இதயம் - 10

 இதயம் 10

சரஸ்வதி, தன் குடும்பத்தார் தன் பேச்சை தான் கேட்க வேண்டும் என்று நினைப்பார். அவ்வாறு கேட்காமல் முரண்டு பிடிப்பவர்களை ஒன்று மிரட்டி கேட்க வைப்பார். இல்லை உடம்புக்கு ஏதாவது வந்தது போல, அதுவும் அவரால் தான் வந்தது போல ஏதாவது செய்து கேட்க வைத்து விடுவார். அப்படி தான் சைத்து விஷயத்திலும் செய்தார். அவனுக்கு அவர் போட்டது நாடகம் என்று நன்றாகவே தெரிந்தது.


இரண்டுமே அவருக்கு கை வந்த கலை. ஆனால் அந்த இரண்டிற்கும்  அப்பாற்பட்டவள் பிரவஸ்தி. அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டவள் அவள் மட்டுமே அதனால் அவருக்கு என்ன வந்தாலும்  பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள். 


ஆனால் மற்றவர்கள் அப்படி இல்லை. அவர் மேல் பயமும் உண்மையான பாசம் வைத்திருக்கின்றனர். அதற்காகவே அவர் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது அவருக்கு வசதியாக இருக்கிறது.


அக்காவிற்கு இப்படி என்றதும் பதறிய சாந்தி, சைத்துவிடம் "டேய், போய் மாத்திட்டுவா டா ! அவளை ஏன்டா கோபப்படுதற? சொன்னா கேளுடா போ போய் அந்த சட்டைய போட்டு வாடா " அவனை தள்ளாத குறையாக அனுப்ப முயன்றார்.


"ஒரு சட்டைக்கா ம்மா இந்த டிராமா? கேவலமா இருக்கு. நான் என்ன சட்டை போட்ட இவங்களுக்கு என்ன? எதுக்கு இப்படி நடிக்கணும்? சட்டையில என்ன தான் இருக்கு?"என்று பல்லைக் கடித்தான்.


"என்னவோ இருக்கட்டும் டா. எனக்கு என் அக்கா வேணும். போ போய் மாத்திட்டு வா !"என்றார்.


"இதுக்காக எல்லாம் உங்க அக்கா சாக மாட்டாங்க. அப்படியே செத்தாலும்  சரித்திரத்துல சட்டையால செத்தாங்கனு சிறப்பா எழுதி வைச்சிடலாம்" என்று பதிலுக்கு பேச்சு கொடுத்து கொண்டே இருந்தான்.


"ரொம்ப பேசற சைத்து நீ. போ போய் சொன்னத செய் " என்று அனுப்பி வைத்தார். அவனும் முகத்தை தூக்கி வைத்து கொண்டே சட்டையை மாற்றி விட்டு வந்தான். 


அதைக் கண்டபின் தான் சரஸ்வதி முகத்தில் சிரிப்பு வந்தது. சற்று நேரத்துக்கு முன்னிருந்த மூச்சு திணறல், இப்போது காத்தோடு காத்தாக மாயமானது. அவருக்கு பிரஸ்ஸர் கூடியது போலவே தெரியவில்லை. நினைத்ததை சாதித்து காட்டிய வெற்றி களிப்பில் இருந்தார். ஆனால் இதான் கடைசி வெற்றி என்று அறியாமல் போனார்.


காரியம் சாத்திக் கொண்ட பெரியம்மாவை பார்க்க கோபம் கோபமாக வந்தது அவனுக்கு 'இந்தக் க்ரிஞ்சு லேடிய வச்சிட்டு ச்ச... ' என உள்ளே குமறியவன், தனக்கு தானே எச்சரிக்கையும் செய்தான் 'டேய் சைத்து அலர்ட்டா இருந்துக்க, இதே டராமா உன் சட்டைய மாத்த வச்சது போல உன் வாழ்க்கைய மாத்தவும் நடக்கும் அதுக்கு முன்னமே அலர்ட்டா இருந்துக்க..'என்றான்.


"சைத்து உனக்கு இந்தக் கலர் எவ்வளவு அழகா இருக்குனு தெரியுமா !" பாசமாக அவர் பேச ஆரம்பிக்க. அவனோ அதை காது கொடுத்து கேட்க பிடிக்காமல்  வெளியே கிளம்பி விட்டான்.  


