வரன் - 3

  



திருமணம் நிச்சயமானதும் வீட்டிலுள்ளவர்களுக்கு அத்தனை களிப்பு. அதிலும் ஆரனுக்கு சொல்லவா வேண்டும், இப்போதே தாலியை கையில் கொடுத்து  'கட்றா  தாலிய '  குணசேகரன் சொன்னால் போதும். மூன்று என்ன ஏழு எட்டு போட்டுவிட்டு கையோடு மேகாவை அழைத்து வந்திருப்பான். ஆனால் குணசேகரன் அப்படி  சொல்லும் ஆளில்லை...


பழைய பஞ்சாங்கத்தை பாக்கெட்டில் வைத்து சுத்துபவர்.வீட்டில் அனைவரும் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். தான் எண்ணிய படி, வீட்டில் உள்ளவர்களை நடக்க வைக்கும் அந்த வீட்டு எம்டன் அவர். சாங்கி சடங்குகளை மதிப்பவர்.எல்லாம்  விடயங்களும் சம்பிரதாயப்படி நடக்க வேண்டும் என்று முனைப்போடு வலம் வருபவர். வீட்டு மக்களோடு ஒட்டாத ஆள் குணசேகரன்.  ஆனால் மற்றவர்கள் அப்படியல்ல, தேவகியிலிருந்து அவர்கள் வீட்டுக் குட்டி தேவதை ஜனனி வரைக்கும் சிரிக்கத் தெரிந்தவர்கள். குணசேகரன் இருக்கும் வரை அமைதியாக  இருக்கும் வீடு அவர் சென்ற பின்,  சிரிப்பலைகள் வாசல் வரை வந்து  முட்டிச்செல்லும்.


தேவகி, குணசேகரனுக்கு மூன்று பிள்ளைகள், மூத்தவன் தீரன், இரண்டாவது ஆரன் மூன்றாவது அருணா. மூத்தவன், மதுரையை சுற்றிருக்கும் கிராமங்களிலுள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக இருக்கிறான். மனைவி பிரதியுஷா, மகன் கார்த்திக் மூன்றாம் வகுப்பு, மகள் ஜனனி ஒன்றாம் வகுப்பும் படிக்கிறார்கள். ஆரனும், பக்கத்திலே ஊராட்சி ஒன்றில் கிராம நிர்வாக அலுவலராக இருக்கிறான். அருணா பி.எஸ்.சி கணக்கு பயின்று கொண்டிருக்கிறாள். எல்லாம் குணசேகரனின் ஊந்துதலாலே மகன்கள் இருவரும் அரசு அதிகாரிகளாக இருக்க காரணம். அடுத்து மகளையும்  அரசு ஊதியம் வாங்க வைக்க விடாமல் விட மாட்டார். மருமகள் வேலைக்கு போகக் கூடாது. போனாலும் அரசு ஊதியம் வாங்கும் வேலைக்கு தான் செல்ல வேண்டும்... அதனாலே பிரதியுஷா வீட்லே  தேவகிக்கு உதவியாக இருந்து கொண்டாள். மேகவர்ஷினியை என்ன என்ன பாடு படுத்த போகிறாரோ. 


"அப்றம் கொழுந்தனாரே ! தனியா போய் என் தங்கச்சி கிட்ட என்ன பேசுனீங்க?" பிரதியுஷா ஆரம்பித்தாள். " என்ன சொல்லிருப்பான், நான் உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி அதிர்ச்சியாக்கிருப்பான் என்னடா?"என தீரன் அங்கு நடந்த கூத்தை அறியாது கேட்டான். 


"நீ வேறண்ணா, அவ தான் என்னை அதிர்ச்சியாக்கினா !" என அவள் தன்னை கார்த்திக்கின் தந்தை என்றதையும், இரண்டாம் திருமணம் என்று அழுததையும் அவன் சொல்ல, வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் தீரன். பிரதியுஷா வாயில் கைவைத்து அதிர்ந்தவள், சிரிப்பை அடக்க முயன்று தோற்றாள்.


