இதயம் - 11

 இதயம் - 11


தாய்மாமனின் பேத்தி கல்யாணம் தான் அடுத்து வந்த ஒரு வாரம் முழுதும் வாயில் போட்டு மெல்லும் அவலாக இருந்தது.

அவரவர், கல்யாணத்தில் தங்களுக்குள் நடந்த சுவாரஸ்த்தை பேசிய படி இருந்தனர்.


சரஸ்வதியோ, அன்று தனக்கு நடந்த  அவமானங்களை உள்ளுக்குள் அசைப் போட்ட படியே  இருந்தார்.


கல்யாணம் முடிந்து வந்த வாரமும் சைத்து சரஸ்வதியிடம் பேசிக் கொள்ள வில்லை. மற்றவர்களிடம் பேசுமளவிற்கு கூட இவருடன் ஒன்றிப் பேசிட வில்லை. அதுவே அவருக்கு பயமாக இருந்தது. முதலில் பிரவஸ்தி , அடுத்து சைத்து, என தன் பேச்சை கேட்காமல் இருப்பது போல,


அடுத்து  இருக்கும் சிறியவர்களுக்கும் தன் மீதிருக்கும் பயம் மாயமாகி, அவரவர் அவர்களின் இஷ்டத்துக்கு முடிவெடுத்து கொண்டால்  'எதற்கு இந்த சரஸ்வதி?'என்றாகிடும்." அவர் எதற்கு??"என்ற எண்ணம் வந்துவிடும். நம் மதிப்பு அங்கே குறைந்து போய்விடும் என்று உள்ளுக்குள் அச்சமெழ,  தன் தலையைக் குலுக்கிக் கொண்டார். அப்படி எந்த ஒரு நிலையும் வரக் கூடாது. என்ன செய்யலாம் ?' என்று யோசித்தார்.


அன்று சைத்து 'பிரவஸ்தி தான் எனக்கு வேணும் ' என்றான். அதை ஆயுதமாக எடுத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் கணக்காய் நம்மீது பயமும் மரியாதையும் வந்து விடும் என்று தவறாக எண்ணி சரியாக யோசித்தார்.



குடும்பத்தில் ஒவ்வொருவரின் அன்பையும் மரியாதையையும் பெற அவர்களுக்கு பிடித்தது நல்லதா? கேட்டதா? அவர்களுக்கு சரியானதா என யோசித்து செய்யும் பெற்றவர்கள் மீது தானாகவே பாசமும்  மரியாதையும் வந்து விடும்


சர்வாதிகாரத்தால் குடும்ப மக்கள் தன் பிடியில் இருக்க வேண்டும். தான் சொல்வதை தான் கேட்டு நடக்கவேண்டும் என்றால் 'எத்தனை நாள் இன்னொருவரின் விருப்பத்திற்கு வாழ்வார்கள் ?'


அதெல்லாம் எங்கு அவருக்கு தெரியப் போகிறது?? சரஸ்வதிக்குஅனைவரும் தனக்கு கீழ் படிந்து நடந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் .


அதற்கு அஸ்திவாரம் சைத்து பிரவஸ்தியின் கல்யாணம் தான். அதை பற்றிப் பேச்சை எடுக்க வேண்டும் என்று தீர்க்கமானார். அவரது திட்டம் பழிக்கிறதா என்று பார்ப்போம்.


அன்று மாலை வழக்கம் போலவே  பிரவஸ்திக்காகக் காத்துக்  கொண்டிருந்தான் எகாந்த். அவளும் தன் வீட்டிலிருந்து வந்து உரிமையாய் அவன் பின்னே அமர்ந்து கைகளை அவன் தோளிலும் வைத்து கொண்டாள்.  இருவரும் சம்பந்தமில்லாத எதையோ ஒன்றைப் பேசிக் கொண்டு  பயணித்தனார்.


இருவர் மனதிலும் காதலிருந்தும் அதை வெளிப்படுத்த நாள் பார்த்து  கொண்டிருந்தனர். தினமும் அவர்கள் பயணிக்கும் வேளையை எல்லாம் வீணாக்கிக்  கொண்டிருக்கிறார்கள். 


இன்றும் அவர்கள் பயணம் வெற்று கதையைப் பேசிய படித்தான் சென்றது. அதிலிருக்கும் நாட்டம் காதலைச் சொல்வதில் இல்லை. ஒரு வேளை 'சொல்லாமல் புரிந்து கொள்ளட்டும்' என்று நினைத்திருக்கிறார்களோ என்னவோ !