அவன் சென்றது, முகத்தில் அறைந்தது போல இருந்தது'எங்கே பிரவஸ்தியை போல இவனும் தன் பேச்சை கேட்காமல் போய் விடுவானோ 'என்ற பயம் அவருக்குள் வந்து விட்டது.


காலையில் நடந்த கூத்தில் மகிழ்ச்சி மடிந்து முற்றிலும் துடைத்து போல அமைதியாகப் பயணித்தனர்.  

கல்யாணம் மண்டபம் வர,  வாசலில் வந்து அக்குடும்பத்தை அன்போடு வரவேற்றார் சரஸ்வதியின் தாய்மாமனும் அவரது துணைவியும்.


முகூர்த்தம் பத்து மணிக்கு தான். நெருங்கிய சொந்தம் இவர்கள் என்பதால் முன்னமே வந்து விட்டார்கள். அதுவும் தாய்மாமனின் கட்டளைக்கிணங்க... காரில் அனைவரும்  இறங்க, மண்டப வாயிலிருந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பரணியும் வைஷு மாப்பிள்ளை வீட்டாரா என்று எதிர்பாரத்திருக்க, வந்தது என்னவோ  சரஸ்வதியும் அவரது குடும்பமும். சரஸ்வதி குடும்பத்தில் சைத்துவை கண்டதும் மேலும் அதிர்ந்தாள். 



'ஓ... இது இவங்க ஸ்பீசியஸா அதான் பயபுள்ள சைக்கோவா திரியுதா? அப்போ பிரவஸ்தியும் இவங்க பேமிலி தானா? அவங்களாவது இவங்கள போல இல்லையே எகா'க்கு தலையெழுத்து இதானா' என உள்ளுக்குள் சொல்லிக் கொண்டாள். ஆனா அவளுக்கும் அதே தலையெழுத்து என்று  அறியாமல் போனாள்


அவர்கள் யாரும் இவளை பார்க்கவில்லை. உள்ளே சென்றுவிட்டனர். அவர்களை தொடர்ந்து பரணியும் வைஷுவும் உள்ளே வந்தார்கள். 


சைத்துவை அவர்கள் வயது சொந்தங்கள், சட்டையை வைத்து கேலி செய்ய சரஸ்வதியின் மீது கோபம் கொண்டான். பெண்கள் கூட்டம் மணமகள் அறைக்குள் செல்ல, ஆண்கள் வெளியே அமர்ந்து பேசினார்கள். 


பரணியைச் சாப்பிட போகச் சொல்லிவிட்டு அகிலாவை வைத்து மேடையை அலங்காரங்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டிருந்தாள். 


பின் அவனும் சாப்பிட்டு வர, அகிலாவும் வைஷுவும் சென்றனர். மணப்பெண்ணுக்கு உள்ளே அலங்காரம் நடப்பதால்  புகைப்படக்காரர்களை  சாப்பிட சொன்னார் கணேசன்(சரசஸ்வதியின் தாய்மாமன்). 


மணப்பெண் அறையில் இருந்த அனைவரையும் சாப்பிட போகச் சொன்னார் கற்பகம். சரஸ்வதியும் சரியென்று அவர்களை சாப்பிட  அழைத்துச் சென்றார். 


பெரியவர்கள் அமர, இளவட்டங்கள் உணவை பரிமாறினார்கள். சாம்பார் வாலி சைத்து கைகளுக்குச் செல்ல, வாலியையும் சாட்டையும் மாறி மாறிப் பார்த்தான்.


ஏதாவது செய்து சட்டையில் கரைப்பட்டது போல காட்டி மாற்றி விட வேண்டும் என்று கணக்கு போட்டு காத்திருந்தான். 'அதை   செய்ய நானிருக்கிறேன்'என்று வந்தாள் வைஷு.


சரஸ்வதி சாப்பிட்டதும் சைத்துவை தேடி வந்தார் அவனை சாப்பிட சொல்ல, சைத்துவோ  பக்கவாட்டில் வருபவர்களை கூட கவனிக்காது சாம்பார் ஊத்திக் கொண்டிருந்தான். சரியாக வைஷுவும் அகிலாவுக்கு பேசிக் கொண்டு வர 'சாம்பார்'  என்று இந்தக் பக்கம் அழைக்க, அவன் திரும்பவும் வைஷு அவன் மீது மோத சாம்பார் கொஞ்சமாக அவன் சட்டையில் சிந்தியது. 


