முடிவெடுத்துட்டு என்னையும் உன்னையும் போல ஆக்கிடாத" தெளிவாகச் சொன்னாள்.


"நீ நினைக்கறது போல ஆகிடாது. அப்படி பட்டவங்களும் இல்ல அவங்க. சைத்து தம்பி கல்யாணத்துக்கு அப்றம் மாறிடும். உன்னை நல்ல பார்த்துப்பாங்க..."என்றவரை நக்கலாக பார்த்தவள், "எது உன்னை இப்போ பார்க்கறது போலையா???" என்றாள்.


"தேவையில்லாம பேசாத வஸ்தி. முடிவா என்ன தான் சொல்ற நீ???"


"எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம் சொல்றேன்" என்றாள்.


"அப்போ நீ இந்த வீட்ல இருக்காத, எங்கயாவது போயிடு !!!  எனக்கு ரெண்டு பிள்ளைங்க தான் நினைச்சிக்கிறேன். பிரகதிய சைத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சிடறேன். நீ உன் இஷ்டம் போல இரு " எனவும் அதிர்ந்து விட்டாள். 


"அம்மா..."


"சொந்த பந்தம்னு இல்லாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்க போறீயா நீ???  அதுல எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்ல. உன் இஷ்டப்படி நடக்கணும் நினைச்சா,  சொந்த பந்தம் யாரும் உன் கூட வர மாட்டாங்க...  எனக்கு அவங்க வேணும் முடிவு உன் கையில் தான்...  வீட்ட விட்டு போறீயா இல்ல கல்யாணம் பண்ணிக்கிறீயா??"எனக் கேட்க , தாயை விரக்தியாகப் பார்த்தவள், "கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று அறைக்குள் சென்று முடங்கினாள்.


அவர் கேட்தும் வீட்டை விட்டு வெளியே செல்ல தான் நினைத்தாள். ஆனால் அந்த முட்டாள் கூட்டங்கள் பிரகதியை  சைத்து கட்டி வைத்து விட்டால். அவள் சின்ன பெண் தன்னால் அவள் பழியாகிடக் கூடாது என்று எண்ணியே தன் காதலை புதைத்து கொண்டாள்.


எல்லாம் நவீனமானாலும்,  சில இல்லங்களில் சொந்தத்துக்குள் திருமணம் முடிக்கும் எண்ணமும் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது .


வேறு வழயின்று அவள் அனைவருக்கும் முன் ஒத்துக் கொண்டாள். சைத்துவோ அவளை பழிவாங்க தான் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டானே தவிர அவனுக்கும் இந்தக் கல்யாணத்தில் பெரிதாக விருப்பமில்லை. சரஸ்வதி ஒரு திட்டம் போட்டார் இவன் வேறொரு திட்டம் போட்டான்.


கோடான கோடி தாரகைகள் மின்னிடும் காகனத்தைப் பார்த்து கொண்டிருந்தான்.

எகாந்த். 


தன் காதல் அவள் வார்த்தையில் உறுதியாகப் போவதை எண்ணி மகிழ்வுடன் அந்த ஏகாந்த வேளையை ரசித்து கொண்டிருக்க அவன் அருகே வந்தமர்ந்தாள் வைஷு.


"என்ன எகா !!! காதல் பித்து முத்தி போய் தனியாக உட்கார்ந்திருக்கற நிலைமை வந்துடுச்சா???"என அவள் கேட்டதும் புன்னகைத்தவன்,


"நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் வைஷு!!! அதான் அதைத் தனியாக ஸ்லேபிரேட் பண்றேன்"என்றார்.


"அது என்ன ஹாப்பி நீயூஸ் !! எங்கிட்ட சேர் பண்ணாம நீ மட்டும் என்ஜாய் பண்றது??? கொன்னுடுவேன், இங்க நீ நான்னு தனித்தனி ஆள் இல்ல.  உனக்குனு தனி குடும்பம் இல்ல... நம்ம ரெண்டு பேரும் ஒரே பேமிலி மறந்திடாத !! " என மிரட்ட, அவளை கட்டி அணைத்தவன், அவள் மடியில் படுத்துக் கொண்டான்..