"சரியான மக்கு டீச்சர் அண்ணி அவ ! கார்த்திக்  என்னை அப்பானு கூப்பிட்டானாம் இவ என்னை அவனோட ' அப்பா 'னு  நினைச்சாளாம். அதை கூட விடுங்க அண்ணி. செகண்ட் மேரேஜானு கேட்டா பார்த்தீங்களா? என்னால தாங்கவே முடியல நல்லா திட்டி விட்டேன் அண்ணி"என்றான். 


"அடப்பாவி ! அந்தப் பொண்ண திட்டினீயா? நீ திட்டியுமா, அவ  உன்னை பிடிச்சிருக்குனு சொன்னா? எப்படி டா?" சந்தேமாக  கேட்டான். "நான் திட்ன திட்டுக்கு கண்டிப்பா என்னை பிடிக்கலனு தான் சொல்லிருப்பாள். நான் தான் என்னை பிடிச்சிருக்குனு சொல்றனு  மிரட்டிட்டு வந்தேன்"என்றான் அமர்த்தலாக, 


"அடப்பாவி ! மிரட்டி தான் பிடிச்சிருக்குனு சொல்ல வச்சீயா? ஏன்டா அந்தப் பொண்ணோட விருப்பத்தை கேட்காம, நீ பாட்டுக்கு மிரட்டி பிடிச்சிருக்குனு சொல்ல வச்சிருக்க, உண்மையாவே அந்தப் பொண்ணுக்கு உன்னை பிடிக்காம போயிருந்தா என்னடா பண்ணுவ?"


"அதெப்படி என்னை பிடிக்காம போகும்? எனக்கென்ன நல்லா தான இருக்கேன், கவர்மெண்ட் ஆபீசர் வேற என்னை எப்படி பிடிக்காம போகும் அண்ணா ?" என அசட்டையாக தோளை குலுக்கிவிட்டு கேட்டான். 

" இதெல்லாம் இருந்தா போதுமா கொழுந்தனாரே ! பொண்ணுங்களுக்கு  தன்னை கட்டிக்க போறவன், சாஃப்ட் இருக்கணும் தான ஆசைப் படுவாங்க. நீங்க ரஃப்பால ஹாண்டில் பண்ணிட்டு  வந்திருக்கீங்க. அந்தப் பொண்ணு உங்களை என்ன நினைச்சிருப்பாளோ !"


"என்ன இப்போ என்னை ஏதோ வில்லன் போல ஃபீல் பண்ண வைக்கறீங்க... நான் ஹீரோ பா ! நான் இவ்வளவு கஷ்டப்பட்டது எல்லாம் அவ என்னை பிடிக்கலேன்னு சொல்றதுக்கா. அவளுக்கு என்னை பிடிக்கும்  பிடிக்க வைப்பேன் சம்ஜே" என்றான் அழுத்தமாக.


"என்னது நீ கஷ்டப்பட்டியா? அப்படி என்ன டா கஷ்டப்பட்ட?" எனக் கேட்கவும் திரு திருவென முழித்து வைத்தவன், "ஆஹான்... அது நம்ம எல்லாம் குடும்பத்தோட பொண்ணு பார்க்க போயிட்டு பொண்ணு பிடிக்கலேன்னு சொன்னால் கஷ்டமா இருக்காதா அதை சொன்னேன் அண்ணா !"என்று சமாளித்தவனை சந்தேகமாக  பார்த்தான்.