சட்டையை மட்டும் கண்டவள் முகத்தை பாராமல் "ஐ ம் சோ ஸாரி"  என சொல்லி முடிக்கும் முன்பே, சரஸ்வதி கோபமாக அவர்கள் அருகில் வந்தார்.


மகனுக்காக பேசுவதாக நினைத்து அவளை திட்ட ஆரம்பித்தார். "எந்த நினைப்புல என் பையன் மேல வந்து மோதற நீ?" எனக் கேட்டதும் அவர் கூறிய அர்த்தம் அவளுக்கு தவறாகப் பட, முகம் சுளித்தாள். "ஒரு ஆம்பல புள்ள எதிர வந்தா, ஒரு பொண்ணா நீ ஒதுங்கி போகணும் தெரியாதா உனக்கு? அப்படியே வந்து இடிப்பீயா? இப்படி தான் ஒரு ஆம்பள எதிர வந்தா இடிக்கணும்னு உங்க வீட்ல சொல்லிக் கொடுத்தாங்களா?" அவர் பேச்சு எல்லை மீறியது. 


"உங்க பேச்சு ரொம்ப தப்பா இருக்கு. வாய அடக்குங்க..."என்றாள்.


"நான் ஏன்டி வாய அடைக்கணும். நீ முதல்ல பொண்ணா அடக்கம் ஒடுக்கமா இருக்கீயா? ட்ரெஸ பார். ஒரு பொண்ணு  மாதிரியா இருக்க நீ? உன்னை  எப்படியோ திரினு தண்ணீ தெளிச்சி விட்டாங்க போல.." அவர் பாட்டுக்கு பேச, கோபத்தில் அவரை எதுவும் செய்ய முடியாமல் பக்கத்தில் நின்ற சைத்துவின் மேல் இரண்டு மூன்று கரண்டி அதிகமாகவே சாம்பாரை ஊற்றினாள்.


வாயை பிளந்தவர், "அடிப்பாவி  என்னடி பண்ற?" 


"இந்த சாம்பார் உங்க மூஞ்சில ஊத்த வேண்டியது, உங்க புள்ள பழியாகிட்டான். என் குடும்பத்தை பத்தியோ என்னை பத்தியோ பேச உங்களுக்கு எந்த தகுதியும்

உரிமையும் இல்ல... நீங்களா ஒரு வரையறை வச்சிட்டு அது போல தான்  பொண்ணுங்க இருக்கணும் சொல்ல நான் ஒன்னும் உங்க வீட்டு பொண்ணு இல்ல மைண்ட் இட். அண்ட் உங்க பையன வேணும்னு மோத, அவன் ஒன்னும் வோர்ல்ட் ஹாண்ட்ஸம் இல்ல... இது போல வேற எந்த பொண்ணுங்க கிட்டையும் பேசிட்டு இருக்காதீங்க, என்னை போல அவங்களும் பேசிட்டு இருக்க மாட்டாங்க, ஸ்ட்ரைட்டா "என்று கையை காமித்தாள். சரஸ்வதி அரண்டு போனார். அவரை தாண்டி செல்ல எத்தனிக்க பின் வந்தவள், 


சைத்துவை பார்த்து "ஸாரி, நான் உன்னை பார்க்கல. வேணும்னே உன்னை இடிக்க,  உனக்கு அவ்வளவு சீன்ன'லாம் இல்ல. தென் ஒரு ஃப்ரீ அட்வைஸ். ஒரு சைக்கோவா கோபத்துல போட்டோவ கிழிச்ச நீ,  இந்த சட்டையையும் கிழிச்சி எறிஞ்சிருக்கலாம். இந்த பூம்பர் ஆண்டிக்கு பயந்து அடங்கிப் போறது சைக்கோக்கு அழகு இல்ல... சேஞ்ச யூர் செஃல்ப்  சைக்கோ " என்று கூறிவிட்டுப் போக, அவன் உதட்டில் சிறு மூரல் கோபத்திற்கு பதில் வந்து போனது.  அவளை எதுவும் சொல்லாமல் நின்றிருந்தான். 


அவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்து நின்றார் சரஸ்வதி. இவனும் சட்டையில்  வழிந்த சாம்பாரை பார்த்து புன்னகைத்த படி, சட்டை மாற்றச் சென்றான். 