"வைஷு, உண்மையிலே ரொம்ப  ஹாப்பியா இருக்கேன்.."


"ஏன் உன் லவ் சக்கஸ்ஸாகிடுச்சா???"


"கிட்ட தட்ட.. என் லவ் நான் சொல்லிட்டேன். அவ நாளைக்கு சொல்றேன் சொல்லிருக்காள்... அதுக்காக தான்  சூர்யன் எப்போ வருவார்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..."என்றான்.


"காங்கிராட்ஸ் எகா !!! எங்க தயங்கி லவ்வ சொல்லி இழுத்தடிப்பீயோனு நினைச்சேன்... ம்ம், பரவாயில்ல சட்டுனு சொல்லிட்ட, நல்ல முன்னேற்றம். கண்டிப்பா பாசிட்டிவான பதில் கிடைக்கும். அவ லவ் சொன்னதும்  நீங்க ரெண்டு பெரும் இங்க தான் வரணும்..." என்று அன்புக் கட்டளை போட்டாள்.


அவனும்' சரி' என்றான். இந்த ஹாப்பி நியூஸ் கொண்டானுமே வா வா வந்து எனக்கு ஏதாவது செஞ்சு கொடு !!! "என அவனை உலுக்க, "இருடி சூர்யன் வரட்டும் செஞ்சு தர்றேன்" என்று விளையாட்டாக வானத்தை பார்த்தான். 


"ஏதே சூர்யன் வரணுமா???அதுக்கு இன்னும் நைன் ஹார்ஸ் இருக்கு... ஒழுங்கா என் பசிக்கு வந்து  ஏதாவது செய்து கொடு" என்று அவனை இழுத்து கொண்டு போனாள். பாட்டு பாடிக் கொண்டே சந்தோசமாக அவன் சமைக்கும் அழகை ரசித்தவள், 'அவன் சந்தோஷம் நீடிக்க'  தோழியாக வேண்டிக் கொண்டாள்.


இரவில் அவன் தூங்காது வஸ்திக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அதுவும் இரவு பன்னிரெண்டு மணிக்கு... " 'நாளைக்குனு' நீ சொன்ன டேவும் வந்துடுச்சி லவ்வ சொல்லலாமே !" என அனுப்பிருக்க, அவளுக்கோ அழுகை முட்டிக் கொண்டு வந்தது. கண்ணீர் வடித்தபடி" நேர்ல சொல்றேன் காந்த் குட் நைட் " என துக்கம் தாங்க முடியாமல் போனை அனைத்து வைத்து விட்டாள். அவனும் எதுவும் யோசிக்காமல் விடியலுக்காக காத்திருந்தான்.


மறுநாள் அவனது அவசரத்தை கண்டு  விஷ்ணு, மகிழ் இருவரும் தலையில் அடித்துக் கொண்டனர்.  அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கி கட்டி அணைத்து முத்தங்களை பெற்று அவசரவமாக பைக்'கை இயக்கினான். ' டேய் மெதுவா போடா' என்று கத்தினார் மகிழ்.


வியாழன் என்பதால் நேராக கோயிலுக்கு சென்றான். அங்கே அவள்  குழந்தைக்களுக்கு பரதம் சொல்லிக்  கொண்டிருந்தாள், அதை தூணில் சாய்ந்த படி பார்த்தும் கொண்டிருந்தான். 


ஆடும் போது அவள் முகத்தில்  பிரதிபலிக்கும் கர்வம், அழகு , மகிழ்ச்சி எல்லாம் இன்று அவள் முகத்தில் இல்லை துடையது எடுத்தது போல இருந்தது. 'ஏன்???' என மூளை குடைந்தாலும் சாக்கு சொல்லி அமைதி படுத்தியது மனம். 


வகுப்பை  முடித்து அவர்களிடமிருந்து விடைப்பெற்றவள் புடவையை சரி செய்தபடி எகாந்த் அருகே வந்தாள். 


அவள் முகத்தில் ஏதோ குறைய, பொறுமையாகக் கேட்கலாம் என்று எண்ணினான். "வா சாமிய பார்த்துட்டு வருவோம்" என்றழைத்தான். அவளும்' ம்ம்' என்றதோடு அவனுடன் நடந்தாள். 