"ஏதோ சரியில்லையே !" என அவனை ஒரு மாதிரி பார்த்தவாறு கேட்டான். "என்ன சரியில்ல, அதெல்லாம்  எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கு ! நாளைக்கு அந்தப் பொண்ண வர சொல்லிருக்கேன். தெளிவா என்னை பிடிச்சிருக்கா இல்லையானு கேட்டு சொல்றேன் போதுமா?" என அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுக்க,  அப்போது தான் சமையலை முடித்து விட்டு வெளியே வந்த தேவகி இதைக் கேட்டு அதிர்ந்தவர், அவன் முன் வந்து, "அடப்பாவி ! கல்யாணத்துக்கு முன்னாடியே அந்தப் பொண்ணை வெளிய சந்திக்க போறீயா?"


"ஆமா, பார்க்கப் போறேன் அதுக்கு என்னம்மா?"


"அப்பாக்கு தெரிஞ்சா கத்த போறார் டா !"


"அப்பாக்கு தெரிஞ்சா தானே ! நீ எதுவும் சொல்ல போறீயா?" என அவரை எதிர் கேள்வி கேட்டு வைத்தான். "நான் சொல்ல மாட்டேன் டா, ஆனா இதெல்லாம் தப்பு இல்லையா?" என இக்காலத்தை அறியாமல் பாவம் போல கேட்டு வைக்க, தீரனும் ஆரனும் தலையில் அடித்து கொண்டனர்.


"எந்தக் காலத்துல மா இருக்க நீ?" தீரன் கேட்க, "அப்பா கூட சேராத மா நீ ! உன்னை உலகம் தெரியாம ஆகிடுவார்" என்றான் ஆரன்." ஆமா இனி சேர்ந்த என்ன? சேரலனா  என்ன? அதை விடு ! உனக்கு பொண்ண பிடிச்சிருக்கு தான?" தாடையை பற்றிக் கொண்டு கேட்டார்.


"அம்மோய் ! கேள்வியை நீ மாத்தி கேக்குற? பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்கானு கேட்கணும் மா?" என்று ஏற்றி விட, "ஏன்டா என் தங்கத்துக்கு என்ன குறைச்சல், அதெல்லாம் என் புள்ள அழகுல மயங்கி தான் அந்த பொண்ணு பிடிச்சிருக்குனு  சொல்லிருக்கும்" என விவரமறியாமல் சொல்ல, ஆரன் காலரை ஏத்தி விட்டு, அண்ணனிடம் கண்ணை காட்டினான்.


"ஸ்ப்பா ! முடியலமா இதெல்லாம் கேட்க !" என நெஞ்சை பிடித்துக்கொண்டான். அங்கே கேலியும் கிண்டலுமாக சிரிப்புக்கு பஞ்சமின்றி போனது.


மறுநாள் மேகாவிற்கு குழப்பத்தோடு தான் விடிந்தது. ' போகலாமா? வேணாமா?' என்றே யோசித்தாள். பலவாறு எண்ணங்களை உள்ளுக்குள் போட்டு காலையிலே மூளையை சூடாக்கி கொண்டிருந்தாள். 


கங்காதரனும் ஸ்ரீதரனும் அண்ணன் தம்பி, தனலட்சுமி , கனகலட்சமி அக்கா தங்கை இருவரையும் கட்டிக்   கொண்டனர். கங்காதரனுக்கு தனலட்சுமிக்கு மேகவர்ஷினி மட்டுமே. ஸ்ரீதரனுக்கும் கனகலட்சுமிக்கும் நேகாவும் , நேத்ரன் என இரு பிள்ளைகள் உண்டு.  மேகாவும் நேகாவும் ஒரே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றனர். நேத்ரன் மெக்கானிக் இன்ஜினியரிங் படிக்கிறான். இவர்கள் போக கங்காதரனுக்கும் ஸ்ரீதரனுக்கும் மோகனா என்ற தங்கையும் இருக்கிறார்.

மோகனா, அவரது கணவர் மணிமாறன். புதல்வன் தீனதயாளன், கல்லூரியில் கெமிஸ்ட்ரி பேராசிரியராக இருக்கிறான்.  இதுவே இவர்களது குடும்பம்.