அவ்வாறு புரிந்துக் கொண்டு அமைதியாகக் கூட இருக்கலாம் யார் கண்டால்??  யார் தான் முதலில் தன் காதலைச் சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.


நடனப் பள்ளியும் வந்ததும், இறங்கி ஆர்வமாக உள்ளே செல்ல   எண்ணியவளுக்குப் பெரிய பூட்டே வரவேற்றது. அதைக் கண்டு அதிர்ந்தவள், திரும்பி எகாவைப் பார்த்தாள்.


"என்னாச்சி???" என சைகையில் கேட்டான். தலையில் கை வைத்தவளுக்கு நேற்று மதி சொன்னது நியாபகம் வந்ததுக்கு. 'மறுநாள் வகுப்புகள் இல்லை' என்று சொல்லிவிட்டு தான் எல்லாரையும் அனுப்பினார். இவளிடம்  கூட தனியாக ஒரு முறை' வெளியே செல்ல வேண்டி இருக்கு நாளைக்கு  நீ வர வேண்டாம் வஸ்தி" என்றார். ஆனால் இவள் தான் அவனுடன் பயணிக்கும் ஆர்வத்தில் அவர் சொன்னதை மறந்தும் இதுவரை வந்து விட்டாள்.


"ஸாரி காந்த், நேத்தே மதி மா சொன்னாங்க நாளைக்கு லீவுனு.நான் தான் சொல்ல மறந்துட்டேன். உன்னை இவ்வளவு  தூரம் வர வச்சிட்டேன். ஸாரி பெட்ரோல்  வேஸ்ட் " என்று உதட்டை பிதுக்கிச் சொன்னாள்.


ஆனால் அவன் அப்படியா நினைப்பான் 'பெட்ரோல் வேஸ்ட்' என்று எண்ணி  இருந்தால் அவளை அழைத்து கொண்டு போவதும் வீட்டில்  விடுவதுமாக இருத்திருக்க மாட்டான். அவனுக்கு தேவை அவளுடன் இருக்கும் அந்த அழகான தருணங்கள் மட்டும்.


அவள் சொல்ல மீண்டும் அந்த நடனப்பள்ளியைப் பார்த்துவிட்டு"இட்ஸ் ஓகே பிரதி. அதுக்கு பதில ஒரு காஃபி வாங்கி கொடு. ஈக்குவல் பண்ணிக்கிறேன்" என்றான். அவளும் ஒத்துக் கொள்ள வழக்கமாக அவர்கள் செல்லும் கடைக்குச் சென்று அவர்கள் விரும்பி காஃபியையும் கேக்கையை ஆடர் செய்து விட்டு அமர்ந்தனர்.


நிறைய முறை அந்தக் கடைக்கு சென்றிருக்கிறாள்.  ஆனாலும் புதிதாக வந்தது போல உட்புற அழகைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். சலிப்பு தட்டினாலும் அதைப் பார்ப்பாள். அவன் முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் அதுவரை அந்த சலித்து போனச் சுவரை தான் பார்ப்பாள்.


அவனும் அவளைக் கடிந்துக் கொள்வான் உள்ளுக்குள். 'நானே தான் பேச்சை ஆரம்பிக்கணுமா??? மகாராணி பேசிட்டா முத்துக்கள்  சிதறி இந்த காஃபி கடை காரன்  இன்னொரு கடை ஒபன் பண்ணிடுவானாக்கும் பேசுடி தொலடி மயிலு !' என உள்ளுக்குள் அவளை கடிந்துக் கொள்வான். ஆனாலும் எந்தப் பயனும் இல்லை அவன் தான் முதலில் பேசுவான்.


இன்று கூட அவன் தான் பேச வேண்டும்  அவள் அமைதியாக இருக்க, அவனோ கன்னத்தில் கைவைத்து அவளை அப்பட்டமாக ரசிக்க ஆரம்பித்து விட்டான்.


வழுவழுப்பான நுதலில் கெட்டியாக ஒட்டிக்  கொண்ட சிறு பொட்டு, வளைந்த இரு குறுங்காடு அதற்கு கீழ் ஆளை விழுங்கும் ஆழமாறிய இரு குளம்.நீச்சல்   அறிந்தும் மூழ்கி தான் போக வேண்டும் என்ற சாபம் கொண்ட குளங்கள். இதழ்களை ஈர்க்கும் இரு காந்தக் கன்னங்கள். கூர்முனை போல கூரான நாசி. மனிதனின் இரத்தத்தைச் சுண்ட வைக்கும் இதழ்கள் என எவ்வளவு பார்த்து சலிக்காத ஓவியமவள்.  திகட்டாத தேனவள். பார்த்து கொண்டே காலங்களை கடந்து விடலாம்.  