உடையை மாற்றியவன் தன்னை ஒரு முறை பார்த்து கொண்டான். "அப்பா, இப்பத் தான் நான் நானா இருக்கேன். நைவ் சைத்து ஃபீல் ஃபீரி" என்றவனின் எண்ணத்தில் வந்தாள் வைஷு. 


'எதிரியா இருந்தாலும் பார்த்த வேலை என்னவோ எனக்கு ஃபேவரா தான். சோ உன்னை பெரிய மனசு பண்ணி விடுறேன் 'போட்டோ'. பட் என்னையவே வொர்த் இல்லனா சொல்ற இருக்குடி உனக்கு' என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்தான். 


மேடையை மணமக்கள் அலங்கரித்து இருக்க, கீழே சொந்தபந்தங்கள்  அமர்ந்து மேலும் அழகை கூட்டிருந்தனர் அவ்விடத்தை. 


முன் வரிசையில் அமர்ந்திருந்தனர் சரஸ்வதி குடும்பத்தினர். சரஸ்வதியை தவிர மத்த அனைவரும் மகிழ்ந்திருந்தனர். 


சரஸ்வதி மட்டும் கடுகடுவென இருந்தார். அதுவும் தனக்கு முன்னே நின்று மணமேடையில் நடக்கும் சடங்குகளை புகைப்படம் , வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவளை சினத்தோடு பார்த்தன அவரது இரு கண்களும்..


அதற்கு மாறாக அவளது ஒவ்வொரு  அசைவையும் ஆர்வமாக மனதில் பதிவு செய்து கொண்டிருந்தன அவனது இரு கண்களும். 


திருமணம் இனிதாக முடிய, குடும்பமாக வந்தவேலை முடித்துக் கொண்டு கிளம்ப இருந்த வேளையில் சைத்து மட்டும் வரவில்லை.


அவனுக்காக மொத்த குடும்பம் காத்துக் கொண்டிருக்க அவனோ வைஷுவின் வரவுக்காக காத்துக் கொண்டிருந்தான்.


அனைவரையும் புகைப்படம் எடுத்து விட்டு மூவரும் சாப்பிட செல்ல, அங்கே இருந்த மிச்ச மீதியை  கடுப்புடன் தின்றனர்.  


சாப்பிட்டு  விட்டு தனியாக வந்து  கொண்டிருந்த வைஷுவை வழி மறித்தான் சைத்து.


"ஹாய் காலையில நீ கொடுத்த ப்ரீ அட்வைஸ்க்கு  ஒரு தங்க்ஸ்  கூட  சொல்லல,  சோ சொல்லிட்டு, அப்படியே கணக்கை முடிக்கலாம்னு வந்தேன்.  வெல் நீ சொன்னது போல நான் சைக்கோ தான். என்ன பண்ண இந்த சைக்கோவுக்கும் சில செண்டிமெண்ட்ஸ் லாக் இருக்கும். அதுக்காக எல்லா நாளும் எல்லா நேரமும் அப்படியே இருக்க மாட்டேன். அண்ட் இத ஏன் இப்ப சொல்றேன்னா..." என்று நிறுத்தியவன், அவள் புரிந்து கொள்ளும் முன் பாயாசத்தை அவள் மேல் ஊத்தியவன், "ஸாரி சம்பார் இல்லையாமே, தீர்ந்து போயிடுச்சாம் வாட் டூடூ  ...." உதட்டை வளைத்து பாவமாக சொன்னவன், "சைக்கோ இஸ் ஆல்வேஸ் சைக்கோ தான்" என்று கூறி விட்டுச் செல்ல,  அவனை நினைத்து சிரிப்பதா?  இல்லை கோபப்படுவதா ? என்றிருந்தது அவளுக்கு. 


காலில் கட்டு போட்டு அதைத் தொங்கப் போட்டு விட்டப்படி மருத்துவமனை மெத்தையில் கிடந்தான் எகா. அவனருகே கன்னத்தில் கையில் வைத்து பாவமாக அமர்ந்திருந்தாள் வைஷு. அழுது கொண்டே ஓடி வந்தாள் பிரவஸ்தி.அவனுக்கு எப்படி ஆனது என்று பார்ப்போம்

Comments

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2