பள்ளிக்கு கிளம்பி வெளியே வந்தவள் தயக்கத்தோடு தனது டிஃபன் பாக்ஸை எடுத்து பையினுள் வைத்தாள். அவள் முகத்தில் குடிக் கொண்ட குழப்பத்தைக் கண்டு தலையில் அடித்து கொண்டாள் நேகா, 'இதெல்லாம்  திருந்தாத கேஸூ !  அவனவன் அவுட்டிங் டேட்டிங் போயிட்டு இருக்கான், இவ இன்னும் போலாமா வேணாமா பட்டி மன்றம் நடத்திட்டு இருக்கா ! மாமா சொன்னதுல தப்பே இல்ல இவ மக்கு டீச்சர் தான் ! இறைவா இவளுக்கு நல்ல புத்திய கொடப்பா !' இறைவனிடம் வேண்டிக் கொண்டவள் அவளை இடித்துக் கொண்டு நின்று, தன் பையினுள் டிஃபன் பாக்ஸை வைத்தவாறு, " சொல்லிட்டீயா பிரண்ட பார்க்க போறோம்னு?" அவளுக்கு மட்டும் கேட்கும் படி கேட்டாள்.


"எனக்கு பயமா இருக்கு நேகா !" என்றாள் மீண்டும்." இது என்ன உன்னோட தாரக மந்திரமா? எப்ப பாரு இதையே சொல்லிட்டு இருக்க? பிரண்ட பார்க்க போறோம்மா, ஆறு மணிக்குள்ள வந்திடுவோம் சொல்றதுல என்ன ஆகிட போகுது உனக்கு?" என பல்லை கடித்தாள் நேகா.


"நீ சொல்லு  டி" என விழிகளால் மேகா கெஞ்ச," ம்ம்... அப்படியே மாம்ஸ் நானே கட்டிக்கட்டுமா?" எனவும் அவளை முறைத்தாள் மேகா. "இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... இரு !" என்றவள்.


"தனாம்மா ! "என்றழைத்தாள்.


"என்ன நேகா ?" என்று வந்த தன் பெரியம்மாவிடம் " இன்னைக்கு  எங்க கூட படிச்ச பொண்ணுக்கு பிறந்த நாள். அதான் அவளை பார்த்து கிஃப்ட் குடுத்துட்டு ஆறு மணிக்குள்ள வீட்டுக்கு வந்திடுறோம் தனாம்மா !" என்றவளையும் பக்கத்தில்  நின்றவளையும் மாறி மாறி பார்த்தார். இருவர் முகத்திலும் எதுவும் கண்டு பிடிக்க முடியவில்லை. " சரி டி  நேரத்துக்கு வந்து சேருங்க" என்று உள்ள சென்று விட்டார்.


"என்ன உங்க அம்மா குறுகுறுனு பார்க்குது சி.ஐ.டி சாந்திக்கே  டஃப் கொடுக்கும் போல" கிண்டலடித்து கொண்டு வந்த நேகாவை அடக்கியவள், "எப்படியோ  பெர்மிஷன் வங்கியாச்சி" என்று அவளே முயற்சி செய்தது போல  சொல்ல, கடுப்பான நேகா" கொய்யால  பெர்மிஷன் கேட்டது நானு. நீ என்னமோ கஷ்டப்பட்டு கேட்டது போல பெர்ஃபார்மன்ஸ் பண்ற?" இடையில் கைவைத்து முறைத்தாள்.


"ஈஈ... நீ கேட்டா என்ன நான் கேட்டா என்ன டி, எல்லாம் ஒண்ணு தானடி" என கொஞ்சிக் குழைந்தாள்.  " ஆங்.. அப்போ உனக்கு பதில நான் போயி மாமன பார்க்கட்டா"எனக் கண்ணடித்தவாறு  கேட்டு வைத்தவளை நறுக்கென கிள்ளியவள், " என்ன நீ அவர் கிட்ட பேசவே குறியா  இருக்க?"