இருவரும் தரிசனம் முடித்து விட்டு வர, வழக்கமாக அவனுக்கு அவள் விபூதியை வைத்து விட்டாள்.


ஓர் இடத்தை பிடித்துக் கொண்டு அமர்ந்தனர். அவளாக ஆரம்பிக்க வேண்டும் அமைதி காத்தான். அவள் தான் இப்போது ஆரம்பித்தாள். வேறு வழியில்லாமல். 


"எனக்கும் சைத்துக்கு மேரேஜ்  பண்ணி வைக்கப் போறாங்க... நேத்து தான் வீட்ல பேசினாங்க. நான் வேணாம் சொன்னாலும் அம்மா கேட்கல" என்று அனைத்தையும் சொன்னாள்.


அமைதியாக அமர்ந்திருந்தான்.  அதே நேரம் அவனால் ஜீரணிக்க முடியவில்லை. " நான் உன்னை லவ் பண்ணல காந்த். இந்தப் பொய்ய நீ  ஏத்துக்கிட்டு தான் ஆகணும். நானும் ஏத்துக்க முயற்சி பண்றேன். நான் ஒரு நல்ல பிரண்ட தெரிஞ்ச தொலைக்க போறேன். மன்னிடுச்சினு கேட்க முடியல, தெரிஞ்ச பண்ண தப்பு இது. உனக்கு ரொம்ப காயத்த கொடுத்துட்டுட்டேன். சீக்கிரமா ஆறணும் வேண்டிக்கிறேன். இனி நம்ம நட்பை தொடர வேணாம். உன்னை பார்த்துட்டே இருந்தால் வீட்டை விட்டு வெளியே வந்துட தோணுது. என்னால் என் தங்கச்சி பலியாக வேணாம். ஸாரி காந்த், ரியலி ஸாரி நான் போறேன் " என்று எழுந்து கொள்ள இருந்தவளை தடுத்தான். 


"நேத்தே சொல்லிருக்கலாம்ல பிரதி !!! " 


"அது இன்னும் வலியா இருக்கு. நான் உனக்கு நிறைய வலி கொடுத்துட்டேன் போதும்.நான் போறேன்" எழுந்து வேகமாக சென்று விட்டாள். அவனோ  விரக்தியில் சிரித்தாலும் கண்கள் என்னமோ கலங்கின.


காலேஜ்ஜிற்கு செல்ல வில்லை, விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்தான் விஷ்ணு முன்னமே கடைக்கு சென்றிருக்க, மகிழ் மட்டும் கடைக்கு செல்ல கிளம்பி கொண்டிருத்தார். வேகமாக உள்ள நுழைந்தவன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தும் முன், மகிழ் அவனை அழைத்து விட்டார். 


"என்ன ஏகா, வந்துட்ட??? காலேஜ்க்கு போல... ???அப்றம் என்ன லவ் சொல்லிட்டாளா???"ஆர்வமாக அவன் அருகில் சென்று கேட்டார். 


கட்டை விரலை தரையை நோக்கி காமித்து உதட்டை பித்துக்கினான்


"என்னடா சொல்ற???"


" ஷீ லவ்ஸ் மீ மகிழ்... ஆனா"என அழ, அவனை அணைத்துக் கொண்டார். " அழாத டா எகா !!!  என்னாச்சி?? வீட்ல ஒதுக்க மாட்டாங்களா??? நாம வேணா போய் பொண்ணு கேட்கலாம் டா !! அவளுக்கு பிடிச்சிருக்குனு சொல்லும் போது எதுக்கு டா விடனும் சொல்லு இன்னைக்கே போலாம்  நான் அவருக்கு கால் பண்ணி வர சொல்றேன். நாம போய்  பேசலாம் நீ வா !!!" அவனது கண்ணீரை கண்டு துடைத்தவர் இவ்வாறு சொல்ல, அவரை அமர வைத்து  மடியில் சாய்ந்தவன், 


"போலாம் தான் அத்தை.  ஆனா இதுல ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கை அடங்கிருக்கு. எங்க சந்தோசத்துக்காக அந்த பொண்ணோட வாழ்க்கைய அழிக்க விரும்பல. எனக்கு கொடுத்து வச்சது  அவ்வளவுதான் அத்தை. அப்படி நினைச்சக்க வேண்டியது தான்" என்றவன் அவரை இறுக அணைத்துக் கொண்டான்.