அவன் பார்வை அவள் மேல் நிலைக் குத்தியிருக்க என்னவொரு அவஸ்தை அவளுக்கு. காதினோரும் ஈரமும் நெற்றியில் வியர்வை முத்துக்கள் படிய,  ஓர் இடம் நீக்காத கண்மணிகள் என அவளை இன்ப அவஸ்தை ஆளாக்கிக் கொண்டிருந்தான்.


தெய்வ அதிசயமாக அவளை வாயை திறந்தாள். "காந்த், என்ன பண்ணிட்டு  இருக்க???" என்று பல்லைக்கடித்தாள்.

அவனும் கைகளைப் பிரித்து தோளைக் குலுக்கிக் கொண்டான். இடையில் கேக்கும் காஃபியும் வந்தது அமைதியாக உண்ண ஆரம்பித்தான்.


அவனது அமைதி அவளுக்கு எரிச்சலை தந்தது."காந்த் ! என்ன இன்னைக்கி நீ அமைதியா இருக்க, எப்பையும் நீதான பேசுவ இன்னக்கி மட்டும் என்ன???" மனதிலுள்ளதைக் கேட்டு விட்டாள்.


அவனும்'அதானே வேணும் 'என்று சிரித்துக் கொண்டே அவளை பார்த்தவன்" ஐ லவ் யூ பிரதி" என்றான். 


அவன் சொன்னதும் புரையேற உதட்டை பதம் பார்த்தது சூடான காஃபி. வேகமாக காப்பை கீழே வைத்து விட்டு  "என்ன சொன்ன???"  என்றாள்.


"உனக்கு கேட்டுச்சு" என்றான் ஐஸ் கேக்கை உண்ட படி." இல்ல நீ என்ன சொன்னனு நான் கேட்கல திரும்ப சொல்லு" என்றாள்.


"டைம் ஆச்சு, கிளம்பலாமா???" என்று எழுந்தான்." இப்போ நீ என்ன  சொன்னனு சொன்னாத்தான் நான் கிளம்பி வருவேன் இல்ல இங்க தான் உட்கார்ந்து இருப்பேன்" என்று அடம்பிடித்தாள்.


அவனும் சிரித்துக் கொண்டு"எனக்கு பிளார்ஸ்  ,க்ரிட்டிங் கார்ட் கொடுத்து, சப்ரைஸ் பண்ணி எல்லாம் லவ்வ சொல்ல  தெரியாது... ஆனா சமையல்ல ஏதாவது புது டிஸ் பண்ணி  ப்ரோபோஸ் பண்ணலாம் தான்.  ஆனா இப்போ முடியாது ஸோ ட்ரக்ட்டா சொல்றேன் நான் உன்னை விரும்புறேன் பிரதி.  நீ வேணும்னு என் ஹார்ட்டும் மைண்ட்டும் சொல்லும் போது என்னால அவாய்ட் பண்ண முடியல.  உன்னை என் லைப்ல இருந்து பிரிக்க முடியாது. நீ தான் இனினு நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன் பிரதி. உனக்கும் உன் மைண்ட்டும் ஹார்ட்டும் நான் தான் வேணும் சொன்னால், டோன்ட் ஹெட் ஹெசிடெட் ப்ளீஸ் டக்குன்னு சொல்லிடு" என்றான் வார்த்தையில் மயக்கும் வித்தையை வைத்து கொண்டு. 


அவள் "யோசித்து நாளைக்கு சொல்றேன்" என்றாள்.


அவள் உதட்டுகள் அவ்வாறு சொன்னாலும் விழிகள் என்னவோ மலர்ந்து  உண்மையை (காதலை) சொல்லி அப்பூரவர் ஆகிவிட்டன. அவனும் இதழை மடித்துக் கொண்டு சிரிப்பை அடக்கி 'சரி' என்றான்.


"சப்போஸ் நான், உன்னை லவ் பண்ணலேனா? என் மைண்ட்டும்  ஹார்ட்டும் உன் பெயர சொல்லலேனா  என்ன பண்ண??"


"சொல்ல வைக்க , லவ் பண்ண வைக்க  நான் முயற்சி செய்வேன். அப்பையும் லவ் வரலனா. பிரண்டாவே இருப்போம்" என்றான் குரல் கொஞ்சம் தழுதழுத்தது.