"என்ன பண்ண அவர பார்த்தலிருந்து என் நெஞ்சிலே  நிக்கிறார் " நெஞ்சை குத்திக் காட்டி சொன்னவளை கொலவெறியோடு பார்த்தவள், " நிப்பார் டி நிப்பார், தீனா கிட்ட சொல்றேன் அப்பாவும் நிக்கிறாரானு  பார்ப்போம்" என்று வண்டியை உதைக்க ஸ்டார்டானது.


"மாமஸ் நினைக்கும் போது அந்தாள ஏன் டி நியாபகப்படுத்தற?" சலித்தவளின் வயிற்றில் புறங்கையை வைத்து குத்தியவள், "இன்னொரு வாட்டி மாமஸ்னு சொல்லு, பிடிச்சி தள்ளி விட்டுவேன்" என மிரட்டி விட்டு கூட்டிச் சென்றாள்.


இருவரும் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர்,  பிரின்சிபாலிலிருந்து வேலை செய்யும் ஆயாம்மா வரை அவளிடம் பெண்பார்க்க வந்த விஷயத்தை கேட்டனர். அவர்களுக்கு பதில் சொல்லியே வாய் வலித்து போனது அவளுக்கு. மாலை பள்ளியும் விடவே, ஒரு வித படபடப்போடு நேரத்துக்கு காஃபி சாப்'பிற்குள் இருவரும்  நுழைய, அவனும் அப்போது தான் வந்து அமர்ந்திருந்தான்.


"நேரமாகலையே டி" என்று கேட்டுக் கொண்டே  உள்ள நுழைந்தாள்." ஐஞ்சு மணிக்கு தான வர சொன்னார். மணி இப்போ நாலு ஐம்பதஞ்சு  தான் ஆகுது சீக்கிரமா தான் வந்திருக்கோம்" என்றாள் நேகா. "அவரும் வந்துட்டார் போல டி" என்று விழிகளால் அலசி கண்டுப்பிடித்து சொன்னவளை வினோதமாக பார்த்து விட்டு நடந்தாள் நேகா.  இவரும் அவன் முன் நின்றனர்.


'மாமஸ் மாமஸ்' என்று அவனில்லாத போது வாய் நிறைய அழைத்தவள், ஏனோ அவன் நேரில் இருக்கும் போதும் மரியாதை நிமித்தமாக அமைதியாக நின்றாள்.


"வா மேகா ! இவங்க..."என அவனிழுக்க, " இது என் சிஸ்டர் நேகா ! நானும் இவளும் ஒண்ணா தான் வேலை பார்க்கிறோம். ஒரே ஸ்கூட்டில தான் ஸ்கூலுக்கு போவோம், அதான் என் கூட வந்திருக்கா" என அவன் தவறாக  எண்ணி விடுவானோ  என்ற எண்ணியவள் விளக்கம் கொடுக்க, அதை புரிந்து கொண்டவன் புன்னகையுடன், " ஹாய்  மிஸ் நேகா !" என்றவனிடம்  மரியாதையாக " ஹாய் " என்றாள்.


"மிஸ் நேகா ! கொஞ்சம் அந்த டேபிள் உட்கார்ந்துக்கிறீங்களா?" மரியாதையாக அவனும் கேட்டான். அவளுக்கு கோபம் வர வில்லை ' சரி'  என்று தன்மையாகவே சற்று தள்ளி போய் உட்கார்ந்தாள். எங்கே தங்கையின்  முகம் வாடி விட்டதோ என்று அவள் முகத்தை  ஆராய்ந்தாள் மேகா, ஆனால் அவளோ கண்சிமிட்டி விட்டு ஒன்னுமில்ல என்பது போல அமர்ந்தாள்.