அவன் வாய் தான் அவ்வாறு சொல்கிறது. உள்ளே அவன் படும் பாட்டை அவரும் அறிவார். அன்று முழுதும் அவனோடு இருந்து ஆறுதல் உரைத்தார். விஷ்ணுவும் பாதிலே  வந்துவிட்டார். அவனுக்காக உடனிருந்து ஆறுதல் சொல்ல சற்று தெளிந்திருந்தான். வைஷுவிடம் விஷயத்தை செல்ல, அவன் சரஸ்வதியையும் சைத்துவையும் வார்த்தைகளால் காய்ச்சி எடுத்து விட்டாள். ஆனாலும் பயனில்லை  என்றானது.


எகாவிற்கு, அவன் கடந்த நாட்கள் எல்லாம் ஏனோ தானோ என்று சென்றன. எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான். கல்லூரி வீடு என்றிருந்தான். 


வஸ்தியும் எங்கும் செல்லவில்லை வீடே கதி என் இருந்தாள். அன்றிலிருந்து தாயிடம் கூட அவள் பேசவில்லை. ' என் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காத உனக்கு நான் இந்த டேபில் சார் போலத் தான். அப்படினு  என்னை நீ  நினைச்சிகோ, என் கிட்ட  மகனு வந்து பேசிடாத, உனக்கு தான் சொந்த மகள விட சொந்தபந்தங்கள் முக்கியமா போயிட்டாங்களே ! என் கிட்ட ஏன் பேச வர்ற கோபத்தில் ஏசியவள்' அதன் பின் அவர் முகத்தை கூட  பார்க்கவில்லை. 


ஒரு வாரமாக  நடனப்பள்ளிக்கும் அவள் செல்லவில்லை. மதி அழைத்தும்  எடுக்க வில்லை. எகாவிற்கு அழைத்து விஷயத்தை கேட்க, 'தெரியாது' என்று பொய்யுரைத்தவன். அவளிடம் பேசுவதாகச் சொன்னான். அவர் பேசி வைத்ததும் 

வஸ்திக்கு அழைத்தான்.  ஆனால் அவள் எடுக்க வில்லை. ஐந்து முறை அழைத்து பார்த்தும் அவள் எடுக்கவில்லை.


கோபத்தில் வண்டியை வேகமாக இயக்க, பிரேக் செய்த சதியில்  இடறி கீழே விழுந்தான். அவனது நல்ல நேரம் அங்கே எந்த வாகனமும் வரவில்லை. காலில் தான் பலத்த அடி. பக்கத்தில் இருந்த ஒருவரின் உதவியால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான். 


அவன் காலுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்க. அவனை அழைத்து வந்தவர் போனிலிருந்த அவன் அழைத்த வஸ்தியின் நம்பருக்கு அழைக்க, எடுக்க வில்லை. வைஷுவின் நம்பருக்கு அழைக்க, அவள் எடுத்துவிட்டாள். அவளிடம் விஷயத்தை சொல்லி வரச் சொன்னார். 


அவனது பல தவறிய அழைப்புகளை  கண்டு அவள் மீண்டும் அழைக்க, அவனுக்கு அடிபட்ட விஷயத்தை கேட்டவள் பதறிக் கொண்டு ஓடினாள்.


வைஷு வர, அவன் மயக்கத்திலிருந்தான். வஸ்தியும் வந்து விட்டாள். 


"எதுக்கு இந்த காதல் ட்ராமா??? நீங்களாவது அந்த குடும்ப ஆட்களை போல இருக்க மாட்டீங்க நினைச்சேன். ஆனா சரஸ்வதியோட மருமக தான நீங்க வேற எப்படி இருப்பீங்க???"என வார்த்தைகளை கடித்து துப்ப, அதிர்ந்து நின்றாள். 

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2