அவளும் அமைதியாகிட," போலாம்" என்று எழுந்தான். அவளும் உடன் எழுந்தாள். மீண்டும் ஒரு அமைதிப் பயணம். அவளை வீட்டில் இறக்கி விட்டான்.


அவளும் இறங்கிக் கொண்டாள். அவன் போகாமல் நின்றிருந்தான்." போகல" எனக் கேட்டாள்.


"பிரதி, எந்த ஒரு நல்ல விஷயத்தை உடனே சொல்லிடணும் தள்ளிப் போட்டால் சொல்ல முடியாமலே போயிடும் மகி சொல்லும். நீ என்னை லவ் பண்றனு தெரியும், அதை இன்னக்கே  இப்பவே  சொன்னா என்ன நாளைக்கு தான் சொல்லணுமா??? ப்ளீஸ் இன்னக்கே சொல்லிடேன்"என்றான் கெஞ்சலாக


கத்தி ஆர்ப்பரித்து காதலை சொல்லத் தோன்றியது அவளுக்கு. இருந்தும் ஒரு நாளில் என்ன வந்திட போகுது அவனை இன்று ஒரு நாள் தவிக்க விட்டு நாளைக்குச் சொல்லலாம் என்று எண்ணி இருந்தாள். ஆனால் அது தான் அவள் செய்த  மிகப் பெரிய தவறாகிப் போனது.


"ம்கூம் நாளைக்கு தான் சொல்வேன்" என்றாள் பிடிவாதமாக, "போடி" என்றான் இதழை சுழித்து.


" என்ன சொன்ன ???" 


"போறேன் சொன்னேன்" என்று பல்லைக் கடித்து  விட்டுச் செல்ல, சிரித்து கொண்டே சென்றாள்.


இவர்கள் இருவரும் சிரித்து பேசுவதை  கண்ட சரஸ்வதியின் உள்ளம் ஏனோ தாறுமாறாக துடித்தது.'யாரா இருக்கும்??? 'என்று முதலில் யோசித்தவர், " யாரா இருந்தாலும் என்ன??  வஸ்தி சைத்துக்கு தான் அதில் மாற்றம் இல்ல..  இவளை அடக்கி வைக்க, சைத்துவ கைக்குள் போட்டுக் கொள்ள,  இவர்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணி வச்சே ஆகணும் இன்னக்கே முடிவு கட்டுறேன்" என்று எண்ணிக் கொண்டவர்.


இரவில் அனைவரையும் தன் இல்லத்திற்கு வரச் சொன்னார்.  எல்லாரும் கூடி இருந்தனர்.


எல்லாரும் சரஸ்வதியை, 'என்ன சொல்ல போகிறார்' என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


"சாய் க்கு கல்யாணம் பண்ணி கொடுத்து அவனும் பிள்ளைக்கு அப்பனாக போறான். அடுத்து நம்ம வீட்ல ஒரு நல்ல விசேஷம் நடக்க வேணாமா? நம்ம சின்ன வயசுல பேசி முடிவு பண்ணது போல சைத்துவுக்கும் வஸ்திக்கும் கல்யாணம் பண்ணலாம் அவங்களுக்கு வயசுப் போயிட்டே இருக்கே, என்ன சொல்றீங்க தம்பி ,  சாந்தி, அகல்யா உங்களுக்கு சம்மதமா?"எனக் கேட்டார்.


"பிள்ளைகளுக்கு சம்மதம்னா எங்களுக்கு சம்மதம் தான் அண்ணி" என்றார் தேவன். 


"சைத்து நீ என்னப்பா சொல்ற?" 


அவனோ, கசங்கி வாடிப்போய் நிற்கும் வஸ்தியின் முகம் பார்க்கக் கொண்டாட்டமாக இருந்தது. தன்னை வெறித்து பார்க்கும்  வஸ்தியை பார்த்து கொரூரமாக சிரித்தவன், " எனக்கு சம்மதம் தான் பெரியம்மா" என்றான்.


"அகல்யா உனக்கு???"என்று வஸ்தியிடம்  கேட்காமல் அகல்யாவிடம் கேட்டார்."எனக்கு சம்மதம் தான் அண்ணி"என்றார் மகளை பார்த்த வண்ணம்.


"அக்கா, வஸ்தி கிட்டையும் கேளுக்கா சம்மதமானு???" 


அவர் வஸ்தியை பார்க்க, " எனக்கு சம்மதம் தான்" என்றாள் உதட்டை கடித்து அழுகையை அடக்கிய படி.சரஸ்வதி வில்லங்கமாய் சிரித்துக் கொண்டார்.

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2