அதற்குள் சர்வரும் வர,  இருவருக்கும் காஃபி ஆடர் செய்தவன், " அந்த டேபிள் இருக்கறவங்களுக்கும் என்ன வேணும் கேட்டு கொண்டு வாங்க" என்றான்.


கைகளை பிசைந்து கொண்டு மேசையை பார்த்த படி இன்னும் படப்படப்பு குறையாமல் அமர்ந்திருந்தவளை. "மேகா"  மென்மையாக அழைத்தான். 


"ஆஹான் என்ன?"என்றாள் அதே மென்மையோடு" என்னை உனக்கு பிடிச்சிருக்கா?" சட்டென கேட்கவும் மேலும் இதயம் படபடவென அடித்து கொள்ள, பழுப்பு நிற விழிகளை அங்குமிங்கும் நகர்த்திய வண்ணம் இருந்தாள்.


"என்ன கேட்டுட்டேன் நீ நேர்வஸாகுற?"


"ஏன் அப்படி கேக்குறீங்க?"


" நேத்து நான் 'பிடிச்சிருக்கு'னு சொல்ல சொன்னதுனால தான் என்னை பிடிச்சிருக்கு சொன்னீயா இல்ல, உண்மையாவே என்னை பிடிச்சிருக்கா?"  நேற்று  தன்னை திட்டியது  இவன் இல்லை என்று அடிச்சு சொன்னது போல  இருந்தது அவனது பேச்சு.


"நீங்க திட்டி மிரட்டி போனதும்  கொஞ்சம் குழப்பமா  தான் இருந்துச்சி,  என்ன சொல்றதுனு தெரியாம யோசிச்சுட்டே வந்தேன். 

பெரியவங்க கேட்கும் உங்களை பார்த்தேன்ல,  அப்போ உள்ள இருக்க மனசு, " உங்களை மிஸ் பண்ணிடாத மிஸ் பண்ணிடாத சொல்லுச்சி, என்னை நீங்க லவ் பண்றேன்.  உன்னை பொண்ணு பார்க்க வர சில வேலைகள் எல்லாம் செய்தேன் சொன்னீங்களா? பிடிச்சிருந்தது , அதான் பிடிச்சிருக்குனு சொன்னேன். ஆமா, அப்படி என்ன தகிடுதத்த வேலைய பார்த்தீங்க என்னை பொண்ணு பார்க்க வர?" என கொஞ்சம் தைரியம் வந்தவள் போல கேட்டாள்.

அவர்கள் ஆடர் செய்த காஃபியும் வர, அவன் அதை பருகிய படி சொல்ல ஆரம்பித்தான். 


" நம்ம குடும்பத்தை பொறுத்தவரைக்கும் இது மேரேஜ் புரோக்கர் மூலமா வந்த வரன்னு நினைச்சிட்டு இருக்காங்க. ஆனால் இதெல்லாம் என்னோட பிளான்னு யாருக்கும் தெரியாது" என்றான்.

"பிளானா?" என வாயை பிளந்தாள்.


"எஸ் என் பிளான் தான். உங்க வீட்ல உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா கேள்வி பட்டேன். எங்க வீட்லையும் எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.ஸோ உங்க ஏரியால இருந்த சில சொற்ப புரோக்கர் பிடிச்சி விசாரிச்சத்துல, உங்க வீட்ல சொல்லி வச்ச புரோக்கர கண்டு பிடிச்சி, அவர் கிட்ட பணம் கொடுத்து கரெட் பண்ணி என் போட்டோவை உங்க வீட்ல காட்ட சொன்னேன். அதே போல உன் போட்டோ, டீயேல்ஸ் எங்க வீட்ல  எனக்கு பொண்ணு பார்க்க சொன்ன புரோக்கர் கிட்ட குடுத்து எங்க வீட்ல குடுக்க சொல்லிட்டேன்.


இதுல நான் பயந்த ரெண்டு விஷயமும் எனக்கு சாதகமா அமைஞ்சது,

ஒன்னு கேஸ்ட், நீயும் நானும் ஒரே கேஸ்ட. இன்னொன்னு ஜாதகம், நம்ம ரெண்டு பேர் ஜாதகமும் பொருந்தி தான் இருந்தது. இந்த ரெண்டத்துலையும் எனக்கு இன்டெர்ஸ்ட் இல்ல தான் . 


ஆனா குணசேகரன் பார்ப்பாரே ஸோ பார்க்க வேண்டிய சூழ்நிலை..." என்று உதட்டை பிதுக்கியவன், " உன்னை பொண்ணு பார்க்க வரதுக்கு பின்னாடி நான் இவ்வளவு  வேலைகள் பண்ண வேண்டியது இருந்தது" என்றான் சர்வசாதாரணமாக, ஆனால் அவளோ இமைகள் கொட்டாமல்  அவனையே மலைப்பாகப் பார்த்து கொண்டிருந்தாள்.


"ஓய் சக்கர ! என்ன அப்படி பார்க்கற?" என அவள் முன் சொடக்கிட்டான். அப்போது தான் இமைகளுக்கு விடுதலை கொடுத்தவள் படபடவென அடித்துக் விட்டு அவனை பார்த்தாள். அது அவனுக்கு  அழகாக இருந்தது.


"ஏன் இதெல்லாம் செஞ்சு, என்னை பொண்ணு பார்க்க வந்தீங்க?"


"காஸ், நான் உன்னை லவ் பண்றேன். ஐ லவ் யூ டி சக்கர.  இந்த ஜென்மம் மட்டும் இல்ல எத்தனை ஜென்மத்திலும் உன்னை விடக் கூடாது. விடாமல் காதலிக்கணும் அதுக்கு தான்" என்று அவளை காதலாகப் பார்த்தவனின் விழிகளை காணாது தாழ்த்தி வெட்கம் கொண்டாள்.


"சக்கர !"ஆசையாக அழைத்தான்." ம்ம்..." என்றாள் அவனை பார்க்காமல். " என்னை பார்றேன்"


"ம்கூம்" என்று தலையை நிமிர்த்தவே இல்லை. அவனும் அமைதியாக உள்ளுக்குள் சிரித்த படி அவளைப் பார்த்த படி அமர்ந்திருந்தான்.


பின் நியாபகம் வந்தவளாக, " எப்படி உங்களுக்கு என்னை தெரியும்? எங்க என்னை பார்த்தீங்க? என்னை எப்போல இருந்து காதலிக்கிறீங்க?"என்று கேள்விகளை அடுக்கினாள்.


"சொல்றேன், ஆனா இப்போ இல்ல இன்னக்கி நைட் போன் பண்றேன்" என்றான்." போனா?" என பதறினாள்

"ஆமா போன்ல தான். உனக்குனு உங்க வீட்ல தனி ரூம் இருக்கு தான?" 


அவள்  "ஆமாம்" என்றாள்." ம்ம்ம்... இப்போ எனக்கு வேலை இருக்கு நான் போயே ஆகணும். ஸோ நைட் நான் கால் பண்றேன். நீ எடுத்து பேசற சம்ஜே !" என்று அவள் முன் விரல் நீட்டிச் சொல்ல, பொம்மை போல  தலையை ஆட்டினாள்.


"ஓகே பாய் சக்கர !"என்று எழுந்தவன்,"பாய் நேகா !" என சொல்லி விட்டு பில்லையும் கட்டி விட்டுச் சென்றான். 


அவனை போலவே, அவளும் அவன் அமர்ந்திருந்த இடத்தின் முன் தன் கையை நீட்டி "சம்ஜே !"என்றாள்.


 ' லூசா நீ !' என்பது போல பார்த்தாள் நேகா

Comments

Post a Comment

Popular posts from this blog

கரையவில்லை உன்னிதயம்

வரன் 1

இதயம் - 2